நாமே பதில்.!!!

(தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு எழுதியது)

ஒரு வார காலமே உள்ள‍ன..
புத்தாடை வங்கியாச்சு,
வாழ்த்து செய்திகள் பறக்க‍ தொடங்கிவிட்ட‍ன,
ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் ஒத்திகை தொடங்கியாச்சு..
என் மனதுக்கு சுகமாய்,
உழைப்புக்கு தடையாய்- வந்துவிட்டான் என் நண்பன்..
மழை என்னும் என் நலம் விரும்பி..

அவ‌னிட‌ம் கேட்டேன்,
ஏ ந‌ண்பா.! எல‌லோரும் விழாக்‌கோலம் பூண்ட நிலையில், நீ இம்சிக்கிறாயே.! ஏனடா என்றேன்...

அவன் என்னை தெரியாதவனாய் யாரென விமர்சித்தான்.. 

கொதிப்புற்றேன்..!! ஏ.! ம‌ழை ந‌ண்பா-என்று தெரித்‌த‌ன‌ என் வ‌ரிக‌ள்..

சாந்த‌ம் கொண்ட‌வனாய் அவ‌ர்.. 
சாந்த‌ம் கொள‌ளுங்க‌ள் தோழா.. 
நான் ம‌ழையல்‌ல..
திரவக் குடும்பத்‌தை சேர்ந்த‌ கண்‌ணீர் என்ப‌வ‌ன் நான்..

கண்ணீரா..?? என்று என் விழி பிதுங்க.. 
தொடர்கிறார்..

நான் பட்‌டாசு த‌யாரிக்கும் குழந்தைகளின் க‌ண்க‌ளை இருப்‌பிட‌மாய் கொண்ட‌வ‌ன்..
ப‌ட்டாசு த‌யாரிக்‌கும் போது என்‌னை, 
வெளியேற்றிவிட்‌ட‌ன‌ர்,
ம‌ருந்துக‌ளின் மூல‌ம் உண்டாகும் 
வெப்ப‌த்தால் மேக‌ங்க‌ளோடு கல‌ந்துவிட்டேன்..
இன்று ப‌ட்டாசு செய்து முடித்த‌ பெருமூச்சு, 
என்னை நாலாபுற‌மிருந்து அமுக்க,
பூமியை தொட‌ வ‌ந்துள்‌ளேன்..
மீண்டும் க‌ட‌லோடு க‌ல‌ந்து, 
வானோடு சேர்ந்து 
உங்க‌ள் ம‌ழை ந‌ண்ப‌னாய் வ‌ருகிறேன்..
என்று சொல்‌ல..

மீண்டும் உங்களை போன்றவர்கள் கண்ணீராய் வராமல் இருக்க‍ வழி உண்டா என்று விமர்சித்தேன்..

மரியாதை வந்ததால் அவர் முகத்தில் பொலிவு.. 
பொலிவுடன் கூடிய பதிலாய்,
உண்டு.! பதில் உங்களை போன்றவர் தான் என்று கூறி மறைந்தார்..

நான் பதிலானேனா.. எப்ப‍டி.?
எப‌படி என்றால்.!! நீங்கள் இல்லாமல் எப்ப‍டி என்றேன்..
வாரும் தோழமையே பதிலாவோம்.

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி