Skip to main content

முதல்வர் பதவியை சாபமாக கருதும் கலைஞர்.!!!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 11ம் தேதி தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருது தரப்பட்டது. மேலும் அமைச்சர்கள் மைதீன் கான், தா.மோ.அன்பரசன், முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுசெயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப்பொருளாளர் வடக்கு கோட்டையார், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் முஸ்லிம் லீக்  கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சில பல வேண்டுகோளை முன் வைத்தனர். பள்ளிகளில் சிறுபான்மை பாடம், வெளிநாடு வாழும் மக்களுக்கு நல வாரியம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரித்தல், தாம்பரம் சிறுவியாபாரிகளுக்கு மாற்று இடமளித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதை தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இலக்கு 2020 என்னும் நூலை வெளியிட்டு மத்திய ரயில்வே இணை மந்திரியான அகமது முதல்வர் கலைஞர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என்று  புகழாரம் சூட்டினார்.


விருது வழங்கும் முன் துணை முதல்வர் முக.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், '' தலைவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. இப்போது மூன்று சமூகத்துக்கும் பொதுவாக நமது தலைவருக்கு இவ்விருது வழங்கபட இருக்கிறது.. இவ்விருதை பெறுவதால் ஒன்றும் கலைஞர் சிறப்புற போவதில்லை.. அவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. தூக்குமேடை நாடகத்தில் அன்றே எம்.ஆர்.ராதா அவர்களால் நமது தலைவருக்கு கொடுத்த பட்டம கலைஞர் என்பது.. இன்னும் பல பல விருதுகளும் பட்டங்களும்... அதனால் நமது தலைவருக்கு கொடுப்பதாலே இப்பட்டம் சிறப்புறுகிறது'' என்றார்.

பின்னர் பேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காஜர் மொய்தீன் கூறுகையில்,''அண்ணா அறிவாலய்த்திலிருந்து இக்கூட்டம் நடைபெறும் இடம் வரை திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டம் நமது கலைஞரை வரவேற்றதை நாம் காணலாம். கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருதை தருவதாக பேசிய போது இது இவருக்கு தேவைதானா என்று சிலர் கேள்விகள் எழுப்பினர்.. அதன் பிறகே நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்று தருவதாக முடிவு செய்தோம்...'' என்று கூறினார்.பின்னர் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்பட்டது. அதையடுத்து கலைஞர் நிறைவுபேருரை ஆற்றினார்.
''என்னை பற்றி புகழ்ந்து பேசிய காதர் மொய்தீன் நான் காய்தே மிலத்தின் வழி பின்பற்றுபவன் என்பதை சொல்லாமல் விட்டது மனக்குறைவாக போனது'' என்று சொன்னபோது மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

''நான் இதுபோன்ற விருதுகளை ஒன்றும் பெருமைகாகவோ, இல்லை பொருட்காட்சிகளிலோ வைக்கபோவதில்லை. எனக்காக தர நினைக்கும் மனங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன்.''

மேலும் சமச்சீர் கல்வியில் உருதுமொழிக்கான பாதுகாப்பை பற்றி
பேசுகையில், ''நமது மொழியான உருது மொழியை சிறப்பிக்க எந்த  முயற்சியை வேண்டுமானாலும் எடுப்பேன்'' என்று அவர் நமது மொழி என்றபோது மக்கள் சந்தோசத்தில் கரகோஷம் எழுப்பினார்.

'' இன்று எங்கள் ஆட்சி, நாளை வேறொர ஆட்சி வரலாம்''என்று அவர் சொல்லும்போது கூட்டத்திலிருந்து எழுந்த சப்தங்கள் என்றுமே நீங்கள் தான் என ஒலிக்க மேலும் பேசலானார், '' அது உங்கள் ஆசை.. ஏற்கனவே 40 ஆண்டுகள் நான் தான் முதல்வர் என மாநாட்டு தலைவர் சாபம் கொடுத்துவிட்டார்.. என் மேல் அவருக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் என்று தெரியவில்லை.. முதல்வர் பதவியில் இன்னும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல... இன்னும் எனக்கு இயற்கை எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறதோ அதுவரை என பாப்போம்.. சிலர் எங்கள் தலைகளில் குப்பை கொட்ட எண்ணுகிறார்கள்.. அப்படி நினைப்பவர்களின் மேல் நாங்கள் கோபம் கொள்வதோ இல்லை எரிச்சலடைவதோ என செயலபடமாட்டோம்.. எங்களின் மதிப்பை அவர்களுக்கு என்றுமே புரியவைப்போம்..''மேலும் தொடர்ந்த அவர், “தாம்பர மேம்பாலம் விரிவாக்க பணியால் இடமிழந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கும் கோரிக்கையை பரிசீலித்தது முடிவெடுக்கப்படும்.. பாதிக்கப்பட்டோரின் பட்டியல்கள் அளித்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.. முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் இடொதுக்கீடை பத்து சதவீதமாக மாற்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளனர்.. மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு..  இதை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.. அப்படி பத்து சதவீதம் கிடைக்குமேயானால் முதலில் சந்தோசிப்பது நாங்களாக தான் இருக்கும். இடையில் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கொண்டு ஆட்சியமைத்தபோது எங்களின் முதல் கோரிக்கையாக இருந்த போது மத உணர்வோ, பேதமோ இல்லாத அரசாக அமைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தோம்.. அது நடைபெற்ற வரையில் அவர்களோடு இணைந்திருந்தோம். எப்போது அவர்கள் மீண்டும் பாபர் மசூதி இடிப்பு, ஜாதி பேதம் என மீண்டும் ஆரம்பித்தார்களோ அன்றே நாங்கள் இனி எங்களுக்கு இங்கே வேலையில்லை என வெளியேறிவிட்டோம்.. அதுதான் திராவிட முன்னேற்ற கழகம். அன்று முதல் இன்றுவரை அந்த மதவாத சக்திக்கு இடம் தராமல் இருக்கிறோம். அதில் நாங்கள் கொண்ட உறுதியால் தான் இந்திய முஸ்லிம் லீக் நண்பர்கள் இன்று என்னுடன் அமர்ந்திருக்கின்றனர். இந்த அணி என்றுமே அப்படியே தான் இருக்கும்.. யார் சேர்ந்தாலும் பிரிந்தாலும் இந்த அணி மாறாது..'' என்று கூறி முடித்தார்.
கவனிக்கவும்: இந்த மாநாட்டிற்கு முன்னும்,பின்னும், இந்த மாநாடு நடந்தபோதும் என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.
Comments

 1. தலைப்பிற்கும் உள்ளே எழுதியிருக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாதது போல தோன்றுகிறது...

  ReplyDelete
 2. @ philosophy prabhakaran: இருக்கலாம்.. நான் அந்த மாநாட்டில் பங்கெடுத்தபோது கருணாநிதி 'முதல்வர் பதவி என்பதை சாபம்' என்றார்.. இதை தலைப்பாக வைத்து ஒரு பதிவு போட்டிட வேண்டும் என்றிருந்தேன்.. கைகள் தலைப்பை சரியாக பதிவு செய்தாலும், மனம் முதலில் அங்கு நடந்தது என்ன என்பதை விளக்கிவிட்டு அடுத்த பதிவில், என்ன சொல்லவேண்டுமோ சொல் என்றது.. அதன் படியே செய்தேன்.. ஆனால் அந்த தலைப்பை எடுக்க மனம் வரவில்லை... கொஞ்சம் சுவாரஸ்யம் தோன்றும் பாருங்களேன்..

  ReplyDelete
 3. நல்ல தலைப்பு! எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு!!

  ReplyDelete
 4. அடுத்து என்ன சொன்னார்னு ங்கிறதையும் போடுங்க...:)) என்ன கவிதை ப்ளாக் கில் அப்டேட் பண்ணலையா?? நேத்து வந்து அங்க கூவிட்டு போனேன் கூர்மதி...:))))

  ReplyDelete
 5. @வசந்தவாசல் அ.சலீம்பாஷா- வரவேற்கிறேன்... நன்றிகள்..

  @ஆனந்தி- கண்டிப்பா.. ம்ம் பாத்தன்.. நானும் பதில கர்சிச்சுட்டன்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…