"குப்பைமேடா குத்தம்பாக்கம்?”


3 செப்ட்.,2010


~கொதிக்கும் கிராம மக்கள்குழப்பத்தில் அதிகாரிகள்!


சாராயம் காய்ச்சுவதை குடிசைத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு கிராமம்; சுற்று வட்டாரத்தில் சாதிச் சண்டைகளுக்கு பெயர் போன ஒரு கிராமம்; படிப்பறிவில்லாத தலித் மக்களை அதிகம் கொண்டிருந்த ஒரு கிராமம், இன்று அந்த கசடுகளையெல்லாம் நீக்கி, சாராயம் காய்ச்சுவதையும், குடிப்பதையும் ஏறத்தாழ ஒழித்துவிட்ட ஒரு கிராமமாக, குடிசைகளே இல்லாத கிராமமாக, படிப்பறிவு மிகுந்த ஒரு கிராமமாக, வலிமையான கிராம சபையையும், வெளிப்படையான பஞ்சாயத்து நிர்வாகத்தையும் கொண்ட ஒரு கிராமமாக, உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தன்னிறைவை நோக்கித் தொடர்ந்து வெற்றி நடை பயிலும் ஒரு கிராமமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த கிராமம், குத்தம்பாக்கம்! தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கெல்லாம் பல்வேறு விஷயங்களில் முன்னுதாரணமாகத் திகழும் குத்தம்பாக்கம்இன்று தமிழக அரசால், தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒரு பிரச்னையைத் துணிவுடன் எதிர்ப்பதிலும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

திருவள்ளுவர் மாவட்டம்பூவிருந்தவல்லி ஒன்றியத்தை சார்ந்த கிராமம்தான்குத்தம்பாக்கம்சென்னையிலிருந்து கிட்டதட்ட 30கி.மீ., தூரத்தில்திருவள்ளூர்போகும் வழியில் அமைந்துள்ளதுபெரும்பாலும் தலித் மக்களைக் கொண்டிருப்பதால், விவசாயமும், முக்கியமாக விவசாயம் சார்ந்த தொழில்களான ஆடு, மாடு மேய்த்தல் போன்றவையும்தான் உள்ளூர் பொருளாதாரத்திற்கு அடிப்படை! இந்த அடிப்படையை ஆட்டம் காண வைக்கும் வகையில், ஊருக்குள் இருக்கும், 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதியை (65ஏக்கர்), பக்கத்தில் உள்ளஅம்பத்தூர்மதுரவாயல்பூந்தமல்லிவளசரவாக்கம், திருவேற்காடு உள்ளிட்டஐந்து நகராட்சிகள் மற்றும் போரூர் பேரூராட்சியின் குப்பைகளைக் கொட்டும் இடமாக, 2007ல் தேர்ந்தெடுத்ததின் மூலம் பிரச்னைக்குத் திறப்பு விழா நடத்தியது தமிழக அரசு.


செய்திதாள்களில் வெளியான இந்த விஷயம்கிராம மக்களையும், பஞ்சாயத்தையும் அதிர்ச்சியடையச் செய்ததுதங்கள் பஞ்சாயத்தின் கட்டுபாட்டுக்குள் வரும் ஒரு பகுதியில் குப்பை கொட்டபோவதைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரிவிக்காமல்நமது கருத்தைக் கேட்காமல் அரசு எப்படி முடிவெடுக்கமுடியும் என்று ஊர் மக்கள் கொதிப்படைந்தனர்இதை தொடர்ந்து,  கிராம சபை உடனடியாக கூட்டப்பட்டது. குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் வரக்கூடாது என்ற விளக்கக் கடிதம் தீர்மானத்தின் நகலுடன்,தாசில்தாருக்கும்மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த்துறைச்செயலாளருக்கும் அனுப்பப்பட்டதுஆனால், எதிர்பார்த்ததைப் போலவே அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு வருடமாக திட்டத்தை செயல்படுத்த அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் இல்லாததால், ‘இனி இந்த திட்டம் வரப்போவதில்லைஎன்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, மீண்டும், ‘திட்டம் செயல்படுத்தப் படும்என்ற செய்தி, 2008 இறுதியில் பத்திரிக்கைகளில் வரத்தொடங்கியது.

இதனால், குத்தம்பாக்கம் பஞ்சாயத்து, விஷயத்தை தெளிவுபடுத்த அரசுக்கு அறிவுறுத்துமாறு, உயர் நீதிமன்றத்திடம் முறையிட்டது. நீதிமன்றமும், இந்த விஷயத்தில் பஞ்சாயத்திடம் ஆலோசனை நடத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறித்தியது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆலோசனைக்கு அழைத்தார், மாவட்ட ஆட்சியர். திட்டத்தை செயல்படுத்தினால் வரும் விளைவுகளை அவர்கள்சுட்டிகாட்ட அமைதியாக கேட்டுகொண்டுவிட்டு, அவர்,  (பஞ்சாயத்தின் வாதங்களை பதிவு செய்தாலும்) திட்டம் செயல்படுத்தப் படலாம் என்று அரசுக்குக் குறிப்பு அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, உயர்நீதி மன்றத்திலும் குத்தம்பாக்கத்தின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்தச் சூழலில், 2009 மே மாதத்தில், திட்டத்தை தொடங்குவதற்காக,நிலத்தை அளக்க, அம்பத்தூர் நகர திட்ட அலுவலர்(Town Planning Officer), தாசில்தார் என்று ஒருவர் பின் ஒருவராக அதிகாரிகள் வரமக்கள்அவர்களைநிலத்தை அளக்க விடாமல் தடுத்துதிருப்பி அனுப்பியுள்ளனர்.உடனடியாக, குத்தம்பாக்கத்து பஞ்சாயத்துக்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலரான இளைஞர் நந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் திட்டத்தை கைவிடச்சொல்லி ஜூன்-6ல் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு வாரத்திலேயே,மாவட்ட வருவாய் அலுவலர்(DRO), 500 போலீசாருடன் வந்துசர்ச்சைக்குரிய நிலத்தில் சுற்றுச் சுவர் எழுப்பும் பணிகளை முடுக்கிவிட்டார். மீண்டும் இந்த விஷயம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட, ஜூன்-17ல், நீதிமன்றம் திட்டத்தை தொடர்வதற்கான இடைக்காலத்தடை விதித்தது. ஆனால், அம்பத்தூர் நகராட்சி, மீண்டும் சுற்றுச் சுவர் எழுப்பும் பணிகளில் இறங்க, மக்கள் போராட்டத்தில் குதித்தனர்போராட்டத்தில் ஈடுபட்ட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர்


அரசு தரப்பிலிருந்து, “நீதிமன்றம் குப்பை கொட்டமட்டும் தான் தடை விதித்துள்ளதுநாங்கள் சுவர் தான் எழுப்புகின்றோம்என்ற பதில் வந்ததுஇதையடுத்து நீதிமன்றத்தை மீண்டும் அணுகியதில், “இந்த திட்டத்தில் சுற்றுச் சூழல் பிரச்னைகள் இருப்பதால், நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை, இந்தத் திட்டம் தொடர்பான எந்த விதமான செயல்பாடுகளிலும் அரசு ஈடுபடக்கூடாதுஎன உயர் நீதி மன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு முடிவாக, ஏப்ரல்-2010ல், “அரசும், பஞ்சாயத்தும், மத்திய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிபீட்டுப் பிரிவை (Environmental Impact Assessment Authority) அணுகி, தங்கள் தரப்பு வாதங்களை வைக்கட்டும். ஒருவேளை EIAA திட்டத்தை நிராகரிக்குமானால், குத்தம்பாக்கம் பஞ்சாயத்து, அரசை அணுகி நிலத்தை மீண்டும் கோரலாம்(முன்பு வனத்துறையிடம் இருந்த இந்த நிலம்பின்னர் 2006ல்பஞ்சாயத்தின் கட்டுபாட்டுக்குள் வந்ததுஅதில் தீவனப் புல் வளர்த்து இன்னும் சிறப்பான மேய்ச்சல் நிலமாக்க முழுவீச்சில் பஞ்சாயத்து இறங்க நினைத்ததருணத்தில்தான் பிரச்னை முளைத்து, நிலம் வருவாய்த்துறையின் வசம் போனது)என தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தீர்ப்புக்குப் பிறகு, தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம்வரும் 21ம் தேதி, பூந்தமல்லியில் பொது விசாரணயை ஏற்பாடு செய்துள்ளது.


இந்தச் சூழலில், பொது வழக்கினைத் தொடர்ந்த நந்தகுமாரிடம் பேசினோம்.இவ்வாறு குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கப்படுவதற்குமாசுக்கட்டுபாட்டு வாரியத்தால் அமைக்கப்படும் நிபுணர்கள் குழுகுறிப்பிட்டதிட்டத்திற்கு அந்த நிலம் தகுந்ததுதானா என்று ஆய்வு செய்து அறிக்கைவழங்க வேண்டும்அப்படி இந்த திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிக்கையில்குறிப்பிடப்பட்ட இடம் திடக் கழிவு மேலாண்மைக்குத் தகுந்ததில்லை என்று நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்திருந்தது.இருப்பினும்அதையும் தாண்டிதிட்டத்திற்கு தடையில்லாச் சான்றிதழை வழங்கியுள்ளது மாசுக் கட்டுபாட்டு வாரியம்” என்றார் அவர்.
மேய்ச்சல் நிலத்தைக் கைப்பற்றுவதால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறமிருக்க, இந்த நிலம்பெருவாரியான சென்னை மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம்ஏரியின் நீர் பிடிப்புப் பகுதி (திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல சிறிய ஏரிகளின் நீர் இவ்வழியாகத்தான் செம்பரம்பாக்கம் ஏரியை அடைகிறது) என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஏரிக்கான நீர் வரத்து குறைவதோடு, வரும் நீரும் கழிவுகள் கலந்து மாசுபட்ட நீராகவே வரும். மேலும், இந்த ஏரியாவின்நிலத்தடி நீரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இப்படிப் பட்ட ஒரு திட்டம்தற்போதைய பஞ்சாயத்து தலைவர் கீதாவைக் கொதிப்படையச் செய்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. “இந்த ஊரின் பஞ்சாயத்துகிட்ட தெரிவிக்காம இந்த திட்டத்த செயல்படுத்த ஆரம்பிச்சதே முதல் தப்பு.. பஞ்சாயத்துக்கு நம்ம நாட்டுல அதிகாரம் இருக்குதா இல்லையானே தெரியல..வரப்போற பொது விசாரணைக்கு நாங்க தயாரா இருக்கோம்என்ன நடந்தாலும் எங்க இடத்த  நாங்க விட்டுத்தரமாட்டோம்..”என்கிறார் அவர்.
அவர் குறிப்பிடும் பிரச்னை ஒருபுறமிருக்க, இந்த திட்டத்தில், சட்டச் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. சுற்றுச் சூழல் சட்ட விதிகளின்படிஇப்படியொரு திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடத்திலிருந்து 500மீ தூரத்திற்கு எந்த ஒரு வசிப்பிடமும் இருக்ககூடாதுஆனால் அந்தஇடத்திலிருந்து 500மீ-குள் இருளப்பாளையம், பருவதராஜபுரம், செட்டிப்பேடு, பாப்பான் சத்திரம் போன்ற குடியிருப்புகள் அமைந்துள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.


குத்தம்பாக்கத்தை முன்மாதிரி பஞ்சாயத்தாக மாற்றுவதற்காக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ இந்தப் பிரச்னையை எப்படி பார்க்கிறார்?  “உங்க வீட்டுக் குப்பைய கூட்டிஎங்க தலையில கொட்டுறதுஎன்ன நியாயம்அம்பத்தூரிலிருந்து கிட்டதட்ட 40கி.மீ., தூரத்துல இருக்கு எங்க ஊருஅங்கிருந்து இங்க வந்துஎங்க நிலத்த நாசம் பண்ணப் பாக்குறாங்க.மக்குன குப்பைமக்காத குப்பையினு பிரிச்சு எந்த பாதிப்புமில்லாம திடக்கழிவுகள மேலாண்மை செய்வோம்னு சொல்றாங்கஅவுங்க சொன்ன மாதிரி ஏதாச்சும் ஒரு இடத்துல பண்ணியிருக்காங்களாசொல்லுங்கநீங்க6அடிக்கு கான்கிரீட் சுவர் வச்சாலும் சரிதிடீர்னு ஒரு நில அதிர்வு வந்து விரிசல் உண்டானா என்ன பண்றதுஇல்ல ராத்திரி நேரத்துல பயங்கரமா தண்ணி அடிச்சிட்டு வருது அப்ப போயி நீங்க சாக்கட தண்ணிய கூட்டி பெருக்கிக்கிட்டா இருப்பீங்க..? சென்னைக் குடிநீருக்கே ஆதாரமா இருக்கிற செம்பரம்பாக்கம் ஏரி பக்கத்துல இருக்கிற இந்த இடத்துல இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கறது தேவைதானா..? பெருங்குடிகொளத்தூர் போன்ற இடங்கள்லஎங்களப் போல யாரும் முயற்சி எடுக்கல அதனால அந்த இடங்கள் பாதிக்கப்பட்டுஇப்ப வருத்தப்படுறாங்கநாங்க அதுக்கு தயாரா இல்ல.. வர 21ம் தேதி நடக்குற பொது விசாரணைப் பிறகு ஒருவேளை விஷயம் எங்களுக்கு சாதகமா அமையலைனா நாங்க உச்சநீதிமன்றம் போக தயாரா உள்ளோம்.அங்கேயும் நீதி கிடைக்கலானா, பிரச்னை தீர்ற வரைக்கும் எங்கப் போராட்டம் தொடரும் ” என்று அனல் பறக்க பேசினார் அவர்.

இப்படி கடுமையாக எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம் என்ன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர். இராஜேஷ் அவர்களிடம் கேட்டோம்.
இதப் பத்தி இப்ப பேசறதுக்கு ஒண்ணும் இல்ல.. வர 21ம் தேதி பொது விசாரணைக்குப் பிறகு பேசலாம்... இப்போதைய சூழல பத்தியும் இது வரைக்கும் நடந்த நிகழ்வுகள பத்தியும், 21ம் தேதிக்கப்பறம் கேட்டு தெரிஞ்சுக்குங்க” என்று கூறி நமது கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அவர்ஆனால், விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்ததில், சென்னையை அழகுப் படுத்தத் துடிக்கும் துணை முதல்வர். ஸ்டாலினின் நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம் இது என்றும், அதனால்தான் அரசு அதிகாரிகள் இதை செயல்படுத்திக் காட்டுவதில் இத்தனை முனைப்பு காட்டுகிறார்கள் என்றும் நமக்குத் தகவல் கிடைத்தது.


பஞ்சாயத்துக்கள் வலுப்பட்டால்தான், ஜனநாயகம் வலுப்படும்!என்ற காந்தியச் சிந்தனை இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. சிறப்பாகச் செயல்படும் பஞ்சாயத்துக்களை, தங்கள் எதிரிகளாக பார்க்கும் மனோபாவம்தான் இன்றைய ஆட்சியாளர்களிடம் உள்ளது. மேலும், சுற்றுச் சூழல் பற்றிய புரிதலோ, எளிய மக்கள் மீதான அக்கறையோ இல்லாததால், ஆட்சியாளர்கள், எதை வேண்டுமானாலும் திட்டமாக செயல்படுத்திவிட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையைச் சுக்கு நூறாக்கிக் கொண்டிருக்கும் குத்தம்பாக்கம் மக்கள் இந்தப் போராட்டத்தின் மூலம் சொல்வதெல்லாம் மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்என்பதைதான். புரிந்து கொள்வார்களா ஆட்சியாளர்கள்?

21ம் தேதி..

  மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைய இருக்கும் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை குத்தம்பாக்கம் மக்கள் மட்டுமில்லாது அதனை சுற்றியிருக்கும் இருளப்பாளையம், பருவதராஜபுரம், செட்டிப்பேடு, பாப்பான் சத்திரம் போன்ற குடியிருப்புகளின் மக்களும் எதித்துவந்தனர்.. பலவேறு ப்ரச்சனைகளும், கலந்தாய்வின் பிறகு முடிவாக, ஏப்ரல்-2010ல், “அரசும், பஞ்சாயத்தும், மத்திய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிபீட்டுப் பிரிவை (Environmental Impact Assessment Authority) அணுகி, தங்கள் தரப்பு வாதங்களை வைக்கட்டும். ஒருவேளை EIAA திட்டத்தை நிராகரிக்குமானால், குத்தம்பாக்கம் பஞ்சாயத்து, அரசை அணுகி நிலத்தை மீண்டும் கோரலாம்என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனால், மாசு கட்டுபாட்டு வாரியம் செப்ட்., 21ல் பூந்தமல்லியில் பொதுவிசாரணை அமைப்பதாக முடிவெடுத்தது..


 அதன்படி இன்று(செப்ட்., 21,2010) பூந்தமல்லியில் உள்ள ராணி திருமண மண்டபத்தில் மக்கள் காலை 8 மணி முதலே கூடத் தொடங்கினர்.. பின் 9 மணியளவில் மக்கள் ஒருவர் பின் ஒருவராக பரிசோதனைக்குபின் மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்..

 முதல் மூன்று வரிசையில் பத்திரிக்கையாளருக்கும் சம்பந்தபட்ட ஊர்களின் தலைவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் பின்னிருந்த வரிசைகளில் பொதுமக்கள் தங்கள் இடத்தை பெற்றனர்..


 மாவட்ட ஆட்சியர் திரு.இராஜேஷ் சபையில் வந்து அமர்ந்ததும், அம்பத்தூர் நகரத்திற்குரிய கமிஷனர் கம்ப்யூட்டரில் ஸ்லைடுகள் மூலம் அந்த 160 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் நன்மைகளை பற்றியும், அதனால் மக்கள் எவ்வகையிலும் பாதிக்கபடமாட்டார்கள் என்று விளக்கினார்.. அவர் கூறுகையில், “இதனால் மக்கள் பலர் வேலை வாய்ப்பு பெறுவர்.. பருவ காலத்துக்கு ஏற்ற வாறு பருவக்கால மேற்கூரையும் அமைக்கப்பட உள்ளது.. அதுமட்டுமல்லாது 10 ஏக்கரில் ‘Green belt’ எனப்படும் பசுமை மாற்று செயல்களும் அதாவது மரம் நடுதல் போன்ற செயல்களும் செய்யபட உள்ளன.. நீர் புகா அடித்தளமும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.. அதாவது 900 மி.மீ., சமமான அடுக்கும், உயர் அடர்த்தி பாலி எதிலின் மூடுதளம் 1.5 மி.மீ., அளவில் அமைக்கப்படும்.. இதனால் கெட்ட தண்ணீர் நீலத்தடி நீரை பாதிக்கும் வாய்ப்பே இல்லை.. கோயம்பத்தூரில் உள்ள உக்கடம் போன்ற இடங்களில் இது செயல் முறையில் சிறப்பாக உள்ளது.. மேலும் மதுரையில் உள்ள வெள்ளைக்கால் போன்ற இடங்களில் இதை செயல்படுத்த ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.. நாங்கள் முன்கூறியவாறு இதனால் நிலத்தடி நீர் பாதிக்கபடுவதற்கு வாய்ப்பே கிடையாது.. மேலும் கரைந்துரைகளை சேகரித்து சுத்தப்படுத்தும் ஏற்பாடும் நடைபெறும்.. குப்பைகளை நன்கு மூடிய கண்ட்டெய்னர் லாரிகள் மூலம் அந்த இடத்துக்கு கொண்டு வருவதால் வழிகளில் இருக்கும் குடியிருப்புக்கு எந்த பாதிப்பும் இருக்காது.. மேலும்  நாங்கள் குப்பைகளின் மேல் நுண்ணுயிர் கலவை தெளிப்பதால் கொசுக்கள், ஈக்கள் அண்டாது, நாற்றமும் வீசாது.. மூடிய கிடங்குகளை மட்டுமே பயன்படுத்தபோவதால் மக்களுக்கு பாதிப்பு வர 0% வாய்ப்பே உள்ளது..என்றார்.

 இதனை அமைதியாக கேட்டுவந்த மக்களும் இதர ஊர்களின் தலைவர்களும் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படி தங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஆயுத்தமாயினர்..

 முதலில் தன் ஊரார் மற்றும் பாதிக்கப்படபோகும் மக்கள் சார்பாக பேசலானார் குத்தம்பாக்கத்தின் முன்னால் பஞ்சாயத்து தலைவர் திரு.இளங்கோ. அவர், தாங்களுக்கு இத்திட்டத்தால் எவ்வகையில் பாதிப்பு இருக்கும் என்பதை பற்றி விளக்கினார்.. சென்னை மக்களின் குடிநீர் தாயாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இதனால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.. மேலும் சுற்று சூழல் விதிக்கு புறம்பாக 500மீட்டருக்குள் பல இருப்பிடம் இருந்தும் இத்திட்டம் செயலுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.. EIA(Environment Impact Assessment) ரிப்போர்ட் ஒரு வருஷத்துக்கு நிலத்த ஆராய்ந்து எடுக்கணும்கிறது சட்டம்.. ஆனா இவங்க வெயில் காலமான ஏப்ரல்,மே மாசத்துல மட்டும் தான் வந்து எடுத்திருக்காங்க..என்று அவர் கூறி மாசு கட்டுபாடு வாரியத்தின் முந்தைய ரிப்போர்ட்டில் சம்பந்தபட்ட இடம் இத்திட்டத்திற்கு சரியில்லை என்றிருந்ததை சுட்டிக்காட்ட வந்தவரை, மாவட்ட ஆட்சியர் இடத்தின் பாதிப்புகளை பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று கூறி அவரது பேச்சை தடுத்துவிட்டார்..

 இதற்கு பதிலளித்த கமிஷனர் நன்கு நீர் புகா கான்கிரீட் அமைக்கப்படவுள்ளதால் நீர் நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்றும் இது சிறிய ப்ராஜெக்ட் என்பதால் இதற்கு ஒரு வருட ஆய்வு தேவையில்லை எனவும் மழை காலத்தை விட ஆய்வுக்கு வெயில் காலமே சிறந்தது எனவும் கூறினார்.

 அடுத்து தன் கருத்தை பதிவு செய்ய வந்த செம்பரம்பாக்கம் மன்ற தலைவர் திரு.வின்சென்ட், “200 மீட்டரில் குடியிருப்புலாம் இருக்கு.. சுமார் 2000 குடியிருப்புகள் இருக்கு.. அதுமட்டுமில்லாது நாங்க குடிக்கிற தண்ணியோட சுத்த அளவுக்கு நாங்க ஒரு குறிப்பிட்ட சதவீதம் கணக்கீட்டுள்ளோம், அந்த சுத்த அளவு நாளைடுவுள்ள உங்க திட்டத்தால குறைஞ்சிடுச்சுன்னா அதுக்கு நீங்க நான் பொறுப்பு.. எத செஞ்சாலும் யாருக்கும் பாதிப்பு இல்லாம செய்யுங்க..என்று விரக்தியுடன் பேசினார்.

 எந்த பாதிப்பும் வராது என்ற ஒற்றை வரியில் பதில் கிடைத்தது..

 அடுத்து சீறி வந்த குத்தம்பாக்கம் கிராமத்தின் விவசாய விஞ்ஞானி தன் கருத்துக்களால் சரமாரியாக பொரிந்து தள்ளினார்.. அவர் கூறுகையில், “மன்னிக்கனும்.. நீங்க பேசறது ஆரம்பத்திலிருந்தே ஒரு முடிவு பண்ணிட்டு பேசற மாதிரியே தான் இருக்கு.. அங்க பண்ணிருக்கோம், இங்க பண்ணிருக்கோம்னு சொல்றீங்க, அப்படி பண்ணியிருந்தா எஙகள்ல சிலர கூட்டிட்டு போயி அந்த ப்ராசஸ காட்டி எங்கள ஒத்துக்க வைக்கலாம்ல.. அதுமட்டுமில்லாம ஏற்கனவே மாசு கட்டுப்பாடு வாரியம் இந்த நிலம் தகுந்தது இல்லனு சொல்லியிருந்தும் இவங்க இந்த திட்டத்த இங்க நடைமுறைபடுத்த காரணம் என்ன..?”என்று மாவட்ட ஆட்சியர் அவரது பேச்சை தடுக்க முற்பட்டபோதும் அணையாத தீப்பிழம்பாய் கொதித்தார்.


 அதற்கு பதிலளித்த கமிஷனர், “முதல்ல மாசு கட்டுபாடு வாரியம் கொடுத்த ரிப்போர்ட்ட சரியானதல்ல.. சரியா படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும்.. சுத்தி பச்சைபசேலென இருப்பதுதான் அவர்கள் ஒப்புதல் அளிக்காத்தன் காரணம்.. ஆனா அங்க உங்க பச்சை வெளி இருக்கு.. எல்லாமே யுகலிப்டஸ் தானே..
 அவர்களை தொடர்ந்து சம்பந்தபட்ட அனைத்து ஊர்மக்களும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.. பெருவாரியாக எங்களையும் எங்க இடத்தையும் நாசமாக்கிடாதீங்கஎன்ற குரலே மேலோங்கி இருந்தது..வேகத்தில் பேசிய சிலரின் வார்த்தைகளில் தீப்பற்றி எரிந்தது.. சுத்தமா இரு.! சுத்தமா இருன்னு அரசே சொல்லிட்டு நீங்களே எங்க தலையில குப்பைய கொட்டலாமா..? நாங்க என்ன நடந்தாலும் எங்க இடத்த விடமாட்டோம்என்று பலரும் சொல்ல, அரசுக்கு ஆதரவாகவும் அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, வளசரவாக்கம், திருவேற்காடு ஆகிய பகுதி மக்கள் பேசினர்.. சம்பந்தபடாத மத்த ஊர் மக்களும் இதை எதிர்த்தவாரே பேசினர்.. ஒருவர் பின் ஒருவர் பேசும்போதே எழுத்துவடிவத்தில் அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டார் மாவட்ட ஆட்சியர்.. வாங்கப்பட்ட மனுக்கள் மாநில சுற்று சூழல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்னும் செய்தியோடு கருத்து கேட்பு கூட்டம் முடிவுக்கு வந்தது..

 பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த குத்தம்பாக்கம் முன்னால் பஞ்சாயத்து தலைவர் திரு.இளங்கோ, “இது என்னவோ தி.மு.க., அரசு பண்ற திட்டமுன்னு சொல்றாங்க.. இது சத்தியமா அப்படி இருக்க வாய்ப்பே இல்ல.. ஏன்னா, எல்லாத்தையும் சிறப்பா செய்ற நம்ம கருணாநிதி, இத்தனை மக்கள் எதிர்க்குறாங்க, இவ்வளவு பாதிப்பு இருக்குனு தெரிஞ்சும் இந்த திட்டத்துக்கு ஒத்துப்பாரா..? இங்க பேசனது என்ன குப்பைய பத்தி பேசுன மாதிரியா இருந்துச்சு, ஏதோ சாக்லேட்ட கையில வச்சிட்டு வித்துட்டு போற மாதிரி சொல்லிட்டு போறாங்க..என்று சரமாரியாக பேசினார்..


 அடுத்து குத்தம்பாக்கம் நிலையென்ன..? பொறுத்திருப்போம் அரசு பதிலுக்காக...17 டிசம்பர்.,2010..

என்னால் இதற்கு மேல் இச்சம்பவத்தை தொடர முடியாமல் போனது.. இப்போதைய நிலையும் சரியில்லாமல் இருப்பதாக நண்பர் வாயிலாக அறிந்தேன்..

நன்றி- திரு.சரவணன்..
Comments

 1. அந்த மக்களின் துணிச்சலுக்குத் தலைவணங்குகிறேன் . முடிந்தால் தற்போதைய நிலை அறிந்து சொல்லுங்கள்

  ReplyDelete
 2. கண்டிப்பாக முயற்சித்து சொல்கிறேன்..
  முன்னரே வந்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றிகள்..

  ReplyDelete
 3. உங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

  http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_18.html

  ReplyDelete
 4. ஆகா - மக்கள் விறு கொண்டு எழுந்துள்ளார்கள். அரசு சிந்தித்து முடிவெடுக்கட்டும்.

  ReplyDelete
 5. ஆகா - மக்கள் விறு கொண்டு எழுந்துள்ளார்கள். அரசு சிந்தித்து முடிவெடுக்கட்டும்.

  ReplyDelete
 6. @சீனா: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.!! இந்த பிரச்சனையில் இதற்கு பிறகு ஒரு முக்கிய பிரமுகர் கூட்டம் நடைபெற்றுள்ளது.. அதில் மீண்டும் வாக்குவாதங்கள் எழ, மேற்பட்ட முடிவுகளை இன்னும் அரசாங்கம் வெளியிடாமல் மௌனம் சாதிக்கிறது..
  உங்களை போன்று நானும் பொருத்திருக்கிறேன்.. முடிவு என்ன என பாப்போம்..

  ReplyDelete
 7. @எல் கே: நன்றி அண்ணா.. என்னை ஊக்குவிப்பதற்கு மேலும் நன்றிகள்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

கானல் தேடல்