கருவரையும்! கல்லறையும்!


அய்யோ!
கொடியதோர் இருட்டு...
பதறிதே என் மனம்...
பயந்த நெஞ்சோடு
அழுகும் முகத்தோடு
பிரிந்தேன்-அந்த இருட்டறையை...
அது--என் தாயின் கருவறை...

வெளிச்சம் கண்ட என் கண்கள்
முகத்தில் சிரிப்பை தோன்றச் செய்தது.
பாரத்தேன்! உற்றுப் பார்த்தேன்!
உணர்ந்துகொண்டேன்- இது நாடகம்.
இதுவே உண்மை இருட்டு...
கொடுமையான நெஞ்சங்கள்,
உறுதியில்லா மனிதர்கள்,
உணர்ச்சியற்ற இளைஞர்கள்,
பழமை மறந்த பெண்கள்,
என எல்லாமே இருட்டாகிறதே!

புரிந்து கொண்டேன்-
உண்மையான இருட்டெது
ஒளியெது என்று...

நான் செல்லமுடியுமா-
                       நான் உருவான,
                       நான் விரும்பாத,
                       நான் புரிந்து கொண்ட
                       தாயின் கருவரைக்கு???
                       முடியாது...

மாற்ற எண்ணி செயல்பட்டேன்-
                       என் இருட்டை ஒளியாக்க...

ஆனால்,
என்னை மறித்துவிட்டனர்,
இப்போ புதைத்துவிட்டனர்...

மகிழ்ச்சிதான்,
தாயின் கருவறையும்,
கடைசி கல்லறையும் தான்
நிம்மதி தரும் ஒளியாக உள்ளது...

வரமாட்டேன்,
மீண்டும் அவ்வொளியிலா உலகிற்கு-நான்
கூறியன மாறும் வரை...

உறுதிகொண்டேன்,
கடைசிவரை இந்நிம்மதி
கல்லறையை பிரியமாட்டேனென...

டிஸ்கி 1: வேலை பளுவால் என்னால் தனிமை கொள்ள முடியவில்லை.. அதனால் என் சிறிய மூளைக்கு ஒன்றும் தோணவில்லை.. நான் என் பதிவுலக தோழி ஆனந்தி போல் பிறக்கும் போதே கவிஞனாக பிறக்கவில்லை பாருங்க.. அதனால் என் பழைய கவிதைகளில் பிடித்த ஒன்று உங்கள் பார்வைக்கு..

டிஸ்கி 2: நண்பன் ஒருவன் இறந்தபோது அவனை கல்லறையில் பதிக்கும்போது மனதில் எழுந்தவை..

Comments

 1. @சக்தி: நன்றி நண்பரே.!! வருகைக்கும்.. கருத்துக்கும்..

  ReplyDelete
 2. kkarun09 - ன்னு ஓட்டு போட்டது நான்தானுங்கோ..

  ReplyDelete
 3. @அருண்: மாத்திகிட்டன் நண்பரே.!! உங்கள் கூவல் பெயர் தவறு என்பதை விளங்கவைத்துவிட்டது.. அப்பரம் அந்த ஓட்டு.. அதான் நீங்க போட்டீங்களே.. அதுக்கு ரொம்ப நன்றி..(எப்படி எப்படியெல்லாம் தெளிவுபடுத்துறாங்கய்யா.!!!)

  ReplyDelete
 4. ///மகிழ்ச்சிதான்,
  தாயின் கருவறையும்,
  கடைசி கல்லறையும் தான்
  நிம்மதி தரும் ஒளியாக உள்ளது...//

  என்ன ஒரு அற்புதமான வரிகள்..இது தான் நிஜம் கூர்மதி...

  ReplyDelete
 5. /நான் என் பதிவுலக தோழி ஆனந்தி போல் பிறக்கும் போதே கவிஞனாக பிறக்கவில்லை பாருங்க..//

  ஹ ஹ...ஏன் இந்த கொல வெறி...:)) நல்லா கலாய்ச்சிங்க பாஸ்...:))

  ReplyDelete
 6. வரிகள் பேசுகின்றன நண்பரே அருமை வெளிச்சமில்லா மனது விடியல் காண பாதை நோக்கி பயணம் தொடர்ந்துகொண்டே .....

  ReplyDelete
 7. @ஆனந்தி:சீக்கிரமா வந்துட்டீங்க.!!! பேஷ் பேஷ்.. இப்ப இப்படி பேசினாலும் இத எழுதும்போது.. கண்கள்.!!! சொல்லமுடியவில்லை.. என் மனதிடம் கேட்டால் தெரியுமோ என்னவோ..

  'ஏ மனமே எப்படி இருந்தது இதை எழுதும் போது..??'

  'போயா.. உனக்கு வேற வேலையே இல்ல.. மனச கேக்குறன் மனச கேக்குறன்னு அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணிகிட்டு..'

  ஸாரி.. மனசு அண்டர் கன்ஸ்ட்ரக்ஷ்ன்..

  ReplyDelete
 8. /நான் என் பதிவுலக தோழி ஆனந்தி போல் பிறக்கும் போதே கவிஞனாக பிறக்கவில்லை பாருங்க..//

  ஹலோ.. நான் கலாய்கல.. நீங்க தான் என்ன கலாய்கிறீங்க.. நான் உண்மைய சொன்னன்...

  ReplyDelete
 9. @தினேஷ்: நீங்களுமா தேடுறீங்க.??? வரீங்களா ஒண்ணா சேந்து தேடுவோம்..??? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...

  ReplyDelete
 10. //நான் என் பதிவுலக தோழி ஆனந்தி போல் பிறக்கும் போதே கவிஞனாக பிறக்கவில்லை பாருங்க..//

  ஹலோ.. நான் கலாய்கல.. நீங்க தான் என்ன கலாய்கிறீங்க.. நான் உண்மைய சொன்னன்... //

  ha ha...

  ReplyDelete
 11. இரட்டையும் தாயின் கருவறை, கல்லறை இப்படி ஒப்பிட்டு பார்த்ததில்லை

  அருமையான வரிகள்.

  ReplyDelete
 12. @தொப்பி தொப்பி: ரொம்ப நன்றி தலைவா.! வந்து எட்டிபாத்ததோட கருத்தையும் சொன்னதுக்கு தேங்க்ஸ்..

  ReplyDelete
 13. //மகிழ்ச்சிதான்,
  தாயின் கருவறையும்,
  கடைசி கல்லறையும் தான்
  நிம்மதி தரும் ஒளியாக உள்ளது...//


  அப்பட்டமான உண்மை

  ReplyDelete
 14. @இந்திரா: வாங்க வாங்க வாங்க.. முதல் முறையா வர்றீங்க போல.. வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி ..

  ReplyDelete
 15. //: நண்பன் ஒருவன் இறந்தபோது அவனை கல்லறையில் பதிக்கும்போது மனதில் எழுந்தவை..//
  :(

  கவி வரிகள் அருமை

  ReplyDelete
 16. @ஆமினா: நன்றிகள் தோழி.. வருகைக்கும் கருத்துக்கும்..

  ReplyDelete
 17. ஆரம்பமும் அமைதி. முடிவும் அமைதி . நடுவில் ஏன் இத்தனை சிக்கல்கள் ? யோசிக்க வைத்தது கவிதை

  ReplyDelete
 18. @பார்வையாளன்: என் எழுத்துகளை படித்து ஒருவர் யோசித்தால் அது எனக்கு வெற்றியே.!!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 19. பிடிச்சிருக்கு... அதுக்காக கல்லறைக்கு வான்ட்டடா போய் படுத்துக்க முடியாதே...

  ReplyDelete
 20. @பிரபா: நீங்க கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாதீங்க... நான் வேணா உங்களுக்கு உதவவா.???

  ReplyDelete
 21. @நாஞ்சில் மனோ: புதுசா வந்திருக்கீங்க சந்தனம் எடுத்துக்கோங்க(இல்லனு கேக்க கூடாது.. உங்க வீட்ல இருந்தா எடுத்துக்கோங்கன்னு சொன்னன்)... அப்பரம் உங்க கருத்து அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்...

  ReplyDelete
 22. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

  என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

  ReplyDelete
 23. @பிரபா:நன்றி.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.. சுவைத்தேன்..

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் அருமையாயிருக்கு... சகோதரம்..

  ReplyDelete
 25. @ம.தி.சுதா: முதல் முறையாக காலடி எடுத்துவைத்ததற்கு நன்றிகள்.. மேலும் வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.!!!

  ReplyDelete
 26. மச்சி லேபிளில் கவிதைன்னு போட்டு இர்ருகே அதை எங்கிட்டு போஸ்ட் பண்ணி இர்ருகே

  ReplyDelete
 27. @வினு:
  //மச்சி லேபிளில் கவிதைன்னு போட்டு இர்ருகே அதை எங்கிட்டு போஸ்ட் பண்ணி இர்ருகே//

  அதுவா மச்சி.. எவன் காலையில குளிச்சானோ அவனுக்கு மட்டும் தான் என் கவிதை தெரியும்..

  ReplyDelete
 28. இனி குறிப்பிட்ட நாளுக்குள் பதிவு போடாவிடில் அவர்களது புளொக் தடை செய்யப்படுமாம்...


  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

  ReplyDelete
 29. அருமையான வரிகள். எனக்கும் எதேதோ நியாபகப்படுத்திவிட்டீர்கள்

  வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

  ReplyDelete
 30. @ம.தி.சுதா:
  //இனி குறிப்பிட்ட நாளுக்குள் பதிவு போடாவிடில் அவர்களது புளொக் தடை செய்யப்படுமாம்...
  //

  ஏன் இந்த கொலைவெறி.??? ஆர்டர் வந்துடுச்சு.. எஸ் சார்.. போட்டுடுறன் சார்(பதிவு).. ஆமாங்க சார்..

  ReplyDelete
 31. @கவிதை காதலன்:
  //அருமையான வரிகள். எனக்கும் எதேதோ நியாபகப்படுத்திவிட்டீர்கள்//

  ஏதேதோ என்று சொல்லாதீர்கள்.. மேலே வினுன்னு ஒருத்தர் கமெண்ட் போட்டிருக்கார் இல்லையா.. அவரு விவகாரமா ஏதாச்சும் கேப்பார்..!!! இருந்தாலும் என் ப்ளாக்குக்கு வந்த உங்க ஒரே மன தைரியத்தை பாராட்டி எனது நன்றிகள்...

  ReplyDelete
 32. வினுகிட்ட நம்மளைப்பத்தி கேட்டுப்பாருங்க தலைவா..

  ReplyDelete
 33. @கவிதை காதலன்: உங்க ப்றாக் பக்கம் வந்தப்பவே தெரிஞ்சிடுச்சு.. வினு உங்க கூட்டாளின்னு.. நடத்துங்கப்பா நடத்துங்க...

  ReplyDelete
 34. உண்மையான வரிகள்..

  தாயின் கருவறை தந்த பாதுகாப்பு வேறெதிலும் இல்லை... நிகழ் கால நிர்பந்தங்கள்.... நிழல் போல் நம்மை துரத்தும்... உண்மை தான்..

  நல்ல பகிர்வுங்க..!! :)

  ReplyDelete
 35. @அன்புடன் ஆனந்தி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.. தொடர்ந்த வருகையை எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!