நான் ஏமாந்துட்டேனா.??? சொல்லுங்க ப்ளீஸ்...
நான் கூர்... அட அதாங்க என் பேரு.. உழச்சு தான் வண்டி வாங்கனும்னு அத பத்தி ஒண்ணு கூட தெரிஞ்சிக்காம இருந்தன்.. இப்ப வண்டி வாங்கிட்டன் ஆனா வண்டி ஓடமாட்டேங்குது(அவ்வ்வ்வ்...)

என்ன சொல்றது இந்த கொடுமைய... வெளிய வண்டியில சுத்தனும்னா கண்டிப்பா பெட்ரோல் போடனுமாமே(எனக்கு சத்தியமா தெரியாது..)

என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் கூகிள கேட்டு பெட்ரோல் எதுக்கு யூஸ்னு தெரிஞ்சிகிட்டன்.. பெட்ரோல் வண்டிய ஓட்டுறதுக்கு யூசாம் (எப்படி கண்டுகிட்டன் பாத்தீங்களா..!!)

சரி அது எங்க கிடைக்கும்னு போயி மளிகை கடைகாரன் கிட்ட கேட்டா $&$&**%&*&##*(&%&.!!!!

அப்பரம் நீண்ட தேடுதலுக்கு பிறகு பெட்ரோல பெட்ரோல் பங்க்ல தான் வாங்கனும்னு பச்சியில பச்சி அந்த பச்சி சொல்லுச்சு...(எதுக்கெல்லாம் யூஸ் ஆகுது நம்ம பச்சி...)

பெட்ரோல் பங்க்ல போயி ஒரு கிலோ பெட்ரோல் குடுங்கன்னு கேட்டா.. அவன் $&$&%**(*(&*&#%#.... சே.!!! உலகமாயிது.. அதாவது பெட்ரோல லிட்டர்னு கேக்கன்னுமாமுல (நல்லா கொடுக்குறாங்கய்யா டீடயிலு.!!!)

சொல்லிகொடுத்தா கத்துக்கமாட்டோம்னா சொல்றோம்.. சொன்னா கிளியரா சொல்லனும் அத விட்டுபுட்டு இப்படியா ஒரு மனுசன வருத்தெடுக்கிறது.. (அந்த ஏசிய போடுங்கப்பா...)

பேச்ச குறை பேச்சை குறை...
ஒரு லிட்டர் பெட்ரோல் கொடுன்னு ஒரு பாட்டில்ல வாங்கிட்டு வீட்டுக்கு வந்தன்.. அங்க எனக்கு ஒரு டவுட்டு.. இத எங்க ஊத்துறது.. எனக்கு தெரிஞ்சு நல்லா ஓட்டையா இருந்தது பின்னாடி புகை வருமே அதுதான்.. அதுல ஊத்தபோனப்போ ஒரு குரல்..

அட நம்ம மங்கூஸ் தலையன்.. டே கூர் என்னடா பண்றன்னு கேட்டான்...

''மங்கூஸ் மண்ட மங்கூஸ் மண்ட புதுசா வண்டி வாங்கினன் அது ஏதோ பெட்ரோல் போட்டாதான் ஓடும்னாங்க.. பெரிய ஆராய்ச்சி பண்ணி பெட்ரோல் வாங்கிட்டு வந்து ஓட்டையில ஊத்துறன்''


''கூர் அது சைலன்சர்டா.. அதுலயிருந்து புஸ்க்கு புஸ்க்குன்னு புகை தான் வரும்.. நமக்கு ஹீட் ஆயிடுச்சுன்னா காத்து வெளிவரும்ல(வாயில இருந்து உஷ்ஷ்ஷ்னும்போது வருமே அது.. வேறெதுவும் இல்ல..) அது மாதிரி வண்டிக்கு''

''அட மங்கூஸ்.. நீ ஒரு வில்லேஜ் விஞ்ஞானி டா.. சரி இத நான் எங்க ஊத்த''

சாவிய எடுத்து துறந்து இதுல ஊத்தனும்னு ஒரு சுரங்க குழாய் ஓட்ட மாதிரி ஒண்ணு காமிச்சான்.. நானும் ஊத்திட்டு தேங்க்ஸ் சொல்லிபுட்டு புறப்பட்டேன்..(நாதாரிக்கெல்லாம் தேங்க்ஸ் ஆ.!!!)

என்ன ஆச்சர்யம்.!! வண்டிய ஓட்டினா அதுல நம்பர போட்டு வருசலா ஒரு முள் இருக்கு அது இங்குட்டும் அங்குட்டும் ஓடுது.. அப்படி இப்படினு போனா வண்டி நின்னுடுச்சு.. என்னன்னு புரியாம நடுதெருவுல குத்துகால்ல உட்டு உக்காந்து கிடக்க அங்க வந்த போலீஸ்காரர்ட 

''போலீஸ்கார் போலீஸ்கார்.. வண்டி ஓடவே மாட்டேங்குது போலீஸ்கார்''

''பெட்ரோல் இல்லடா மங்கி''

என அவர் சொல்ல வண்டியை தள்ளிகொண்டு விறுவிறுன்னு நான் பெட்ரோல் வாங்குன பெட்ரோல் பங்குக்கு போனேன்..

''என்னயா கட நடத்துறீங்க.. பெட்ரோல் போடுறோம்னு ஊர ஏமாத்துறீங்களா.??''ன்னு சரமாரியா பிச்சு உதறிட்டோம்ல...
அத கேட்டு பெட்ரோல் போட வந்த நாலு பேரும் ஓடிட்டானுங்க(தப்பிச்சிட்டானுங்க பயபுள்ளைங்க..)

அத பாத்து என்கிட்ட வந்த கடை ஓனரு முரச்சான் பாரு (ராஜ்கிரன் படத்துல கூட எவனும் பாத்திருக்கமாட்டான்..)

''ஏன் தம்கட்டுற சோல்டற இறக்கு சோல்டற இறக்கு... என்ன சின்ன புள்ள தனமா இருக்கு''


''என்னயா உம் ப்ராப்ளம்''

''வண்டி ஓடல''

''பெட்ரோல் போடு''

''ஒரு மாசம் முன்னாடி உன் கடையில தான் ஒரு லிட்டர் போட்டன்.. அதுகட்டியும் நின்னுடுச்சு..''

என் வண்டிக்குள்ள எட்டிபாத்துட்டு என்ன பாத்து,

''மங்கி 80கி.மீ., ஓடிடுச்சு திரும்ப பெட்ரோல் போட்டாதான் ஓடும்''

''அப்ப இதுக்கு ஒரு வருசம் கியாரண்டி கிடையாதா.???''

''அந்த பெட்ரோல எடுத்து இவன் மேல ஊத்தி கொலுத்துங்கடா''

''ஸாரி சார்.!! பெட்ரோல் எவ்வளவு..???''

''63.56 காசு''

''போன மாசம் 53தான''

''அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்..''

சரின்டு போட்டுட்டு வந்துட்டன்.. ஏன் போட்டுட்டு வந்தன்னு நீங்க கேக்கலாம்.. ஏன்னா ஐ ஆம் குட் மேன்..

ஆனா என்ன 10 ரூபா ஏமாத்திட்டானான்னு எனக்கு தெரியனும்.. உண்மையிலே வண்டிக்கு அடிக்கடி பெட்ரோல் போடணுமா.?? இன்னும் இந்த வண்டியில நிறைய சந்தேகம்லாம் இருக்கு.. அத அடுத்தது கேக்குறன் முதல்ல நான் ஏமாந்துட்டேனான்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...(அவன் என்ன மட்டும் ஏமாத்தியிருந்தான்..!!! பிச்சுபுடுவன் ராஸ்கல்..)


Comments

 1. சரிங்க மினிஸ்டர் சார்..:))

  ReplyDelete
 2. உங்களுக்கு யாருங்க வண்டி ஓட்ட கத்து கொடுத்தா?

  ReplyDelete
 3. @ஆனந்தி..: சரிங்க ஜனாதிபதி...

  ReplyDelete
 4. @விஜய்: ஆக்சுவலி.. அலிஷா அப்துல்லா என்னோட ஃப்ரெண்ட்.. அவங்க ஓட்டும்போது எட்டக்க இருந்து பாப்பன்.. அதனால ஈஸியா ஓட்டிட்டன்..

  ReplyDelete
 5. ரெண்டு பேர் தான் வந்தீங்க.. நீங்களும் என் கேள்விக்கு பதில் சொல்லாமலே போய்டீங்களே..!!!

  ReplyDelete
 6. @ஆமினா: நன்றி தோழி.. தொடர்ந்து வருகை தாருங்கள்..

  ReplyDelete
 7. Che Che Nanum than Emanthen......

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!