பேர்ட் ரேஸ் (Bird Race)


பேர்ட் ரேஸ்.. கொஞ்சம் வித்யாசமாக தான் இருக்கும்.. இது பறவைகளுக்கான பந்தயம் அல்ல.. மனிதர்கள் பறவைகளை தேடும் பந்தயம்..


ஒரு நாள் முழுவதும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில் அலைந்து திரிந்து கண்ணுக்கு தெரியும் பறவைகளை பற்றி குறிப்பெடுக்க வேண்டும்.

போட்டியாளர்களின் வசதிக்காக பறவைகளை பற்றிய தகவலோடு கூடிய ஒரு புத்தகம் அவர்களுக்கு வழங்கபடும். அதன் மூலம் அவர்கள் தாங்கள் கண்டது எந்த பறவை என்பதை சுலபமாக கணித்திட முடியும்.


இதில் பங்கேற்பவர்கள் ஒரு அணியாக செயல்பட வேண்டும்.. ஒவ்வொரு அணியிலும் 4 பேர் வீதம் இருக்க வேண்டும். பெரும்பாலான பங்கேற்பாளர்கள் இதை போட்டியாக கண்டிடாமல் ஒரு குடும்ப பொழுதுபோக்காக நினைக்கின்றனர். 5 வயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இப்போட்டியில் ஆர்வமாக கலந்துகொண்டனர்.


கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி சென்னையில் கடந்து நான்கு வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 40 அணிகள் கலந்துகொள்ளும்.

இதில் குடும்பத்தோடு மட்டும் அல்லாமல் பள்ளி வாயிலாகவும் சில அணிகள் கலந்துகொண்டன. ஆல்காட் மெமோரியல் பள்ளியிலிருந்து மாண, மாஆணவியர் கலந்துகொண்டனர். பயணிப்பதற்கு சொந்த வாகனங்களையோ இல்லை அரசு வாகனங்களையோ உபயோகித்துகொள்ளலாம்.

அவ்வாறு குறிப்பெடுக்கையில் இறுதியில் அவர்கள் தாங்கள் மிகவும் ரசித்த பறவை எது, விசித்திரமான பறவைகளில் தாங்கள் கண்டது எது என்பன போன்ற குறிப்புகளும் எடுத்து வைக்க வேண்டும். போட்டியில் பங்கெடுக்கும் பெரும்பாலானவர்கள் பள்ளிக்கரணை, வேடந்தாங்கல் போன்ற இடங்களுக்கும் இன்னும் பலவேறு இடங்களுக்கும் சென்று வந்ததாக தெரிவித்தனர்.

தமது அனுபவம் குறித்து ஒருவர் கூறுகையில், ‘‘ நாங்க இத போட்டியா நினைக்கல.. என்ஜாய் பண்ணனும்னு நினச்சோம்.. என்ஜாய் பண்ணினோம்.. ஒரே மரத்துல வாழுற ஆந்தை ஒண்ணு இருக்கு.. அதாவது எத்தன சந்ததி வந்தாலும் அந்த ஒரு மரத்த விட்டு வேறு எங்கும் போகாது..கால காலமா அங்கேயே தான் இருக்கும்.. நம்ம தேவைக்காக மரங்கல எல்லாம் வெட்டறத்தால அதுக எல்லாம் அழிஞ்சே போச்சு.. ஆனா இந்த போட்டியில கலந்துகிட்டதால அப்படி ஒரு ஆந்தைய எங்கலால பாக்க முடிஞ்சிது..’’ என்று சிலாகித்து சொல்கிறார்.

மேலும் இதில் கலந்து கொள்ள கோயம்புத்தூர், மங்களூர் போன்ற இடங்களில் இருந்தும் போட்டியாளர்கள் வந்திருந்தனர்.  6 மணிக்கு தங்களின் வேலை முடித்து சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அபிராமி சிதம்பரம் கம்யூனிட்டி ஹாலில் கூடினர்.

அங்கு அனைவரின் பட்டியலும் பரிசீலிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளை கண்ட சந்தோசத்தில் பலர் ஆர்பரிக்க, சிலர் குடும்பத்தோடு சென்றதில் குதூகலம் அடைந்ததாக சொல்லி மகிழ்ந்தனர். போட்டியில் அதிகமாக பறவைகளை கண்ட முதல் மூன்று அணிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது.

மேலும் விசித்திரமான பறவைகளை கண்டவற்களில் சிறந்தது எது என்பதை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தனியாக வாகனம் இன்றி பொது வாஆகனங்களில் சென்று பட்டியலெடுத்த அணிக்கும் பரிசு வழங்கப்பட்டது சிறப்பு.


நிகழ்ச்சியில் நியு காலேஜ்யை பயோடெக் துறையின் தலைவரான சுல்தான் அஹ்மது இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் காற்று எதற்காக தேவைபடுகிறது என கேட்க ஒருவர் மூச்சு விட என பதில் சொன்னார். அவரிடம் தனது மறுகேள்வியாக என்ன சாப்டீங்க என கேட்க சமோசா என பதிலளித்தவரை தொடர்ந்து, ‘‘நீங்க சமோசா சாப்டீங்க.. அதுல மைதா அதிகம்.. மைதாவுல கார்போஹைட்ரேட் அதாவது கார்பன்,ஆக்ஸைட், ஹைட்ரஜன் இருக்கும்.. இது மூன்றும் பொதுவாக காற்றில் இருக்கும்.. அப்படியானால் நீங்கள் உண்டது காற்றை தான்.. அது போல தான் வாழ்க்கை மரங்கள், மனிதன் என எல்லாம் சேந்தது தான்.. இதில் மரத்தை அழித்துவிட்டு பல உயிரினங்களை கெடுத்துவிட்டு நாம் மட்டும் இருந்தால் நல்லாயிருக்காது’’ என்று முதலில் சிரிக்கவும் பின்னர் சிந்திக்கவும் வைத்தார்.

பின்னர் பங்கெடுத்துகொண்ட குட்டீஸிடம் சென்று தங்கள் அனுபவத்தை கேட்கும் போது மழைலையே உருவாய், ‘‘ நிறைய பறவை பாத்தோம்.. அது சின்னதா குட்டியா இருந்துச்சு.. எங்க பாத்தன்னு மறந்துபோச்சு.. அது பேர் தெரியலையே.!!’’ என அழகாய் கூற அரங்கமே சிரிப்பு சத்தத்தால் சிலிர்த்தது..

ஒவ்வொரு ஆண்டும் எல்லாருடைய பட்டியலையும் ஒன்று சேர்த்து பார்த்தால் 200க்கும் மேற்பட்ட பறவைகள் சென்னையில் மட்டுமே கிடைக்கிறதாம்.. அவர்களுக்கான வாழ் வழிகள் நாம் அளித்திட தவறியதேன்.???

மேலும் தகவல்களுக்கு: 9962515479-சுதாகர்

Comments

 1. உண்மையையில் சந்தோம் படக்கூடிய விஷயம்..
  இன்று பறவையினங்கள் அழிந்து வரும் இன்றைய சூழலில் இது போன்ற போட்டிகள் பறவைகளின் வளர்ச்சிக்கும் அவற்றின் பாதுகாப்புக்கும் சிறந்ததாக அமையும்..

  கதிர் வீச்சால் ஒரு சில அறிய பறவையினங்கள் அழிந்து வருவதாக கேள்வி அவற்றின் பாதுகாப்புக்கும் சமுக ஆர்வளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இன்னும் நிறைய பறவை யினங்கள் தமிழகத்தில் வந்து தங்கிட வழிவகை செய்வோம்
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

  ReplyDelete
 3. நச்சினு நாலு ஓட்டு..
  ஏதோ என்னால முடிஞ்சது..

  ReplyDelete
 4. கேட்டிராத தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. @சௌந்தர்:நீங்கள் சொல்வது சரிதான்.. நன்றி சௌந்தர்

  ReplyDelete
 6. @சிவகுமார்:வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.!!!

  ReplyDelete
 7. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் மனிதன்.
  விட்டு விடுதலையாகி சிட்டுக் குருவியாய் மனம் சிறகடித்துப் பறக்கிறது இந்த போட்டியைக் கண்டு.!!

  ReplyDelete
 8. @இராஜி:உங்க சந்தோசம் வார்த்தையில் பளிச்சிடுது தேங்க்ங்க...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி

கானல் தேடல்