நாங்க தொழில் செய்யலையா.! இது சேவை..!


சுகாதாரமற்ற செயல்களால் மாற்று திறனாளிகளாக குழந்தைகள் பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.. அப்படி அதிகரிக்கும் குழந்தைகள் பெறுவாரியாக அனாதையாக்கப்படுவது வருத்தமான விசயம்.. அப்படிபட்டவர்களை ஆதரிக்கும் காப்பகங்களின் பெரிய வேண்டுகோளாக இருப்பது  மின்சார இணைப்பு, கேஸ் இணைப்பு போன்றவை கமர்ஷியல் அற்று டொமஸ்டிக் விலையிலே அளிக்கப்படவேண்டும் என்பது தான்..

இதை பற்றி சென்னை தாம்பரம் அடுத்துள்ள பெருங்களத்தூரில் உள்ளபவிஷ்ய தீபம்என்னும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கான காப்பகத்தின் பராமரிப்பாளர்,“எங்க காப்பகத்துல 50க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.. நாங்க இத மக்கள்கிட்ட இருந்து உதவி தொகை வாங்கி தான் செய்றோம்.. எங்களப்போல இன்னும் எத்தனையோ காப்பகம் இருக்கு.. எங்களுக்கு மின்சார இணைப்பு, கேஸ் இணைப்பு எல்லாம் கமர்ஷியல் விலைக்கே தராங்க.. நாங்க தொழில் செய்யல, வியாபாரம் செய்யல.. சேவை செய்யறோம்.. அது ஏங்க,பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போல பல இடங்கல்ல இருக்குற பொது கழிப்பிடத்துக்கெல்லாம் மின்சார இணைப்பு டொமஸ்டிக் விலையில தராங்க, ஆனா எங்களுக்கு இல்ல.. இத எங்களோட ஒரு கோரிக்கையா எடுத்துகிட்டு, எங்களப்போல சேவையா பண்றவங்களுக்கு அத்யாவசிய தேவைகள டொமஸ்டிக் விலையிலே தரணும்..என்று பெரும் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.. சேவையாக செய்யும் இதற்கு டொமஸ்டிக் விலையில் கொடுத்தால் ஏதேனும் தவறுள்ளதா..

Comments

  1. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
    தமிழ்
    ஆங்கிலம்

    ReplyDelete
  2. @ers நன்றி தோழரே.! பகிருகிறேன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி