கண்ணீர் வாழ்க்கைஅம்மா,
        என் அழுகையில்
        உன் சிரிப்புள்ளதா?
        என் முதலழுகையில்
        உன் முழுசிரிப்பை காண்கின்றேன்...

என்னை கண்டு இன்றழும் நீ
அன்று வலி பொறுத்திருந்தால்
நான் வலி கண்டற்றிருப்பேனே!!!

அறுவைக்கு பயந்து அஞ்சினாய்,
என்னை,
அறுபதிலும் குழந்தையாகவே கொள்வாய்...

செயலற்றுவிட்டேன்...
அனைத்திலும் செயலற்றுவிட்டேன்...
இன்று காப்பாற்ற அலையும் நீ,
அன்றே,
காப்பாற்ற மறந்துவிட்டாயே!!!

சுகப்பிரசவம் எண்ணி,
என் வாழ்க்கை சுகத்தை பரித்து கொண்டாய்...

நான்,
தாய் கஷ்டம் அறியாதவனல்ல...
ஆனால்,
என் கஷ்டம் உனக்கு புரியாதா???

என் நிலையில் கவலை கொண்டாலும்
அதனால்,
ஒரு சமயம் உன் பயம் தணித்த
நிம்மதி எனக்குண்டு...

இருப்பினும்,
அன்று உன் வலி குறைத்தாய்...
இன்று,
   நாம் இருவரும் வலிக் கொண்டோமே!!!
கண்ணீரோடு இருக்கிறேன்,
   நான் தனித்தெழுவது எப்போதென...     

Comments

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி