கண்டேன் கடற்கரையை.!!!


மாலை நேரம்...
சீறிப்பாயும் கடலலைகள்,
சிதறியோடும் மனிதர்கள்,
சிப்பி பொருக்கும் சிறுவர்கள்,
கடல்வீடான மீனை கரையோரம் சமைப்பவர்கள்,
நாணம் மறந்து குளிப்பவர்கள்,
என கண்டேன் கடற்கரையை...

வியத்தகு கடலை சம்பந்தபடுத்தி
என்னுள் ஆயிரம் வினாக்கள்...

கடல் அலை வலிமையற்றதா?
கரையை அடைய வந்து
அதனை,

தொட்டு மட்டும் செல்கிறதே!

மனிதர் மனம் நிலையற்றதா?
கடல் காண முன்வந்து
கடலலையால் பின்நோக்குகின்றனரே!

உண்மையில் நிலவு சக்தி வாய்ந்ததா?
உலகிற்கே ஒளிப்படைத்தாலும்
நடுக்கடல் மீனவனுக்கு கலங்கரை விளக்கமாகாதே!

கடல் அழகானதா?
மேல் தெரியும் தண்ணீர் அனைத்தும்
உள்வாங்கிய பிணத்தின் கண்ணீர் தானே!

என் கண் பொய் உரைக்கிறதா?
அழகாய் காட்டும் கடலுள்ளே
ஆயிரகணக்கில் கழிவுகளை மறைக்கிறதே!

கடல் பழிவங்குகிறதோ?
தன் பிள்ளை திங்கும் மனிதனை
தனக்குள் இழுத்து கொள்கிறதே!

கடல் ஓர் பெருநோயா?
காட்சிகளில் இன்பம் காட்டி
சிறிது நேரத்தில் காளானாய் மாறுகிறதே!

கரைமண் இரக்கமற்றதா?
உறவுகள் எண்ணி சிந்தும் கண்ணீரை
உடனே உள்வாங்கி கொள்கிறதே!

குளிர் காற்று கூட்டாளியா?
கடல் அழிக்க துடிக்க மனிதனை
கரையிலே தங்க செய்கின்றதே!

இதுபோல்,

என்னுள் சந்தேகங்கள்,
இன்னும் ஆயிரம் சந்தேகங்கள்...

பொறுமையற்ற கடல்
என் கொடுஞ்சொல்லால் சினமுற்றது...

மாலை இரவானது...
உணர்ச்சி பெருக்கில்,கடல் அலை-
என்னை உள்வாங்க துடிக்கின்றதே!
நான் மடையன் அல்ல,
நகர்ந்துவிட்டேன் அந்த இடத்தை விட்டு...

இருப்பினும்,
சோகம் மூண்டாலும்,
துன்பம் துளைத்தாலும்,
காண்பேன் தூயக் கடற்கரையை!
இன்று,
கண்டேன் கொடுஞ்சிறை அறையை!!!

Comments

 1. சூப்பர் .மொழியை நன்றாக கையாள்கிறீர்கள்

  ReplyDelete
 2. அருமையான வரிகள் நண்பரே வார்த்தைகள் விளையாடுகின்றன தங்கள் வரிகளில் சூப்பர்

  ReplyDelete
 3. @பார்வையாளன்: வாருங்கள் வாருங்கள் நண்பா..!!! நீங்கள் என்னை பெருமைபடுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 4. @dineshkumar:எனது பதிவுலகின் முக்கிய நண்பர் நீங்கள்.. எப்போது பதிவிட்டாலும் தங்கள் கருத்தை உடனே பதிவிடும் நீங்கள் எனது முக்கியமான உந்துகோள்.. எனது வார்த்தைகளை பெருமைபடுத்தியதற்கு நன்றிகள் நண்பா.. தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 5. அற்புதம்..அற்புதம்...கூர்மதி..அழகான கடற்கரை...அலைகள்...விளையாடும் குழந்தைகள்..முளகாய் பஜ்ஜி..இப்படி நான் பார்க்கும் கடற்கரையை விட்டுவிட்டு..வேற ஒரு பக்கத்தை யோசிக்க எல்லாராலும் முடியாது...நீங்க அற்புதமான படைப்பாளி(ஆனால்..கொஞ்சம் அதிக பிரசங்கி,உணர்ச்சி பிழம்பி.. :))))(நிறைய திட்டிக்கோங்க என்னை...ஹ ஹ)
  ,சுனாமியின் தாக்கத்தை, நீங்கள் பட்ட வலியை ரொம்ப அழகாய் உணர்ச்சி பிரவாகமாய் கொண்டு வந்த உருவாக்கம் அட்டகாசம் கூர்மதி...ரொம்ப பீல் ஆனேன்... என் இனிய இளைராஜா சார் ன் கவிதையை விட...:)))

  ReplyDelete
 6. மாற்று கருத்து போடலன்னு கோவிச்சுட்டின்களே போன பதிவில்..இக்கட சூடுங்க..:))
  "சிற்பி பொருக்கும் சிறுவர்கள்,"
  இது என்னது...?:)) திருத்துங்க ஒழுங்கா...:))

  ReplyDelete
 7. @ஆனந்தி..://ஆனால்..கொஞ்சம் அதிக பிரசங்கி,உணர்ச்சி பிழம்பி..//
  அப்படியா.?? அப்படிதான் இருக்கனும் இல்லன்னா ஜடம்னு சொல்லிடுவானுங்க..
  //நிறைய திட்டிக்கோங்க என்னை...ஹ ஹ//

  சே.! சே.! என்ன போயி இப்படி சொல்லிட்டீங்களே.! ஐ ஆம் பீலிங்...

  //என் இனிய இளைராஜா சார் ன் கவிதையை விட//
  ஆஹா.! இது கொஞ்சம் ஓவர்.. ஆனா எனக்கு கிடச்ச மிகபெரிய பெருமை..

  இந்த முறை சிக்கிட்டேனா..!! பரவால.

  ReplyDelete
 8. வார்த்தை பிரயோகங்கள் அருமை...

  // குளிர் காற்று கூட்டாளி //
  இந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்தது...

  ReplyDelete
 9. @philosophy prabhakaran:நன்றிகள் தோழா.!! கருத்துக்கும் வருகைக்கும்..

  ReplyDelete
 10. கூர்மதி..உங்கள் ப்ளாக்கின் புது தோற்றம் சூப்பர்:)))

  ReplyDelete
 11. @ஆனந்தி நன்றி.. நான் இத பண்ணனும்னு நினச்சிகிட்டே இருந்தன்.. ஆனா கொஞ்சம் பிரபலம் ஆன பிறகு பண்ணிக்கலாம்னு இருந்தன்.. இப்ப அதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மினு தெரிஞ்ச்சிடுச்சு.. அதான் இருக்கிறவங்களுக்காவது நம்மளோட டேஸ்ட் பத்தி தெரியுட்டுமேனு உக்காந்து எடிட் பண்ணிட்டன்.. நீங்க சொன்னது தான்.. நாலு பேர் படிச்சாலும் நாங்கயெல்லாம் பேமஸ் தான்...

  ReplyDelete
 12. இப்போ ரொம்ப அழகா இருக்கு...:)) ..முதலில் நமக்கு பிடிச்சதை செய்யலாம்..அப்புறம் தான் மத்தவங்க கூர்மதி..சரிதானே..:))

  ReplyDelete
 13. அதென்ன " இருந்தன்..பண்ணிட்டன்.." இது எந்த ஊரு ஸ்லாங்??

  ReplyDelete
 14. @ஆனந்தி..:

  //சரிதானே..// அதேதான்..சரிதான்..

  //அதென்ன " இருந்தன்..பண்ணிட்டன்.." இது எந்த ஊரு ஸ்லாங்?//

  சிங்கார சென்னை.. என் கைகளிலும், வாயிலும் ஒரு நாள் அழகு தமிழ் கொஞ்சி விளையாடிச்சு.. பாவி பயலுக.!! ஏன் யா உன் தமிழ் ஒரு மாதிரி இருக்கு இருக்குனு கேட்டே அழகு தமிழ்க்கு துணையில்லாம மாத்திட்டானுக..!!! கொஞ்ச சந்தோசம்.. லோக்கல் சென்னை தமிழ் என் பக்கம் இன்னும் ஒட்டல..

  ReplyDelete
 15. ஓ..லோகல் பேட்டை சென்னை பாஷை இது தானா...சாரி..ரொம்ப கேவலமா இருக்கு...ஹ ஹ....:)))

  ReplyDelete
 16. @ஆனந்தி..: ரொம்ப மகிழ்ச்சி..!!! எனக்கும் தான் புடிக்கல.. என்ன பண்றது தானா ஒட்டிகிடுச்சு... ஆனா இது ஜஸ்ட் பேசிக் தான்.. இதையே லோக்கல்னு சொல்லிடுறீங்களே.!! இதுவே மோசமா.!! இன்னும் பக்கா லோக்கல் பாத்தீங்கன்னா என்ன ஆகுறது.??? நீங்க சென்னையில தான இருக்கீங்க.. உங்களுக்கு தெரியாதா.??

  ReplyDelete
 17. @ஆனந்தி..:இல்லையே.!! சம் சோர்சஸ் சொன்னாங்களே.!! நீங்க சென்னையில தான் இருக்கீங்கன்னு..

  ReplyDelete
 18. நான் பக்கா மதுரைகாரி :)) சென்னையில் என் சகோ இருக்கான்...அப்போ அப்போ வந்துட்டு போவோம்..மத்தபடி சென்னைக்கும் எனக்கும் வெகு தூரம் நீங்க வேற....ஆமாம்...எந்த source ?? :))))))))))))))))))))))))))

  ReplyDelete
 19. @ஆனந்தி: ஓ..!! அப்படியா..!! சரி சரி.. இதுதான் அந்த ஸோர்ஸ் http://avanidamnaan.blogspot.com/

  ReplyDelete
 20. @ஆனந்தி..(மதுரை):நன்றி நன்றி நன்றி...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!