கபடி விளையாடுவோமா.???
கபடி.  ஒரு டீமுக்கு 7 பேர் வீதம் ஒரு செவ்வக பெட்டியின நடுவில் ஒரு நீள் கோடிட்டிருக்க இரு அணியினரும் பிரிக்கப்பட்டிருப்பர். ‘ரைடர்’ எனப்படுபவர் எதிரணியின் பகுதிக்குள் மூச்சினை விடாது ‘கபடி கபடி’ என்று சொல்லிக்கொண்டே சென்று எதிரணியினரை தொட்டுவிட்டு அவர்கள் தடுத்து நிறுத்தும் முன் நடுக்கோட்டை அடையவேண்டும்.


இது நமது தமிழகத்துக்கே உரித்தான விளையாட்டு. பங்களாதேஷ்ன் தேசிய விளையாட்டான இதுதமிழகம்பஞ்சாப்ஆந்திரம் ஆகியவைகளின் மாநில விளையாட்டும் கூட.

1936ல் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹிட்லர் முன்னிலையில் நம்மவர்கள் ‘கபடி’ போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க ஒரு செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். அன்று நம்மவரை அடிமை நாட்டின் பேச்சை ஏற்க முடியாது என்று ஹிட்லர் ஒதுக்கினார். ஆனால்இன்னும் நம்மால் இதை ஒலிம்பிக்கில் சேர்க்கமுடியாதது பெருத்த சோகம் தான்.


கபடி போட்டியில் மூன்று வகையுண்டு அமர்சஞ்சீவனிகாமினி. அமர் வகை போட்டியில் ரைடர் யாரையாவது தொட்டுவிட்டு தன் இருப்பிடத்து திரும்பிவிட்டால் அவர் வெளியில் அமர வேண்டியதில்லை. எதிரணியினருக்கு புள்ளிகள் மட்டுமே கூடும். சஞ்சீவினியில் யாரையாவது ரைடர் தொட்டுவிட்டு சென்றால் அவர்கள் அவரது அணிவீரர் எதிரணி வீரர் ஒருவரை அவுட் ஆக்கும் வரை வெளியில் உட்கார வேண்டும். காமினியில் அவுட்டாகி வெளியில் சென்றவர் மீண்டும் உள்ளே வர இயலாது.

கபடி விளையாட ஒருவருக்கு முக்கியமாக தேவைபடுவது தைரியம்மூச்சை உள்வாங்குதல்நாசுக்கு தன்மை,  ஒன்றுமைஇரும்பு பிடிதிடமான உடம்புசுறுசுறுப்புஇன்னும் பல. இதன் பெயர் ஹீ-டு-டுஹா-டு-டு. சடுகுடுகௌன்பாடா என்று இடத்திற்கேற்ப வேறுபடுகிறது.


கபடியை பொருத்தவரையில் அதில் இந்தியா அசைக்கமுடியாத ராஜா என்றே சொல்லவேண்டும். 1990ல் முதல் முதலாய் பீஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் கபடி அறிமுகபடுத்தப்பட்டது. அன்று முத்ல வரிசையாக 1994ல் ஹிரோஷிமா, 1998ல் பாங்காக், 2002ல் புசான், 2006ல் டோஹா மற்றும் இப்போ 2010ல் குவாங்சு வரை எல்லாத்திலேயும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. ஈரான்பாகிஸ்தான்பங்களாதேஷ் போன்ற அணிகளும் இதற்காக கடுமையாக போறாட இந்தியாவை யாராலும் அசைக்க முடியவில்லை.ஆசிய விளையாட்டு மட்டுமின்றி கபடி உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியா அசைக்க முடியாத சிங்கமாகவே பிளிறுகிறது. 2004ல் முதல்முதலில் தொடங்கியது கபடி உலக கோப்பை. மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டிகளில் நடத்தப்பட்ட மூன்று முறைகளிலும் இந்தியாவே சாம்பியன்.
இந்த முறை ஆசிய போட்டியில் பெண்கள் அணியினரும் தங்கம் வென்று தங்க மங்கைகளாக ஜொலிக்கபங்களாதேஷ்ன் முகம் நாம் ஹாக்கியில் எப்படி இருப்போமோ அப்படி தான் இருக்கிறது- சோர்ந்து போய்வெறுப்பாக...


இதைவிட முக்கியமான ஒன்னு என்னவென்றால் இந்தியா இம்முறை ஆசிய போட்டியில் சீனாவில் ஜெயித்த உடன் அரங்கமே அதிரும் அளவிற்கு ஒலித்த பாடல் 'ஆஞ்ச் பூஞ்ச சந்தனபொட்டாச்சு' என்னும் இளைய தளபதி நடித்த 'கில்லி' பட பாடலே.. அவ்வளவு பெரிய அரங்கில் அதுவும் சீனாவில் நமது தமிழ் பட பாடல் ஒலித்திருப்பது சந்தோசமான விசயம் தானே..!!!(ஆனா இந்த பாட்ட போட்டது சீனாவுக்கு கேவலம்)

பலமுறை சாதித்து காட்டியும் இன்னும் நம்மை போன்றவர்க்கு கிரிக்கெட் மீதிருந்த மோகம் குறைய மாட்டேங்குது... கொஞ்சம் கபடியிலேயும் கலக்குவோமே..!!!

பாகிஸ்தான்ஈரான்ஜப்பான் போன்ற 28 அணிகள் சர்வதேச கபடி சங்கத்தின் கீழ் இருக்கையில் இந்தியா அசைக்கமுடியாமல் இருப்பது நமக்கு எவ்வளவு பெரிய சந்தோசமான விசயம் இல்லையா.??? சொல்லுங்க..

Comments

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி