Posts

Showing posts from February, 2011

என் பெயருக்கான புராணம்.!!

இந்த தலைப்பில் என் பெயரின் புராணம்(ஏன் உனக்கு இந்த பேர் வச்சாங்க.!!), அதனால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், வருத்தங்கள், கோபங்கள் குறித்து குறிப்பிடவேண்டுமென என்னை முதல் முதலில் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் அண்ணன் எல்.கே(நான் அந்த அளவுக்கு வொர்த்தா.???) என்னுடைய பேர் வித்யாசமா இருக்கிறதால தான் கூட்டிருப்பார்னு நினைக்கிறேன்.!!(எப்படியோ கூப்புட்டார்ல.!!) இவர் தொடர்ந்தது ஸ்ரீ அகிலா தோழியின் அழைப்பை ஏத்து(உன்ன கூப்பட்டவங்கல மட்டும் சொல்லுடா.!!)


இனி எந்தன் பெயருக்குள்ளே போவோம்.!! என் பெயர் தம்பி கூர்மதியன். இது தோழி அகிலா கூறியது போல என் பெற்றோர் வைத்த பெயர் பிடிக்காமல் நானாக ஏற்படுத்திகொண்டது. பெற்றோர் வைத்த பெயரை மாற்றலாமா.?? புடிக்கலனா மாத்த வேண்டியது தானே.!! இதிலென்ன லொட்டு லொஸ்க்கு.!!


இதுவரை எனது உண்மையான பெயரை வெளிப்படையாக நான் சொன்னதில்லை.. இப்போது சொல்கிறேன்.. என் உண்மையான, என்னுடைய பிறப்பு சான்றிதழில் இருக்கும் பெயர் அ.ராமநாதன்.


எனது இணைய தொடர்பு தவிர மற்ற அனைவரும் என்னை அறிவது ராமநாதன் என்னும் பெயரிலே.!! முதலில் ராமநாதனுக்கு போவோம்..


ராமநாதன்.. ராமர் பெயரில்லைங்கோ.!! சிவன் பெ…

பள்ளி பருவத்திலே இன்ஜீனியராக்க.!!

Image
“வெளிநாட்டில் படிக்கும் சிறுவர்கள் எல்லாம் தாங்கள் படிக்கும் போதே அனுபவ கல்வி மூலம் சிறிய சிறிய ப்ராஜெக்ட்ஸ் பண்ணி ஒரு சிறந்த வல்லுநர்களாக ஆகின்றனர். ஆனால் நம் இந்தியாவில் உள்ள சிறுவர்கள் இன்னும் ஏட்டில் படித்து ஏப்பம் விட்டுகொண்டிருக்கின்றனர்” என்று வருத்தப்படும் பலருக்கும் SAEIndia ஒரு அடித்தளம் அமைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.


ஏட்டு கல்வியிலிருந்து மாணவர்களை அனுபவ கல்விக்கு வழிநடத்த SAEIndiaவின் புதிய பரிணாமம் இது. மாணவர்களுக்கு வடிவமைப்பு திறன் மேம்படவேண்டும் என்னும் காரணத்திற்காக AWIM(A World In Motion) என்னும் திட்டத்தை இந்நிறுவனம் நடத்தி வருகிறது.


இத்திட்டத்தின் மூலம் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அவர்களது சதர்ன் செக்ஷ்னில் பல்வேறு பள்ளிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொம்மை கார் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தும் முறைபற்றி விளக்கப்படுகிறது.


இத்திட்டம் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பள்ளி இறுதியாண்டு மாணவர்கள் வரை பயனுறும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்காக வரிசையாக நடைமுறைபடுத்தபட்டு வரும் இத்திட்டம் கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘ஜெட் …

எங்கள் வாத்தியாருக்கு ஒரு கண்டனம்.!!

Image
வணக்கம்.!!

எல்லாரும் எப்பிடி இருக்கீங்க???(நேத்தி நீ கேக்கும்போது எப்படி இருந்தாங்களோ அப்படி தான்..!!!) இன்னைக்கு நான் ஸ்கூல் படிக்கும்போது நடந்த விசயத்த சொல்ல போறன்(சொல்லும் சொல்லித்தொலையும்.!!)
எங்க ஊர் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ்னா அது கண்ணாமூச்சி மட்டும் தான்(அதுல கோல்டு மெடலா.???) அதனால எனக்கு மத்த ஸ்போர்ட்ஸ் பத்தி ஒண்ணுமே தெரியாது.. சென்னைக்கு வந்து முதல் முதலா ஸ்கூல்ல சேந்தா பாவிங்க எல்லா வாத்தியாரும்(எனக்கு எடுத்த வாத்தியார் மட்டும்-கருண் நான் உங்கள சொல்லல) இங்கிலிபீஸ்ல பேசினாங்க(கன்ட்ரி ப்ரூட்.!!)

அப்படி ஒண்ணுமே புரியாம ஆறாவது வரை எங்க ஊர்ல க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கிட்டிருந்தவன், எல்லா வாத்தியாருக்கும் செல்ல புள்ளையா இருந்தவன்(இந்த டகால்டி வேலையெல்லாம் வேணாம்) முதல் தடவையா பரிட்சையில புட்டுகிச்சு, எல்லார்கிட்டயும் கெட்ட பேர்..(இது தான் உண்மை.!!)
அப்படி இருக்கும்போது ஒருநாள் அந்த நாள் ஸ்கூல்ல ஏதோ இன்ட்ராஸ்கூல் காம்படீசனாம்.. எல்லாரும் கிரவுண்டுக்கு ஓடிட்டானுங்க(அது என்னன்னு சொல்லாம ஓடிட்டீங்களே பாவிங்களா.!!!) சரின்னு நானும் போனன்.. எல்லாரும் ஒரு ஒரு ஸ்போர்ட்ஸ்ல பேர் கொடுத்திட்டிருந்தாங்க.…

அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்... (3)

Image
என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டாள் அவள்.!!!
அதிர்ந்து போன அவன் வார்த்தைகளில் அயர்ந்துபோயிருந்தவள் ஆர்பரிப்பு ஏதுமின்றி எழுந்து உட்கார்ந்தாள்.. முன்னால் படர்ந்திருந்து பின்னால் ஒடுங்கியிருந்த தலைமுடியை இழுத்து கொண்டையாக போட்டுகொண்டு கைகளின் விரல்நுனி கண்களை சீண்ட தெளிவாக விழித்த அந்த முட்டை கண்களில் கருவிழியில் அவனது உருவம் தெளிவுபட தெரிந்தது..

முகத்தில் ஆயிரம் சந்தோசங்கள் கூட வாயிலிருந்து வார்த்தைகள் தட்டுபட,
‘‘ஏய்.!! நீ.. நீ.. நான் இத எதிர்பார்க்கல டா’’
‘‘ஏன் இங்க வந்து இப்படி படுத்திருக்கே.!! தாத்தா எங்க.?’’
என கேள்விகளை தொடங்கினான்.. 
‘‘அங்க எனக்கு இருக்க பிடிக்கல அதான் இங்கேயே வந்துட்டன்.. தாத்தா ‘காந்தி தெருவுல’ ஒரு வீட்ல இருக்கார்.. நமக்கு இந்த பார்க் பெஞ்ச் தானே அம்மா அதான் இங்க வந்து கொஞ்ச உக்காந்தன் அப்படியே படுத்து தூங்கிட்டன்..’’ என கேள்விக்கு பதிலாய் அமைதியாக கூறியவள் தள்ளி நிற்பவனை உட்கார கட்டளையாக சொன்னாள்..  அருகில் நெருங்கி அமர்ந்தவன் அக்கால பேச்சுகளில் ஈடுபட்டான்..
அன்று,
அவள் இவனின் ஒன்பதாம் வகுப்பில் அறிமுகமானாள்.. அவன் என்றும் விரும்பிடாத அந்த கோவிலுள்ளே நண்பர்களின் படைசூழ தான்…

என்ன வியாதி இவனுக்கு சொன்னதையே சொல்றான்.!!

Image
எல்லோருக்கும் ஆனந்த விகடன்ல வேலைபாக்க ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு புடிச்சது என்னவோ சக்தி விகடன்லயும், மோட்டார் விகடன்லயும் தான்..(சொல்லிட்டாரு கவர்னரு.!!)


ரெண்டுமே சரியா பக்கா ஜாலியா இருக்கும்.. ஆனா முதல்ல நான் சேரும்போது நினச்சது என்னவோ ஜூனியர் விகடன்ல ஒரு முத்திரை பதிக்கனும்னு தான்.. காலபோக்கில அந்த பக்கமிருந்து இந்த பக்கம் தாவிட்டன்.. காரணம் இதுவரை அனுபவமில்லாத புது விசயங்களை இதில் சந்திக்க முடியும் ஆனால் ஜூனியரில் நாம தினமும் பாக்குற விசயத்தையே தான் பாக்க முடியுது..(உனக்கு வேலைகொடுத்ததே பெரிய விசயம் இதுல இது வேறயா.??)

அப்படி ஒரு நாள் நம்ம நண்பர் சுலைமான்கிட்டயிருந்து போன்..

''மாப்ள சக்தி பொங்கல் சிறப்பிதழ்க்கு என்னடா பண்ற''

''ஏய்.! எனக்கு செய்தி வரவேயில்லையேடா.. சரி நீ என்ன பண்ற''(இவருக்கு வெத்தல பாக்கு வச்சி அழைப்பாங்களா.???)

''ஏதோ ஆழ்வார் கோயில்னு சொன்னாங்க.. இன்னும் போகல.. நீ வேணா ஆபிஸ்க்கு போன் பண்ணி கேளு''(பெரிய ஆளா வருவடா..)

''சரி மச்சி.!! நான் பாத்துகிறேன்..''(எப்படி பாப்ப பாரு...)


அடங்க என்னடா நம்ம பேரு இல்லாம இதழ் வ…

சூப்பர் ஸ்டார் ரஜினியோட, அர்ஜூன் பெரிய ஆளு.!!

Image
எந்திரன் படத்துல ரஜினி இன்னொரு ரஜினி ரோபோ செய்வாரு பாத்தீங்களா.?? அப்படி பாக்கும் போது நம்ம மனசுல இந்த மாதிரி சொல்ற வேலையெல்லாம் பண்ற(முன்னடி பாதிய மட்டும் பாருங்க) ரோபோ உண்மையிலே இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு நிமிசம் நம்மல கனவு காணவே வச்சிடுச்சு. நாம ஆசப்பட்டதெல்லாம் நடந்திடுமா என்ன.??? ஆன இது நடந்திடுச்சு. ரொம்ப சந்தோசமா இருக்குல்ல.!!இதுல அத உருவாக்குனது அந்த படத்துல வர மாதிரி பெரிய விஞ்ஞானி இல்ல, ஒரு ஸ்கூல் பையன் தான்.. இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்குல்ல.!!! சரி என்னதான் அந்த பையன் பண்ணினார்னு பாப்போமா..???


இந்த ரோபாட்டுக்கு ரஜினியோட உருவம் இல்லாம இருக்கலாம் ஆனால் ரஜினி கஷ்டபட்ட அந்த உணர்ச்சிகள் பொருத்துற விசயத்த இந்த குட்டி விஞ்ஞானி அசால்ட்டா பண்ணிட்டார்னு நினைக்கும்போது ஷங்கரோட கிங்கா ஒரு சின்ன பையன் இருக்கார் நினச்சி ரொம்ப சந்தோசமா இருக்குல்ல.!!


இது உணர்ச்சிகள் மட்டும் உள்ள ரோபோர்ட் இல்ல, நாம என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய திறமை படைத்த ரோபோ.. எப்படினு யோசிக்கிறனீங்களா.?? இன்டர்நெட் வசதிய பொருத்தியிருக்கார் நம்ம குட்டி விஞ்ஞானி.

இதை செய்தது ‘டேராடன்’னில் இருக்கும் ‘டூன்’ …

அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்... (2)

Image
‘பார்க் பெஞ்ச்’சில் ஒரு பெண்..

 ‘ஹலோ’ என்று உரத்தகுரலை கேட்க இன்னும் எவரவர் திட்ட போகிறாரோ என்று மனதை வெம்பிகொண்டான்.  ‘கமான் டாக்’ என்னும் பாணியில் முகத்தில் தெம்பை வரசெய்துவிட்டு திரும்பி மானேஜரை நோக்கினான்.. ஆனால் மானேஜரின் பார்வை வேறொரு பக்கம்.. அவரின் பார்வை திசைகளில் கோடிட்டு பார்த்தால் அங்கே கம்பேனி முதலாளி..


தவறுதான் நடந்துவிட்டது இருந்தாலும் மனிதனுக்கு என்று சுயமரியாதைகள் உண்டு. அதைவிடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் குறைகளை சுட்டிகாட்டிகொண்டே ஓயாமல் திட்டிகொண்டிருந்தால் எவனும் பொருக்க மாட்டான்.. இனியொரு கடுஞ்சொல் அவனை தீண்டிட்டால் எரியும் எரிமலையாக பொங்கிடும் உள்ளடக்கிய கோபத்தில் அவரிடம்,
‘‘சார்.!! நான் வேணும்னு எதுவும் பண்ணல.. இது எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும்.. நான் போட்ட கணக்குபடி நமக்கு லாபம் மற்றும் டென்டர் கிடைக்க அந்த விலை ஏற்றது என நினைச்சேன்.. அதனால தான் அந்த விலையை போட்டேன்..’’ என ஓயாமல் தனக்கென்றிருந்த உரிமையையும் கோபத்தையும் கொட்ட முதலாளி தடுத்தார்..


‘‘நீ உருப்புடாம போறதுக்கு காரணம் என்ன தெரியுமா.??? உன் அவசரம், கோபம் எல்லாம் தான்.. கவர வாங்கினியே பிரிச்சி பாத்தியா.?…

பேர்ட் ரேஸ் (Bird Race)

Image
பேர்ட் ரேஸ்.. கொஞ்சம் வித்யாசமாக தான் இருக்கும்.. இது பறவைகளுக்கான பந்தயம் அல்ல.. மனிதர்கள் பறவைகளை தேடும் பந்தயம்..


ஒரு நாள் முழுவதும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில் அலைந்து திரிந்து கண்ணுக்கு தெரியும் பறவைகளை பற்றி குறிப்பெடுக்க வேண்டும்.

போட்டியாளர்களின் வசதிக்காக பறவைகளை பற்றிய தகவலோடு கூடிய ஒரு புத்தகம் அவர்களுக்கு வழங்கபடும். அதன் மூலம் அவர்கள் தாங்கள் கண்டது எந்த பறவை என்பதை சுலபமாக கணித்திட முடியும்.


இதில் பங்கேற்பவர்கள் ஒரு அணியாக செயல்பட வேண்டும்.. ஒவ்வொரு அணியிலும் 4 பேர் வீதம் இருக்க வேண்டும். பெரும்பாலான பங்கேற்பாளர்கள் இதை போட்டியாக கண்டிடாமல் ஒரு குடும்ப பொழுதுபோக்காக நினைக்கின்றனர். 5 வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இப்போட்டியில் ஆர்வமாக கலந்துகொண்டனர்.


கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி சென்னையில் கடந்து நான்கு வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 40 அணிகள் கலந்துகொள்ளும்.

இதில் குடும்பத்தோடு மட்டும் அல்லாமல் பள்ளி வாயிலாகவும் சில அணிகள் கலந்துகொண்டன. ஆல்காட் மெமோரியல் பள்ளியிலிருந்து மாண, மாஆணவியர் கலந்துகொண்டன…

அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்...

Image
முஸ்கி: இது கவிதையில்லீங்க.. ஒரு தொடர் கதை எழுதனும்னு ரொம்ப ஆசை.. அதான் தொடங்கியுள்ளேன்.. படிச்சுபுட்டு கருத்த சொல்லுங்க..


அலுவலகத்து அர்ச்சனைகள்...


ஒரு தொழிலை துவங்கும் முன் இறைவனை வழிபடுதல், ஒரு விசயத்துக்கு செல்லும்போது இந்த கலர் ஆடையை தான் உடுத்துவது, பூனை குறுக்கிட்டால் மேற்படி அடிவைக்காதது, நடக்க தெரியாமல் சறுக்கிவிட்டால் அபசகுணம் என்று சொல்வது என மூடர்கள் அனைவருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும்.. அவர்களை கண்டால் கொஞ்சம் மேல் உதடு உள்ளிழுத்து சிரிப்பு வருகிறது என அடிக்கடி சொல்லிடுவான் அவன்.. இப்படி எல்லாம் பேசும் அவன் பெரியாரின் கொள்ளு பேரன் என்று எண்ணிடவேண்டாம்.. இது போல் அவனுக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது.. அந்த ‘பார்க் பெஞ்சு’.. சுகம், துக்கம், ஆனந்தம் என அனைத்திலும் அவனை அரவணைத்த அவள் மடியில் கொஞ்சம் உறங்கிட்டால் சொர்க்கம் கண்டதாய் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டிடுவான்.


அன்று பரப்பரப்பாக அவனது அலுவலக வேலையை முடித்தே தீரவேண்டும் என வேலைசெய்துகொண்டிருந்தபோது மனிதனின் அரிய கண்டுபிடிப்பான தொலைபேசி மணி ஒலித்தது.. என்ன கொடுமையென வேலை செய்துகொண்டே அதை கையில் எடுத்தவனாய் பேசலானான்..

‘ஹலோ…

விசில் அடிச்சா இவ்வளவு பெருமை கிடைக்குமா.???

Image
கண்டிப்பாக ஏதாச்சும் சாதிக்கணும்கிற வெறி நம்ம எல்லார் மனசிலும் இருக்கும்.. ஆனா பலர் என்ன பணறதுன்னு தெரியாம இருப்பாங்க, சிலர் எனக்கு யாரும் உதவுலன்னு குறை சொல்லிட்டே இருப்பாங்க மீதி இருக்கும் சிலர் தான் தன் எண்ணத்த முடிப்பாங்க..அப்படி ஒரு எண்ணத்தை கொண்டு சிறப்பாக செயல்பட்டு இன்று ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல இடம்புடிச்சிருங்காங்க.. விசில் அடிச்சா கெட்ட பழக்கம், வீடு உருப்புடாம போயிடும்னு பல பேர் பலவிதமா சொன்னாலும் அந்த விசில் மூலமாகவும் பெரிசா சாதிக்கலாம்கிறத சென்னை எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் கல்லூரியில் B.Sc., Viscom படிக்கும் சுவேதா எனற இளம் மாணவி நிரூபித்துள்ளார்..


இவர் எல்லா விதமான பாடல்களையும் விசில் மூலம் பாடுவார்.. அதாவது விசில் அடித்துக்கொண்டே அந்த பாடலுக்கு ஏற்றவாறு ஏற்றம், இரக்கம், ராகம் அனைத்தையும் சிறப்பாக விசில் மூலமே செய்வார்.. அவரை காண சென்றபோது அவரது விசில் பாடல் மூலம் நம்மை வரவேற்றார்.. அவரிடம் நமது பேச்சு தொடங்கியது..


உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது எப்படி..?

நான் சின்ன வயசிலிருந்து பாட்டு பாட கத்துகிட்டியிருந்தன்.. அப்போ ஃபுளூட் சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்படிய…

நான் கண்ட 'மீசை'யின் பெயரென்ன.???

Image
ஆண்மையின் எடுத்துகாட்டாம்
வீரத்தின் அளவுகோலாம்
நேர்மையின் வெளிபாடாம்
அழகின் ஆணிவேராம்
மூக்கிற்கு கீழே
மேலுதடு மேலே அந்த ‘இஞ்ச்’ அளவில்
ஒட்டிகொண்டிருக்கும் ஆண்மகனின் மீசை..

சுருள் மீசை ஒன்றென்பர்
அரும்பு மீசையென்பர்
முறுக்கு மீசையென்பர்
கொழுத்த மீசை மற்றொன்று
இப்படி மீசைகளின் வகைகள் கணக்கில்லை..

முறுக்கி விட்டு
முறைத்து பார்த்தால்
கட்டபொம்மன் மீசையென்பர்..

குறைத்து வைத்து
சிரித்து பார்த்தால்
சாப்ளின் மீசையென்பர்..

வரிசை கோடிட்டு
ஈக்கள் மொய்த்தார் போல் இருந்தால்
பென்சில் மீசையாம்..

சிறுத்து வந்து
முனையில் பெருத்து நின்றால்
வீரப்பன் மீசையாம்..

கண்ணுக்கு தெரியாமல்
ஒட்டிஉரசி கொண்டால்
பருவ மீசையாம்..

கொசகொசவேன
காடாகி இருந்தால்
கொழுத்த மீசையாம்..

இன்னும் மீசைகளை
விளக்கி எடுத்துரைத்தார் பலர்..
ஆனால்,
நான் கண்ட மீசைக்கு பெயர் என்ன.???

அலுவலக இம்சையில்
அமைதி மறந்து
உள்ளத்தில் கோபம் மட்டுமே சுமந்து
வீட்டினுள் நுழைந்த என்னை
எல்லாத்தையும் மறந்து குதூகலிக்க செய்து
வரவேற்ற அந்த வெள்ளை மீசைக்கு என்ன பெயர்.???

5செ.மீ., டம்ளாரில்
முழுக்க கொடுக்கப்பட்ட பாலை
முற்றிலும் குடித்து ஏப்பத்தோடு
ஒட்டிய பாலாடைமூலம் முளைத்த
அந்த வெள்ளை மீசையோடிருந்த
குட்டி ப…

பணத்தை சுலபமாக எண்ணுவதற்கு...

Image
நமக்கு சில நேரத்துல ஆச்சர்யமா இருக்கும்.. கட்டு கட்டா நம்பகிட்ட பணம்.. அத எண்ணுறது எப்படினு யோசிச்சிட்டிருப்பீங்க.. அதுக்குதான் இப்ப மிஷின் வந்திடுச்சே அப்படிங்கிறவங்களுக்கு சொல்றன் அதெல்லாம் ரொம்ப ஓல்டு.. இப்ப இத பாருங்க..


இதுக்கு பெயர் "Counting Ring".. கட்டுகட்டா பணம் சேந்தா அத எண்ணுவதற்கு உபயோகப்படும் மோதிரம்னு சொல்லலாம்..

இதில் LED டிஸ்ப்லேவும், ஒரு பவர் பட்டணும், பேட்டரி போடுவதற்கான இடமும், நோட்டு படர்ந்து சென்றதா என கணிக்கும் உணர்வுகோளும் பொருத்தப்பட்டுள்ளது..

முதலில் அதை எடுத்து கட்டை விரலில் மோதிரம் போடுவது போல அணிய வேண்டும்..பவர் பட்டனை அழுத்திவிட்டு, பணத்தை புரட்ட வேண்டும் (படத்தில் காட்டியபடி) அதில் இருக்கும் IR ஸ்கேன்னர் எத்தனை நோட்டுகள் கடந்தது என கணக்கு கொள்ளும்.. உணர்வு காட்டி அத்தனை நோட்டுகளும் கடக்கிறதா என கணக்கு கொள்ளும்..


பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் LED டிஸ்ப்ளேவில் எத்தனை நோட்டுகள் இருந்தது என்னும் கணக்கு இருக்கும்..

வீறுகொள் விரலே.!!!

Image
ஏ விரலே..!!!
எஜமானர் கட்டளைக்கு
எள்ளளவும் குறையின்றி
அவர் எண்ணத்தை ஈடேற்றும் நீ
சொன்னதை செய்யும் ஜீவனிடத்தில்
முதலிடம் கொண்டுள்ளாய்..

இழுத்த இழுப்பிற்கு இணங்கி
இன்னல் கொடுத்தாலும் தாங்கி
மொட்டை தலையிலே மிருகமாய்
நகம் என்னும் பாதுகாவலன் வைத்துள்ளாய்..

உன்னை இருக பிடித்து
சண்டைக்கு இழுக்கும் நபரை
வெகுண்டு புரண்டும் 'நக'த்தாரை
எனை தாக்கிடாது காத்துவிடு..

உன்னை நீயே அழகாக்க
ரேகை பரிமாற்றம் கொண்டுள்ளாய்.!
சாட்சி சொல்லும் எஜமானுக்கு
சான்றாக உன் நகல் பதித்தாயே.!!

என்றும் ஒன்றாய் இருக்கும்
உங்கள் நட்பு எம்மை வியக்கிறது..
உள்ளங்கை அம்மாவால்
உணர்ச்சிகளில் ரத்தம் பாய்ச்ச
உன்னதமாய் உருவெடுத்த நீங்கள்
உணர்ச்சி மறந்தீரா.???

கல்லுக்குள்ளும் ஈரமுண்டென்பர்
ஆனால் உன்னுக்குள் அவ் அறிகுறியே அற்றுள்ளதே.!!
ஒன்றாய் திரிந்தவன் எதிரியானாலும்
அவன் பிரிவால் மாற்றான் துயர்கொள்வானே..
உயிருக்குயிராய் இருந்தாலும்
ஒருவர் பிரிவை சாதாரணமாக ஏற்றுகொள்ளும்
உங்கள் கொள்கை என்னை வியக்கிறதே.!!!

ரணம் கொண்டாலும் வருத்தம் அல்ல
சிரம் தாழ்ந்தாலும் மகிழ்ச்சி இல்லை..
நாய்களும் கூட அழுகுமே
காக்கைகள் கூட ஒன்றிணையுமே
அவர்களை விட தாழ்ந்தவனா நீ.???
உன் நணபன் பிரிவ…

இத படிச்சு திருந்துங்கப்பா...

Image
படிக்கிற கொஞ்ச பேருக்கும் ஹலோ சொல்லிகிடுறன்...

இன்னைக்கி நான் கட்டுரை எழுத போன சம்பவத்த பத்தி சொல்லபோறன்(ஸ்கூல் கட்டுரை இல்லைங்க.. இதழ் கட்டுரை..)

ஒரு நாள் என்னோட ஹெட்கிட்ட இருந்து போன்..


''தம்பி காஞ்சிபுரத்துல வைகுண்ட பெருமாள் கோயில் இருக்கு.. பாத்து ஜம்முனு போட்டோ புடிச்சு, கட்டுரை போட்டுடுங்க''

''சரிங்க சார்.. பக்காவா முடிச்சிடலாம்''னு சொல்லிபுட்டு அடுத்த நாள் காலையில எழுத்து டைம் பாக்குறன்.. 6.45.. அடடா லேட் ஆயிடுச்சே போச்சானுட்டு அவசர அவசரமா ஹீட்டர போட்டுட்டு இதர வேலைகள முடிச்சன்(இதர வேலைனா இதர வேலைதான்..)

எனக்கு ரொம்ப புடிச்ச சட்டைய எடுத்து இஸ்திரி போட ஆரம்பிச்சன்.. அடங்கொன்னியான்.!! டிவிய பாத்துகிட்டே பண்ணினதால சட்டை நஞ்சி நாராம்சமாயிடுச்சு..(சோ பேட்.!! என்னடா கூர் உன் நிலம இப்படி ஆயிடுச்சு..)


சரின்டு பேண்ட் எடுத்து ஜம்முனு இஸ்திரி போட்டுட்டு சட்டைய இஸ்திரி போட்டா நாராம்சமாயிடுதுன்னு வேற சட்டைய இஸ்திரி போடாமலேயே போட்டுகிடலாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டன்..(இஸ்திரி போட தெரியாத நாயி.. என்னா பில்டப் கொடுக்குது பாரன்..)

அப்பரம் போய் குளிச்சா(எனக்கு குளிக்கிர பழ…