Skip to main content

அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்... (3)


என்ன ஒரு வார்த்தை சொல்லிட்டாள் அவள்.!!!

அதிர்ந்து போன அவன் வார்த்தைகளில் அயர்ந்துபோயிருந்தவள் ஆர்பரிப்பு ஏதுமின்றி எழுந்து உட்கார்ந்தாள்.. முன்னால் படர்ந்திருந்து பின்னால் ஒடுங்கியிருந்த தலைமுடியை இழுத்து கொண்டையாக போட்டுகொண்டு கைகளின் விரல்நுனி கண்களை சீண்ட தெளிவாக விழித்த அந்த முட்டை கண்களில் கருவிழியில் அவனது உருவம் தெளிவுபட தெரிந்தது..


முகத்தில் ஆயிரம் சந்தோசங்கள் கூட வாயிலிருந்து வார்த்தைகள் தட்டுபட,

‘‘ஏய்.!! நீ.. நீ.. நான் இத எதிர்பார்க்கல டா’’

‘‘ஏன் இங்க வந்து இப்படி படுத்திருக்கே.!! தாத்தா எங்க.?’’

என கேள்விகளை தொடங்கினான்.. 

‘‘அங்க எனக்கு இருக்க பிடிக்கல அதான் இங்கேயே வந்துட்டன்.. தாத்தா ‘காந்தி தெருவுல’ ஒரு வீட்ல இருக்கார்.. நமக்கு இந்த பார்க் பெஞ்ச் தானே அம்மா அதான் இங்க வந்து கொஞ்ச உக்காந்தன் அப்படியே படுத்து தூங்கிட்டன்..’’
என கேள்விக்கு பதிலாய் அமைதியாக கூறியவள் தள்ளி நிற்பவனை உட்கார கட்டளையாக சொன்னாள்..  அருகில் நெருங்கி அமர்ந்தவன் அக்கால பேச்சுகளில் ஈடுபட்டான்..

அன்று,

அவள் இவனின் ஒன்பதாம் வகுப்பில் அறிமுகமானாள்.. அவன் என்றும் விரும்பிடாத அந்த கோவிலுள்ளே நண்பர்களின் படைசூழ தான் அவளை முதலில் கண்டான்.. வெட்டி பேச்சு, ‘சைட்’ அடிப்பது போன்ற இனிய பழக்கங்கள் அனைத்திற்கும் மிகவும் உரித்தான அவன் அன்றும் அவனது இனிய பழக்கத்தில் திளைத்திருந்தான். சிகப்பு நிற தாவணியில் சீவி பின்னப்பட்ட தலைமுடிகள், ஆயிரம் கதைகள் பேசும் முட்டை விழிகள், அளவுக்கு மீறாத உயரம், சிரிக்கையில் வெளிதெரியும் அந்த சிங்கபல் மீது கூடுதல் பல் அனைத்திலும் அவன் மனம் விரும்பும்படி அவளின் அழகு.. பார்த்த அடுத்த நொடியே அவளது அழகில் மயங்கிருந்தவன், எங்கும் எதிலும் தயங்காதவன் அவளிடம் ஒருவார்த்தை பேச தயங்கியிருந்தான். கூடியிருந்த நண்பர் பட்டாளம் இது காதல் என்னும் நோய் என உள்ளுக்குள் புகைந்திடும் மனதின் இறையாய் அவளை அள்ளிபோட்டனர்.. அழகில் மயங்கியவன் காதலாக மாறியதா என்னும் சிந்தையில் இருக்கையில் அவளாக இவனிடம் வந்து பேசினாள்.. ‘‘நான் உங்க எதிர்வீட்ல தான் இருக்கேன்.. உங்கள நேத்தி எங்க வீட்டு மாடியிலயிருந்த பாத்தேன்.. அப்பாகூட சண்ட போட்டுகிட்டிருந்தீங்க போல.. பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க உங்களுக்கு அம்மா இல்லனு.. நானும் அப்படிதான்.. அம்மா இல்லைனா வருத்தம் இருக்கசெய்யும், அம்மா இருந்திருந்தா அப்பாகூட இப்படி சண்ட போட்டிருக்கமாட்டீங்க.. உங்களுக்காவது அப்பா இருக்காங்க எனக்கு அப்பா அம்மா யாருமில்ல அந்த வலி எனக்கு தெரியும்.. உங்க வலியும் எனக்கு புரிஞ்சிது.. ஏதோ சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டன்.. நாம இனி நண்பர்கள் ஓகே வா..’’


என அவளின் நீண்ட பேச்சின் முடிவேஅவளின் வருத்தத்தை புரிந்து கொண்டு மங்கிய குரலில் தனது சம்மதத்தையும் சொன்னான்.. பின் அவளோடு அடிக்கடி பேச்சுகள் தொடர, வீட்டினில் சண்டைகள் குறைய அவன் இதுவரையிருந்த வாழ்க்கையிலிருந்து மாறுபட்டான்.. மனதிலிருக்கும் எண்ணத்தை தெளிவுபடுத்தி வெளிகாட்டும் இவள் அவன் வாழ்வின் காதலி அல்ல என்றும் உயிருக்குயிரான தோழிதான் என தன்னுள் ஏற்பட்ட, நண்பர்கள் விளைவித்த சஞ்சலத்தை விட்டெறிந்தான்..  தாத்தாவின் சொந்த வீட்டை விட்டு முப்பது வருடத்துக்கு முன்னர் சென்று இப்போ மீண்டும் திரும்பியுள்ளது முதல் தனது ஒன்பதாம் வகுப்பு படிப்பு, குடும்பத்தின் இழப்பு, எதிர்கால லட்சியம் என அனைத்தையும் பகிர்ந்தாள்.. அடிக்கடி அவர்களின் கூட்டுபேச்சு அமைவது அந்த பார்க் பெஞ்சில்.. இருவருடம் முன்பு தாத்தாவின் சிகிச்சைக்காக சொந்த வீட்டை விற்றுவிட்டு பெங்களூரு கிளம்பியவள் சிகிச்சைக்கு பின்னும் அங்கேயே தங்குவதாக கடிதம் போட்டுவிட்டு இன்றுதான் அவனது கண்களுக்கு தெரியவருகிறாள்.


முந்தைய காலத்தின் நினைவுகளை பற்றி பேச்சுகள் தொடர்ந்த இருவரும் பேச்சுகளின் இடையே பிரிந்திருந்த வருடங்களில் தனது வாழ்வின் முன்னேற்றத்தையும், தனது வாழ்க்கையில் இன்று கிடைத்த சந்தோசத்தையும் அவளிடம் கூறி மகிழ்ந்தான்.


பார்த்த சந்தோசத்தில் அவளின் தற்போது நிலையை கேட்க மறந்தவனாய்.. தாத்தாவின் உடல் நிலையை பற்றியும், என்ன வேலையில் ஈடுபட்டிருக்கிறாள் எனவும் வினவ தொடங்கினான்..


தாத்தாவின் உடல்நிலை தற்ப்போது கூடிவருவதை பற்றி விளக்கியவள் அடுத்து சொன்ன வார்த்தைகள் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி அவளை விட்டு இந்த நிமிடமே விலகிடலாமா.? என எண்ண செய்தது..

-ஏங்க அவன் ஏதோ குழப்பத்துல இருக்காங்க.. இப்ப எழுந்திரிக்கமாட்டன் போல.. அப்பரம் வந்து உக்காருவோம்..

முந்தைய பதிவுகளை படிக்க: பதிவு-1 பதிவு-2
             

Comments

 1. அருமை தொடருங்கள்..
  வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்..

  ReplyDelete
 2. அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 3. ஃஃஃஃஃஃசிகப்பு நிற தாவணியில் சீவி பின்னப்பட்ட தலைமுடிகள், ஆயிரம் கதைகள் பேசும் முட்டை விழிகள், அளவுக்கு மீறாத உயரம், சிரிக்கையில் வெளிதெரியும் அந்த சிங்கபல் மீது கூடுதல் பல் அனைத்திலும் அவன் மனம் விரும்பும்படி அவளின் அழகுஃஃஃஃஃ

  நல்லாயிருக்குங்க அதிலும இந்த வர்ணிப்பு ரொம்பவே நல்லாயிருக்கு...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

  ReplyDelete
 4. ஒன்பதாம் வகுப்பிலேயே என்னென்ன வேலையெல்லாம் பண்ணியிருக்கு பாரு...

  ReplyDelete
 5. கூர்...தொடர்ந்து படிச்சிட்டு வரேன்...விறுவிறுப்பாய் போகுது...அடுத்த பகுதி போடுங்க சீக்கிரம்..அப்புறம் கவிதை ப்ளீஸ்...

  ReplyDelete
 6. ஏன் ஃபோட்டோ எல்லாம் பிளாக் & ஒயிட்டா இருக்கு?

  ReplyDelete
 7. முத வெட்டு கமெண்ட் வாபஸ்

  ReplyDelete
 8. ம் ம் இப்போதான் கதை சூடு பிடிக்குது

  ReplyDelete
 9. அருமையாக போகிறது. தொடர்ந்து வாங்க நண்பா...

  ReplyDelete
 10. @சௌந்தர்:
  //முதல் ஆளா படிக்கிறோன்..//

  ஆமாங்க..


  //அருமை தொடருங்கள்..
  வாழ்த்துகளும் மற்றும் வாக்குகளும்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 11. @சித்ரா:
  //அருமை தொடருங்கள்.//
  நன்றி தோழி.!!

  ReplyDelete
 12. @பிரபா:நீங்க பண்ணாததா பிரபா.!!

  ReplyDelete
 13. @ஆனந்தி: தொடர்ந்து படிப்பதற்கு நன்றி ஆனந்தி..!!! கவிதைகள் சீக்கிரமே.!!! (என்னயும் நம்பி கவிதயெல்லாம் கேக்குறாங்கப்பா.!!)

  ReplyDelete
 14. @சி.பி:


  //போடு முத வெட்டை//

  ஹி ஹி..


  //ஏன் ஃபோட்டோ எல்லாம் பிளாக் & ஒயிட்டா இருக்கு?//

  வாழ்க்கையில் எல்லா மனிதரும் கருப்பு வெள்ளை கோடுகளில் அகப்பட்ட ஒற்றை போராளி தானே.!! எப்புடீ.???


  //முத வெட்டு கமெண்ட் வாபஸ்//

  புத்திசாலித்தனமான முடிவு.!!

  //ம் ம் இப்போதான் கதை சூடு பிடிக்குது//

  அய்யய்யோ பாஸ்.. கதை முடிஞ்சிடுச்சு..

  ReplyDelete
 15. @கருண்:நன்றி நண்பரே.!! தொடர்கிறேன் தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 16. இன்னைக்கு தான் உங்க பக்கத்துக்கு வந்தேன்.. சுப்பரா கதை போய்க்கிட்டு இருக்கு போல...

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

  கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 17. @ப்ரகாஷ்:சூப்பரா கதை போகுதா இல்லையானு நீங்க தான் சொல்லணும்.!! விபரங்களுக்கு சுட்டியை பாத்தாச்சு.. விவரமும் பெற்றாச்சு.. கேள்வி தானே கேட்டுடுவோம்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…