Posts

Showing posts from December, 2010

சென்னையில் ரப்பர் கண்காட்சி.!!!

Image
ஆசியாவின் மிகபெரிய ரப்பர் கண்காட்சியாகிய “Indian Rubber Expo-2011”வரும் ஜனவரி 19 முதல் 22ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது.
இந்தியாவின் ரப்பர் கண்காட்சி முதல்முதலாக 2001ல் நடத்தபட்டது. அதன் பின் ஈராண்டுக்கு ஒரு முறை என்னும் வகையில் இது வரை மொத்தம் ஐந்து முறை நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் வளர்ச்சியை பெருமளவில் கண்ட இக்கண்காட்சி மளமளவென்று வளர்ந்து இப்போது 15000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைப்பெற உள்ளது. இக்கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியது என்பதும் உலகிலே இரண்டாவது பெரிய கண்காட்சி என்பதும் குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சி மூன்று பிரிவுகள் கொண்டுள்ளது. கண்காட்சி,கருத்தாய்வு மற்றும் டயர் மெக்கானிக் பயிற்சி. கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. ம0 நாடுகளிலிருந்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
அமெரிக்கா,மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளிலிருந்து பெருமளவில் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து முறைகளில் இல்லாமல் இம்முறையே கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்ட…

கண்டேன் கடற்கரையை.!!!

Image
மாலை நேரம்... சீறிப்பாயும் கடலலைகள், சிதறியோடும் மனிதர்கள், சிப்பி பொருக்கும் சிறுவர்கள், கடல்வீடான மீனை கரையோரம் சமைப்பவர்கள், நாணம் மறந்து குளிப்பவர்கள், என கண்டேன் கடற்கரையை...
வியத்தகு கடலை சம்பந்தபடுத்தி என்னுள் ஆயிரம் வினாக்கள்...
கடல் அலை வலிமையற்றதா? கரையை அடைய வந்து அதனை,
தொட்டு மட்டும் செல்கிறதே!
மனிதர் மனம் நிலையற்றதா? கடல் காண முன்வந்து கடலலையால் பின்நோக்குகின்றனரே!
உண்மையில் நிலவு சக்தி வாய்ந்ததா? உலகிற்கே ஒளிப்படைத்தாலும் நடுக்கடல் மீனவனுக்கு கலங்கரை விளக்கமாகாதே!
கடல் அழகானதா? மேல் தெரியும் தண்ணீர் அனைத்தும் உள்வாங்கிய பிணத்தின் கண்ணீர் தானே!
என் கண் பொய் உரைக்கிறதா? அழகாய் காட்டும் கடலுள்ளே ஆயிரகணக்கில் கழிவுகளை மறைக்கிறதே!

என் தந்தை கொடியவரா.???

Image
தளர்த்திவிட்ட தலைமுடி, இஸ்திரி போட்ட ஆடைகள், முறுக்கி விட்டமீசை, சிறிது கொழுத்திருக்கும் தாடி, மிரட்டும் நடை, வியக்கவைக்கும் மனிதர்... அவர் எனது தந்தை...
அடுத்த நாள் பரீட்சைக்கு முட்டி மோதி மனதிலேத்தி, தேர முடியா தேர்வுலயும் தேர்ச்சி பெற்று களித்தேனே-தோழா.!! மாறாய், மதிப்பெண் குறைவென கடிந்திட்டாரே என் தந்தை கொடியவர் தானா.?
வீதியில் திரியும் வயதில் வெளியில் செல்லவிடாது காத்து காத்து வைத்தாரே.! நான் காக்க வேண்டிய பொருளா.. உலகை சுற்றி வந்தால் தான் உணர்வை அறிய முடியும் அதை அறியாதவரானாரே-தோழா.! என் தந்தை கொடியவர் தானா.?
முதல் மாத சம்பளத்தை முழுதும் வீட்டிற்கு செலவழித்து பண்டம், துணியென களிப்புற்றேனே-தோழா.! கடிந்தே-இன்பத்தை துன்பமாக்கிட்டாரே என் தந்தை கொடியவர் தானா.?

"குப்பைமேடா குத்தம்பாக்கம்?”

Image
3 செப்ட்.,2010

~கொதிக்கும் கிராம மக்கள்! குழப்பத்தில் அதிகாரிகள்!

சாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு கிராமம்; சுற்று வட்டாரத்தில் சாதிச் சண்டைகளுக்கு பெயர் போன ஒரு கிராமம்; படிப்பறிவில்லாத தலித் மக்களை அதிகம் கொண்டிருந்த ஒரு கிராமம், இன்று அந்த கசடுகளையெல்லாம் நீக்கி, சாராயம் காய்ச்சுவதையும், குடிப்பதையும் ஏறத்தாழ ஒழித்துவிட்ட ஒரு கிராமமாக, குடிசைகளே இல்லாத கிராமமாக, படிப்பறிவு மிகுந்த ஒரு கிராமமாக, வலிமையான கிராம சபையையும், வெளிப்படையான பஞ்சாயத்து நிர்வாகத்தையும் கொண்ட ஒரு கிராமமாக, உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவை நோக்கித் தொடர்ந்து வெற்றி நடை பயிலும் ஒரு கிராமமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த கிராமம், குத்தம்பாக்கம்! தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாகத் திகழும் குத்தம்பாக்கம், இன்று தமிழக அரசால், தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒரு பிரச்னையைத் துணிவுடன் எதிர்ப்பதிலும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
திருவள்ளுவர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியத்தை சார்ந்தகிராமம்தான்குத்தம்பாக்கம். சென்னையில…