தமிழ் மொழி


கருத்தை பிறர் அறிந்திடவே
கருவாய் இருந்த என்மொழியே
மற்றவர் கருத்தை புரிவதற்கு
மத்தியில் இருந்த செம்மொழியே
விஞ்ஞானத்தை மேம் படுத்த
வித்தினை இட்ட என்மொழியே
காலம் பலவும் கடந்தாலும்
கலங்காத பழம் மொழியே
துணைகள் ஏதும் இல்லாமல்
தானே இயங்கும் தனிமொழியே
வாழ்வில் செம்மை அளித்திடவே
வார்த்தைகள் அளித்த தேன்மொழியே
மேலும் பலநாள் சென்றாலும்
உன் மேன்மையில் சிறந்து திளைப்பாயாக!!!

Comments

  1. தமிழின் சிறப்பு உலக நாடுகளும் வியக்கும்,,,,,,,,,,

    அருமையான வரிகள் நண்பரே

    ReplyDelete
  2. முதலில் உங்களை வரவேற்கிறேன்.. கார்மேகத்திலும் சூழ்ந்திருந்த நம் தமிழ் இன்று கணிணியிலும் புகுந்துவிட்டது.. மேலும் உலகளாவிய மொழிகளில் ஆங்கிலத்தை பின்னுக்கும் தள்ளும் அதிக வாய்ப்பு கொண்டது நம் தமிழ்.. உங்களை போன்றவர் எழுச்சியோடு இருக்கும்வரையில் நம் தமிழின் எதிர்காலம் கண்முன்னே ஒளியாக தெரிகிறது.. நன்றி நண்பரே..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி