சென்னையில் ரப்பர் கண்காட்சி.!!!
ஆசியாவின் மிகபெரிய ரப்பர் கண்காட்சியாகிய “Indian Rubber Expo-2011”வரும் ஜனவரி 19 முதல் 22ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது.

இந்தியாவின் ரப்பர் கண்காட்சி முதல்முதலாக 2001ல் நடத்தபட்டது. அதன் பின் ஈராண்டுக்கு ஒரு முறை என்னும் வகையில் இது வரை மொத்தம் ஐந்து முறை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் வளர்ச்சியை பெருமளவில் கண்ட இக்கண்காட்சி மளமளவென்று வளர்ந்து இப்போது 15000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைப்பெற உள்ளது. இக்கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியது என்பதும் உலகிலே இரண்டாவது பெரிய கண்காட்சி என்பதும் குறிப்பிடதக்கது.

இந்நிகழ்ச்சி மூன்று பிரிவுகள் கொண்டுள்ளது. கண்காட்சி,கருத்தாய்வு மற்றும் டயர் மெக்கானிக் பயிற்சி. கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன. ம0 நாடுகளிலிருந்து 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

அமெரிக்கா,மத்திய அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளிலிருந்து பெருமளவில் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த ஐந்து முறைகளில் இல்லாமல் இம்முறையே கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரப்பர் துறையை சேர்ந்த 40க்கும் அதிகமான சர்வதேச நிபுணர்களின் கருத்துகளை கேட்டறியலாம். நிபுணர்கள் இப்போது பின்பற்றும் தொழில்நுட்பத்தை பற்றியும் இயற்கை மற்றும் செயற்கை சிந்தடிக் ரப்பர் தொழில்நுட்பங்களை பற்றியும் விரிவாக விளக்குவர்.

நிபுணர்கள் இப்போது பின்பற்றும் தொழில்நுட்பத்தை பற்றியும் இயற்கை மற்றும் செயற்கை சிந்தடிக் ரப்பர் தொழில்நுட்பங்களை பற்றியும் விரிவாக விளக்குவர்.இது தவிர, வாங்குவோர்-விற்பவர் சந்தித்து பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கேபெக்ஸல் மையம், 30 சர்வதேச நிறுவன பிரதிநிதிகளை பொருள்கள் வாங்குவதற்காக அழைத்து வர உள்ளது.

கருத்தரங்குகள் இந்திய ரப்பர் வாரியத்தின் உதவியோடு நடத்தப்பட உள்ளது. மாலை வேலையில் இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய ரப்பர் கண்காட்சி 2011-ன் ஏற்பாட்டு குழு தலைவர் ஆர்.கே.ராமன்,'' முதன் முதலில் 2001ம் ஆண்டில் 2 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் தொடங்கபட்ட இந்த கண்காட்சி.. இன்று 15 ஆயிரம் சதுர மீட்டர் தாண்டி அமைக்கப்பட்டுள்ளது..'' என்றார்.

இதை பற்றி அகில இந்திய ரப்பர் குழுவின் தலைவர் வினோத் சைமன் கூறுகையில்,''முதல் மூன்றாண்டும் மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி நான்காவதாகசென்னையிலும் அடுத்தது கல்கத்தாவிலும் நடைபெற்றது. இம்முறை மீண்டும் சென்னையில் நடைபெற இருக்கிறது.. அதற்கு காரணம் 2007ல் சென்னையில் நடந்ததின் வெற்றியே.. அதிக அளவில் விற்பனையாளர்களும், வாங்குபவர்களும் இன்னும் பல உபகரணங்களும் சென்னையில் அதிகமாக கிடைக்கிறது.. இந்நிகழ்ச்சிக்கு சென்னை சிறந்த இடம்.'' என்றார்.

ஆட்டோமொபைல், கெமிக்கல், டெக்ஸ்டைல் போன்ற பல துறையினரும் பங்கெடுத்து பயன்பெற கூடிய சிறந்த கண்காட்சி..Comments

 1. மேற்கூறிய துறைகளில் எனக்கு ஈடுபாடு இல்லாதமையால் ஒட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புறேன்...

  ReplyDelete
 2. @philosophy prabhakaran://மேற்கூறிய துறைகளில் எனக்கு ஈடுபாடு இல்லாதமையால் ஒட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புறேன்...//

  ஈடுபாடு இல்லாவிட்டாலும் வந்து எட்டிபார்த்து கருத்து சொன்ன உங்க இரும்பு மனச பாராட்டி நன்றி மட்டும் சொல்லிக்கிறன்..

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. @எல் கே:நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்... கண்டிப்பாக இப்புத்தாண்டு உங்களுக்கு பொலிவுறும் ஆண்டாக இருக்கும்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!