Skip to main content

Posts

Showing posts from November, 2010

அசிங்கபட்டான் இவ்வ்வன்... காபிச்சீனோ

நாங்க எல்லோரும் வித்யாசத்த விரும்புறவங்க.. வித்தியாசத்த விரும்பாத மக்களோ, மனிதனோ இந்த உலகத்துல இல்லனு தான் சொல்லனும்.. அப்படிபட்டவங்க தான் நாங்க.. நாங்க வழக்கமா காலேஜ்ல ஏதாச்சும் நிகழ்ச்சி நடந்தா வெளியே சுத்த ஆரம்பிச்சுடுவோம்.. அப்படி சுத்தும்போது,ஏதாச்சும் வித்யாசமான சாப்புடுற பொருள பாத்தா உடனே எங்க கண்ணு போற இடம் அதோட விலைய பாக்குறதுக்கு தான்.. விலை கம்மியா இருந்தா உடனே வாங்கிடறதுதான் எங்க பழக்கம்..

                      இவனு தான் அவன்.. அவன் தான் நானு..

          அப்படி ஒரு நாள் காலேஜ்ல நிகழ்ச்சி ஒண்ணு நடக்குதுனு நாங்க வெளியே சுத்துனோம்.. அப்படி சுத்தும் போது, வெளியே கொஞ்சம் தள்ளி ஃப்ரண்ட்ஸ உக்கார சொல்லிட்டு ஒரு காபி கடைக்குள்ள நுழஞ்சேன்.. வெளியில சேர்ல உக்காந்திருக்க என் ஃப்ரண்ட்ஸும் ஏதாச்சும் வாங்கிட்டுவர கேட்டாங்க.. அந்த கடைகுள்ள நுழஞ்சதும் முத வேலையா வழக்கமா பாக்குற மாதிரி எது விலை கம்மியா இருக்குனு பாத்தேன்..

          அப்படி பாக்கும் போது தெருக்கடை காபியே குடிச்சு பழகின எனக்கு, ‘காபிச்சீனோ’ங்கற காபி வகை புதுசா இருந்துச்சு.. விலை 10ரூபாய்னு பாத்ததுமே ரொம்ப சந்தோசம் ஆயிட…

நான் காதலுற்றேனா..???

கடலில் நடந்தேன்,
கார்மேகத்தில் மிதந்தேன்,
புதிதாய் ஒரு அனுபவம்...
நேரம் செல்வது தெரியவில்லை,
பசியென்னும் எண்ணம் தோன்றவில்லை..
புரியவில்லை..
பித்தனானேனா.???
கவிஞனானேனா.???
எப்படி..???
தெரியவில்லை..
நண்பன் சொன்னான் காதல்வந்ததென்று..
மகிழ்ந்தேன்.. உற்று மகிழ்ந்தேன்..
இன்னும் உற்றுநோக்கினேன்..
புரிந்துகொண்டேன்..
இது காதல் அல்ல..
புதிதாய் வந்திருக்கும் 4டி டெக்னாலஜி என்று..

Reason for it.???

Not moved from my place.. I have, Never moved from my place..
It hangs in my heart..
It bangs me- to go anywhere,  Love what I saw, Cheer for everything.. Yet I couldn’t..
Searched for reason with sorrow..
My travel to the search- Upon king’s dynasty.. Among various scientists.. Towards sacred people.. Yet, I didn’t get to it..
My heart rang me upon my face door, Made a new way.. Different from the past.. Searched in a single place-slum; Can get it..
Younger people as the aged one, Children younger than me, Bears work more than of me.. Is this the reason..??? Might be one.. Yet searching for more reasons; Made sure that I can get On the part of India’s wet eyes..!!!

இந்தியா

தென்றல் காற்று வீசுதடி! தேகம் எங்கும் கூசுதடி! உயிரில்லா ஜீவன் பேசுதடி! உணர்ச்சிகள் மனதில் பொங்குதடி! எங்கும் எதிலும் மகிழ்ச்சியடி! எதனால் இவ்வகை மாற்றமடி! எனக்குள் ஏன் இந்த குழப்பமடி! சற்று சிந்தித்தேன்... அதன் காரணம் நானே அறிவேனடி அது, உன் பெயர் செய்த கலகமடி!!! இந்தியா என்று சொல்லும்போதே விடுதலை வேட்கை எழும்புதடி!!!

மும்பை குண்டு வெடிப்பு 2008!!!

நிலவொளியில் சுடும் ஒலி தான் என், மன வலியின் முதல் நிகழ்வு.
அந்நிகழ்வை வேரறுக்க அணிவகுத்து வந்தாரே! நம்மை, அறவணைத்து கொண்டாரே!
கொண்டாரின் தியாக நெஞ்சம் கொலை செய்ய பட்டதடா! கொதித்து நீயே எழுந்திடா!
 வீரமகனார் இரத்தம் தான்  வீணாய் மண்ணில் சிந்தியதோ!  இல்லை,  நம் வீரத்தின் நெற்றி திலகமதோ!
உயிர் துறக்கும் நொடி சொல்கிறேன் கேள்!!!

பொறுமையில்லா மனிதர்கள், மகிழ்ச்சி மறந்த குழந்தைகள், ஆயுள் குறைந்த நோயாளிகள், வாய்மையற்ற அரசியல்வாதிகள், என சலித்துவிட்டது-என் வாழ்க்கை சலித்துவிட்டது...
நான் விழைகின்றேன்... படர்வழி மரங்கள் சாலை மறித்திடும், சாரல் மழை சாலையில் தெறித்திடும், மானிட கூட்டம் அறவே இன்றி கிளிகள் கூட்டம் கூச்சலிட்டிடும் நீண்ட தார் சாலையிலே முழுதாய் போத்திய உடைதனிலே மழையில் கோதிய முடியுடனே கைகள் பாக்கெட்டில் மூடியபடி பாதம் நினையா காலணியோடு காரணம் ஏதும் மனதிலின்றி செல்லவேண்டும்-நான் நடந்து செல்லவேண்டும்! மழைச்சாரல் என்னை நனைப்பது அய்யோ! சொர்க்கமடா-கிடைக்க வேண்டுமே!

கண்ணீர் வாழ்க்கை

அம்மா, என் அழுகையில் உன் சிரிப்புள்ளதா? என் முதலழுகையில் உன் முழுசிரிப்பை காண்கின்றேன்...
என்னை கண்டு இன்றழும் நீ அன்று வலி பொறுத்திருந்தால் நான் வலி கண்டற்றிருப்பேனே!!!
அறுவைக்கு பயந்து அஞ்சினாய், என்னை, அறுபதிலும் குழந்தையாகவே கொள்வாய்...
செயலற்றுவிட்டேன்... அனைத்திலும் செயலற்றுவிட்டேன்... இன்று காப்பாற்ற அலையும் நீ, அன்றே, காப்பாற்ற மறந்துவிட்டாயே!!!
சுகப்பிரசவம் எண்ணி, என் வாழ்க்கை சுகத்தை பரித்து கொண்டாய்...
நான்,

நாமே பதில்.!!!

(தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு எழுதியது)

ஒரு வார காலமே உள்ள‍ன..
புத்தாடை வங்கியாச்சு,
வாழ்த்து செய்திகள் பறக்க‍ தொடங்கிவிட்ட‍ன,
ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் ஒத்திகை தொடங்கியாச்சு..
என் மனதுக்கு சுகமாய்,
உழைப்புக்கு தடையாய்- வந்துவிட்டான் என் நண்பன்..
மழை என்னும் என் நலம் விரும்பி..

அவ‌னிட‌ம் கேட்டேன்,
ஏ ந‌ண்பா.! எல‌லோரும் விழாக்‌கோலம் பூண்ட நிலையில், நீ இம்சிக்கிறாயே.! ஏனடா என்றேன்...

அவன் என்னை தெரியாதவனாய் யாரென விமர்சித்தான்..

கொதிப்புற்றேன்..!! ஏ.! ம‌ழை ந‌ண்பா-என்று தெரித்‌த‌ன‌ என் வ‌ரிக‌ள்..

சாந்த‌ம் கொண்ட‌வனாய் அவ‌ர்..
சாந்த‌ம் கொள‌ளுங்க‌ள் தோழா..
நான் ம‌ழையல்‌ல..
திரவக் குடும்பத்‌தை சேர்ந்த‌ கண்‌ணீர் என்ப‌வ‌ன் நான்..

கண்ணீரா..?? என்று என் விழி பிதுங்க..
தொடர்கிறார்..

நான் பட்‌டாசு த‌யாரிக்கும் குழந்தைகளின் க‌ண்க‌ளை இருப்‌பிட‌மாய் கொண்ட‌வ‌ன்..
ப‌ட்டாசு த‌யாரிக்‌கும் போது என்‌னை,
வெளியேற்றிவிட்‌ட‌ன‌ர்,
ம‌ருந்துக‌ளின் மூல‌ம் உண்டாகும்
வெப்ப‌த்தால் மேக‌ங்க‌ளோடு கல‌ந்துவிட்டேன்..
இன்று ப‌ட்டாசு செய்து முடித்த‌ பெருமூச்சு,
என்னை நாலாபுற‌மிருந்து அமுக்க,
பூமியை தொட‌ வ‌ந்துள்‌ளேன்..
மீண்டும் க‌ட‌லோடு க‌ல‌ந்து,
வானோடு சே…

குழந்தை தொழிலாளி

படிக்கும் அறையில் இல்லை-குழந்தை பட்டாசு ஆலையில் இருக்கிறது!
மேஜையில் படிக்கும் வயதில்-குழந்தை மேஜையை துடைத்து கலைக்கிறது!
சீருடை அணியும் வயதில்-குழந்தை சீருடை தைத்து மடிகிறது!
படிக்க ஓடும் கால்கள்-இப்போ பசியை போக்க அலைகிறது!
மதிப்பெண் வாங்கும் கைகள்-இப்போ மாதசம்பளம் வாங்க துடிக்கிறது!
இதை ஒழிக்க துடிக்கும் நெஞ்சங்களே! என்னுடன் சேர்ந்து குரல் கொடுங்கள்!!!

ஒலிம்பிக்

பசிக்கு ஓடும் தூரத்தே சிறுவர்கள், பந்தயம் ஓடச் சென்றிருந்தால், பதக்கம் ஒன்று கூடியிருக்கும் இந்தியா, பலபடி முன்னே சென்றிருக்கும்.......

தமிழ் மொழி

கருத்தை பிறர் அறிந்திடவே கருவாய் இருந்த என்மொழியே மற்றவர் கருத்தை புரிவதற்கு மத்தியில் இருந்த செம்மொழியே விஞ்ஞானத்தை மேம் படுத்த வித்தினை இட்ட என்மொழியே காலம் பலவும் கடந்தாலும் கலங்காத பழம் மொழியே துணைகள் ஏதும் இல்லாமல் தானே இயங்கும் தனிமொழியே வாழ்வில் செம்மை அளித்திடவே வார்த்தைகள் அளித்த தேன்மொழியே மேலும் பலநாள் சென்றாலும் உன் மேன்மையில் சிறந்து திளைப்பாயாக!!!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினச்சேன்.. 

அந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..
அவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...
இந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் …