எனக்காக என்னை பிரிந்தாள்.!!!
மனதில் நீங்கா திருப்தி
அன்று நான் சாதித்தபோது..

வெற்றியின் களிப்பை கொண்டு
என் ஓட்டம் தொடங்கியது
அந்த மின்சார ரயில் பின்னே..

80கி.மீ., வேகத்தில் செல்லும் ரயிலில் ஏறவும்
20கி.மீ., தொலைவுக்கு தாண்டவும்
நான் 'குருவி' அல்ல..

நான் ஏறிய ரயில்,
கூட்டத்தில் சென்ற மாடு போல
அசைந்து கொண்டுதான் இருந்தது..

அதிக நெருடல் இல்லா பயணம்,
ஜன்னல் ஓர சீட்டு,
சில்லென்று வீசும் சாரல் மழை..
இன்பம் தானே.!!!

இல்லை..
கண்டிப்பாக இல்லை..
எதிரில் ஒரு,
இயற்கை வெறுப்பன் உட்கார்ந்துவிட்டார்..
சட்டென அடைக்கப்பட்டது
சாரலை வரவேற்திடும் அந்த சன்னல்கள்..

எதிர் பேச மனமில்லை..
காரணம்-அவர் கொஞ்சம் வெறப்பாக இருந்தார்..

நான் விரும்பும் மழைதுளி
என்னை தேடி வந்தது..
ஆனால்,
என்னை தொடாமலே
கண்ணாடி ஜன்னலுக்கு முத்தமிட்டு சாய்ந்ததே.!!
காரணம் எதிரிருப்பவர் தானே...
கடுப்பானேன்.. 
முறைத்தேன் அவரை..
அவர் என்னை எதிர்நோக்கலானார்..
சட்டென திரும்பி கொஞ்சம் 'நடிகர் வடிவேல்' ஆனேன்..

வெறுத்துபோனேன்..
வெம்பிய நெஞ்சத்திற்கு
பட்டென வந்தாள்
பட்டாம்பூச்சி காதலி..

தலையை வட்டமிட்டு
காதில் முத்தமிட்டு
கண்ணை மூடவைத்து
சட்டென பிரிந்தாள்..

எங்கே சென்றாள்.??
என் தூதுவளாக சென்றுவிட்டாள்.!!!

அடுத்த நிமிடமே அவள்
அந்த கண்ணாடி ஜென்னலை முட்டிகொண்டு.....

முட்டிகொண்டும் முனகிகொண்டும்
திரியும் காரணம் என்ன.???
மற்றவர் அறியாமல் இருக்கலாம்..
நான் அறிவேன்..
நான் விரும்பிய மழைதுளியை
எனக்காக கொண்டுவரத் துடிக்கும்
உன்னத காதலி அவள்..

முட்டி முட்டி அவள் துடிப்பது
அந்த கண்ணாடியை உடைத்தெறியவே..!!!
கண்ணாடியை உடைத்தெறிந்து
இன்ப சாரல் நனைத்திட செய்வாளோ.!!!

கண்கள் கலங்கிட்டேன்
அவளின் கஷ்டத்தை காணும் போது..
பறந்து அருகே வந்தால்;
தோளில் அமர்ந்துகொண்டாள்..
மெல்ல என்னை நோக்கியவள்
கலங்காதே.!! என கூறுகின்றாள்..

பின்னே,
அவளின் முட்டும் வேலை தொடங்கிட்டாள்..

வாசல் கதவு திறந்திருக்க
ஜன்னல் கதவை முட்டி ஓயாத அவள்..
கீழே சாய்ந்தாள்..

பதறிய மனம்,
உற்று நோக்க ஓடியது..
வில்லென பறந்தாள்
விஸ்வரூபம் எடுத்தாள்..
'கலங்காதே.!!
கதவை திறந்திடுவேன்'
என முரட்டு பாசமாய் சொல்லிவிட்டு
மீண்டும் முட்டுகிறாள்..

என்ன ஒரு பாசமடா தோழா.!!

அவளால், 
ஜெயிக்கமுடியவில்லையே தோழா..!!
மீண்டும் சாய்ந்தாள்..
முன்பு போல் இப்பவும் ஓய்வு தான்..
ஆனால்-நிரந்தரமாக..

கண்கள் கலங்கியது..
துடைத்திட யாருமில்லை..
இறங்குமிடம் வந்துவிட்டது..
அவளது நினைவுகளை மனதில் கொண்டு
நடந்து செல்கிறேன்-'மழையில் நனைந்தபடி.'குறிப்பு:-


1. இது படிக்கும் விதத்தில் பொருள் மாறுபட்டு தெரியும்..
2. உண்மையில் நடந்ததை என் கற்பனை கொண்டு மெருகேற்றியுள்ளேன்

Comments

 1. @எஸ்.கே : முன்னரே வந்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றிகள் நண்பரே.!!!

  ReplyDelete
 2. கவிதை நல்லா இருக்கு... சீரியசான கவிதையில் குருவி வார்த்தை பிரயோகம் அருமை...

  ReplyDelete
 3. சீரியசான கவிதையில் குருவி வார்த்தை பிரயோகம் அருமை..”

  கவிதையும் அருமை.. கமெண்டும் அருமை

  ReplyDelete
 4. என்ன ஒரு அழகான கவிதை...அந்த பயணம்,மழை,பட்டாம்பூச்சி எல்லாமே பீல் பண்ணினேன் கூர்மதி...அப்படியே லைவ்லி ஆ இருந்தது இந்த புதுகவிதை...அற்புதம் நண்பரே...

  ReplyDelete
 5. @philosophy prabhakaran:நன்றி நண்பரே.!!!

  @பார்வையாளன் :பிரபாகரனின் தீவிர நண்பரோ.??? பல இடங்களில் கவனித்திருக்கிறேன்..
  கருத்துகள் பதிவு செய்ததற்கு நன்றி..


  @ஆனந்தி.://அப்படியே லைவ்லி ஆ இருந்தது//
  மிக்க மகிழ்ச்சி..நன்றிகள்.. ஆனால், உங்க பதிவுக்கு வந்தா நான் எதிர் கருத்த பதிவு பண்ற மாதிரி நீங்க ஒரு தடவ கூட பதிவு பண்ணியதில்லையே ஏன்.???

  ReplyDelete
 6. ஹ ஹ...நீங்க அதுக்கு எந்த சந்தர்ப்பம் கொடுக்க மாட்டேன்கிறேன்களே..:)) moreover..i am very positive person koormathi...என் பார்வையில் எதிர்மறையாய் நான் பார்த்த சம்பவங்கள் ரொம்ப கம்மியா தான் என் வாழ்வில் நடந்துருக்கு...உங்க ரசனை எனக்கும் இனிக்குது...அதனால் மாற்று கருத்தே தோணலை நண்பா...:)))

  ReplyDelete
 7. //நீங்க அதுக்கு எந்த சந்தர்ப்பம் கொடுக்க மாட்டேன்கிறேன்களே..//

  மிக்க மகிழ்ச்சி.!!!
  //i am very positive person koormathi...//
  அப்படியா.??? ஹா ஹா..

  //உங்க ரசனை எனக்கும் இனிக்குது...அதனால் மாற்று கருத்தே தோணலை நண்பா...:))//

  ஆனந்தம்.!! தோழி.

  ReplyDelete
 8. எங்கே அடுத்த கவிதை????

  ReplyDelete
 9. சீக்கிரமே.!!! எழுதும் கவிதைக்கு அதிகமா ரெஸ்பான்ஸ் இல்லையே.. அதான் நாம எழுதுறது சிலருக்கு பிடித்திருந்தாலும் பலருக்கு புடிக்கல போலன்னு யோசிச்சுகிட்டிருக்கன்..

  ReplyDelete
 10. அட அதெல்லாம் யோசிக்காதிங்க..ரசனை உள்ளவங்க ரெண்டு பேரு வந்து படிச்சு சொல்லிட்டு போனாலும் அதுவும் திருப்தி தான்..போக போக நிச்சயம் எஸ்டாபிளிஷ் ஆவேங்க..

  ReplyDelete
 11. @ஆனந்தி: கண்டிப்பா.. உங்க சொற்கள் தான் என்ன மேலும் மேலும் பதிவு போட வைக்கிது..

  ReplyDelete
 12. மிக அழகான வரிகள்... கவிதை அருமை!

  ReplyDelete
 13. @ப்ரியா:நன்றி ப்ரியா.!! தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 14. அன்பின் தம்பி கூர்மதியன் - கவிதை அருமை - சிந்தனை நன்று - நீளம் அதிகமோ ! இயற்கை வெறுப்பன் - குருவி - வடிவேல் - ஆகா ஆகா இயல்பான நடை - பட்டாம்பூச்சிக் காதலி மழைத் துளிக் காதலிக்கு உதவி செய்யப்போய் மறைந்து விட்டாளே ! ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!