Skip to main content

எட்டு வயசு பையன இப்படியா கொடுமைபடுத்துவது.???

வேலைய முடிச்சிட்டு உக்காந்திருக்கிற நேரத்துல நம்ம முன்னாடி இருக்கிறது நம்ம கம்ப்யூட்டர் தான். நான் அதிகமா யூஸ் பண்றது ஆர்குட், பேஸ்புக், டிவிட்டர் அப்பரம் ப்ளாக்.. கண்டமேனிக்கு மானாவாரியா மாத்தி மாத்தி சாட்டிங், டிவிட்டிங், ப்ளாங்கிங்னு போற சமயத்துல தோழி தமிழச்சியோட பேஸ்புக் அப்டேட்ஸ்ல இந்த கொடுமைய பாத்தன்.. மனசு ரொம்ப வலிக்கிது..


இந்த விசயம் 2005ல நடந்ததா இருந்தாலும் இப்ப தான் எனக்கு தெரிஞ்சிது.. அது என்னனா எட்டு வயசு பையன் கையில கார ஏத்துனது தான்.. அதுவும் எதுக்கு தெரியுமா.??? பசியால பையன் ப்ரட்ட திருடிட்டானாம், இனி அப்படியொரு விசயம் பண்ணகூடாதுன்னு அதிபுத்திசாலிகள் தங்கள் மூளையை தட்டி யோசித்து இப்படியொரு காரியத்தை செய்துள்ளனர்..


பிஞ்சு முகத்தினை கண்டிட்டேனடா தோழா.!!
அதன் மழலை மறையுமுன்னே
அவனை மங்கசெய்திட்டாரே.!!
பசிக்கொடுமை பெரியதா.?
இங்கு நடந்திடும் கொடுமை பெரியதா.?
மனசு பொருக்கதில்லையே மானிடா
பொங்கி எழுந்திடடா..
பிஞ்சு பருவத்திலே,
அவன் வாழ்வில் நஞ்சை கலந்திட்டானடா..
நீ காணும் கோடானகோடி இன்பம்
இவன் வாழ்வில் கொஞ்சிட மறுத்ததேனடா.?
இன்னும் கொதிக்குதே கைகள்..
என்ன செய்ய என் வரிகள் முடியவில்லையே.!!!


இது நடந்தது ஈரான்ல.. அந்த பயலுகள பாத்து கேக்குறன் பையன கொடுமை படுத்துர இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா போச்சா? இதுக்கு பெயர் தண்டனையா.?


இப்படியெல்லாம் என் மனசுல பெரிய பெரிய கோபம் வந்தது.. ஆனா ஒரு நிமிசம் நிதானமா யோசிச்சு பாத்தன்.. மனிதர்கள் இப்படி செய்வார்களா.? அப்படியே செய்தாலும் ஒருவர் புகைபடம் எடுக்க அனுமதிப்பார்களா.?இதுல முதல் படத்த பாத்தீங்கன்னா அந்த பக்கத்துல இருக்கிறவர் மைக் கையில வச்சிருக்கார்.. அந்த பையனோட கைக்கு கீழ போர்வை இருக்கு.. தண்டன கொடுக்கிறவங்க போர்வை போத்தி நல்ல பாதுகாப்பாவா தண்டனை கொடுப்பாங்க.? 


அப்படினா இது அந்த பையனோட சாதனையா இருக்குமோ.?? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.. அப்படி இது சாதனையாகவே இருந்தால் இது மாதிரி தப்பா போடுற தளத்தில இருந்து ஜாக்கிரதையா இருங்க..

அந்த தளம் எதுன்னு பாக்குறீங்களா.. http://www.lindasog.com/archives/2005/11/know_your_enemy.html

நம்ம தமிழச்சி தளம்..

டிஸ்கி: நாங்க இன்வஸ்டிகேட் பண்ணுவோம்ல.. விஜயகாந்த் ரசிகர்னு ப்ரூவ் பண்ணிட்டோம்ல.. 

Comments

 1. பாஸ் ரொம்ப குழப்பறீங்க.....

  ReplyDelete
 2. @பாரி;முதல்ல உங்களோட முதல் கருத்த பதிவு செஞ்சதுக்கு கைய கொடுங்க.. அப்பரம் கொழம்புன உங்கள தெளிவுபடுத்துறது என் வேலை.. தமிழச்சினு ஒரு தோழி ஒரு லிங்க் போட்டிருந்தாங்க.. அத பாத்தப்போ அதுல ஒரு 8 வயசு பையன் கைல கார் ஏத்தி தண்டனை கொடுத்ததா இருந்துச்சு.. முதல்ல பயங்கர கோபம்,ஆத்திரம் வந்துச்சு.. அப்பரம் யோசிச்சு பாத்து பதிவுல ஒரு சில கேள்வி கேட்டிருந்தன்.. அது அந்த பையனோட சாதனையா இருக்குமோன்னு ஒரு டவுட்டு..? இதுதான் மேட்டர்.. வேற ஒண்ணுமேயில்ல.. நடுவுல கோபத்துல சரளமா வந்த வரிகள எழுதினன்.. இப்ப ஏதாச்சும் புரியுதா.?? இல்ல இப்பவும் குழப்பமா தான் இருக்கா..???

  ReplyDelete
 3. எனக்கு தெரிந்தவரையிலும் அது சாதனைதான்

  ReplyDelete
 4. சுத்தி வேடிக்கை பாக்குறவங்க ஒருத்தருக்கு கூடவா மனசுல ஈரம் இல்லாமல் போகும். இது அந்த சிறுவனின் சாதனை தான்

  ReplyDelete
 5. @அப்துல்:நானும் அப்படியே நினைக்கிறேன்..

  ReplyDelete
 6. @மூர்த்தி; கண்டிப்பாக அப்படியாக தான் இருக்கும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 7. ஒன்னும் புரியலை மறுபடியும் பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. தாங்கள் என்று புத்தக கண்காட்சி வருகிறீர்கள். தெரியப் படுத்தவும்

  ReplyDelete
 9. @எல்.கே: இதில் கருத்தை சரிவர நான் பதிவுசெய்யவில்லை என நினைக்கிறேன்.. இனி திருத்திகொள்கிறேன்..இதுவரை மூன்று முறை இப்புத்தக கண்காட்சிக்கு சென்று வந்துவிட்டேன்.. இருப்பினும் பொங்கல் மற்றும் பத்திரிக்கை பணி வேலைகள் இன்னும் மித்தம் அதிகமாக இருப்பதால் 16ம் தேதி மீண்டும் செல்லலாம் என முடிவெடுத்துள்ளேன்.. இம்முறை பதிவுலக நண்பர்களை முடிந்தவரையில் அழைப்பேன்.. கண்டிப்பாக உங்களையும் அழைப்பேன்.. மறுப்பு கூறாமல் வருவீ(வா)ர்கள் என நம்புகிறேன்..

  ReplyDelete
 10. எனக்கும் இது சாதனை அல்லது..ஏதோ சினிமா ஷூட்டிங் மாதிரி கூட தெரியுது கூர்மதி...சாதனை நாள் அந்த பையன் என்ஜாய் பண்ணி செய்வான்...இது ஏதோ ஷூட்டிங் மாதிரி எனக்கு தோணுது...

  ReplyDelete
 11. @ஆனந்தி: வாங்க வாங்க.. இது ஷீட்டிங்கா இருந்தா இத சொல்லிபுட்டு அந்த மைக் புடிச்ச மகராசன் ஓடியிருப்பான்.. ஆனா அவன் அவன் பக்கத்துலேயே நிக்கிறான் பாருங்க.. நீங்க சொல்றமாதிரி சாதனைய என்ஜாய் பண்ணி பண்ணனும்னா அது சாப்புடுற சாதனையா இருந்தா சரி.. இது அப்படியா..??? கார கையில ஏத்தும்போது என்ஜாய்.??? ஐயோ.!! காமெடிங்க நீங்க...

  ReplyDelete
 12. உண்மை தான் கூர்மதி...இப்பவும் ஒரு வாட்டி பார்த்தேன்..சாதனையா இருக்கலாம்..ஆனால் கராட்டே சாதனை எல்லாம் பார்த்துருக்கேன்..இவளவு செட் up பண்ணி..மைக் இல் ஆளு பக்கத்துலையே கைட் பண்ணி சொல்றமாதிரி பார்க்கல..ம்ம்...இன்னும் கொஞ்சம் குழப்பம் தான்...என்னனு உங்களுக்கு சரியா தெரிஞ்ச பிறகு சொல்லுங்க..ஆனால் இது கட்டாயமா தண்டனை எல்லாம் இல்லை...:)) நன்றி பாஸ்..:)))

  ReplyDelete
 13. @ஆனந்தி: நன்றி தோழி.. தெரிஞ்சா கண்டிப்பா சொல்றன்..

  ReplyDelete
 14. தெரிஞ்சா கண்டிப்பா சொல்றன்."

  சீக்கிரம் சொல்லுங்க

  ReplyDelete
 15. @பார்வையாளன்:
  //சீக்கிரம் சொல்லுங்க//

  சொல்றன்.. சொல்றன்.. தெரிந்தால் கண்டிப்பாக சொல்வான் இந்த தம்பி..

  ReplyDelete
 16. எல்லோருக்கும் ஒரு சந்தோசமான விசயம்.. முதல்ல ஆனந்தி என்னை மன்னிக்கனும்.. ஆனந்தி மேடம் ஆனந்தி மேடம் இது ஷுட்டிங் தாங்கோ.. "Maareke giry"ன்டு அவுக நாட்டுல ஒரு டிவி ப்ரோக்ராமு.. அதாவது தெரு மேஜிக்.. பசியால வாடுற இந்த பையன் காசுக்காக வேண்டி இதுல கலந்துகிட்டான்.. பையன் கைக்கு ஒண்ணும் ஆகல.. இந்த ப்ரோக்ரம எடுத்தவர் இத அவர் நண்பருக்கு மெயில் அனுப்ப, அவர் கீழே கொடுத்திருந்த கேப்ஷனை தவறாக புரிந்து கொண்ட நண்பர் அதை தண்டனை என மெயில் பண்ணிவிட்டார்.. இதாங்கோ நடந்தது.. இது தண்டனை இல்ல.. ஷுட்டிங்கோ.. எல்லாரும் கேட்டுகிட்டீங்களா.. இது ஜுட்டிங்..

  ReplyDelete
 17. தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 18. ஞாயிறு கஷ்டம் தம்பி. அது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட நாள்

  ReplyDelete
 19. //ஷுட்டிங்கோ.. எல்லாரும் கேட்டுகிட்டீங்களா.. இது ஜுட்டிங்..//

  சரிங்கோ

  ReplyDelete
 20. @பார்வையாளன்: அது என் கடமை..

  ReplyDelete
 21. @எல்.கே.: ஓ.. குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்ட நாளில் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. ஆனால் புத்தக பொங்கல் அன்று கூட என்னை ஒரு கிராமத்துக்கு போக சொல்லி ஆபிஸ்ல சொல்லிட்டாங்க.. டைட் ஆ இருக்கு.. முடிந்த வரையில் நேரம் பார்க்கிறேன்...

  ReplyDelete
 22. அநியாயம்..அரக்கர் ஆளும் தேசமா அது..??

  ReplyDelete
 23. @சிவக்குமார்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நீங்கள் கொஞ்சம் கமெண்டுகளையும் படித்தால் இன்னும் உண்மைகள் விளங்கும்..

  ReplyDelete
 24. சிறுவனின் முகம் வன்செயலின் வலியை உணர்த்துவதாகவே உள்ளது நண்பரே..தத்ரூபமான நடிப்பு!!

  ReplyDelete
 25. @சிவக்குமார்: இருக்கலாம்.. எனினும் உங்களுக்கு வந்த கோபம் இதை கண்டவுடன் எனக்கும் வந்தது.. உண்மை தெரிந்தவுடன் சிரித்துகொண்டேன்...

  ReplyDelete
 26. ஓகே..ஓகே...ம்ம்...சொன்னால் ஒத்துகிறது இல்ல..ஆயிரம் வியாக்கியானம்..:))))))

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…