அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..!!! இருப்பினும்.???


தோழா..
அந்த நாள் முதலே நீ எந்தன் அரவணைப்பிலே.!!

தந்தை கடிந்தாரென என என்னை கடிந்தாய்..
பொறுத்தேன்-அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..

பணத்தை இழந்தாயென என்னை அணைத்தாய்
அணைத்தேன்-அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..

சொந்தம் இழந்தாயென என்னிடம் கணத்தாய்
ஆறுதலானேன்-அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..

மதிப்பெண் குறைந்தாயென மதிக்கெட்டு திரிந்தாய்
திருத்தினேன்-நானும் அதை அனுபவித்திருக்கிறேன்..

வேலைகள் இல்லையென காயம் கொண்டிருந்தாய்
மருந்தானேன்-நானும் அதை அனுபவித்திருக்கிறேன்..

திருமண வாழ்க்கையென குழப்பம் கொண்டிருந்தாய்
விளக்கமானேன்-அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..

பிள்ளை படிப்பிற்கென வரவு தேடிக்கொண்டிருந்தாய்
உதவியானேன்-அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..

வாழ்க்கை சுமையென சுகங்கள் தேடினாய்
சுகமானேன்- அதை நானும் அனுபவித்திருக்கிறேன்..

கடமைகள் முடிந்ததென  காலார நடந்தாய்
துணையானேன்- நானும் அதை அனுபவித்திருக்கிறேன்..

இப்போ என் பயணம் முடியுமுன்னே
உன் நடை முடிந்துவிட்டதே நண்பா.!!!
கண்ணீராகிறேன் தோழா..!!!

இருப்பினும்,
தனிமை வெறுப்பென என்னையும் அழைப்பது.???
மச்சி.!!! ஓவர் டா இது..

Comments

 1. அருமை!
  உணர்வுகள்...

  ReplyDelete
 2. போங்க கூர்மதியன்...செம சீரியஸா படிச்சேன்...கவிதை அவளவு உணர்வு பூர்வமா இருந்துச்சு...அதென்ன கடைசியில் இப்படி போட்டிங்க..:))))
  'மச்சி.!!! ஓவர் டா இது..'
  அதுக்கு பதில ..."நானோ அதை அனுபவிக்க வில்லைன்னு " முடிசிருக்க்கலாம்னு யோசிச்சேன்..நீங்க கவிகடல்..நான் சும்மா தான் சொன்னேன்...:)) நல்லா இருக்கு கூர்மதி..:)

  ReplyDelete
 3. நல்லாருக்கு தொடருங்கள்

  ReplyDelete
 4. @எஸ்.கே: நன்றி தோழரே.!!!

  ReplyDelete
 5. @ஆனந்தி:அதற்கு காரணம் இருக்கு.. என்னை சுற்றி இருக்குறவங்களும் என் கூட பழகுறவுங்க எல்லாரும் நான் ரொம்ப சீரியஸ், டென்ஷன் பார்டி நினச்சிட்டாங்க... அப்படி இல்லனு சொல்லவே என் உணர்வுகளோட கூடிய என் இயல்பையும் வெளிபடுத்திவிட்டேன்... இருப்பினும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.. கருத்துகளை ஏற்கிறேன்..

  ReplyDelete
 6. @dineshkumar: கண்டிப்பாக தோழரே..!!! மிக்க நன்றி..

  ReplyDelete
 7. @ஆனந்தி: கவிக்கடல்னு சொல்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்..

  ReplyDelete
 8. அன்பின் தம்பி கூர்மதியன் - தனிமையின் எதிரி அல்ல என நிரூபிப்பதற்காக இக்கவிதையா - இயல்புக்கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி