Posts

Showing posts from October, 2010

நாங்க தொழில் செய்யலையா.! இது சேவை..!

Image
சுகாதாரமற்ற செயல்களால் மாற்று திறனாளிகளாக குழந்தைகள் பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. அப்படி அதிகரிக்கும் குழந்தைகள் பெறுவாரியாக அனாதையாக்கப்படுவது வருத்தமான விசயம்.. அப்படிபட்டவர்களை ஆதரிக்கும் காப்பகங்களின் பெரிய வேண்டுகோளாக இருப்பதுமின்சார இணைப்பு, கேஸ் இணைப்பு போன்றவை கமர்ஷியல் அற்று டொமஸ்டிக் விலையிலே அளிக்கப்படவேண்டும் என்பது தான்..
இதை பற்றி சென்னை தாம்பரம் அடுத்துள்ள பெருங்களத்தூரில் உள்ள ‘பவிஷ்ய தீபம்’ என்னும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கான காப்பகத்தின் பராமரிப்பாளர்,“எங்க காப்பகத்துல 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.. நாங்க இத மக்கள்கிட்ட இருந்து உதவி தொகை வாங்கி தான் செய்றோம்.. எங்களப்போல இன்னும் எத்தனையோ காப்பகம் இருக்கு.. எங்களுக்கு மின்சார இணைப்பு, கேஸ் இணைப்பு எல்லாம் கமர்ஷியல் விலைக்கே தராங்க.. நாங்க தொழில் செய்யல, வியாபாரம் செய்யல.. சேவை செய்யறோம்.. அது ஏங்க,பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போல பல இடங்கல்ல இருக்குற பொது கழிப்பிடத்துக்கெல்லாம் மின்சார இணைப்பு டொமஸ்டிக் விலையில தராங்க, ஆனா எங்களுக்கு இல்ல.. இத எங்களோட ஒரு கோரிக்கையா எடுத்துகிட்டு, எங்கள…

மாணவர் வாழ்க்கையை படிப்பிலிருந்து சம்பாத்தியத்துக்கு...

Image
வாழ்க்கையில சீக்கிரமா நாம சம்பாதிச்சிடனும்கிற ஆசை எல்லோர் மனசிலும் இருக்கும்.. அப்படி அதிகமாக எண்ணுவது இளம் ரத்தங்களே.. இளைஞர்கள் தங்கள் தேவைக்காக படிக்கும் போதே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.. அப்படி எண்ணும் பலரும் இறுதியாக வந்து சேருவது நெட்வொர்க் பிஸ்னஸில் தான்.. ஒருவர் சிலரை ஒரு வேலையில் சேர்பது.. அந்த சிலர் வேறு சிலரை சேர்ப்பது.. இவ்வாறு பெரிய செயினாக செல்லும்.. இப்படி அந்த செயினில் சேரும் பலருக்கும் வேறு சிலர் சேரும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.. இதற்கு முக்கிய தேவை பேச்சு திறமை.. நமது பேச்சால் மற்றவரை மயக்கத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அந்த பேச்சு இருத்தல் வேண்டும்.. இவ்வாறு பலர் நெட்வொர்க் பிஸ்னஸ் என ஆரம்பித்துவிட்டாலும் சமீப காலமாக மாணவர்களை பைத்தியம் பிடித்து சுத்த வைப்பது ‘ebiz’ எனப்படும் நெட்வொர்க் பிஸ்னஸ் தான்.. சுத்தி படிக்கும் மாணவர்கள் பலர் சமீபகாலமாக வெள்ளை சட்டையுடன் கருப்பு பேண்ட் அணிந்து ஆங்காங்கே சக மாணவர்கள் பலருடன் சந்திப்புகள் நடத்தி வருகின்றனர்.. காரணம்- தங்கள் நெட்வொர்க்கில் சேரவைக்கவேண்டும் என்ற எண்ணம்..

எல்லா வயது மனிதர்களுக்கும் கணிணியை பரிச்சி…