பொக்க வாய் ஆயா பாடிய 'ஹோசான்னா' பாடல்.!!!
வழக்கம் போல நான் ஆபிஸ்க்கு வண்டியில போகும் போது(சத்தியமா நான் ஆபிஸ்க்கு போனேங்க..!!) ஒரு அதிரி புதிரி சத்தம்..


சத்தத்தை கேட்டதும் பயந்து போய் அப்படியே டயர் பேலன்ஸ் மிஸ் ஆக.. நடுரோட்ல இருந்து ததகபுதகான்னு ஆட்டிகிட்டே ஓரமா போய் நின்னன்..(ஹு ஈஸ் தட் ப்ளட்டி..??? யாரு மேன் சத்தம் போட்டது.???)


வண்டிய நிறுத்திபுட்டு பாத்தா ஆல் லுக்கிங் அட் மீ...!!! வொய்.???(கீழ பாருடா பேக்கு.!!!)


அந்த அதிரிபுதிரி சத்தம் என் வண்டி டயர் வெடிச்ச சத்தம் தான்.. பேலன்ஸ் மிஸ் ஆனது சத்தத்தால இல்ல.. டயரால தான்.. (என்ன கொடும கூர் இது.???)


வேர்க்க விருவிருக்க தள்ளிகிட்டு போய் பஞ்சர் ஒட்ட கொடுத்திட்டு... சாயங்காலம் எடுத்துகிறதா சொல்லிபுட்டு(பெட்ரோல் இருக்குமா.???) நம்ம 18A பஸ்ச புடிச்சா உட்கார இடமில்ல(ஆமாம் நிக்கற இடத்துக்கே வக்கில்லையாம்.. இவருக்கு உக்கார இடமா.???)


சரின்டு ஓரமா ஒரு கம்பிய புடிச்சு முட்டுகொடுத்துகிட்டு நம்ம '1857 சிப்பாய் புரட்சி' புத்தகத்த படிச்சிகிட்டே வந்தன்(படிச்சிட்டு இவரு கிழிக்க போறாரு.!!!)


அடங்க.. போக போக இன்னும் நெரிக்க ஆரம்பிச்சுட்டானுங்க..(அடங்கொன்னியான்.!!!)


புக்க உள்ள வச்சிபுட்டன்..(கொடுமை பண்றானுங்க மை லார்ட்.!!!)


விடுவோமா நாங்க.. ஹெட் போன காதுல மாட்டிகிட்டு பாட்டு கேக்க ஆரம்பிச்சன்..(அடுத்த ஏ.ஆர்.ஆர்., ஆகணும்ல.!!!)


அப்படியே சைடுல இருக்குற எல்லாரையும் வாட்ச் பண்ணிகிட்டே வந்தன்..(பெரிய வாட்ச்மேன்னா வருவ.!!!)


அப்ப வாயில இருக்குற பல் எல்லாம் கொட்டிபோன ஒரு வயதான மூதாட்டியை கண்டேன்(மேல ஆயான்னு போட்டுட்டு இங்க டீசன்சியா நார பயலே.!!!)


அந்த சமயத்தில் என்னோட போன்ல நம்ம தல ஏ.ஆர்.ஆர்., கலக்குறாரு..(கூர் மேட்டருக்கு வா... மேட்டருக்கு வா...)


போன்ல ஓடுன பாட்டு 'விண்ணை தாண்டி வருவாயா'ல இருந்து 'ஹோசான்னா' பாடல்.. (என்ன கூர் சொல்ல வர.???)


அந்த பாட்டிக்கு பல் எல்லாம் கொட்டிபோனதால வாய் ஒரு இடத்துல நிக்காம பக் பக்கென ஆடிகிட்ட இருந்தது.. ஹோசான்னா பாடல்-பக் பக் ஆயா.. என்ன ஒரு மேட்சிங்.. அந்த நேரம் அந்தி நேரம்னு இங்க பாட்டு ஒலிக்க நம்ம ஆயா வாய் சேந்து டான்ஸ் ஆடுதுப்பா.. பாட்டுல ஒரு நிறுத்தம் வந்தா ஆயா வாய இழுத்து நிறுத்துறாங்க.. நிறுத்தம் முடிச்சுதுன்னா ஆயா வாய் அலப்பரிக்க ஆரம்பிக்குது.. நான் கேக்குற பாட்டு அந்த பாட்டிக்கு எப்படி கேட்டுச்சு...???(அட நான்சன்ஸ்.!!!)


இப்ப தாங்க தெரியுது மும்பை ஹீரோயின் எப்படி தமிழுக்கு நல்லா வாய் அசைக்கிறாங்கன்னு.. யாராச்சும் அவங்க தமிழ இங்கிலீஷ்ல எழுதி படிச்சு பேசுவாங்கன்னு நினச்சீங்கன்னா அது தப்பு.. நமக்கு கேக்குற குரலுக்கு ஏத்தாப்புல அவங்க வாய் அசையறதா நாம கற்பனை பண்ணிக்கிறோம்..(நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல செத்தி வச்சிட்டு பக்கத்துலேயே நீயும் உக்காந்துக்கோ... உனக்கு பின்னாடி வர சந்ததி அத பாத்து படிச்சு தெளிவா நடந்துப்பாங்க..!!! )


எது என்னமோ எனக்கு ஹோசான்னாவும் புடிச்சுது அந்த ஆயாவும் புடிச்சிது.. (ஆயாவ புடிக்க வேண்டிய வயசா டா இது.???)Comments

 1. hahahahahah realy nice post :) :)
  i enjoyed it :)
  cmmnt pannitenungo pottu keettu thallirathingo :((

  ReplyDelete
 2. yow nee ethanai blogguthaan open pannuveaaaaaa

  ReplyDelete
 3. @ஃபரா: அய்யயோ.!! நான் ஏன் போட்டு தள்ள போறன்.. ஐ ஆம் பாவம்.. நார்மல் மனுசன்..

  ReplyDelete
 4. @வினு: சீக்கிரமாவே இன்னும் ஒண்ணும் வருது மச்சி.. ப்ளாக் ஓபன் பண்றது நமக்கு ஒரு ஹாபி.. உன்ன மாதிரி சின்ன பசங்களுக்கு எல்லாம் அது தெரியாது..

  ReplyDelete
 5. //ஹெட் போன காதுல மாட்டிகிட்டு// ஹெட் போன காதா?;? ஹெட் போனா காதும் போயிருக்கணுமே? ....(நீங்க மட்டும்தான் மைன்ட் வாய்ஸ் எழுதுவீங்களா?... இந்த வரிகளை வாசிக்கும் போது எனக்குக் கேட்ட என்னொட மைன்ட் வாய்ஸ் இது..(இந்த அளவுக்கு இவங்க வெகுளியான்னு உங்களுக்கு இப்ப மைன்ட் வாய்ஸ் கேக்கணுமே?))

  //யாராச்சும் அவங்க தமிழ இங்கிலீஷ்ல எழுதி படிச்சு பேசுவாங்கன்னு நினச்சீங்கன்னா அது தப்பு.. //

  அப்டீன்னா சொல்றீங்க...அவங்க பப்புள்கம் சாப்பிடறாங்கன்னில்ல நான் நினைச்சேன்...:(

  ReplyDelete
 6. @என்றென்றும்16:முதல்ல இங்க வந்த உங்கள நான் வரவேற்கிறேன்.. அப்பரம் என்னோட மைன்ட் வாய்ஸ நீங்க தப்பா கணிச்சிருக்கீங்க.. சோ நீங்க ஃபெயில்.. என் மைண்ட்ல ஓடினது //என்ன ஒரு புத்திசாலிதனம்// இது தான்.. அந்த பப்புள்கம் பத்தி சொன்னீங்களே அதுவும் உண்மைதான் ஒத்துகிடுறன்..

  ReplyDelete
 7. சூப்பர் நகைச்சுவை - ரொம்பவே ரசிச்சேன் - தொடர்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. @சீனா:நன்றி சீனா ஐயா..!!! கண்டிப்பாக தொடர்வேன்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..