குழந்தை தொழிலாளி


படிக்கும் அறையில்
இல்லை-குழந்தை
பட்டாசு ஆலையில்
இருக்கிறது!

மேஜையில் படிக்கும்
வயதில்-குழந்தை
மேஜையை துடைத்து
கலைக்கிறது!

சீருடை அணியும்
வயதில்-குழந்தை
சீருடை தைத்து
மடிகிறது!

படிக்க ஓடும்
கால்கள்-இப்போ
பசியை போக்க
அலைகிறது!

மதிப்பெண் வாங்கும்
கைகள்-இப்போ
மாதசம்பளம் வாங்க
துடிக்கிறது!

இதை ஒழிக்க துடிக்கும்
நெஞ்சங்களே!
என்னுடன் சேர்ந்து
குரல் கொடுங்கள்!!!

Comments

 1. முதலில் உங்களை வரவேற்கிறேன்..
  நன்றி..

  ReplyDelete
 2. புத்தகம் சுமக்கும்
  கரங்கள் இன்று
  குடும்பம்
  சுமக்கின்றன...........

  நண்பரே இங்கு வந்து பாரும்
  http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_02.html

  ReplyDelete
 3. வணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்

  http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_12.html

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி