Skip to main content

அவர் அவனானது எப்படி???


காணும் நாள் அனைத்தும்
காட்சிபிம்பம் பலகோடி..
பிம்பத்தின் ஒளிநிழலை
மறவாது கொண்டிருக்க
அதில்,
மயக்கம் கொண்டிருக்க வேண்டும்..

இயற்கை பிம்பமும்
இனிய குழந்தை பிம்பமும்
மனதில் திளைட்டித்தடா.!!
மாற்றான் பிம்பம் விரும்பா நான்
இன்று,
அந்த மாமனிதரின் பிம்பத்தை
மனதில் புகுத்தியுள்ளேன்..

உன்னத கருத்து பலகொண்டு
என்னை உயர்வு படுத்தும் உன்னதமானவர்
கண்ணில் கொண்ட கனவை
கண்முன்னே காட்டும் வழிகாட்டி
என எண்ணியவெல்லாம் உயர்வாக
அவரை மெய்மறந்து கவனித்தேன்..
அவரின்,
கருத்தை உணர்ந்த நான்
வாழ்க்கையை உணரவில்லை..

அத்தருணத்திலே,
அவர் செய்த அச்செய்கை
என் எண்ணங்கள் முழுதையும்
பொய்களின் கூடாரமாக்கியதே.!!!

பிடிமானமான தூணில்
நான் பிடியிழந்து வீழ்ந்தேனே.!!!
மறித்து நிற்கும் சுவரில்
மண்டையை முட்டி முட்டி வலித்தேனே.!!
நானா இப்படி.???
மனம் என்னை நச்சரித்ததே.!!!

அன்று.....
நான் விரும்பும் மனிதர்
சுயவாழ்வில் எப்படியென
சிந்திக்கும் மூளைக்கு
சித்திரம் படைத்திட
அவர் பூட்டியவீட்டை நெருங்கிட்டேன்..

அண்டைவீட்டு சத்தம்
அந்த ரயில்வே 'சப் வே' திறப்புவிழாவுக்கு
என்னை வழிநடத்தி சென்றிட்டது..

நான் மதிக்கும் மனிதர்
திறப்பு விழாவின் கட்சி தலைவர் விரும்பியா.???
பத்திரிக்கை துறை ஞானியாக
நுணுக்கம் கவனிக்க வந்திருப்பாரோ.???
பதிவுலகின் எழுத்தராக
பதிப்பு எடுக்க வந்திருப்பாரோ.???
விந்தைகள் மனதில் எழ
ஆர்பரிக்கும் கூட்டதில் முட்டி மோதி தேடினேன்...
கூட்டத்தின் பிக்பாக்கெட்,
கூச்சல் கோஷ மனிதர்கள்
என கண்முன்னே ஆயிரம் விசயங்கள்...
ஆனால்,
அவரை மட்டும் காணவில்லை..


எங்கே தேடியும் கண்கள்
அவர் பாதையை கணக்கிடவில்லை..
அச்சமயத்தில்,
பலத்த கரகோஷம் எழும்ப
கூச்சல் காதடைக்க
அந்த 'சப் வே' திறக்கப்பட்டது..
கூட்டத்தோடு கூட்டமாக உள்தள்ளப்பட்டேன்..

வெளியில் பேண்ட்
மத்தளம், தாளம் என களம்கட்ட
உள்ளே எங்களை வரவேற்த்தது
நான் மதிக்கும் அவரின்
வாழ்த்து செய்திகளே.!!!
சற்று முன்னே திறக்கப்பட்ட
'சப் வே'யின் உள்ளே
அவர் உன்னதமாக வரவேற்றார்,
'அய்யா.. அம்மா.. பிச்சைபோடுங்களேன்..' என்று...
அவனது பிம்பம் இனியும் மறக்குமா.???

டிஸ்கி 1: இதுவரை நான் எழுதிய எல்லா பதிவுகளும் எழுத்துரு சரியாக அமையவில்லை.. எல்லா கணிணியினாலும் படிக்கமுடியவில்லை என எனது அலுவலக நண்பர் மூலம் தெரிந்தேன்.. நான் உபயோகிக்கும் எழுத்துரு பல கணிணியில் சப்போர்ட் செய்யாது என்றார்.. அதன் படி இம்முறை எழுத்துருவை மாற்றிவிட்டேன்.. என்னடா நம்ம பதிவுக்கு வரவேற்பே இல்லையேன்னு பாத்தா இதுதான் காரணமா.???

டிஸ்கி 2: படத்தின் அர்த்தம் சொல்லி புரியவேண்டாம்.. இருந்த்தாலும் சொல்கிறேன்.. "மூஞ்சில கரிய பூசிட்டான்"

Comments

 1. //படத்தின் அர்த்தம் சொல்லி புரியவேண்டாம்.. இருந்த்தாலும் சொல்கிறேன்.. "மூஞ்சில கரிய பூசிட்டான்"//

  புரிஞ்சுடுச்சு...புரிஞ்சுச்சு...

  ReplyDelete
 2. @ஆமினா:என் கஷ்டத்த எப்படியோ புரிய வச்சிட்டன் ரொம்ப சந்தோசமா இருக்கு.. இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம்(பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலே) எவ்வளவு லேட்டானாலும்(மணி 11.43) என் சோகத்த புரிஞ்சிகிட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி...

  ReplyDelete
 3. யாருங்க அந்த துரோகி....?

  ReplyDelete
 4. ஏதோ பெரிய உள்குத்து கவிதை மாதிரி தெரியுதே...:))

  ReplyDelete
 5. //இனிய குழந்தை பிம்பமும்
  மனதில் திளைட்டித்தடா.!!//

  அதென்ன புலவரே திளைட்டித்தடா?? திளைத்ததடா னு போட்டால் பெட்டெர் ஆ இருக்குமோ??? இல்ல...ஒருவேளை எனக்கு தான் தமிழ் மொழி கோளாறுனு நினைக்கிறேன்...:))

  ReplyDelete
 6. machchi kovichchukkaathea onnumea piriyaleaa

  ReplyDelete
 7. @பிரபா: அவன் தான் துரோகியாச்சே.. அவன பத்தி இங்க ஏன் பேசிகிட்டு.. உடுங்க.. ஐ ஆம் க்ரையிங்..

  ReplyDelete
 8. @ஆனந்தி: உள்குத்தெல்லாம் இல்லைங்க.. உண்மையில ஒரு சப் வே துரந்திட்டு உள்ள போன ஒரு கட்சி பிரமுகர் பிச்சைகாரனா பாத்து அதிர்ந்துட்டாராம்.. இப்ப தான்டா துறந்தேன்.. அதுகட்டியுமான்னு நினச்சிகிட்டதா அவர் என்கிட்ட ஒரு தடவ பேசும்போது சொன்னார்.. அத தான் கொஞ்சம் கற்பனையோட நிகழ்கால நண்பன் ஒருவனை மனதில் வைத்துகொண்டு எழுதினேன்..

  //திளைட்டித்தது//

  இப்படி சொல்லும்போது ஒரு அழுத்தம் கிடைக்கிறதா எனக்குள்ள ஒரு எண்ணம்.. ஏன்னா எனக்கு குழந்தைகள்னா அவ்வளவு பிடிக்கும்.. ஒவ்வொரு செய்கையும் ஒவ்வொரு காவியம்.. ஒவ்வொரு பேச்சும் ஆயிரம் ஆத்திச்சூடி(என்ன அடிக்கும் போது தான் வலி தாங்கல).. உங்களுக்கு தமிழ்லொரு கோளாறும் இல்ல(கடுப்பேத்துறாங்க மை லார்ட்..)..

  உளுகுத்துன்னு நீங்க சொன்னது கூட எனக்கு பெரிய விசயமா தெரியல.. இருந்தாலும் கவிதைன்னு சொன்னீங்களே ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஏன்னா.. நான் எழுதுறது கவிதையான்னு எனக்கு பல நேரங்கள்ள டவுட்டு இருந்துச்சு.. அதுனால தான் முதல்ல எழுதும்போதெல்லாம் கவிதைன்னு போட்டிருக்கமாட்டேன்.. இப்போ எல்லாத்தலயும் மாத்திட்டன்.. அதிக பேர் கவிதை நல்லாயிருக்குன்னு சொல்றத கேட்டதுக்கப்பறம் நான் எழுதுறது கவித மாதிரிதான் இருக்குபோலன்னு ஒரு தைரியத்துல தான் கவிதைன்னு போட்டுட்டன்...

  ReplyDelete
 9. @நாஞ்சில் மனோ: என்ன ஒருத்தன் கடுப்பேத்திருக்கான் அது உங்களுக்கு சூப்பர் வேறயா.. உங்க பேச்சி
  'டூ கா'

  ReplyDelete
 10. @வினு: எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுதிட்டா நான் கவிஞனாயிடுவன் டா.. உனக்கு புரியறத விட புரியாம இருக்கிறதே நல்லது.. புரியறது புரியாம இருக்காது புரியாம இருக்கிறது புரியாது..

  ReplyDelete
 11. அட என்ன கூர்மதி இப்படி சொல்லிட்டிங்க...தன்னடக்கம் இருக்க வேண்டியது தான்...அதுக்காக இவ்வளவு இருக்க கூடாது புலவரே..உங்கள் கவிதை எல்லாம் எக்ஸ்ட்ராடினரி கூர்மதி...நீங்கள் உபயோக படுத்தும் அற்புதமான மொழி வீச்சு எல்லாம் கிரேட்...என்ன இந்த கவிதை தான் கன்டென்ட் புரியாமல் முழுசாய் ரசிக்க முடியல..வரிகள் அழகாய் பிரயோகபடுத்தி இருந்தும் கூட:(((

  ReplyDelete
 12. @ஆனந்தி: நீங்களே சொல்லிபுட்டீங்கன்னா நான் ஒத்துகிடவேண்டியது தான்.. ஆனா புலவர்லாம் ஓவர்... எனக்கு ஏற்பட்ட சந்தேகம் வலுவடைய காரணம் போன பதிவுல நண்பர் வினு இது கவிதையான்னு கேட்டிருந்தார்.. அவர் விளையாட்டாக கேட்டிருக்கலாம்.. இருந்தாலும் என் மனசுல தோணுனத கேட்டதால ஒரு சஞ்சலம்.. அப்பரம் இந்த கவித எழுதின எனக்கே புரியல, உங்க எல்லாருக்கும் புரியனும்னா எப்படி.???

  ReplyDelete
 13. எல்லாருக்கும் இக்கவிதை விளக்கம்.. ஒவ்வொரு பத்திக்கும் தனிதனியாக..

  1.ஒண்ணு மனசுல அழுத்தமா பதியனும்னா அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கனும்..

  2.இயற்கையும்,குழந்தையும் என் மனதில் இருக்கும் ஆனா மத்த மனுசனுங்கள மனசுல வச்சிருக்க விரும்பல.. ஆனா அவர மட்டும் மனசுல வச்சிகிட்டன்..

  3.அவர் பேசுவது எனக்கான சிறந்த வழிகாட்டியாக காட்டியது.. ஆனா அவரின் வாழ்க்கையை நான் புரிந்துகொள்ளவில்லை..

  4.அப்ப அவர் செய்தது எனக்கு கஷ்டத்த கொடுத்தது.

  5. படத்துல காட்டுறாப்புல தூண்ல சாஞ்சு விழுந்தன், சுவத்துல முட்டிகிட்டன்.. என்ன நினச்சு நானே வருத்தபட்டன்..

  6.அது என்ன மேட்டர்னா,அவர் பர்சனல் லைஃப் அறிய வீட்டுக்கு போனா வீடு போட்டியிருந்தது.

  7.பக்கத்து வீட்டுகாரங்க சப் வே திறப்பு விழாவுக்கு போயிருக்கிறதா சொல்ல அங்க போனன்..

  8.அவரு எதுக்கு இங்க வந்தாரு.. திறப்பு விழாவுக்கு வந்த கட்சி தலைவர் தொண்டரா இருப்பாரா..??? நிருபர்,பதிவரா இருப்பாரான்னு யோசிச்சுகிட்டே தேடும்போது பிக்பாக்கெட், வாழ்க ஒழிக கோஷம் போடும் கைட்டம்னு எல்லாம் பாக்கமுடிஞ்சிது.. ஆனா அவர மட்டும் காணும்..

  9.அப்போ சப் வே திறந்தது.. கூட்டம் என்ன உள்ளே தள்ளுச்சு..

  10.வெளியில பயங்கர ஆர்பாட்டமா திறந்த சப் வே உள்ளே நான் சொன்ன அவர் பிச்சைகாரராக இருந்தார்.. இதுதான் நான் முன்சொன்னமாதிரி வருத்தப்பட்டதுக்கு காரணம்..

  ReplyDelete
 14. எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. புரியாம ஒரு பதிவு போட்டது என் தப்பு தான்.. திரும்பவும் மன்னிச்சிடுங்க.. இனிமே இப்படி நடக்காம பாத்துகிறன்.. அகேன் அண்டு அகேன் ஸாரி டூ ஆல்..

  ஆங்கிலத்தை தமிழில் அடிக்கும் சங்கத்திலிருந்து நான்தாங்கோ..!!!

  ReplyDelete
 15. சரி சரி..பிரயாசித்தமா ஒழுங்கா சூப்பர் கவிதை ஒன்னு சீக்கிரம் போடுங்க...:))

  ReplyDelete
 16. //அவர் பேசுவது எனக்கான சிறந்த வழிகாட்டியாக காட்டியது.. ஆனா அவரின் வாழ்க்கையை நான் புரிந்துகொள்ளவில்லை..//


  கவிதையை விட கவிதைக்கான விளக்கம் அருமை..

  ReplyDelete
 17. @பாரத்.. பாரதி..: நன்றி நண்பரே.!! வருகைக்கும் கருத்துக்கும்..

  ReplyDelete
 18. கவிதை அருமை.பல பதிவர்களை தெரிந்து கொள்ள வலைச்சரம் உதவியாக இருக்கின்றது

  ReplyDelete
 19. @raji: நன்றி தோழி.!! கண்டிப்பாக வலைச்சரம் நல்ல உதவியாக தான் இருக்கிறது..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…