என் தந்தை கொடியவரா.???


தளர்த்திவிட்ட தலைமுடி,
இஸ்திரி போட்ட ஆடைகள்,
முறுக்கி விட்டமீசை,
சிறிது கொழுத்திருக்கும் தாடி,
மிரட்டும் நடை,
வியக்கவைக்கும் மனிதர்...
அவர் எனது தந்தை...

அடுத்த நாள் பரீட்சைக்கு
முட்டி மோதி மனதிலேத்தி,
தேர முடியா தேர்வுலயும்
தேர்ச்சி பெற்று களித்தேனே-தோழா.!!
மாறாய்,
மதிப்பெண் குறைவென கடிந்திட்டாரே
என் தந்தை கொடியவர் தானா.?

வீதியில் திரியும் வயதில்
வெளியில் செல்லவிடாது
காத்து காத்து வைத்தாரே.!
நான் காக்க வேண்டிய பொருளா..
உலகை சுற்றி வந்தால் தான்
உணர்வை அறிய முடியும்
அதை அறியாதவரானாரே-தோழா.!
என் தந்தை கொடியவர் தானா.?

முதல் மாத சம்பளத்தை
முழுதும் வீட்டிற்கு செலவழித்து
பண்டம், துணியென களிப்புற்றேனே-தோழா.!
கடிந்தே-இன்பத்தை துன்பமாக்கிட்டாரே
என் தந்தை கொடியவர் தானா.?

செய்யா தப்பொன்றால்
துன்பம் கண்டிற்றேன்..
சின்ன துயருக்கும்
சினம் கொளும் அவர்
என்ன செய்திடுவாரோ.??
காண ஓடிவந்த அவர்,
கையை இருக பிடித்திட்டாரே.! தோழா.!
என்னை கட்டியணைத்து அழுதிட்டாரடா..
அவர் கொடியவர் அல்லடா..
டே.! அவர் நான் விரும்பிடும் குழந்தையடா.!!

எனக்கு,
துன்பம் காணா வாழ்க்கை அளிக்க
கொடியவர் போல காட்சியளித்தார்..!!
துன்பம் கண்ட வேலையிலே
அவர் இன்னும் குழந்தை தானடா..!!
அவர் கொடியார் அல்ல-குழந்தை.!!
என்னை திட்டி மிரட்டும்
என் மேல் அனபுகொண்ட
இன்றும் ஒருவருக்கொருவர் அரவணைப்பில்
என்றும் என் அன்பு குழந்தையாக.!!!


Comments

 1. பல அப்பாக்கள் இப்படி தான் கூர்மதி...பாசம் எக்கச்சக்கமா இருக்கும்....ஆனால் வெளியில் கடிஞ்சுகிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்...ஆனால் அவர்கள் குழந்தை வளர்ந்த பிறகு ,அந்த குழந்தை அப்பா ஆனபிறகு தான் அந்த பாசத்தை உணர முடியும்...:)) அப்போ கட்டாயமா கடிஞ்ச அப்பா நமக்கு குழந்தையா தான் தெரிவார்...:))

  ReplyDelete
 2. @ஆனந்தி: ஆம்..!!! ஆனால் என் அப்பா அப்படி பட்டவர் இல்லை.. பாசம் கொண்டவர் அதையே வெளிப்படையாக காட்டகூடியவர்.. இது என் நண்பர் ஒருவர் வாழ்க்கை... அவரது வாழ்க்கையில் என்னை புகுத்தி கவிதையாக படைத்திட்டேன்... மன்னிக்கவும் பதிவோடு இந்த குறிப்பையும் போட்டிருக்க வேண்டும்.. மறந்துட்டன்...

  ReplyDelete
 3. தந்தையின் கண்டிப்புக்குள் அடங்கியிருக்கும் அன்பை அழகானவரிகளில் கோர்த்துள்ளிர்கள் அருமை நண்பரே

  ReplyDelete
 4. @dineshkumar: வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.!!! தொடர்ந்த ஆதரவுக்கு மீண்டும் ஒரு நன்றி..

  ReplyDelete
 5. நுண்ணிய உணர்வை , நேசத்தை அருமையாக வார்த்தைகளில் கொண்டு வந்து விட்டீர்கள்

  ReplyDelete
 6. @பார்வையாளன்: யப்பா..!!! நீங்க ரொம்ப ரோச காரரு.. உங்க வீட்டுக்கு வந்ந்தா தான் என் வீட்டுக்கு வருவேன்னு ஒரு பெரிய குறிக்கோளோட இருந்தீங்க போல... இருந்தாலும், எனக்குன்னு ஒதுக்கிய அந்த நேரத்தும், உங்களுக்கும், உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி.. மீண்டும் வருக..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி