ஆளே இல்லாம வண்டி ஓடுது..

இத்தாலியிலிருந்து சீனாவுக்கு ஒரு பயணம்.. கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, கசகஸ்தான், கோபி பாலைவனம் வழியான பயணம்.. இந்த பாதைகளில் தொலைந்துவிடாமல் வருவதே பெரிய விசயம்.. ஆனால் டிரைவர் இல்லாத வண்டியில் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள‍னர் இத்தாலியின் பார்மா விஸ்லேப்-ஐ(pharma vizlab) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.. இது 2010ன் world expoவுக்காக செய்ய‍ப்ப‍ட்ட‍து..


நான்கு டிரைவர் இல்லாத வேன்கள் 13000கி.மீ., தூரம் சோதனை ஓட்ட‍த்தை இத்தாலியிலிருந்து சீனாவின் சாங்காய் எக்ஸ்போவுக்கு வந்தத‍ன் மூலம் வெற்றிகரமாக முடித்த‍து.. ஜீலை 10 தொடங்கி அக்டோபர் 28ம் தேதி நிறைவடைந்தது..

இதில் நான்கு சூரிய சக்தியில் இயங்க்கூடிய ஒளிக்க‍திர் வருடி(laser scanner) மற்றும் ஏழு வீடியோ கேமிராக்க‍ளும் ஒன்றாக‌ இயங்கி சாலையின் தடைகளை கடக்க‍ உதவும்.. Generic Obstacle and Lane Detector(GOLD) எனப்ப‍டும் கம்ப்யூட்ட‍ரால் செயற்கை முறையில் இயக்க‍ப்ப‍டும் கருவி, சென்சாரிலிருந்து வரும் தகவல்களை கொண்டு தானாக வண்டியின் வேகத்தையும், திசையையும் தீர்மானிக்கும்..


ஒவ்வொரு வண்டியும் மூன்று கணிணியை கொண்டிருக்கும்.. ஒன்று முன்னிருந்து வரும் பிம்பத்தையும், மற்றொன்று புறங்களின் பிம்பங்களையும், மூன்றாவது வண்டிக்கான வழியை வகுக்கும்..

இந்த சூரிய சக்தி வண்டியை செலுத்த‍ மட்டுமே உபயோகிக்க‍படும், இதர வேலைகளுக்கு எலக்டிரக்க‍ல் மற்றும் டீசல் ஜெனரேட்ட‍ர் மூலம்  ரீ-சார்ஜ் பண்ண‍கூடிய பேட்ட‍ரிகள் உபயோகிக்க‍ப்ப‍டும். இது மணிக்கு 60 கி.மீ., வேகம் செல்லும் மற்றும் ஒவ்வொரு இரண்டிலிருந்து மூன்று மணிநேர ஓட்ட‍த்திற்கு பிறகு எட்டு மணி நேரம் ரீ-சார்ஜ் செய்யவேண்டும்

20 திறன் படைத்த‍ ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் இதில் பயணிக்க‍, 6 வாகனங்கள் தங்குவதற்கும், பழுது சரிபார்க்க‍வும் அவைகளை பின்தொடர்ந்தன.. ஒவ்வொரு 3 வாரத்திற்க்கும் ஒரு குழுவினர் இத்தாலிக்கு சென்றுவிட்டு மற்றொரு குழுவினர் பயணத்தில் கலந்து கொள்வர்.. கேமராக்க‍ளும், சென்சாருகளும் படம்பிடிப்ப‍தால் ஒவ்வொரு இரவும் கணிணியின் ஹார்டு டிரைவ்-ஐ மாத்துகின்றனர்.

டிரைவர் சீட்டை தவிர இதர சீட்டுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட‍வர்கள் சோதனை ஓட்ட‍மென்பதால் அமர்ந்திருந்தனர்.. இந்த பயணம் பல்வேறு பிரபலமில்லா பகுதியை கடந்து வருவதால் மேப்புகள் பதிய செய்யபடவில்லை.. மாறாய், நான்கு வண்டிகளில் முதல் வண்டியில் அமர்ந்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் வழியை வகுக்க‍, இதர பின்தொடரும் வாகனங்கள் அந்த முதல் வண்டியின் பாதையை தொடரும்..
இந்த பயணம் வித்யாசமான சூழ்நிலைகளில் அமைக்க‍ப்ப‍ட்டிருந்தது.. இதன்மூலம் வண்டியின் திறனை அறியலாம்..

வெற்றிகரமாக பயணத்தை முடித்த‍வர்கள், பயணத்தின் போது பல சோதனைகளை கண்டதாய் கூறினர்.. இரண்டு சிறிய விபத்தும்,ரஷ்ய டோல் கேட்டில் ஒரு நாள் முழுதும் வீணாணதாகவும் தெரிவித்த‍னர். இரண்டு சிறிய விபத்துக்க‍ள் மனித தவறுகளாலே நடந்தேறின என்றும், மற்ற‍படி இயந்திரம் மிகவும் அருமையாக செயல்படுவதாகவும் கூறி பெருமிதம் கொண்டனர்.

இதை பற்றி ஆராய்ச்சியாளரின் ஒருவரான ப்ரோக்கி கூறுகையில், “ நாங்க இதை பெரிய பாதையா இருக்க‍ணும்னு ப்ளான் பண்ணியிருந்தோம்.. அதனால், சூழல் மாற்ற‍த்தையும் வித்யாசமான டிராஃபிக்கையும் சமாளிக்கும் திறனை அறியமுடிந்தது.. எங்களை பயமுறுத்தும் சூழல்களும் இருந்தது.. குறிப்பாக ஒரு சமயம் நாங்க வண்டிய விட்டு கீழ இறங்கினப்ப‍ எங்க வண்டி முன்னிருந்த வண்டி மேல மோதிடுச்சு.. அதுக்கு காரணம் கேமராவை ஆஃப் பண்ணிட்டு சிஸ்டத்தை ஆஃப் பண்ண‍ மறந்துட்டோம்.. அப்ப‍யிலிருந்து வண்டிய விட்டு இறங்கினாலே கரெக்டா எல்லாத்தையும் செக் பண்ணிட்டு தான் இறங்கினோம் என்று சொல்லிக்கொண்டே நகைத்தார்.. மேலும் நடக்க‍ப்போகும் அவர்களின் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்க‍ள்..!!!

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி