பைக்,கார் ஓட்டுவீங்களா.??? இத படிங்கப்பா...


 புதுவருடம் தொடங்கிடுச்சே இன்னும் பதிவு போடலையேன்னு யோசிச்சிட்டிருந்தன்.. அதான் ஏதாச்சும் உபயோகமா போடலாம்னு நான் இணையத்துல பாத்தத இங்க போடுறன்.. இந்த புதுவருடத்துல இம்முகவரியின் முதல் பதிவிது..

சரி மேட்டருக்கு வருவோம்..மழை காலம் நெருங்கிவிட்டாலே வண்டி ஓட்டும் அனைவருக்கும் ஒரே தலைவலி தான். அதுவும் காரில் செல்பவர்கள் கண்ணாடி துடைப்பானை(Wiper) அதிக வேகத்தில் வைத்து உத்து உத்து பாத்து ஓட்டும் போது.!!! உண்மையில் சங்கடம் தான். எதிர்வரும் வாகனங்களும் தடைகளும் கவனிக்கமுடியாமல் பலமுறை வாகனங்கள் விபத்துகுள்ளாவதை கண்டிருக்கலாம்..

சிலரை நீங்கள் கண்டிருக்கலாம்.. கொட்டும் மழையில் காரை ஓட்டிகொண்டு செல்லும்போது கண்ணாடி துடைப்பானின் வேகத்தை அதிகபடுத்திவிட்டு இன்னும் சாலை சரியாக தெரியாமல் கண்ணாடிக்கும் முத்தம் கொடுப்பது போல ஒட்டிகொண்டு ஓட்டுவர்.. இருந்தும் அவர்களின் தீராத முயற்சிகள் பலவும் தோல்விகளிலே முடியும்..


இவ்வாறு பொருட்சேதமும், உயிர்சேதமும் அதிக அளவில் ஏற்பட காரணமாக இருக்கும் இப்பிரச்சனையிலிருந்து வண்டி ஓட்டுபவர்கள் தப்பிப்பது எப்படி.???


அதிக மழையில் வண்டி ஓட்டும் போது கருப்பு கண்ணாடி போட்டுகொள்வது இந்த பிரச்சனைகளிலிருந்து விடிவு தரும். ஆம், கருப்பு கண்ணாடியை உடுத்திகொள்வதன் மூலம் எதிரில் துளி மழைகூட பொழிவதாக தெரியாது. முன்புற கண்ணாடிகளில் துளிகள் படர்திருப்பதை காண முடிந்தாலும் அது பொழிவதை காண முடியாது. இதன் மூலம் எதில் வரும் மற்றும் முன் செல்லும் வாகனங்களை நன்கு காணலாம். இது இரவு நேரத்திலும் உபயோகமாக இருக்கும்.


அதுபோல மழை பெய்யும் போது க்ரூஸ் கன்ட்ரோலை இயக்கிவிட்டு வண்டியை செலுத்தகூடாது. க்ரூஸ் கன்ட்ரோல் என்பது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்லகூடியதற்கான நியமனம். அப்படி இயக்கினால் டயர், விதி மேற்பரப்பிலிருந்து(Pavement) விலகும் போது அந்த கார் அதிகமாக வேகம் எடுத்துகொண்டு விமானம் போல மேலே எழும்பி விபத்துக்குள்ளாக நேரிடும்.


இளம் வயதினர் அதிகமாக க்ரூஸ் கன்ட்ரோலை பயன்படுத்தியே காரை செலுத்த கற்பிக்கபடுகிறார்கள். ஆனால் விதி மேற்பரப்பு ஈரமாகவோ இல்லை பனியால் சூழப்பட்டிருந்தாலோ இதை பயன்படுத்த கூடாது என்பதை யாரும் கற்பிப்பதில்லை. அதனால் காய்ந்த விதி மேற்பரப்பில் செல்லும்போதே க்ரூஸ் கன்ட்ரோலை பயன்படுத்திட வேண்டும்.

சில வண்டிகள் முன்புற கண்ணாடி துடைப்பான் இயங்கும்போது க்ரூஸ் கன்ட்ரோலை இயங்க விடுவதில்லை. இதுபோல மீதமிருக்கும் வண்டிகளிலும் வைக்கப்படால் ஒரு சிறய இழப்பாவது காப்பாற்றபடும்.


Comments

 1. எனக்கு இதுபற்றியெல்லாம் ஒரு மண்ணும் தெரியாது... இருப்பினும் இந்த வார்த்தை பிடித்திருந்தது :- // தெரிந்துகொள்வோம் தெரியாததை..//

  கருப்பு - வெள்ளை படம்தான் காட்டுவீர்களா... வலைப்பூவை வண்ணமயமாக அலங்கரிக்கலாமே...

  ReplyDelete
 2. @Prabha: கருத்துக்கு நன்றி.. இதை பற்றி உங்ளுக்கு ஒண்ணுமே தெரியாது என்பது ஆச்சர்யமாக உள்ளது..

  கறுப்பு-வெள்ளை எனக்கு மிகவும் பிடித்த வண்ணம்.. என் கனவு வீடும் கருப்பு-வெள்ளை கலவை தான்.. என் பைக் கருப்பு என எல்லாமே கருப்பு.. வண்ணமயமாக இருப்பது எனக்கு அவ்வளவாக பிடிக்காது.. இன்னும் இருவர் சொன்னால் மாத்திடலாம்.. என்ன சொல்றீங்க.???

  ReplyDelete
 3. கறுப்பு வெள்ளை படம் எனக்கு பிடித்து இருக்கிறது..

  மனதை சிதறடிக்கவிடாமல் , கருத்தை சொல்ல இது சக்தி வாய்ந்தது..

  ReplyDelete
 4. @பார்வையாளன்; நீங்கள் என் இனம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 5. உங்கள் வலைப்பூவே ஒரு மார்க்கமாத்தான்யா இருக்கு!

  ReplyDelete
 6. கருப்பு வெள்ளையும் நல்லாத்தான் இருக்கு, ஒரு ஆண்டீக் ஃபீல்......!

  ReplyDelete
 7. @பன்னிக்குட்டி ராம்சாமி:

  வாங்க வாங்க..

  //உங்கள் வலைப்பூவே ஒரு மார்க்கமாத்தான்யா இருக்கு!//

  என்னாது.. மார்கமா இருக்கா...???


  //கருப்பு வெள்ளையும் நல்லாத்தான் இருக்கு, ஒரு ஆண்டீக் ஃபீல்......!
  //

  ஓ அதுவா... சரி சரி..

  ReplyDelete
 8. Yeah...

  Its really true... And the big coincidence is that...

  I was told the information recently by Queensland Police...

  "Please wear sunglasses to see clearly during rainy days"

  Cool...

  ReplyDelete
 9. @அரவிந்த்:ம் ம்.. சிறப்பு.. நன்றி அரவிந்த்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி