Skip to main content

இத படிச்சு திருந்துங்கப்பா...

படிக்கிற கொஞ்ச பேருக்கும் ஹலோ சொல்லிகிடுறன்...

இன்னைக்கி நான் கட்டுரை எழுத போன சம்பவத்த பத்தி சொல்லபோறன்(ஸ்கூல் கட்டுரை இல்லைங்க.. இதழ் கட்டுரை..)

ஒரு நாள் என்னோட ஹெட்கிட்ட இருந்து போன்..


''தம்பி காஞ்சிபுரத்துல வைகுண்ட பெருமாள் கோயில் இருக்கு.. பாத்து ஜம்முனு போட்டோ புடிச்சு, கட்டுரை போட்டுடுங்க''

''சரிங்க சார்.. பக்காவா முடிச்சிடலாம்''னு சொல்லிபுட்டு அடுத்த நாள் காலையில எழுத்து டைம் பாக்குறன்.. 6.45.. அடடா லேட் ஆயிடுச்சே போச்சானுட்டு அவசர அவசரமா ஹீட்டர போட்டுட்டு இதர வேலைகள முடிச்சன்(இதர வேலைனா இதர வேலைதான்..)

எனக்கு ரொம்ப புடிச்ச சட்டைய எடுத்து இஸ்திரி போட ஆரம்பிச்சன்.. அடங்கொன்னியான்.!! டிவிய பாத்துகிட்டே பண்ணினதால சட்டை நஞ்சி நாராம்சமாயிடுச்சு..(சோ பேட்.!! என்னடா கூர் உன் நிலம இப்படி ஆயிடுச்சு..)


சரின்டு பேண்ட் எடுத்து ஜம்முனு இஸ்திரி போட்டுட்டு சட்டைய இஸ்திரி போட்டா நாராம்சமாயிடுதுன்னு வேற சட்டைய இஸ்திரி போடாமலேயே போட்டுகிடலாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டன்..(இஸ்திரி போட தெரியாத நாயி.. என்னா பில்டப் கொடுக்குது பாரன்..)

அப்பரம் போய் குளிச்சா(எனக்கு குளிக்கிர பழக்கமெல்லாம் இருக்குல்ல) ஹீட்டர் ஒர்க் ஆகல போலிருக்கு ஐஸ் மழைய போல கொட்டுனாப்புல இருக்கு..(டே.! சுவிச் போட்டியாடா.???)

அப்படியே குளிருகிட்டே குளிச்சிட்டு வந்து சட்டை, பேண்ட் எடுத்து மாட்டினா.. அடப்பாவிகளா.!!! பேண்ட்ல இருந்த பட்டன காணுமே.!!(நான் ஊருக்கு போகுறது புடிக்காம யாரோ செய்யிற சதி இது..)

சரின்டு வேற இஸ்திரி போடாத பேண்ட் எடுத்து மாட்டிகிட்டு ஸ்டாப்ல போய் பஸ்காக நின்னன்.. பின்னாடி பயங்கர கூட்டம்.. பஸ் வந்த அடுத்த நிமிசம் ஸ்பைணர் மேன் மாதிரி பறந்து போய் பஸ்ல எடத்த புடிச்சு உக்காந்து உஸ்னுட்டு பாத்தா, சட்டையில ரெண்டு பட்டன பிச்சு எடுத்துட்டிருக்கானுங்க..(டே.. பஸ் கம்பிய புடிச்சு ஏற சொன்னா என் சட்டைய புடிச்சு ஏன்டா ஏறுனிங்க..??)

லாஸ்ட் ஸீட்ல தான் இடம் கிடச்சுது..(இடத்த புடிச்சோம்ல.. நாங்கெல்லாம் கிங்..)

சரியா 8கி.மீ., தாண்டி போயிட்டிருக்கும்போது பஸ்லயிருந்து தண்ணியா கொட்டுச்சு..(பஸ் வாந்தி எடுக்குதோ.??) அடங்க.. ரேடியேட்டர தண்ணியெல்லாம் கொட்டிபோச்சு.. வண்டி நகராதுன்டு வேற பஸ்ல ஏத்தி உட்டானுங்க..(நோ ப்ளேஸ்.. ஸ்டான்டிங்.!!)


சரியா வலஜாபாத் போகும்போது டபக்கு டபக்குனு ஏதோ சத்தம்.. எல்லாம் அலண்டுட்டாங்க.. நாங்க அலறுவோமா..(பெரிய இவரு..) ஆனா பஸ் நின்னுப்போச்சு.. டையர் கிழிஞ்சிடுச்சான்.. இன்னும் போனா நல்லா டர்னு கிழிஞ்சிடுமாம்... மாத்த நேரமாகுமாம்.. பட் அங்க கோவில மூடிடுவாங்களே.!!

சரின்டு வேற பஸ் திரும்பி ஏற.. சர்கஸ் காரங்க மாதரி ஒத்த விரல் அப்பரம் ஒத்த கால்ல நின்னுகிட்டு வெளிய தொங்கிகிட்டு இருந்தன்..(என்ன மாதரி.. நீ அதானடா..!!!)

ஸோ பேட்.. எப்படியோ போய் காஞ்சிபுரத்துல நின்னுகிட்டு ஒரு ஆளுகிட்ட வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு எப்படி போறதுன்னு கேட்டா நேரா போ அப்பணியே ரைட்ல வரும் பாரு என்றார்.. நானும் போனன்.. ஆனா வந்தது சயன பெருமாள் கோயில்..(யோவ்.. நான் உனக்கு என்னயா துரோகம் பண்ணினன்..???)

சரின்டு நடந்தா வேலைக்காகாதுன்டு ஆட்டோல போய் கோவில் முன்னாடி இறங்கினா கோவில் துறந்திருந்தது.. ஐ ஆம் ஹேப்பி(உள்ள போங்க ராசா..)


உள்ள போனா பூசாரிய காணும்.. அடபாவிகளா.. ஆனா அவரு வீடு பக்கத்துல தான் இருக்குன்டு அங்க போய் அவர கூட்டுகிட்டு வந்து வரலாறு எல்லாம் குறிப்பு எடுத்துகிட்டு போட்டோ எடுக்கனும்னு சொன்னா அவர், ''தம்பி வெளி ப்ரகாரத்த வேணா போட்டோ எடுத்துக்கோங்க.. உள் கதவ எல்லாம் துறக்க முடியாது ஏன்னா இதே தெருவுல ஒரு சாவு நடந்திருக்கு.. அதனால இன்னைக்கு கோயில் அர்ச்சனையே கிடையாது.'' என்றார்.(அடப்பாவி.. நீ சாகுறத்துக்கு வேற நாளே கிடைக்கலயா.??)

அப்பரம் சரின்டு அடிச்சு புடிச்சு அவருகிட்ட பழைய போட்டாவ வாங்கிட்டு வந்து சேந்தன்.. காலையிலேயே அத்தன தடங்கல் நடந்துதே அப்பயாச்சும் புரிஞ்சிக்க வேணாமா கூர்.. இனிமேலாவது சாமி இல்ல, சாஸ்திரம் இல்லன்னு பேசாத..(இதுக்கெல்லாம் அஞ்சுவோமா.???)

நான் தப்பு செய்யறதா தோணல அதனால நான் திருந்தமாட்டன்.. உங்களுக்கு வேணும்னா திருந்திக்கோங்க..(அட்வைஸ் பண்றங்க..)

இவ்வளவு கஷ்டபட்டு எழுதின அந்த கட்டுரைய படிக்க.. Vaikunta perumal Temple

Comments

 1. நல்லாதானே இருக்கு... அப்புறம் என்ன... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. @சரவ்:பாஸ்.. அதெல்லாம் நல்லா இருக்கட்டும்.. அதுக்காக நான் பட்ட கஷ்டத்த பத்தி யோசிக்கவே மாட்டீங்களா.??? சோ பேட்..

  ReplyDelete
 3. நோகாம நுங்கு தின்ன ஆசையோ...?;)

  உங்க பிள்ளைகளிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கலாம்...நான் இப்டி அயர்ன் பண்ணாத டிரஸ் போட்டு கஷ்டப்பட்டு "முன்னுக்கு" வந்தேன்னு.... ;)

  ReplyDelete
 4. பயணங்கள் முடிவதில்லை.

  ReplyDelete
 5. @என்றென்றும்16: அப்படியெல்லாம் இல்லைங்க.. ஒரு இடத்துக்கு போகும்போது இப்படி கஷ்டம் ஏற்பட்டா எப்படிங்க..

  ReplyDelete
 6. @இராஜராஜேஷ்வரி:உண்மைதான்..

  ReplyDelete
 7. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

  ReplyDelete
 8. நருக்குனு 4 வோட்டு போட்டோமில்ல..

  ReplyDelete
 9. ஹஹாஹ் . பழைய பதிவை இப்படிக் கூட பிரபலப் படுத்தலாமா ?? # டவுட்டு

  ReplyDelete
 10. @எல் கே:நாங்களும் யோசிப்போம்ல.!!

  ReplyDelete
 11. Mundakanni amman kovilla kuzh outhurangalam.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…