அசிங்கபட்டான் இவ்வ்வன்... காபிச்சீனோ          நாங்க எல்லோரும் வித்யாசத்த விரும்புறவங்க.. வித்தியாசத்த விரும்பாத மக்களோ, மனிதனோ இந்த உலகத்துல இல்லனு தான் சொல்லனும்.. அப்படிபட்டவங்க தான் நாங்க.. நாங்க வழக்கமா காலேஜ்ல ஏதாச்சும் நிகழ்ச்சி நடந்தா வெளியே சுத்த ஆரம்பிச்சுடுவோம்.. அப்படி சுத்தும்போது,ஏதாச்சும் வித்யாசமான சாப்புடுற பொருள பாத்தா உடனே எங்க கண்ணு போற இடம் அதோட விலைய பாக்குறதுக்கு தான்.. விலை கம்மியா இருந்தா உடனே வாங்கிடறதுதான் எங்க பழக்கம்..


                      இவனு தான் அவன்.. அவன் தான் நானு..


          அப்படி ஒரு நாள் காலேஜ்ல நிகழ்ச்சி ஒண்ணு நடக்குதுனு நாங்க வெளியே சுத்துனோம்.. அப்படி சுத்தும் போது, வெளியே கொஞ்சம் தள்ளி ஃப்ரண்ட்ஸ உக்கார சொல்லிட்டு ஒரு காபி கடைக்குள்ள நுழஞ்சேன்.. வெளியில சேர்ல உக்காந்திருக்க என் ஃப்ரண்ட்ஸும் ஏதாச்சும் வாங்கிட்டுவர கேட்டாங்க.. அந்த கடைகுள்ள நுழஞ்சதும் முத வேலையா வழக்கமா பாக்குற மாதிரி எது விலை கம்மியா இருக்குனு பாத்தேன்..


          அப்படி பாக்கும் போது தெருக்கடை காபியே குடிச்சு பழகின எனக்கு, ‘காபிச்சீனோ’ங்கற காபி வகை புதுசா இருந்துச்சு.. விலை 10ரூபாய்னு பாத்ததுமே ரொம்ப சந்தோசம் ஆயிடுச்சு. ஆனா இப்ப அடுத்த சிக்கல் இத எப்படி சொல்லி கேட்குறது.. அத எப்படி படிக்கனும்னு தெரியல.. எந்திரன் படத்துக்கு சங்கர் யோசிச்சத விட பயங்கரமா யோசிச்சன்.. அப்ப என் புத்திக்கு எட்டுன மாதிரி மெனு கார்ட தேடினேன்.. அந்த மெனு கார்டுல அந்த ஐடத்த தேடி, ‘ஏன்னா..! இத கொடுங்கண்ணா..?’ னு கேட்கும்போது இத கூட நம்மலால படிக்கமுடியிலியேனு வெட்கமே வரல பாஸ்.. எப்ப காலேஜ் ஸ்டூடண்ட்டா ஆனேனோ அப்பவே இந்த வெட்கம், மானம் எல்லாம் போயிடும் போல..

          ஆர்டர் கொடுத்து அப்பரம்தான் பாலே வாங்க போயிருப்பான் போல 15நிமிசம் கழிச்சு காபியில ஒரு குச்சி ஒண்ணுவேற போட்டு எடுத்தாந்தான்.. என்னோட சேத்து 5 பேருக்கும்  5 குச்சி போட்ட காபிய எடுத்துகிட்டுபோனேன்.. நான் எடுத்துட்டு போன என் ஃப்ரண்ட்ஸுக்கும் அந்த குச்சி எதுக்குன்னு தெரியல.. பந்தாவா அந்த குச்சிய தூக்கிப்போட்டுட்டு ஒரே சமயத்துல வாயில வச்சவோம்.. ஒரே சமயத்துல கீழயும் துப்பிட்டோம்.. ‘பாஸ்.. நாரப்பய காபியில சக்கர போடாம கொடுத்துட்டான்..’ யாருக்கும் புடிக்கல.. என்ன பண்றதுன்னு தெரியல.. அந்த கடையிலேயே போய் கேக்கலாம்னு நெனச்சா, உண்மையாவே ‘காப்பிச்சீன்னோ’னா சக்கரை போடாத காபியா இருந்தா என்ன பண்றதுன்னு எங்களுக்கள்ள ஒரு குழப்பம்.. நாங்க தான் வெட்கம் இல்லாதவங்கனு நீங்க நினைக்கலாம்.. அதுலயும் ஒரு விதிவிலக்கு இருக்குங்க.. பெண்கள் இருக்குற இடத்துல நாங்க முழு ஜென்டில்மேன்-ங்கோ, ரொம்ப வெட்கம், மானம் பாப்போம்..


          அந்த சமயம் பாத்து அந்த கடையில வெரும் பொண்ணுங்க கூட்டம்.. என்ன பண்றதுன்னு தெரியாம ஒருத்தர ஒருத்தர் நாங்களே பாத்து முழிச்சிகிட்டே இருந்தோம்.. இதுல 50ரூபா வேற வேஸ்டா போயிடுச்சேனு எங்க மனசுல ஒரே வருத்தம்.. இருந்தாலும் நாங்க முழிச்சுகிட்டே இருக்குறப்ப ரொம்ப நேரமா எங்களயே பாத்துகிட்டிருந்த டேபிள் க்ளீன் பண்ற லேடி, நேரா வந்து அந்த குடிக்காம இருந்த 5 காபி டம்ப்ளாரையும் எடுத்துகிட்டு டேபிள க்ளீன் பண்ணிட்டு அடுத்த டேபிளுக்கு போயிட்டாங்க.. எங்க நிலம அவங்களுக்கு புரிஞ்சிருக்கு.. அவங்க வேலைய அவங்க பர்ஃபெக்டா முடிச்சுட்டாங்க.. நாங்க வருத்தத்தோட அந்த டேபிள உட்டு கிளம்பினோம்.. 

கடைசியா நாங்க 5 பேரும் அந்த கடைய சினிமாவுல வர கேங்க் ரவுடிங்க மாதிரி கோபமா பாக்கும்போது, அந்த கடை டேபிள்ல ஒரு டப்பா இருந்தத பாத்தோம்.. என்னடானு எங்க கர்ண கொடூர பார்வைய மறைச்சுகிட்டு பக்கத்துல போய் பாப்போம்னு பாத்தா, அது சக்கர டப்பா.. நம்மலே எடுத்து சக்கர போட்டுக்கணும் போல.. அத கரைய வைக்கதான் அந்த குச்சி கொடுத்திருக்கான்.. அப்ப மறைஞ்சி போன அந்த கர்ண கொடூர பார்வை என் பக்கம் திரும்பிடுச்சு.. நல்லா ஓடவிட்டு அடிச்சானுங்க.. என்ன திரும்பிவேற போய் அந்த ‘காபிச்சீனோ’வ வாங்கிட்டு வரசொல்றானுங்க.. இன்னொரு 50ரூபாய்க்கு நான் எங்க போவன்.. நீங்களே சொல்லுங்க பாஸ்..

          இதனால நான் அந்த மாதிரி காபி கடைகாரர்களுக்கு என்ன சொல்றன்னா.. சார்.. இனிமேலாவது உங்க கடைக்கு வர்றவங்க கிட்ட.. அங்க இருக்குற சக்கரைய நீங்க தான் போட்டுக்கனும்னு சொல்லுங்க.. எப்பப்பா என்னா அடி..! முடியிலப்பா..!
Comments

 1. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. நல்ல மொக்கை... இத்தனை ஓட்டுபட்டைகளை இணைத்தால் உங்கள் தளம் மிகவும் மெதுவாக இயங்கும்.,... சிலதுகளை மட்டும் வைக்கவும்...

  ReplyDelete
 3. @பிரபாகரன்: நன்றி நண்பரே..!!!
  பதிவுலகின் எனது வழிகாட்டிக்கு நன்றிகள்..
  நீங்கள் கூறியவாரே நீக்கிவிட்டேன் நண்பா.!!

  ReplyDelete
 4. thambi koormathiya intha avamanam unaku thevaiya ?

  ReplyDelete
 5. @bublu:தேவைதான்... அவமானம் எதிர்காலத்தில் வெகுமானமாக மாறும்...

  ReplyDelete
 6. ஹ ஹ...நல்லா சிரிச்சேன்...:))

  ReplyDelete
 7. @ஆனந்தி..:என் நிலைமை உங்களுக்கு சிரிப்பா இருக்கு.!!! பரவால

  ReplyDelete
 8. எந்திரன் படத்துக்கு சங்கர் யோசிச்சத விட பயங்கரமா யோசிச்சன்.. //

  அப்படியே பக்கத்தில் இருக்கும் ச்ர்கரை டப்பாவையும், அந்த குச்சியை ஸ்ட்ரா மாதிரி உபயோகிச்சி காப்பியைக் குடிச்சிப் பார்த்திருக்கலாமில்ல????

  ReplyDelete
 9. @இராஜி:எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.???

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி