எனக்காக என்றுமே என்னிடத்தில்.!!!கண்ணில் துயர்கொள்ளும் போதே
காட்சி உயிரற்று போகும்..
கண்ணீர் மண்ணை சீண்டுமுன்னே
இமைகள் உலகை மறக்கும்..
அவன் எனை விடுத்தால்
ஏனோ என்னுள் ஆயிரம் வினாக்குறிகள்.!!!
நான் விரும்பும் தோழமையாக
என்னை எனக்கு உணர்த்திய தோழனாக
சினங்கொண்ட நேரத்திலும்
துயர் தாழ்த்திய தருணத்திலும்
அருகில் என்னை அணைத்தானவன்..
அவன் 'தனிமை'யெனும் என் உயிர் நண்பன்..

இன்றும் அவனோடு இருக்கிறேன்
பிடிக்கா செயலொன்றை செய்ய சொல்லி
பிய்தெடுக்கும் அப்பாமேல் கோபமாக
அந்த வெட்டவெளி மைதானத்தில்
மடக்கிய கால்களில் அமர்ந்தபடி..!!

அங்கே,
நான் காலடி பதிக்கா இடத்தை
அம்மைதானம் தான் கொண்டிடுமோ.???
என் வியர்வை தாங்கா நிலம்
அங்கு மிச்சம் மீதி இருந்திடுமோ.???
கண்கள் கலங்கிடுது
அந்த சரித்திரமான நாட்களை
என் சிந்தையில் கொள்ளும் போது..!!!

அந்நேரத்திலே,
விருட் விருட்டென்ற நடையில்
ஒரு அப்பா,மகன் கூட்டணி
உருட்டிய சைக்கிளோடு
மைதானத்தில் காலடி பதித்தது..

கண்கள் அவர்களை உற்றுநோக்க
சிறுவன் சைக்கிள் பழக ஆரம்பித்தான்..
சற்று விலகி அமர்ந்த அப்பா
''கீழ பாக்காதே செல்லம்
 காலை எடுக்காதே குட்டி''
என அன்பு வார்த்தைகளில்
வாத்தியார் ஆனார்..

என்ன சொல்லிட்டாலும்
கண்கள் கீழ்நோக்கவும்
கால்கள் தரை எட்டவும் மறக்கவில்லை
அந்த சுட்டி அழகிய சிறுவனுக்கு...
மீண்டும் வற்புறுத்திய அப்பாவுக்கு
சட்டென சிறுவனின் சினங்கொண்ட சொல்
சங்கடம் தெறித்திட்டது..

உந்தி உந்திய கால்கள்
ஒருஅடி நகரும் முன்னே
மைதான மணலை தழுவிட்டதே.!!
அறிவுறுத்தும் அப்பா
தன் அறிவிப்பை நிறுத்தாது
ஊக்கமான வார்த்தைகளை
உள்ளத்தில் பாய்ச்சிட்டார்..

நேரம் கடந்தது,
இரண்டு முறை உந்திய கால்கள்
நான்கு முறை சுழன்றது..
'ஐய்யா.. எஸ் எஸ்' என குதூகலித்தத சிறுவனை
ஆஹா அருமை ஓட்டிவிட்டாயென
கண்கள் கலங்க கட்டிணைத்த அப்பா
முத்த மழைகளை பொழிந்தார்..
என்ன ஒரு சந்தோசமென
எனக்குள்ளே துக்கம் மறைந்து போனது..

எழுந்து நடக்க தொடங்கிட்டேன்..
மீண்டும் அவனின் பயிற்சி தொடங்கிட்டது..
வெற்றிகளிப்புடன் தொடங்கியவன்
மீண்டும் தோல்விகளை காண்கிறான்..
விமர்சகரான அப்பா
இப்போ கரம் கொடுத்து உதவுகிறார்..

என்னுள்ளே ஆயிரம் மகிழ்ச்சி..
இம்முறையும் என் நண்பன் எனக்கு உதவிட்டான்..
பிடிக்கா வேலையானாலும்
என் தந்தையறிவார் எனக்கு எதுவென்று..
அவரின் சொல்லை பின்பற்ற முடிவெடுத்துவிட்டேன்..
நான் இப்போ வெற்றிகொண்டாலும்
நான் சறுக்கும் நேரத்திலே
கரம் கொடுக்க போவது அவர்தானே.!!!

நன்றி நண்பனே.!!!
வாழ்க்கை எனக்களித்த துயரை
என்முன்னே நீ களைக்கிறாயே.!!!
என்றும் உனை பிரியேன்
எனக்காக என்றுமே என்னிடத்தில் நீ வேண்டும்..!!!

டிஸ்கி: நண்பர்களே.!! எனக்கு உதவுங்கள்.. நான் இன்ட்லியில் எனது பதிவை பகிரும்போது //தவறான முகவரி அல்லது தடை செய்யப்பட்ட முகவரி: (http://


இப்படி வருகிறது.. நான் என்ன செய்யவேண்டும்... எனக்கு சொல்லமுடியுமா..?? 


Comments

 1. நான் இப்போ வெற்றிகொண்டாலும்
  நான் சறுக்கும் நேரத்திலே
  கரம் கொடுக்க போவது அவர்தானே.!!!


  .....சூப்பர்! மனதை தொட்ட வரிகள்...

  ReplyDelete
 2. நண்பா உங்களுடைய பதிவை நான் இன்ட்லியில் இணைத்துவிட்டேன்... ஒவ்வொரு முறையும் பிரச்சனை இருந்தால் நிர்வாகத்துக்கு மெயிலவும்...

  ReplyDelete
 3. அப்படி உங்க அப்பா என்னதான் செய்யச் சொன்னார்...

  ReplyDelete
 4. நன்றி நண்பனே.!!!
  வாழ்க்கை எனக்களித்த துயரை
  என்முன்னே நீ களைக்கிறாயே.!!!
  என்றும் உனை பிரியேன்
  எனக்காக என்றுமே என்னிடத்தில் நீ வேண்டும்..!!!


  அருமையான வரிகள்!

  நண்பரே இன்றுதான் முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன்! பல நண்பர்களுடைய பதிவுகளின் பின்னூட்டத்தில் உங்கள் பெயரைப் பார்த்திருக்கிறேன்! திரட்டிகளில் வாக்குகளும் அளித்துள்ளேன்! என்னுடன் நட்புக் கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்! அந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்!

  ReplyDelete
 5. ஹாய் கூர்மதி...:)) கவிதை படிச்சேன்...உணர்ச்சி கரமா எழுதி இருக்கீங்க...ஆனால் இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணலாம் கூர்மதி...மரபு கவிதை அண்ட் புதுகவிதை கூட்டணியான கலவையா இருந்தது இந்த கவிதை...அதவாது படிச்சு முடிச்ச பிறகு உங்க கவிதையில் உள்ள உணர்ச்சி நமக்கும் கொஞ்ச செகண்ட் தொத்திருக்கும்..அந்த அளவுக்கு உணர்வு இருக்கு..ஆனால் கொஞ்சம் எடிட் பண்ணினால் இன்னும் pleasant ஆ இருக்கும் தோணுது...

  //அங்கே,
  நான் காலடி பதிக்கா இடத்தை
  அம்மைதானம் தான் கொண்டிடுமோ.???//
  இது எனக்கு புரியலை கூர்மதி...:(( (அந்த அளவுக்கு எனக்கு ஞானம் இல்லைன்னு நினைக்கிறேன்...:(( )

  தனிமை பத்திய ஆரம்ப வரிகள் ரொம்ப பிடிச்சது...

  ReplyDelete
 6. @பார்வையாளன்:நன்றி நண்பரே.!!!

  ReplyDelete
 7. @சித்ரா:நன்றி தோழி.!! தொடரந்து வருகை தாருங்கள்..

  ReplyDelete
 8. @பிரபா: எத்தனை தடவை தான் உங்களுக்கு நான் நன்றி சொல்வது.. எனக்கு எந்த ப்ரச்சனை வந்தாலும் முதல் ஆளாக உதவுகிறீர்களே.!! இணைத்தமைக்கு நன்றி.. இனி ப்ரச்சனை எழுந்தால் அவ்வாறே செய்கிறேன்..

  //அப்படி உங்க அப்பா என்னதான் செய்யச் சொன்னார்...//

  அத தனியா மெயில் பண்றன்.. திஸ் ஈஸ் பப்ளிக் பப்ளிக்...

  ReplyDelete
 9. @மாத்தி யோசி:
  //நண்பரே இன்றுதான் முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன்! //

  சொல்லிதான் தெரியணுமா என்ன.???

  //திரட்டிகளில் வாக்குகளும் அளித்துள்ளேன்!//

  ஆஹா.. நன்றி..

  //என்னுடன் நட்புக் கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்! அந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்!//

  கண்டிப்பாக.. எழுந்துட்டன்.. தோ வரேன்..

  ReplyDelete
 10. @ஆனந்தி:
  //அந்த அளவுக்கு எனக்கு ஞானம் இல்லைன்னு நினைக்கிறேன்...:(( )//

  இத யாரும் நம்பமாட்டாங்க ஆனந்தி.. அப்பரம், முதலில் தனிமை பற்றிய விளக்கம், பின்னர் மைதானத்தை பற்றிய விளக்கம், அங்கே நடந்த நிகழ்ச்சி பின் எனது முடிவு என்னும் நோக்கில் எழுதியது.. இந்த கவிதை மட்டுமல்லாது நான் எழுதிய பிற கவிதையும் மரபும் புதுசும் சேர்ந்ததாகவே இருக்கும்.. முழுசாய் புதுகவிதையாய் படைக்க நான் தேர்ந்தவன் இல்லை..
  நீங்கள் சுட்டி காட்டிய இடத்தில் அம்மைதானத்தில் நான் கால் பதிக்காத இடமில்லை என்பதை சுட்டிகாட்டியுள்ளேன்.. நீங்கள் சொல்லும் மாற்றம் எங்கு வந்தால் நல்லாயிருக்குமென சொன்னீங்கன்னா மாத்திடலாம்.. கண்டிப்பாக எந்தன் சிறந்த விமர்சகரான உங்களுக்கு இதை செய்வேன்..

  ReplyDelete
 11. @ தம்பி கூர்மதியன்
  // அத தனியா மெயில் பண்றன்..//

  தம்பி... இன்னும் டீ வரலை...

  ReplyDelete
 12. உங்க பயோ டேட்டாவுல ' நிருபர் ' னு போட்டிருக்கு! ஆமா நீங்க எங்க வேலை பாக்கிறீங்க? நாம தெரிஞ்சுக்கலாமா?

  ReplyDelete
 13. உங்க பயோ டேட்டாவுல ' நிருபர் ' னு போட்டிருக்கு! ஆமா நீங்க எங்க வேலை பாக்கிறீங்க? நாம தெரிஞ்சுக்கலாமா?எனக்கும் அதே டவுட்டு..

  ReplyDelete
 14. @பிரபா:
  //தம்பி... இன்னும் டீ வரலை...//

  அனுப்சாச்சு அனுப்சாச்சு..

  ReplyDelete
 15. @மாத்தி யோசி&கருண்: நான் நிருபர்.. நிருபர் அது நிருபர்.. அதாவது நிருபர்.. நான் நிருபர்..

  ReplyDelete
 16. உங்களிடம் வேறு மின்னஞ்சல் முகவரி இருந்தால் அந்த முகவரியுடன் மீண்டும் இன்ட்லியில் பதிவு செய்யவும். பின்னர் ஒவ்வொரு முறை புதிய பதிவு போடும்போது அந்த மின்னஞ்சல் முகவரியில் இன்ட்லியில் இணைத்துக்கொள்ளவும் நண்பரே,,,,

  ReplyDelete
 17. @ரஹீம் கஸாலி: எதுவுமே வேலைக்காகாட்டி அத தான் செய்யனும்.. நன்றி நண்பரே.!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!