Skip to main content

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..


அனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்கன்னு நினச்சேன்.. 


அந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..

அவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...

இந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் வாயில அந்த சிகரட். பெரியவங்க புகைவிடுற மாதிரி சும்மா பக்காவா புகைவிடுறான்.

அவன் ஒரு குறிப்பிட்ட ப்ரேண்டு மட்டும் தான் சிகரட் பிடிப்பான்.. அது இந்தோனஷியா விலையில் அவனுக்கு ஒரு நாளைக்கி $5.50 செலவு வைக்கிது. இதபத்தி அவனோட அம்மா டையானா ரிசால் சொல்லும் போது, “இவன் இப்படி தான்.. அவனுக்கு தேவையான அளவு சிகரட் கொடுக்கலனா அவன் கோபத்தோட உச்சிக்கே போயிடுவான்.. போய் சுவத்துல தலைய முட்டிப்பான்.. என்னால எதுவும் பண்ண முடியல..

இந்த பழக்கம் இந்த குழந்தைக்கி வர காரணம் என்ன.???
காரணம் எல்லாமே அவனோட உருப்புடாத அப்பா தான். அவனோட 18வது மாசத்துல அவன் அப்பா ஒரு சிகரட் வாங்கியாந்து அவனுக்கு பழக்க படுத்திட்டாரு. அதிலிருந்து ஒரு நாளைக்கி 40 சிகரட் இவன ஒட்டிகிச்சு..

இந்த பையனோட அம்மா ஒரு பக்கம் கவல பட்டாலும், அப்பாவுக்கு அந்த கவலைங்கிறது துளிகூட எட்டி பாக்கல.. ஏற்கனவே அந்த பையன் வழக்கமா குழந்தை இருக்கறதவிட 4 மடங்கு எடை அதிகமா இருக்கான் இதுல அவங்க அப்பா என்ன சொல்றார்னா, “என் பையன் ஒண்ணும் வழக்கத்துக்கு மாறா இல்ல, எல்லா குழந்தைய போல தான் இருக்கான் இதுல திருத்தவோ இல்ல நான் திருந்தவோ ஒண்ணுமில்ல என்கிறார்.

நல்ல அப்பாதான்.. உருப்புடும் இந்தோனேஷியா.. இத பத்தி இணையதளத்திலும், பத்திரிக்கையிலும் ஒளிபரப்புனதால இந்தோனேஷியா அரசு இறங்குச்சு.. அந்த குழந்தய சரி பண்ணினா அந்த குடும்பத்துக்கு ஒரு கார் பரிசுன்னு அறிவிச்சுது.. பலன் இல்ல.. அடுத்து அரசே அந்த குழந்தய எடுத்து பிஸியோதிரப்பி மூலம் குணபடுத்திடுச்சு.. இப்ப அந்த பையன் சிகரட் கேக்குறதில்ல.. சிகிச்சை கொடுக்கறதுக்கு முன்னாடி அந்த குழந்தை 25கிலோ இருந்த்தாகவும், எழுந்து நடக்க கூட முடியாம, மத்த குழந்தைகளோட சகஜமா பழக கூட முடியாம இருந்தானாம்..

சிகிச்சை செய்த மருத்துவர் கூறும் போது, “இந்த பையன குணப்படுத்துறதுக்கு ரொம்ப பொறுமை அவசியப்பட்டது.. சிகரட்டுங்கறதே கண்ணுல காட்டாம சாதாரண குழந்தையோட மனபாவத்துக்கு அவன இழுத்துட்டு வந்துட்டோம் என்கிறார்..

எப்படியோ, பையன் சரியான சரிதான்..

Comments

 1. அந்த இந்தோனேஷியா நாட்டு சிகரெட்டின் பெயர் "Gudang Garam" தானே... நம்மூரில் (சென்னையில்) கூட கிடைக்கிறதே...

  ReplyDelete
 2. அந்த சிகா பெயர் எனக்கு தெரியவில்லை நண்பரே.!
  அது நம்மூரில் கிடைக்கிதா என்பதையும் நான் அறியேன்..
  இயல்பாவே நமக்கு சிகா பழக்கம் இல்ல பாருங்க..

  ReplyDelete
 3. இந்த செய்தி கேள்விபட்டு இருக்கேன்...ஆனால் பாப்பா குணமான விஷயம் உங்க ப்ளாக் கில் தான் தெரிஞ்சுகிட்டேன்...ம்ம்...இந்த மாதிரி அப்பாக்களும் இருக்காங்க...

  ReplyDelete
 4. நண்பரே..உங்க கமெண்ட் பகுதியில் word verification ஐ எடுத்து விட்டுருங்க...படிச்சுட்டு கமென்ட் போடுறவங்களுக்கு இன்னும் எளிதாய் இருக்கும்))

  ReplyDelete
 5. @ஆனந்தி: முதலில் என் வரவேற்பை ஏற்றுக்கொள்ளுங்கள். . இந்த மாதிரி அப்பாக்கள் பெருகாமல் இருக்ககவேண்டும்..ஏனெனில் இந்தோனேஷியா மக்களில் பெருவாரியான சதவீத மக்கள் இந்த சிகா பழக்கத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.. மற்றும் சொன்னதுக்கு நன்றி-word verification ஐ எடுத்துவிட்டேன்..

  ReplyDelete
 6. ம்......... இப்படியும் ஒரு குழந்தை(?)யா........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…