மாணவர் வாழ்க்கையை படிப்பிலிருந்து சம்பாத்தியத்துக்கு...

வாழ்க்கையில சீக்கிரமா நாம சம்பாதிச்சிடனும்கிற ஆசை எல்லோர் மனசிலும் இருக்கும்.. அப்படி அதிகமாக எண்ணுவது இளம் ரத்தங்களே.. இளைஞர்கள் தங்கள் தேவைக்காக படிக்கும் போதே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.. அப்படி எண்ணும் பலரும் இறுதியாக வந்து சேருவது நெட்வொர்க் பிஸ்னஸில் தான்..
ஒருவர் சிலரை ஒரு வேலையில் சேர்பது.. அந்த சிலர் வேறு சிலரை சேர்ப்பது.. இவ்வாறு பெரிய செயினாக செல்லும்.. இப்படி அந்த செயினில் சேரும் பலருக்கும் வேறு சிலர் சேரும்போது ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.. இதற்கு முக்கிய தேவை பேச்சு திறமை.. நமது பேச்சால் மற்றவரை மயக்கத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அந்த பேச்சு இருத்தல் வேண்டும்..
இவ்வாறு பலர் நெட்வொர்க் பிஸ்னஸ் என ஆரம்பித்துவிட்டாலும் சமீப காலமாக மாணவர்களை பைத்தியம் பிடித்து சுத்த வைப்பது ‘ebiz’ எனப்படும் நெட்வொர்க் பிஸ்னஸ் தான்.. சுத்தி படிக்கும் மாணவர்கள் பலர் சமீபகாலமாக வெள்ளை சட்டையுடன் கருப்பு பேண்ட் அணிந்து ஆங்காங்கே சக மாணவர்கள் பலருடன் சந்திப்புகள் நடத்தி வருகின்றனர்.. காரணம்- தங்கள் நெட்வொர்க்கில் சேரவைக்கவேண்டும் என்ற எண்ணம்..

எல்லா வயது மனிதர்களுக்கும் கணிணியை பரிச்சியமாக்குவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.. அதாவது, இதில் சேர்ந்தால் எல்லா தரப்பட்ட கம்ப்யூட்டர் கோர்ஸ்களை படிப்பதற்கான அனிமேஷனால் உருவாக்கப்பட்ட மெட்டீரியல் வழங்கப்படுகிறது.. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான கோர்ஸை எடுத்து படித்து அதில் பலன் பெறலாம்..
இதில் அதிகளவில் மாணவர்கள் சேருவதற்கு காரணம் என்ன.? இதில் படிப்பதற்காக எந்த மாணவரும் சேருவதில்லை.. அவர்களின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே..
முதலில் இதில் சேருவதற்கு 7499 ரூபாய் டி.டி எடுத்து அனுப்ப வேண்டும்.. அவ்வாறு அனுப்பப்பட்ட டி.டி.,க்களுக்கு சில சி.டி.க்களுக்கும், அவர்களது இணையதளத்தை பயன்படுத்த பெயர் மற்றும் பாஸ்வோர்ட் தரப்படுகிறது.. அந்த குறிப்புகளை வைத்து அந்த இணைய தளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து கோர்ஸ்களுக்கான மெட்டீரியலை பயன்படுத்தி படிக்கலாம்.. ஒரு வருடத்திற்குள் இரண்டு கோர்ஸ்களை படித்து அவர்கள் வைக்கும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பது கட்டாயம்..

அதேசமயம் அவர்கள் படிக்கும் போதே பணத்தையும் சம்பாதிக்கலாம்.. அதாவது, அவர்கள் ஏற்றிருக்கும் அந்த படிப்பை மற்ற மக்களையும் வாங்க செய்யவேண்டும்.. அவ்வாறு அவர்கள் செய்யும்போது அவர்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு..மற்ற மக்களையும் வாங்க செய்து அவர்களை தங்களோடு இணைக்கும்போது அந்த இணைத்த சிலர் வேறு சிலரை பிடிப்பர்.. இவ்வாறு இது பெரிய செயினாக உருவாகும்.. இப்படி அவர்கள் ஒரு வருடத்தில் 50மக்களை இணைத்தாக வேண்டும் என்பது கட்டாயம்.. 50மக்களை இணைத்தால் அதை ஒரு ஆர்பிட் என்கிறார்கள்..
முதலில் அவர்கள் நமக்கு விளக்கும்போதே ஒரு வருடத்தில் நீங்கள் அப்படி சம்பாதிக்கலாம், இப்படி சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டுகின்றனர்.. அவர்கள் சொல்லும்போது நீங்கள் முதலில் மூன்று மூன்றாக ஒன்பது பேரை சேர்த்தால் ஒவ்வொரு மூன்றுக்கும் ரூ.2000மும் பின்னர் ஒன்பது ஒன்பதாய் 36 பேரை சேர்த்தால் ஒவ்வொரு 9க்கும் ரூ.3000 ஆயிரமும், பின்னர் மீதி 5பேரை சேர்த்தால் ரூ.8000மும், மொத்தம் ரூ.26000த்தை ஒரே வருடத்தில் சம்பாதிக்கலாம்..

இதுமட்டுமில்லாமல் இன்னும் பலவாறு சம்பாத்தியங்கள் உங்களுக்கு வரும் என்ற ஆசை வார்த்தைகள் மூலம் பெரும்பாலான மாணவர்களை மயக்க வைக்கிறார்கள்.. இது மாணவர்களை எவ்வழி கொண்டு போகிறது..?

இதில் சேருபவர்களுக்காக இந்த கம்பேனி செலவழிப்பது மூன்று சி.டி.க்களுக்கு சேர்த்து 100ரூபாயாக இருந்தாலும், வேறு எந்த செலவும் செய்வதாக தெரியவில்லை.. இன்டர்நெட்டில் எல்லோருக்கும் பொதுவாக மெட்டீரியல் கொடுக்கப்பட்டுள்ளது.. அப்படி கொடுக்கப்பட்டுள்ள மெட்டீரியலுக்கு ஒரே செலவு தான்.. ஒருவர் மூவரை சேர்த்தால் அதன் மூலம் கம்பேனி ஆளுக்கு கிடைக்கும் வரவு ரூ.22497, சேர்த்தவர்க்கு 2000 போக மற்ற பணம் அனைத்தும் கம்பேனிக்கே..

இதில் சேருபவர்கள் வருடம் ஒரு முறை புதுப்பித்தல் தொகையாக ரூ.2758 செலுத்தவேண்டும். அதேபோல் வருடத்திற்கு இரண்டு கோர்ஸ்களிலாவது தேர்ச்சிபெற வேண்டும் என்பது கட்டாயம்..
பணத்தின் மோகத்தை காட்டி இளம் மாணவர்களை தங்களின் சுயசம்பாத்தியத்துக்காக பைத்தியம் பிடித்தவர் போலமாற்று பாதையில் செலுத்துகின்றனர்.. இவர்கள் இப்படி சுத்துவதை முதலில் பெருமையாக கருதும் பெற்றோர்கள் பின்னர் ‘என் புள்ளை படிக்காம இதுலயே சுத்துறான்..’ என்று புலம்பலாகின்றனர்..
இதை பற்றி இதில் சேர்ந்துள்ள மாணவர் ஒருவரின் பெற்றோரிடம் கேட்கையில், ‘முதல்ல பரவாயில்லீங்க.. பையன் படிக்க போறான் அதே சமயம் சம்பாதிக்கவும் போறான்னு சந்தோசமா இருந்தோம்.. சேர்ந்து ரெண்டு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள அங்க ஆள் புடிக்க போறேன் இங்க ஆள் புடிக்க போறேன்னு சுத்திகிட்டே இருக்கான்.. அதனால முன்னாடி க்ளாஸ் டெஸ்ட்ல எல்லாம் நல்ல மார்க் எடுத்தவன், இப்ப அத அட்டண்டே பண்ண மாட்டேங்குறான்.. இதே வேலையா சுத்துறான்.. சொன்னாலும் கேக்க மாட்டேங்குறான்..’ என்று கடிந்தார்.
இதே போல் மாணவர் வாழ்க்கையை தன் சுயநலத்துக்காக பாழாக்கும் அமைப்புகள் எப்போது திருந்துமோ.? இதை தடுக்க வேறு வழி இல்லையோ..?

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி