Skip to main content

நான் கடந்த ஆற்றங்கரை.!!!


அரைஞான்கயிற்று பிடியில்
என் அரைடவுசர்..
சட்டை என்பதை அன்று
என் சரித்திரம் அறியாது..
அந்த சொர்கமான நாட்களை
சொல்லதுடிக்கிது மனது..
அங்கே,
நான் கடந்த ஆற்றங்கரை
என்னைபற்றி ஆயிரம் கதைகள் சொல்லுமே.!!

தத்தி தாவிய கால்கள்,
தனிமை அறியா மனதுகள்
இன்றும் கூட மனதில்
அந்த அறியா வயதின் நிகழ்வுகள்..

நிகழ்வுகள் நெஞ்சில் அழியாமல்
என்னை நெகிழ செய்யுதடா தோழா.!
துள்ளி திரிந்த கரையோரம்
இன்றைய துயரை கலைக்க போவோமா.???

வாழ்க்கையை பின்னோக்கி இப்போ
புதிய பயணம் தொடங்கிவிட்டேன்...

பயணம் முடிவில்...
அந்த பதிதாய் எழும்பிய ரெட்டைபாலத்தின் நடுவே..

தண்ணீர் சலசலத்த என் ஆறு
இன்று,
வரிசை கட்டிய லாரிகளின் இருப்பிடமா.?

கண்கள் தேடுது-வாழ்க்கையின் முற்பகுதியை..

சுழலாக வந்து
அன்பால்,
என்னை சுருட்டி சென்றவள்
எங்கே.?

கடிந்த சொற்களால்
கணத்த இதயத்திற்கு
ஆறுதல் சொன்ன
ஈரமண் எங்கே.?

அதிகாலையிலிருந்து
அந்திசாயும் வரை
என்னை அரவணைத்தவள்
எங்கே.?

மாலை நேரத்தில்
என் மக்கிய ஆடையில்
ஒட்டிகொண்டு வீடுவந்தாயே!
உனது சிற்பிகளில்
சிற்பமாய் ஆகி
என்னை சிந்திக்க செய்தாயே.!!
எங்கே சென்றுவிட்டாய்.?

புதைகொண்ட கால்கள்
புத்துயிர் கொண்ட தருணம்
இன்றும் கிடைக்குமா.?

பொறியாளன் ஆனேன்
அப்போதே-உன் மணலில்
பொதிகை மலை எழுப்பியபோது..

எச்சில் நனைத்த
உந்தன்- மணல் காயங்கள்
என்னை மருத்துவன் ஆக்கியதே.!

உன் மணலில்,
கூடி செய்த கூட்டாஞ்சோறு
அன்றே,
என்னை பண்பானவனாக்கியது..

திரிந்து ஓடும் தண்ணீரில்
தூண்டில் போட்ட தருணங்கள்..
பதிக்க முடியா கால்களுடன்
பலருடன் ஓடிய காலங்கள்..
அனைத்தும் நினைவுகளிலே.!

கண்ணீர் புரண்டது..
கசிந்தது ஒரு சொட்டு..
கசிந்த சொட்டு
தொட்டது-என் ஆற்று மணலை..
உள்ளுக்குள் உறிஞ்சிகொண்டாள்
அந்த உதிர்ந்த சொட்டு கண்ணீரை..
அந்த உள்வாங்கிய கண்ணீர்
எங்கள் உன்னத உறவை பளிச்சிடுமே.!!!

காண கிடைத்த இன்பத்தினை
இன்று என் கண்கள் இழந்து தவிக்கிறதே.!!
உள்ளம் உருகி தவித்தாலும்
இன்று,
எந்தன் இயல்பு வாழ்க்கை தொடர்கிறது...

Comments

 1. முந்தைய கவிதை தந்த ஏமாற்றத்துக்கு பிரயாச்சித்தம் ? !!

  ReplyDelete
 2. @பார்வையாளன்: பிராயசித்தம் என்று நான் எதையும் கொள்வதில்லை தோழா.!!!
  அந்த சமயத்தில் தோன்றுவதை அப்படியே எழுதுவது தான்....... கவிதையை வா வா என்று உட்படுத்த முடியாது.. அது தானாக வரவேண்டும்.. அது அப்போதைய மனோபாவத்தை பொருத்ததே.. முந்தைய பதிவின் முடிவு எனக்கு அப்படி தோன்றியது.. அதை நான் மாற்றியும் முழுவதும் சீரியஸாகவே அமைத்திருக்கலாம்.. ஆனால் மனதில் தோன்றியதை அப்படியே எழுதுடா முட்டாள் என்று ஒரு பக்கம் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.. அதனாலே அப்படி ஒரு பதிவு.. இப்பதிவின் போது மனம் காமெடியாக எதுவும் யோசிக்கவில்லை.. அதனாலயே இப்படி ஒரு பதிவு...
  இதை தவிர்த்து சென்ற பதிவு உங்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தால் வருந்துகிறன்.. மனதில் பட்டதை சொன்னதிற்கு நன்றி..
  கருத்துக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து படியுங்கள்...
  உங்களுக்காக நிறைய..
  -அன்புடன் கூர்மதியன்

  ReplyDelete
 3. ஆனால் மிஸ்கினின் நடிப்பும் அஞ்சாதே படத்தில் குருவியின் நடிப்பும் ஒரே மாதிரி இருந்தது...

  ReplyDelete
 4. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): அந்த கேரக்டருக்கு அது பொருத்தமாக இருந்தது என்று எண்ணுங்களேன்.. நீங்கள் சொல்வது போல் சொல்லவேண்டுமென்றால் டி.ஆர்., எல்லா படங்களிலுமே ஒரே மாதிரி தான் நடிப்பார். அதே போல் தான் விஷாலும்.. இன்னும் கூர்ந்து பார்த்தால் இப்போது இருக்கும் பல புதிய நடிகர்கள் விஜயின் மேனரிசத்தோடு நடிக்கின்றனர்.. ஆனால் இதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.. ஒரு கேரக்டர் சிறந்த்தாக அமைந்தால் அதற்கு இதுபோல் விமர்சனம் எழுவது சகஜம் தான்.. மனதில் எதையும் வைத்துகொள்ளாமல், மற்றவர் குறையோ இல்லை வன்மையான மொழிதலையோ காதில் வாங்காமல் வேறு எந்த நடிகரையும் மனதில் கொள்ளாமல் பார்த்தால் மிஷ்கினின் நடிப்பு அபாரமாக தான் தெரியும் அல்லவா.??? என்ன சொல்கிறீர்கள்...???

  குறிப்பு-தவறான இடத்தில் பின்னூட்டம் அளித்துவிட்டீர்கள், புதிதாய் வருபவர் இங்கு எதற்காக இந்த பின்னூட்டம் என குழம்பிடகூடாது பாருங்கள்..

  குறிப்புக்கு குறிப்பு-தவறாக எண்ணவேண்டாம்.. மனதில் பட்டவை..

  ReplyDelete
 5. //காண கிடைத்த இன்பத்தினை
  இன்று என் கண்கள் இழந்து தவிக்கிறதே.!!
  உள்ளம் உருகி தவித்தாலும்
  இன்று,
  எந்தன் இயல்பு வாழ்க்கை தொடர்கிறது...//

  ம்ம்..இது தான் நடைமுறை..memories அசைபோடுதல் ஒரு சுகம் கூர்மதியன்..உங்க ஆற்றங்கரை நினைவுகள் படிக்க சுவாரஸ்யம்...ஆனால் அந்த நினைவுகளில் ஆற்றங்கரையை மெல்லியதாய் நீங்க மிஸ் பண்ற பீல் லும் இருக்கு இந்த கவிதையில்...!! அதை நான் உணர்ந்தேன் !!

  ReplyDelete
 6. அப்புறம் regarding போன கவிதை...."கூர்மதியன் !! நீங்க உங்களை ஜோவியல் னு மத்தவங்க கிட்டே காமிக்க ஏன் கவிதையில் காமிக்கணும் தோழா...நீங்கள் உங்க இயல்பை,உணர்வுகளை கவிதையில் வடிக்கும்போது இயற்கையில் உங்களுக்கு தோன்றும் பிரவாங்களை அப்டியே கொட்டுங்கள்..அந்த கடைசி ஒரு வரியில் நீங்க ஜோவியல்னு நிருபிக்கும் ஒரு கமிட்மென்ட் ஐ ஏற்படுதிக்காதிங்க..உங்க நகைச்சுவை உணர்வை காமிக்கும் ரிலாக்ஸ் கவிதையும் எழுதுங்கள்..இது ஒரு பரிமாணமாய் இருக்கட்டும்..." தோழியாய் மனசில் பட்டதை சொன்னேன்...தவறாய் இருந்தால் மன்னிச்சுக்கோங்க...பட் உங்கள் படைப்புகளில் கம்மிட்மேன்ஸ் வச்சுக்காதிங்க கூர்மதி..ஏனால் ரொம்பவே அற்புதமாய் உங்களுக்கு கவிதை வருது ..god bless you koormathi..!!!

  ReplyDelete
 7. ”கவிதையை வா வா என்று உட்படுத்த முடியாது.. அது தானாக வரவேண்டும் ”

  ஒப்புக்கொள்கிறேன்..

  அப்படி நம்மை மீறி வரும் கவிதையில், செயற்கையாக நம் விருப்பு வெறுப்பை கலப்பது தவறு..

  ஒரு நகைச்சுவை கவிதை மனதில் தோன்றினால் அப்படியே எழுதுங்கள்..
  நான் ஒரு சீரியஸ் ஆள் என காட்டுவதற்காக , அதில் ஒரு சோகத்தை செயற்கையாக திணிக்காதீர்கள்..

  நீங்கள் யாரோ அப்படியே இருங்கள் என்பதே ஒரு நண்பன் என்ற வகையில் என் கருத்து,,, உங்கள் உண்மை இயல்பை ரசிக்க முடிகிறது என்பது ஒரு ரசிகனாக என் கருத்து...

  ReplyDelete
 8. @ஆனந்தி ரொம்ப நன்றி.. நீங்கள் சொல்வதில் நான் தவறாக நினைக்க ஒன்றுமில்லை.. எனது முந்தைய பதிவில் எந்தளவுக்கு சிறப்பு என கருத்து வந்ததோ அந்த அளவுக்கு ஏமாற்றத்தின் வெளிபாடுகளையும் உணர்ந்தேன்.. உங்களது கருத்துகளை ஏற்கிறேன்.. அதேசமயம் அப்பதிவு எழுதும் போது என் மனதில் தோன்றியதையே பதிவு செய்தேன் என்பதை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்... இருப்பினும் பலரின் ஏமாற்றத்திற்கு காரணமாகியதால் வருந்துகிறேன் தோழி.!! என்னுடைய தோழமையில் குறிப்பிடபடவேண்டியவர் நீங்கள்.. உங்களையும் மற்றவரையும் இனியொருமுறை ஏமாற்றமாட்டேன்.. இது உறுதி.. என் நிலையை தெளிவுபடுத்தியதற்கு நன்றி..!!!

  ReplyDelete
 9. @ஹரிஸ்: பின்னூட்டம் அளித்ததற்கு நன்றிகள்...

  ReplyDelete
 10. @பார்வையாளன்: நீங்கள் சொல்வது சரியே.!! நான் என்றுமே மனதில் பட்டதை அப்படியே பதிவு செய்பவன்.. தொடர் கருத்துகளுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 11. R u ok ?? There is no post update in your blog????!!

  ReplyDelete
 12. @ஆனந்தி..: No prob.. Im okay.. jst took up 3 surveys for Junior,naanayam and motor vikatan.. tats y so tired and lotsss of works.. The biggest difficulty for a reporter is taking survey.. suph.!!! very difficult.. ll post soon..

  Thanks for ur caring words..:-)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…