Posts

நீளாசை

​அடர் மரம் நடுவே சிறுதுளை
மறைவை எட்டி நின்னு விளிக்கும் குழந்தையாய்

ஆதவனின் ஒளி எட்டிக்கொள்கிறான்.
புதிதாய் எட்டுவைத்த ஒலிக்கலைஞனாய்
குருவிகளும் ஓடைகளும் சத்தமாய் நிரப்பிவிடுகிறான்.
வனம் தான் அது.
அங்கு புலிகளுக்கு பயங்கரம் என்ற அடைமொழி இல்லை.
பாம்புகளால் அஞ்சும் கால்அடிகள் இல்லை.
இயற்கையின் ரீங்கார ஒலிகள் இடையே
என் சுவாச மகிழ்வின் மௌன சத்தங்கள் மட்டும்.
ஆடை நாகரீகமற்ற தோரணையில்
நர்த்தகை கொள்ள ஆசை.
இயற்கையோடே எம்மீதி நொடிகள் இயங்கிவிடாதா? 
ஏக்கத்தின் முனுமுனுப்பினூடே
இயந்திர பிடியின்
நடு இரவில்
தனிமை காதல் கொள்கிறேன்.

-தம்பி கூர்மதியன்

கடலன்பு

கடல்தாய் பெருவகையில் காதல் கொள்வாள்.
நான் அசையா நிற்கையில்
சமயங்களில் புன்முருவலிடும் பாத நனைவாள்
பொழுதுகளில் முழங்கால் கூச்சமிட்டு அழகுசெய்வாள்.
ஏதோ ஒருநாள் முழுதாய் ஏரி மூழ்கடித்து முத்தங்களால் மூர்ச்சையாக்கிவிடுகிறாள்.குழந்தை போல தான்.
வலிக்கும் என தெரியாத
நேற்று முளைத்த பற்களில்
கன்னங்களை கடித்து வைக்குமே.
அப்படி...அவள் மீதெல்லாம் கோபமில்லை
அவளை ஆக்ரோஷம் கொள்ள செய்யும்
சுற்றத்தின் அன்பர் மீது தான்.

நலம் கேட்டீயோடி?

​நிந்தன் மீது நானன்று கொண்ட காதல்
இமைகள் காணா
விஞ்ஞான காகிதத்தில் எழுதப்பட்ட காதல் கடிதமாய்
இணையத்தின் வெட்டவெளியில் பட்டாம்பூச்சி கதை பேசுதடி.மனதின் வார்த்தைகளை சொல்ல
ஆயிரம் முறை உரக்க கத்திக்கொள்ள
நின் காதணி மேலே மெலிந்தோடும்
கூந்தல் தோகையை
கா பின்னில் சொருகலிட்டு
காதல் பார்வை கசிந்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும்..நின் முகம் காணா ஆண்டுகளில்
நன் காதலின் நலம் கேட்டீயோடி
பெண்ணே நலம் கேட்டீயோடி...?

செங்குருதியின் மேல் ஓர் தார்ச்சாலை

Image
'அமைதி... இஷ்...' இன்யூ கொடுத்த சத்தம். சுற்றி இருந்த மூவர் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் பார்வை ஒற்றை இலக்கை நோக்கி இருந்த‍து.

'புர்க்.. புர்க்..' தூரத்தில் இருந்த‍ காட்டு பன்றியின் சத்தம் அது. அவன் கையில் இருந்த வில்லின் நாணை இழுத்தான் விஷம் தோய்த்த அந்த அம்பு சீறிப்பாயும் நொடி எதிர்பார்த்து சிலுப்பிக்கொண்டிருந்த‍து.
'டும்..' திடீரென ஒரு சத்தம். திசை தெரியாமல் முண்டி அடித்தது அந்த காட்டு பன்றி. இழுத்த நாணை விட்டுவிட்டு எழுந்து நின்று எரிச்சலுடன் பார்த்தான் அவன். தூரத்தில் அரைக்கால் சொக்காய் போட்டுக்கொண்டு இருவர் நின்றுக்கொண்டிருந்தனர்.
'ரன்..' அவர்களில் ஒருவன் சொன்னான். அவர்கள் காட்டுப்பன்றி ஓடிய திசையை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். அதை கண்ட இன்யூவின் முகத்தில் இருந்த எரிச்சல் மாறியது. சுதாரித்தான். பன்றி ஓடிய திசையை பார்த்தான்.
'சாய்..' முன்னால் கை காண்பித்தான். அவனை சுற்றி இருந்த மூவர் ஒவ்வொரு திசை நோக்கி ஓடினர். அத்தனை பேரும் இடுப்பில் நாரினால் ஆன கயிறை திருகி இருந்தனர். அதனில் ஓலை குடுவை இருந்த‍து. அந்த குடுவை நிறைய அம்புகள் இருந்…

கானல் தேடல்

Image
அவன் இனியன். இனியமுதன். அவன் வீட்டின் கதவுகள் அவன் கை படர்ந்த‍து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர். அவன் இல்லாத வெறுமை ஒரு காலகட்டத்தில் அந்த வீட்டில் அவன் மீதான வெறுப்பாக உருமாறி இருந்தது.
வீட்டிற்கு மூத்தவன். அவனுக்கு பின்னால் ஒரு தங்கை. அப்பா அரசாங்க அலுவலகத்தில் க்ளார்க். பிள்ளை தலையெடுக்கும் வரை பல்லை கடித்துக்கொண்டு ஓட்டிவிட வேண்டும் என கடினமாக உழைத்தவர்களில் அவன் அப்பாவும் ஒருவர். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.
கல்லூரி மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் தான் அது நடந்த‍து. இனியன் வீட்டை விட்டு வெளியேறினான். அதன் பிறகு இப்பொழுது தான் அவன் வீட்டிற்கு திரும்புகிறான். அவன் அப்பாவின் உயிரற்ற உடலை ஊரார் தீயிட்டதை கேட்டான். அவன் தாயும் தங்கையும் மாரில் அடித்துக்கொண்டு ஓலமிட்ட சத்தம் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் அவன் காதுகளில் ஒலித்தது. அப்பா இறந்து மூன்று மாதம் ஆகிவிட்டது - செய்தி தாங்கியவன் சொன்னான்.
முப்பது பேரை தாங்க கூடிய பேருந்து அது. ஒரு நூறு பேரை தாங்கிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த‍து. ஜன்னல் என்று சொல்லும் அளவு இல்லை. ஆனால் வெளியில் தொங்கிக்கொண்டிருந்த ஆட்களை நகர்த்திவிட்டு பா…

அது... கொலை!

Image
விக்ரமின் அறை அது. அமைதியாக அந்த அறையில் அவன் சிகரெட்டை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

’யூ ஆர் ட்ரான்ஸ்ஃபர்டு..’ விக்ரம் காதில் அந்த அதிகார சத்தம் கேட்டது.

‘எனக்கு உன் வேலை.. நீ எத நோக்கி ஓடுற.. ஏன் இப்படி இருக்க. எனக்கு எதுவுமே புரியல விக்ரம். காலேஜ்ல நீ இப்படி இல்லவே இல்ல. இத்தன வருசத்துல உன்ன லவ் பண்ணினத நினச்சு சந்தோசப்பட்டதோட ஏன்டா லவ் பண்ணினோம்னு வருத்தம் தான் அதிகமா இருக்கு விக்ரம்..’ மனமுடைந்த அந்த காதல் வார்த்தையும் கேட்டது.

‘ஐயோ என் பொண்ணு.. என் பணம் போச்சே.. என் குழந்தை… என் அப்பாவ கொன்னுட்டாங்களே.. ஐயோ… ஐயோ.. ஐயோ..’ மாறி மாறி அலறல் சத்தம். சட்டென காதை மூடிக்கொண்டான் விக்ரம். அவன் கையில் இருந்த சிகரெட் ஒரு இழுப்புக்கு பிறகு மீண்டும் ஒரு இழுப்புக்கொள்ளாமலே சுருங்கிவிட்டது. அடுத்து அவன் கையை சுட்டும் விட்டது.

சட்டென சிகரெட்ட்டை கீழே போட்டான். கையை உதறினான். தன் அலைப்பேசியை எடுத்து உள்ளே சென்றான். அங்கு இளமை பருவத்தில் ஒரு பெண்ணின் புகைபடங்கள் இருந்தன. குழந்தை தனமான சேட்டைகளாய் முக பாவனைகள் கொடுக்கும் புகைபடங்கள் அவை.

உதட்டின் ஓரம் மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரித்தான். …