Skip to main content

என்னை துயருக்குள்ளாக்கிய என் அம்மா.!!!


கண்டதில்லை இதுபோல் எங்கும்..
என்ன ஒரு பாசமென
கர்வம் கொண்டிருந்தேனடா தோழா..!
உலகில் யாரும் பெற்றிடாத
அன்பை அள்ளி படைத்திட்டாளே.!
பாசம் கலந்த உணவை
உள்ளே எனக்கு புகுத்திட்டாளே.!
எனக்கு கிடைத்தார் போல
பாசமிகு தாய் கிடைத்திடுவாளோ என்றிருந்தேன்..
ஆனால்,
கனவுகள் அனைத்தும் கரைபுரள
இன்பம் அனைத்தும் இகழ்ச்சிபெற
அன்று என்ன ஆனது அவளுக்கு..??

கர்வம் கொண்ட என்னை கலகம் செய்திட்டாளே.!
அன்பை பொழிந்த அவள்
அன்று என்னை அரவணைக்க தவறியதேன்.?
பாசம் கொண்டவளாய் இதுவரை
என்னிடம் பாசாங்கு செய்திட்டாளோ.??
காட்டிய பாசமனைத்தும்
காட்சிக்காக மட்டும் தானா.??
குழப்பம் அடைந்தேனடா தோழா.!!

என்ன செய்துவிட்டாள் என்கிறாயா.??
சொல்கிறேன் அக்கொடுமையை..

என்றும் போல் அன்றும்
அனைத்து பாசமாய் என்னை எழுப்பிட்டாளடா..
பல்லை சுத்திகரித்து உணவுக்காக உட்காரும் நான்
என்றும் இல்லாதவாறு
முன்னரே குளிக்க அனுப்பபட்டேன்..
அந்நிலையே,
என் மனதில் சஞ்சலம் உருவானதடா..
புதியதோர் விந்தையாக உள்ளதென
குழப்பத்தோடு குளித்துவந்த எனக்கு
பாசமாய் அவள் ஊட்டிய உணவில்
குழப்பம் மறந்துட்டேன்
குதூகலம் கொண்டிட்டேன்..
ஆனால் அதன் பிறகே
அவளின் விஸ்வரூபம் கண்டிட்டேன்..
உணவு உண்ட மயக்கத்தில்
செரித்த ஏப்பம் வருமுன்னே
மூட்டையை முதுகில் சுமக்க செய்தாள்
வீட்டை விட்டு வெளியேற்றினாள்..
கத்தினேன்.. கதறினேனடா தோழா.!
அவள் மனமொரு இரும்பா.??
கரைந்திட மருத்திட்டாளடா..
அவளுக்கு கூட்டாளியானர் என்
நயவஞ்சக குடும்பத்தினர்..
விழுந்து புரண்டு எழுந்து கதறிட்டேன்..
செவி கொடுத்து கேக்கா
கொடிய மனிதர் என்னை சுற்றி..
கொடுமைகள் உச்சம் அன்றுதானோ.??
மூட்டையை சுமந்த நான்
நால் புறமும் மறிக்கப்பட்ட
ஒரு கட்டிடத்தினுள்ள் அனுப்பபட்டேன்..
அங்கே,
இன்னும் கொடுமையடா தோழா..!!
என் தாய் என்னை..
ஐயோ.!
கொடுமையின் உச்சியில் தள்ளிவிட்டாள்..
மனதில் கொண்ட பாசமெல்லாம்
மங்கிவிட்டது தோழா.!!
மனதில் ஒருவித கோபத்துடனே சொல்லிவருகிறேன்..
'' அ-அம்மா
 ஆ-ஆடு
 இ-இலை....'' டிஸ்கி : இப்புத்தாண்டின் என் முதல் பதிவு.. மறக்காமல் அனைவரையும் வாக்கு பட்டையை தட்டவும், கருத்துகளை பதிவிடவும் வேண்டுகிறேன்.. அன்பர்கள் அனைவருக்கும் புதிய ஆண்டு சிறந்து விளங்கும்.. மகிழ்ச்சி கொள்ளுங்கள்(எப்படி எல்லாம் பேச வேண்டியிருக்கு.!!)


Comments

 1. ஒரு எஸ் எம் எஸ் ஜோக் இதே கருத்தில் எனக்கு வந்தது கூர்மதி...ஆனால் செமையா இதை ஒரு கவிதையா வடிசிட்டிங்க...பயங்கர சீரியஸ் ஆ படிச்சிட்டு வந்தேன்...கடைசி வரிகளை பார்த்து சிரிச்சுட்டேன்...

  ReplyDelete
 2. //இப்புத்தாண்டின் என் முதல் பதிவு.. மறக்காமல் அனைவரையும் வாக்கு பட்டையை தட்டவும், கருத்துகளை பதிவிடவும் வேண்டுகிறேன்.. அன்பர்கள் அனைவருக்கும் புதிய ஆண்டு சிறந்து விளங்கும்.. மகிழ்ச்சி கொள்ளுங்கள்(எப்படி எல்லாம் பேச வேண்டியிருக்கு.!!)//

  சரியான டீல் தான்...:))))

  ReplyDelete
 3. @ஆனந்தி..(மதுரை) :

  //ஒரு எஸ் எம் எஸ் ஜோக் இதே கருத்தில் எனக்கு வந்தது கூர்மதி...//

  அதெப்படி என் யோசனை எனக்கு வருவதற்கு முன்பே திருடிடுறாங்கன்னு தெரியல...(சமாளிபிகேஷன்...!)

  //ஆனால் செமையா இதை ஒரு கவிதையா வடிசிட்டிங்க...//

  உங்களபோல முடியுமா..??(டவுட்டு.!!)

  //பயங்கர சீரியஸ் ஆ படிச்சிட்டு வந்தேன்...கடைசி வரிகளை பார்த்து சிரிச்சுட்டேன்...//

  ஒரு குழந்தையின் கதறல் உங்களுக்கு சிரிப்பா இருக்கு.???(கோபம்.!!)

  ReplyDelete
 4. ////ஆனால் செமையா இதை ஒரு கவிதையா வடிசிட்டிங்க...//

  உங்களபோல முடியுமா..??(டவுட்டு.!!)//

  எனி உள்குத்து?!!...ஹ ஹ# (செம டவுட்டு..) :)))

  ReplyDelete
 5. @ஆனந்தி..(மதுரை):

  //எனி உள்குத்து?!!...ஹ ஹ# (செம டவுட்டு..) :)))//

  அதெல்லாம் இல்லீங்க.!! என்ன போய் தப்பா நினச்சிட்டீங்களே..!!(பீலிங்.!!)

  ReplyDelete
 6. நல்லாருக்கு கவிஞரே கலக்குங்க

  ReplyDelete
 7. //அதெல்லாம் இல்லீங்க.!! என்ன போய் தப்பா நினச்சிட்டீங்களே..!!(பீலிங்.!!) //

  cool :)))))))))))))

  ReplyDelete
 8. @dineshkumar:
  வாங்க சேந்து கலக்குவோம்..!!

  ReplyDelete
 9. @T.V.ராதாகிருஷ்ணன்:
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே.!!

  ReplyDelete
 10. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

  http://www.philosophyprabhakaran.blogspot.com/

  ReplyDelete
 11. @Philosophy Prabhakaran:
  வரன் வரன் வரன்... கண்டிப்பா வரன்..

  ReplyDelete
 12. எனக்காக எழுதப்பட்டதோ ?? இந்த திங்கள் தான் என் செல்லத்தை ப்ளே ஸ்கூல் சேர்த்தேன்

  ReplyDelete
 13. @எல் கே:
  ஆஹா..!! அண்ணா கொடுமைகாரர் லிஸ்ட்ல சேந்துட்டீங்களா.??? பரவால

  ReplyDelete
 14. துணீ மூட்டைய கொடுத்து தொரத்தி விட்டுட்டாங்களோன்னு கவலையோட படிச்சா...........

  நல்லா இருக்குங்க!!!

  ReplyDelete
 15. @ஆமினா: வாங்க வாங்க.. முதல் முறையா இந்த குடில எட்டி பாத்திருக்கீங்க.. நன்றி..


  //துணீ மூட்டைய கொடுத்து தொரத்தி விட்டுட்டாங்களோன்னு கவலையோட படிச்சா...........//

  எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!!!

  கருத்துக்கு ரொம்ப நன்றி..

  ReplyDelete
 16. நல்லா இருந்துச்சு

  ReplyDelete
 17. @பார்வையாளன்: பல்ல கடிச்சிட்டு சொல்றாப்புல இருக்கு.. இருந்தாலும் நீங்க வந்து மறக்காம கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி...

  ReplyDelete
 18. பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை இந்த அளவுக்கா பயப்பட வைத்திருக்கு?

  ReplyDelete
 19. @Lakshmi:முதலில் உங்களை எம்மிடத்திற்கு வரவேற்கிறேன்.. எனக்கு என் மாமா பையன ஸ்கூலுக்கு கூட்டிட்டு போற பழக்கம் இருக்கு.. பையன் இப்பதான் யு.கே.ஜி., படிக்கிறாப்புல..காலையில முகத்துல புண்சிரிப்போட போற அவர் நான் சாயங்காலம் கூட்டி வரும்போது தினக்கூலி உழைப்பாளிகளை விட படுமோசமா சோர்வா வருவாரு.. இதுல எல்.கே.ஜி.,யிலிருந்தே பசங்களுக்கு கோச்சிங் க்ளாஸ்.. இதெல்லாம் குழந்தைகள நல்ல வழிக்கு தான் கூட்டிட்டு போகுதா.. இல்லை.. இதுதான் நான் இப்படியொரு பதிவு போட்டதுக்கு காரணமான்னு கேட்டீங்கன்னா இல்லைனு தான் சொல்லுவன்.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. தங்கள் கருத்துக்கு நன்றி..

  ReplyDelete
 20. இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

  நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

  ReplyDelete
 21. http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


  ennai paathithathu ungalidam pagirgiren;

  ReplyDelete
 22. @பிரபா: வந்தேன்.. பார்த்தேன்..

  ReplyDelete
 23. @வினு: பார்த்தேன்.. வருந்தினேன்.. விகடனில் இதை பிரதிபலிக்க வாய்ப்பிருக்கா என்பதை என் தலைமை ஆசிரியரிடம் கேட்கலாம் என்றிருக்கேன்...

  ReplyDelete
 24. சீரியஸா ஆரம்பிச்சு , காமெடியா முடிச்சிருக்கீங்க..

  ReplyDelete
 25. @விஜய்: முதல்ல உங்களை வரவேற்கிறேன்.. அப்பரம் என்ன நீங்க கலாய்கிறீங்களா.??? ஃபுல்லாவே சீரியஸா தான் எழுதுனன் பாஸ்.. என்ன கொடுமை சார் அது.. இந்த கொடுமைய நீங்களும் அனுபவிச்சிருப்பீங்களே.!! அந்த கருப்பு நாள்.. இன்றும் என் கண்களில் கண்ணீர்.. என்ன படிக்கசொல்லிட்டாங்களே.!!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…