ஏன் யா இப்படி பண்றீங்க.???பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டம் மற்றும் தேசிய அளவில் சாதித்த பார்வையற்ற மாணவர்களுக்காக வருடம்தோறும் அரசு ஊக்கத்தொகையும், அவர்களின் மேல்படிப்பிற்கான செலவையும் ஏற்றுக்கொள்கிறது..  அவ்வாறு 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் திருவள்ளுவர் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த கண்ணன், யு.மகேந்திரன், ஏழுமலை, எம்.மகேந்திரன், கார்த்திக், தர்மலிங்கம் ஆகிய மாணவர்களுக்கும் 2008ல் திருவள்ளுவர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த பச்சையப்பன் என்ற மாணவர்க்கும் அவர்களுக்கு தரவேண்டிய மேல்படிப்பிற்கான பணத்தில் ஒரு குறிப்பிட்ட சிறு பங்கை மட்டுமே அளித்துவிட்டு மீதி தொகை தரப்படாமல் இருந்திருக்கிறது..


இந்நிலையில் சம்பந்தபட்ட மாணவர்கள் கடந்த மே மாதத்தில் தேதி திருவள்ளூர் மாவட்ட புனர்வாழ்வு அலுவலர்(டி.ஆர்.ஓ) திரு.ரவி அவர்களிடம் தங்கள் அடையால அட்டை, ஆதாரங்களுடன் சென்று மனு அளித்து வந்தனர். பின்னர், ஆயிரம் விளக்கு பகுதியில் கமிஷனரை காண சென்றவர்கள் கமிஷனரை காண முடியாததால் அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் தங்கள் மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.. ஓரிரு நாட்களில் ப்ரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற அவரின் நம்பிக்கை வார்த்தையுடன் அந்த இடத்திலிருந்து சென்றனர். ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை..


மீண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி கல்வி உதிவித் தொகை துறையின் பொறுப்பாளர் மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கான துணை முதல்வரான(ஏ.டி.எஸ்.எஸ்) சுகந்தி அவர்களை கண்டனர். அவர் கூறுகையில், ‘ இதுவரை வராமல் போன பணத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது.. வேண்டுமானால் இந்த வருடத்திற்கான தொகையை பெற ஏற்பாடு செய்கிறேன்’ என்று உறுதியளித்தார். இது மாணவர்களுக்கு ஏற்க கூடியதாக அமையவில்லை..


இதை பற்றி மாணவர்கள் கூறும்போது, ‘கல்வி உதிவித் தொகை துறையின்  டி.ஆர்.ஓ-வும், ஏ.டி.எஸ்.எஸ்-ம் எங்களை ஏதாவது ஒரு வழியில் தட்டிகழிக்க பார்க்கின்றனர். யாரை போய் கேட்டாலும் அவர்களை பார், இவர்களை பார்னு சொல்றாங்களே தவிர எங்களுக்குனு ஒரு வழிகூட பிறக்கல.. இதிலிருந்து நாங்கள் மே மாசத்துல கொடுத்த மனுவை இரண்டு அலுவலங்களிலும் ஒரு பொருட்டாவே மதிக்கலனு தெரியுது.. இப்ப நாங்க ஒரு வழி கூட இல்லாம இருக்குறோம்.. எங்களுக்கான கல்லூரி கட்டணத்தையும் கட்ட முடியாம தவிக்கிறோம்’ என்று கண்ணீர் மல்க பேசினர்.

.
அவர்கள் படித்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றவர்கான அரசு மேல்நிலை பள்ளியும் தங்களுக்காக எந்த முயற்சியும் செய்யவில்லை என்று வருந்தினர்.. இறுதியாக, செப்ட., 26ம் தேதி ஒரு சந்திப்பில மாற்று திறனாளிகளுக்கான மாநில கமிஷனர் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.. இருப்பினும் மாணவர்கள் இன்னும் தங்களுக்கான தொகை கிடைக்க தாமதம் ஆகும் என்று கருதினர்.. எனவே, செப்ட்., 30ம் தேதி திருவள்ளுவர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஐ., (RTI-Right To Information) பதிவு செய்தனர்.. இப்போது தங்களுக்கான தொகையை எதிர்நோக்கி காத்துள்ளனர்.. இதே திட்டத்தில் கிருஷ்ணகிரி, மதுரை போன்ற மாவட்டத்தின் மாணவர்கள் பயனுற்றிருப்பது குறிப்பிடத்தக்கது..
இன்றைய நிலவரப்படி இன்னும் விசாரணையில் உள்ளது.

Comments

 1. வழக்கம் போல் அரசு அதிகாரிகளின் அலட்சியம். துணை முதவல்ரின் கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள்.

  ReplyDelete
 2. http://mkstalin.net/tamil/index_tam.php

  ReplyDelete
 3. @எல் கே: ஆமாம் அண்ணா.. கண்டிப்பாக அவரின் கவனத்திற்கு கொண்டு போகிறேன்...

  ReplyDelete
 4. அரசின் பார்வைக்கோளாறை சரி செய்ய ஒரு ‘டாக்குட்டர்’ வருவாரா??

  ReplyDelete
 5. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  ReplyDelete
 6. @சிவகுமார்: அந்த டாக்குடருக்கும் பார்வை கோளாராகிவிடும் நண்பரே.!!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 7. @கலாநேசன்: நன்றி நண்பரே..!!! வருகைக்கும கருத்துக்கும...

  ReplyDelete
 8. @பிரபா: பாத்தேன் பிரபா.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. தம்பி கூர்மதியன்

  http://bloggersbiodata.blogspot.com/2011/01/blog-post_30.html

  ReplyDelete
 10. முதல் முறை வருகிறேன், அருமையான வலைப்பூ!!!

  ReplyDelete
 11. @பலே பிரபு: நன்றி நண்பரே.!! இனி தொடர்ந்து வாருங்கள்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!