சிசுப் போராளி!!!


சிசுவே!
சுடர்மிகு விளக்கா நீ?
உன்னை கரிய வந்தால்,
நான்-கரைகின்றேனே!!!

உன் கண்கள்,
கதிரவனை உருக்கும் பனிமலையா?
சினம்கொளும் என்னை
சிலிர்க்க செய்கிறதே...

நடிக கலைஞர்
ஆயிரம் வந்தாலும்,
உன் கண் செய்யும்
செல்ல நடிப்பில் செயலற்றுவிடுவரே!!!

காற்றோடு தாளமிடும்
உன் கால்கள் இரண்டும்- மேலோக
இரதிகளை வயிரெரிய செய்திடுமே!!!

உன்னை நினைத்திடும் மனம்
வேரெண்ணம் கொள்ள மறுப்பது ஏன்???

வியத்தகு மனிதன் நான்...
இன்று,
உன்னை வியந்திடும்
மனிதன் ஆகிவிட்டேன்!!!

கோடை வெயில் போலிருந்தேன்...
உன்னால்-கார்மேகம் ஆகிவிட்டேன்...

உன்பால் என்னுள் பலமாற்றம்...

உருளும் நாட்கள் உயரும் முன்
உலகை நன்கு இரசித்துக்கொள்!!!

நாட்கள் சென்றுவிட்டாள்
நரகம் கண்டுக் கொள்வாய்
நீ-சொர்க்கம் கண்ட இவ்வுலகில்...

பின்னொரு காலத்தில்,
நான் உன்னை கண்டார் போல்
நீயும் ஒரு சிசுவை காண்பாய்,
  -கவலை மறக்க,
   துன்பம் துறக்க,
   துயரம் கலைக்க,
   இன்பம் கண்டிட...

வா!  வா!  வா!
போர்கள உண்மை உலகிற்கு
போர்புரிய வா...
போராளி ஆவோம்-பொருப்பில்லா
உலகம் எதிராய்...

காத்திருக்கிறேன்-உன் வருகைக்காக
ஆயுதம் ஏந்தி,
ஆயுத்தம் ஆவோம்!!!

Comments

 1. //காற்றோடு தாளமிடும்
  உன் கால்கள் இரண்டும்- மேலோக
  இரதிகளை வயிரெரிய செய்திடுமே!!!//

  very very nice...!!!

  ReplyDelete
 2. மிக மிக அருமையான வரிகள்!

  ReplyDelete
 3. @எஸ்.கே:மிகவும் நன்றி...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி