Posts

Showing posts from January, 2011

கிரெடிட் கார்டு ரகசியங்கள் பரிபோகாமலிருக்க…

Image
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அதன் பாதுகாப்பை பற்றிய அச்சம் இல்லாமல் இருக்காது. அதுவும் இணையத்தில் அதை உபயோகிக்கும் சமயத்தில் இணைய திருடர்களிடமிருந்து கார்டின் ரகசிய தகவல்களை பாதுகாக்க மிகவும் சிரமபடுகின்றனர்.


இதனை சமாளிக்கும் பொருட்டு வந்தது தான் ‘Smart Swipe’.. இது கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி., போர்ட்டில் இணைக்கும் வசதி கொண்டுள்ளது. இணையம் மூலமாக அனைத்து வேலைகளையும் அதாவது அனைத்து வாங்குதல்களையும் இணையம் மூலமாகவே முடித்துகொள்கின்றனர் இக்காலத்து மக்கள். அதற்கு முக்கிய தேவையாக இருப்பது கிரெடிட் கார்ட். இனி கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை இணையத்தில் கொடுத்து அதை எவன் எடுப்பானோ என்று அடிவயிற்றில் நெருப்பை கட்டவேண்டிய அவஸ்தை இல்லை.இதை கம்ப்யூட்டரின் யுஎஸ்பி போர்ட்டில் இணைத்துவிட்டு வழக்கமாக வாங்கும் இன்டர்நெட் ஷாப்பிங் கடைக்கான வெப்சைட்டில் போய் தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டு ரகசிய இலக்கை செலுத்த வேண்டிய சமயத்தில் இந்த ‘Smart Swipe’இல் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் கார்டை வைத்து தேய்த்தால் தேவையான தகவல்கள் நேரடியாக அந்த கடையின் தகவலுக்கு சென்றிடும். இதனால் ரகசிய தகவல் பறிபோவது கு…

எனக்காக என்றுமே என்னிடத்தில்.!!!

Image
கண்ணில் துயர்கொள்ளும் போதே
காட்சி உயிரற்று போகும்..
கண்ணீர் மண்ணை சீண்டுமுன்னே
இமைகள் உலகை மறக்கும்..
அவன் எனை விடுத்தால்
ஏனோ என்னுள் ஆயிரம் வினாக்குறிகள்.!!!
நான் விரும்பும் தோழமையாக
என்னை எனக்கு உணர்த்திய தோழனாக
சினங்கொண்ட நேரத்திலும்
துயர் தாழ்த்திய தருணத்திலும்
அருகில் என்னை அணைத்தானவன்..
அவன் 'தனிமை'யெனும் என் உயிர் நண்பன்..

இன்றும் அவனோடு இருக்கிறேன்
பிடிக்கா செயலொன்றை செய்ய சொல்லி
பிய்தெடுக்கும் அப்பாமேல் கோபமாக அந்த வெட்டவெளி மைதானத்தில் மடக்கிய கால்களில் அமர்ந்தபடி..!!

அங்கே,
நான் காலடி பதிக்கா இடத்தை
அம்மைதானம் தான் கொண்டிடுமோ.???
என் வியர்வை தாங்கா நிலம்
அங்கு மிச்சம் மீதி இருந்திடுமோ.???
கண்கள் கலங்கிடுது
அந்த சரித்திரமான நாட்களை
என் சிந்தையில் கொள்ளும் போது..!!!

அந்நேரத்திலே,
விருட் விருட்டென்ற நடையில்
ஒரு அப்பா,மகன் கூட்டணி
உருட்டிய சைக்கிளோடு
மைதானத்தில் காலடி பதித்தது..

கண்கள் அவர்களை உற்றுநோக்க
சிறுவன் சைக்கிள் பழக ஆரம்பித்தான்..
சற்று விலகி அமர்ந்த அப்பா
''கீழ பாக்காதே செல்லம்
 காலை எடுக்காதே குட்டி''
என அன்பு வார்த்தைகளில்
வாத்தியார் ஆனார்..

என்ன சொல்லிட்டாலும்
கண்கள் கீழ்நோக்கவு…

The other way.!!!

Image
What should I do..???
Can't be alone
when I think about that..
What should I do..???

Thinking of my life,
that leads me to two ways..

The way I need
and,
the way my life needs..

Miraculous experience
Enjoyable thoughts
Happiness surrounds me
On all the day
In the travel to my loved way..

But,
what would the way
that my life awaited would have.???
Can I lead an enjoyment there.???

I hold my head strong
when I think about that...
Because, It may burst into pieces..

I tie my hand tight
when I think about that..
Because, It may hurt the walls..

I keep the costly things safe
when i think about that..
Because, It may lead them to dead..

What made a cool guy so rough.???
The other way made it..
I thought about that..
Shed.!! Now I have to Grab
to save my computer..!!!

பொக்க வாய் ஆயா பாடிய 'ஹோசான்னா' பாடல்.!!!

Image
வழக்கம் போல நான் ஆபிஸ்க்கு வண்டியில போகும் போது(சத்தியமா நான் ஆபிஸ்க்கு போனேங்க..!!) ஒரு அதிரி புதிரி சத்தம்..


சத்தத்தை கேட்டதும் பயந்து போய் அப்படியே டயர் பேலன்ஸ் மிஸ் ஆக.. நடுரோட்ல இருந்து ததகபுதகான்னு ஆட்டிகிட்டே ஓரமா போய் நின்னன்..(ஹு ஈஸ் தட் ப்ளட்டி..??? யாரு மேன் சத்தம் போட்டது.???)


வண்டிய நிறுத்திபுட்டு பாத்தா ஆல் லுக்கிங் அட் மீ...!!! வொய்.???(கீழ பாருடா பேக்கு.!!!)


அந்த அதிரிபுதிரி சத்தம் என் வண்டி டயர் வெடிச்ச சத்தம் தான்.. பேலன்ஸ் மிஸ் ஆனது சத்தத்தால இல்ல.. டயரால தான்.. (என்ன கொடும கூர் இது.???)


வேர்க்க விருவிருக்க தள்ளிகிட்டு போய் பஞ்சர் ஒட்ட கொடுத்திட்டு... சாயங்காலம் எடுத்துகிறதா சொல்லிபுட்டு(பெட்ரோல் இருக்குமா.???) நம்ம 18A பஸ்ச புடிச்சா உட்கார இடமில்ல(ஆமாம் நிக்கற இடத்துக்கே வக்கில்லையாம்.. இவருக்கு உக்கார இடமா.???)


சரின்டு ஓரமா ஒரு கம்பிய புடிச்சு முட்டுகொடுத்துகிட்டு நம்ம '1857 சிப்பாய் புரட்சி' புத்தகத்த படிச்சிகிட்டே வந்தன்(படிச்சிட்டு இவரு கிழிக்க போறாரு.!!!)


அடங்க.. போக போக இன்னும் நெரிக்க ஆரம்பிச்சுட்டானுங்க..(அடங்கொன்னியான்.!!!)


புக்க உள்ள வச்சிபுட்டன்..(கொடும…

ஏன் யா இப்படி பண்றீங்க.???

Image
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டம் மற்றும் தேசிய அளவில் சாதித்த பார்வையற்ற மாணவர்களுக்காக வருடம்தோறும் அரசு ஊக்கத்தொகையும், அவர்களின் மேல்படிப்பிற்கான செலவையும் ஏற்றுக்கொள்கிறது..  அவ்வாறு 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் திருவள்ளுவர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த கண்ணன், யு.மகேந்திரன், ஏழுமலை, எம்.மகேந்திரன், கார்த்திக், தர்மலிங்கம் ஆகிய மாணவர்களுக்கும் 2008ல் திருவள்ளுவர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த பச்சையப்பன் என்ற மாணவர்க்கும் அவர்களுக்கு தரவேண்டிய மேல்படிப்பிற்கான பணத்தில் ஒரு குறிப்பிட்ட சிறு பங்கை மட்டுமே அளித்துவிட்டு மீதி தொகை தரப்படாமல் இருந்திருக்கிறது..


இந்நிலையில் சம்பந்தபட்ட மாணவர்கள் கடந்த மே மாதத்தில் தேதி திருவள்ளூர் மாவட்ட புனர்வாழ்வு அலுவலர்(டி.ஆர்.ஓ) திரு.ரவி அவர்களிடம் தங்கள் அடையால அட்டை, ஆதாரங்களுடன் சென்று மனு அளித்து வந்தனர். பின்னர், ஆயிரம் விளக்கு பகுதியில் கமிஷனரை காண சென்றவர்கள் கமிஷனரை காண முடியாததால் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் தங்கள் மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.. ஓரிரு நாட்களில் ப்ரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்…

உனக்கு யார் உரிமை கொடுத்தார்.???

Image
வாழ்க்கை எனக்களித்த பலபாடம்
அதை,
வாயால் சொல்லிட முடியாது..

சின்ன சிறிய விசயங்களிளும்
மனதில்,
நீங்கா துயரை விட்டு சென்ற
மனிதர்களின் கோட்பாடு
கொஞ்சம் வியக்க தான் வைக்கிறது.!!!

என் வாழ்க்கை எனக்கென்று
சுற்றம் என்றும் எனை சூழ
எனக்கே உரித்தான இயல்புகளோடு
வாழ்ந்து வளர்ந்த என்னை,
வெறிக்கொண்ட மனிதர்
சினங்கொண்டு தாக்க
பாவம் செய்தேனா.???
இல்லை,
அவர்களது பவித்தரம் அழிந்ததா.???

உன்னை,
சிறுக சிறுக அழித்திடும்
அநியாய அரசியலை எதிர்க்கமுடியாத நீ...
என் அகமென இருந்த வாழ்வை
அழிக்க துணிந்தது எங்ஙனம்.???

நச்சுகள் கோத்து இருப்பிடத்தை
நஞ்சுகள் நிறைந்த கூடாரமாக்கி
கும்மாளம் அடித்திடும் நீ...
என் உயிர் குடிலை
சீரழிக்க உரிமை யார் கொடுத்தார்.???

ஆறறிவு நான்கொண்டேனென
பரிவிழந்து திரியும் உன்னை
எவ்வினத்தில் சேர்ப்பது.???
உயிருள்ள ஜீவனில் உனக்கும்
ஓர் இடம் இருக்குமா.???

விஞ்ஞான வளர்ச்சியென
வியாக்கானம் பேசும் நீ..
வாழ்க்கை அழிக்கும் விஞ்ஞானத்தில்
நீ வீழும் நாள் எப்போது.???

பணமூட்டை பல சேர்த்து
குணமூட்டையை இழந்த நீ..
என் குலத்தை அழிக்க துணிந்தாயோ
அத்துணிவை உனக்களித்தார் யாரோ.???

உன் வீட்டை அலங்கரிக்க
என் உயிர் மீது முதலீடா.???
எனக்கே உரிமையில்லா என்னுயிரை
எங…

நான் ஏமாந்துட்டேனா.??? சொல்லுங்க ப்ளீஸ்...

Image
நான் கூர்... அட அதாங்க என் பேரு.. உழச்சு தான் வண்டி வாங்கனும்னு அத பத்தி ஒண்ணு கூட தெரிஞ்சிக்காம இருந்தன்.. இப்ப வண்டி வாங்கிட்டன் ஆனா வண்டி ஓடமாட்டேங்குது(அவ்வ்வ்வ்...)
என்ன சொல்றது இந்த கொடுமைய... வெளிய வண்டியில சுத்தனும்னா கண்டிப்பா பெட்ரோல் போடனுமாமே(எனக்கு சத்தியமா தெரியாது..)
என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் கூகிள கேட்டு பெட்ரோல் எதுக்கு யூஸ்னு தெரிஞ்சிகிட்டன்.. பெட்ரோல் வண்டிய ஓட்டுறதுக்கு யூசாம் (எப்படி கண்டுகிட்டன் பாத்தீங்களா..!!)
சரி அது எங்க கிடைக்கும்னு போயி மளிகை கடைகாரன் கிட்ட கேட்டா $&$&**%&*&##*(&%&.!!!!
அப்பரம் நீண்ட தேடுதலுக்கு பிறகு பெட்ரோல பெட்ரோல் பங்க்ல தான் வாங்கனும்னு பச்சியில பச்சி அந்த பச்சி சொல்லுச்சு...(எதுக்கெல்லாம் யூஸ் ஆகுது நம்ம பச்சி...)
பெட்ரோல் பங்க்ல போயி ஒரு கிலோ பெட்ரோல் குடுங்கன்னு கேட்டா.. அவன் $&$&%**(*(&*&#%#.... சே.!!! உலகமாயிது.. அதாவது பெட்ரோல லிட்டர்னு கேக்கன்னுமாமுல (நல்லா கொடுக்குறாங்கய்யா டீடயிலு.!!!)
சொல்லிகொடுத்தா கத்துக்கமாட்டோம்னா சொல்றோம்.. சொன்னா கிளியரா சொல்லனும் அத விட்டுபுட்டு இப்படியா ஒரு மனுசன வருத்தெ…

அவர் அவனானது எப்படி???

Image
காணும் நாள் அனைத்தும்
காட்சிபிம்பம் பலகோடி..
பிம்பத்தின் ஒளிநிழலை
மறவாது கொண்டிருக்க
அதில்,
மயக்கம் கொண்டிருக்க வேண்டும்..

இயற்கை பிம்பமும்
இனிய குழந்தை பிம்பமும்
மனதில் திளைட்டித்தடா.!!
மாற்றான் பிம்பம் விரும்பா நான்
இன்று,
அந்த மாமனிதரின் பிம்பத்தை
மனதில் புகுத்தியுள்ளேன்..

உன்னத கருத்து பலகொண்டு
என்னை உயர்வு படுத்தும் உன்னதமானவர்
கண்ணில் கொண்ட கனவை
கண்முன்னே காட்டும் வழிகாட்டி
என எண்ணியவெல்லாம் உயர்வாக
அவரை மெய்மறந்து கவனித்தேன்..
அவரின்,
கருத்தை உணர்ந்த நான்
வாழ்க்கையை உணரவில்லை..

அத்தருணத்திலே,
அவர் செய்த அச்செய்கை
என் எண்ணங்கள் முழுதையும்
பொய்களின் கூடாரமாக்கியதே.!!!

பிடிமானமான தூணில்
நான் பிடியிழந்து வீழ்ந்தேனே.!!!
மறித்து நிற்கும் சுவரில்
மண்டையை முட்டி முட்டி வலித்தேனே.!!
நானா இப்படி.???
மனம் என்னை நச்சரித்ததே.!!!

அன்று.....
நான் விரும்பும் மனிதர்
சுயவாழ்வில் எப்படியென
சிந்திக்கும் மூளைக்கு
சித்திரம் படைத்திட
அவர் பூட்டியவீட்டை நெருங்கிட்டேன்..

அண்டைவீட்டு சத்தம்
அந்த ரயில்வே 'சப் வே' திறப்புவிழாவுக்கு
என்னை வழிநடத்தி சென்றிட்டது..

நான் மதிக்கும் மனிதர்
திறப்பு விழாவின் கட்சி தலைவர் விரும்பியா.???
பத்திரிக்கை …

கருவரையும்! கல்லறையும்!

Image
அய்யோ! கொடியதோர் இருட்டு... பதறிதே என் மனம்... பயந்த நெஞ்சோடு அழுகும் முகத்தோடு பிரிந்தேன்-அந்த இருட்டறையை... அது--என் தாயின் கருவறை...
வெளிச்சம் கண்ட என் கண்கள் முகத்தில் சிரிப்பை தோன்றச் செய்தது. பாரத்தேன்! உற்றுப் பார்த்தேன்! உணர்ந்துகொண்டேன்- இது நாடகம். இதுவே உண்மை இருட்டு... கொடுமையான நெஞ்சங்கள், உறுதியில்லா மனிதர்கள், உணர்ச்சியற்ற இளைஞர்கள், பழமை மறந்த பெண்கள், என எல்லாமே இருட்டாகிறதே!
புரிந்து கொண்டேன்- உண்மையான இருட்டெது ஒளியெது என்று...
நான் செல்லமுடியுமா-                        நான் உருவான,                        நான் விரும்பாத,                        நான் புரிந்து கொண்ட,                         தாயின் கருவரைக்கு???                        முடியாது...

எட்டு வயசு பையன இப்படியா கொடுமைபடுத்துவது.???

Image
வேலைய முடிச்சிட்டு உக்காந்திருக்கிற நேரத்துல நம்ம முன்னாடி இருக்கிறது நம்ம கம்ப்யூட்டர் தான். நான் அதிகமா யூஸ் பண்றது ஆர்குட், பேஸ்புக், டிவிட்டர் அப்பரம் ப்ளாக்.. கண்டமேனிக்கு மானாவாரியா மாத்தி மாத்தி சாட்டிங், டிவிட்டிங், ப்ளாங்கிங்னு போற சமயத்துல தோழி தமிழச்சியோட பேஸ்புக் அப்டேட்ஸ்ல இந்த கொடுமைய பாத்தன்.. மனசு ரொம்ப வலிக்கிது..

இந்த விசயம் 2005ல நடந்ததா இருந்தாலும் இப்ப தான் எனக்கு தெரிஞ்சிது.. அது என்னனா எட்டு வயசு பையன் கையில கார ஏத்துனது தான்.. அதுவும் எதுக்கு தெரியுமா.??? பசியால பையன் ப்ரட்ட திருடிட்டானாம், இனி அப்படியொரு விசயம் பண்ணகூடாதுன்னு அதிபுத்திசாலிகள் தங்கள் மூளையை தட்டி யோசித்து இப்படியொரு காரியத்தை செய்துள்ளனர்..

பிஞ்சு முகத்தினை கண்டிட்டேனடா தோழா.!! அதன் மழலை மறையுமுன்னே அவனை மங்கசெய்திட்டாரே.!! பசிக்கொடுமை பெரியதா.? இங்கு நடந்திடும் கொடுமை பெரியதா.? மனசு பொருக்கதில்லையே மானிடா பொங்கி எழுந்திடடா.. பிஞ்சு பருவத்திலே, அவன் வாழ்வில் நஞ்சை கலந்திட்டானடா.. நீ காணும் கோடானகோடி இன்பம் இவன் வாழ்வில் கொஞ்சிட மறுத்ததேனடா.? இன்னும் கொதிக்குதே கைகள்.. என்ன செய்ய என் வரிகள் முடியவில்லையே.!!!

பைக்,கார் ஓட்டுவீங்களா.??? இத படிங்கப்பா...

Image
புதுவருடம் தொடங்கிடுச்சே இன்னும் பதிவு போடலையேன்னு யோசிச்சிட்டிருந்தன்.. அதான் ஏதாச்சும் உபயோகமா போடலாம்னு நான் இணையத்துல பாத்தத இங்க போடுறன்.. இந்த புதுவருடத்துல இம்முகவரியின் முதல் பதிவிது..
சரி மேட்டருக்கு வருவோம்..


மழை காலம் நெருங்கிவிட்டாலே வண்டி ஓட்டும் அனைவருக்கும் ஒரே தலைவலி தான். அதுவும் காரில் செல்பவர்கள் கண்ணாடி துடைப்பானை(Wiper) அதிக வேகத்தில் வைத்து உத்து உத்து பாத்து ஓட்டும் போது.!!! உண்மையில் சங்கடம் தான். எதிர்வரும் வாகனங்களும் தடைகளும் கவனிக்கமுடியாமல் பலமுறை வாகனங்கள் விபத்துகுள்ளாவதை கண்டிருக்கலாம்..
சிலரை நீங்கள் கண்டிருக்கலாம்.. கொட்டும் மழையில் காரை ஓட்டிகொண்டு செல்லும்போது கண்ணாடி துடைப்பானின் வேகத்தை அதிகபடுத்திவிட்டு இன்னும் சாலை சரியாக தெரியாமல் கண்ணாடிக்கும் முத்தம் கொடுப்பது போல ஒட்டிகொண்டு ஓட்டுவர்.. இருந்தும் அவர்களின் தீராத முயற்சிகள் பலவும் தோல்விகளிலே முடியும்..

இவ்வாறு பொருட்சேதமும், உயிர்சேதமும் அதிக அளவில் ஏற்பட காரணமாக இருக்கும் இப்பிரச்சனையிலிருந்து வண்டி ஓட்டுபவர்கள் தப்பிப்பது எப்படி.???

அதிக மழையில் வண்டி ஓட்டும் போது கருப்பு கண்ணாடி போட்டுகொள்வது …

என்னை துயருக்குள்ளாக்கிய என் அம்மா.!!!

Image
கண்டதில்லை இதுபோல் எங்கும்.. என்ன ஒரு பாசமென கர்வம் கொண்டிருந்தேனடா தோழா..! உலகில் யாரும் பெற்றிடாத அன்பை அள்ளி படைத்திட்டாளே.! பாசம் கலந்த உணவை உள்ளே எனக்கு புகுத்திட்டாளே.! எனக்கு கிடைத்தார் போல பாசமிகு தாய் கிடைத்திடுவாளோ என்றிருந்தேன்.. ஆனால், கனவுகள் அனைத்தும் கரைபுரள இன்பம் அனைத்தும் இகழ்ச்சிபெற அன்று என்ன ஆனது அவளுக்கு..??
கர்வம் கொண்ட என்னை கலகம் செய்திட்டாளே.! அன்பை பொழிந்த அவள் அன்று என்னை அரவணைக்க தவறியதேன்.? பாசம் கொண்டவளாய் இதுவரை என்னிடம் பாசாங்கு செய்திட்டாளோ.?? காட்டிய பாசமனைத்தும் காட்சிக்காக மட்டும் தானா.?? குழப்பம் அடைந்தேனடா தோழா.!!
என்ன செய்துவிட்டாள் என்கிறாயா.?? சொல்கிறேன் அக்கொடுமையை..
என்றும் போல் அன்றும் அனைத்து பாசமாய் என்னை எழுப்பிட்டாளடா.. பல்லை சுத்திகரித்து உணவுக்காக உட்காரும் நான் என்றும் இல்லாதவாறு முன்னரே குளிக்க அனுப்பபட்டேன்..