உயிர் துறக்கும் நொடி சொல்கிறேன் கேள்!!!
பொறுமையில்லா மனிதர்கள்,
மகிழ்ச்சி மறந்த குழந்தைகள்,
ஆயுள் குறைந்த நோயாளிகள்,
வாய்மையற்ற அரசியல்வாதிகள்,
என சலித்துவிட்டது-என்
வாழ்க்கை சலித்துவிட்டது...

நான் விழைகின்றேன்...
படர்வழி மரங்கள் சாலை மறித்திடும்,
சாரல் மழை சாலையில் தெறித்திடும்,
மானிட கூட்டம் றவே இன்றி
கிளிகள் கூட்டம் கூச்சலிட்டிடும்
நீண்ட தார் சாலையிலே
முழுதாய் போத்திய உடைதனிலே
மழையில் கோதிய முடியுடனே
கைகள் பாக்கெட்டில் மூடியபடி
பாதம் நினையா காலணியோடு
காரணம் ஏதும் மனதிலின்றி
செல்லவேண்டும்-நான் நடந்து செல்லவேண்டும்!
மழைச்சாரல் என்னை நனைப்பது
அய்யோ! சொர்க்கமடா-கிடைக்க வேண்டுமே!
இந்த நிகழ்ச்சிக்கு பின்- நான்
உயிரையும் துறப்பேனடா!!!!!!!

Comments

 1. இந்த கவிதை படிக்கும்போது நான் கற்பனையே செஞ்சு பார்த்துட்டேன்....ஆனால் மானிட கூட்டம் அறவே இன்றி அந்த தனிமை ரொம்ப நேரம் இனிக்கும்னு நினைக்கிறிங்களா? பைத்தியம் பிடிச்சும் உயிரை விட்டுருவோம் அந்த தனிமை கொடுமை தாங்காமல்...சத்தங்களிலும் சில ருசிகள் நம்மாலே அனுபவிக்க முடியும் என்னை பொறுத்த வரை.....பட், செமையா இருந்தது இந்த கவிதை...பகிர்வுக்கு நன்றி :))

  ReplyDelete
 2. இதுலயும் word verification எடுத்து விட்டுருங்களேன்...

  ReplyDelete
 3. மானிட கூட்டம் அறவே திருந்திட

  என்று மாற்றினால் மாற நினைக்கலாம் மானிட கூட்டம்

  ReplyDelete
 4. @ஆனந்தி:
  /*அந்த தனிமை ரொம்ப நேரம் இனிக்கும்னு நினைக்கிறிங்களா?*/
  அப்படியொரு நிகழ்ச்சிக்கு பின் உயிரையும் துறப்பேன் என கூறியுள்ளேன்.. உயிர் துறந்தபின் அது இனித்தால் என்ன இனிக்காட்டி என்ன.???

  //என்னை பொறுத்த வரை.
  அதேதான்... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.

  ReplyDelete
 5. @dineshkumar:\*மானிட கூட்டம் அறவே திருந்திட

  என்று மாற்றினால் மாற நினைக்கலாம் மானிட கூட்டம்*/

  இது நான் மானிட கூட்டம் திருந்துவதற்காக எழுதவில்லை...
  என் கோபத்தோடு கூடிய ரசனையில் எழுதியது..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி