வீறுகொள் விரலே.!!!


ஏ விரலே..!!!
எஜமானர் கட்டளைக்கு
எள்ளளவும் குறையின்றி
அவர் எண்ணத்தை ஈடேற்றும் நீ
சொன்னதை செய்யும் ஜீவனிடத்தில்
முதலிடம் கொண்டுள்ளாய்..

இழுத்த இழுப்பிற்கு இணங்கி
இன்னல் கொடுத்தாலும் தாங்கி
மொட்டை தலையிலே மிருகமாய்
நகம் என்னும் பாதுகாவலன் வைத்துள்ளாய்..

உன்னை இருக பிடித்து
சண்டைக்கு இழுக்கும் நபரை
வெகுண்டு புரண்டும் 'நக'த்தாரை
எனை தாக்கிடாது காத்துவிடு..

உன்னை நீயே அழகாக்க
ரேகை பரிமாற்றம் கொண்டுள்ளாய்.!
சாட்சி சொல்லும் எஜமானுக்கு
சான்றாக உன் நகல் பதித்தாயே.!!

என்றும் ஒன்றாய் இருக்கும்
உங்கள் நட்பு எம்மை வியக்கிறது..
உள்ளங்கை அம்மாவால்
உணர்ச்சிகளில் ரத்தம் பாய்ச்ச
உன்னதமாய் உருவெடுத்த நீங்கள்
உணர்ச்சி மறந்தீரா.???

கல்லுக்குள்ளும் ஈரமுண்டென்பர்
ஆனால் உன்னுக்குள் அவ் அறிகுறியே அற்றுள்ளதே.!!
ஒன்றாய் திரிந்தவன் எதிரியானாலும்
அவன் பிரிவால் மாற்றான் துயர்கொள்வானே..
உயிருக்குயிராய் இருந்தாலும்
ஒருவர் பிரிவை சாதாரணமாக ஏற்றுகொள்ளும்
உங்கள் கொள்கை என்னை வியக்கிறதே.!!!

ரணம் கொண்டாலும் வருத்தம் அல்ல
சிரம் தாழ்ந்தாலும் மகிழ்ச்சி இல்லை..
நாய்களும் கூட அழுகுமே
காக்கைகள் கூட ஒன்றிணையுமே
அவர்களை விட தாழ்ந்தவனா நீ.???
உன் நணபன் பிரிவால்
எஜமானர் அழுதாலும்
கல் போல இருக்க காரணம் என்ன.???

பொறுமையின் சிகரமாய் விரல் தொடங்கியது...

எனக்கு உயிர் கொடுத்த எஜமான்
உரிமை அளிக்க மறந்திட்டார்..
அழவில்லை எஜமானார்
நடித்துகாட்டுகிறார் பெரிய நடிகனாக..
வருத்தம், மகிழ்ச்சி இருந்தாலும்
வெளிகொணர மாட்டோம்..
என் நண்பன் பிரிந்த இடத்தை
நான் தொட்டு பார்த்து செல்லும் நொடி
உள்ளுக்குள் ஆயிரம் வருத்தம்
உமக்கென்ன அது தெரியும்..???

பரிதாபசிரிப்புடனே தொடர்ந்தேன் நான்...

விரலே.!!
உந்தன் உரிமை மறந்தாயோ .???
அவன் வசதிக்காக
உனை உபயோகிக்கும் எஜமானை
எதிர்த்து உரிமை கேட்டால் என்ன.???
உன் நட்பை பிரித்த மாற்றானை
எதிர்த்து கேட்க சொல் எஜமானை..
மீதம் நண்பரை காத்துகொள்
வீறுகொண்டு எழுந்துவா
உனது வாழ்க்கையும் உன்னிடத்தில்
உன் நண்பர் வாழ்க்கையும் உன்னிடத்தில்
ஒன்று கூடி போராடு
எஜமானரை புரட்டி போடு...!!!
அறியாமை விரலே
அநியாயத்திலிருந்து விழித்தெழு..!!!

Comments

 1. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

  ReplyDelete
 2. உனது வாழ்க்கையும் உன்னிடத்தில்
  உன் நண்பர் வாழ்க்கையும் உன்னிடத்தில்
  ஒன்று கூடி போராடு
  எஜமானரை புரட்டி போடு...!!!
  அறியாமை விரலே
  அநியாயத்திலிருந்து விழித்தெழு..!!!


  .... Super!

  ReplyDelete
 3. @கருண்: தேங்க்ஸ் பாஸ்.. பாத்தன்.. கருத்தும் சொல்லிட்டன்..

  ReplyDelete
 4. விரலே.!!
  உந்தன் உரிமை மறந்தாயோ .???
  அவன் வசதிக்காக
  உனை உபயோகிக்கும் எஜமானை
  எதிர்த்து உரிமை கேட்டால் என்ன.??:

  அருமை அருமை ...

  ரசித்து படித்தேன்

  ReplyDelete
 5. @பார்வையாளன்: மிக்க நன்றி நண்பரே.!!!

  ReplyDelete
 6. // பொறுமையின் சிகரமாய் விரல் தொடங்கியது... //

  நான் கூட பொறுமையின் சிகரம்தான்... முழுக்கவிதையையும் படித்திருக்கிறேனே...

  ReplyDelete
 7. ஹாய் கூர்மதி...:))ம்ம்..:))) (நீங்க என் போஸ்ட் இல் போட்ட ம்ம் இல்லை..இது புதுசு...ஹ ஹ..)

  செம creativity உங்களுக்கு.. விரலை பத்திய அழகான கவிதை...அதை நீங்க கேள்வி கேட்பது போலே...அது பதில் சொல்வது போலே னு...அசத்தல்...ரொம்ப பிடிச்சது...அப்புறம் தலைப்பில் மட்டும் அந்த வீரு ங்கிறதை வீறு ன்னு மாத்திடுங்க...:)))

  ReplyDelete
 8. @பிரபா:
  எவ்வளவு பெரிய விசயம் பண்ணிட்டீங்க..!!!
  சின்னதா எழுத முடியல பிரபா..
  தோணும்போது சின்னதா இருக்கிறது எழுதும் போது பெருசாயிடுது.. சோ பேட்..

  ReplyDelete
 9. @ஆனந்தி: உங்க //ம்ம்// அர்த்தம் புரியுது..

  //ரொம்ப பிடிச்சது...//

  தேங்க்ஸ்..

  //வீறு ன்னு மாத்திடுங்க...:))//

  எனக்கு முதல்லயே டவுட்டு இருந்துச்சு.. பக்கத்துல ஒரு ஃப்ரண்ட் கிட்ட கேட்டப்ப கண்டிப்பா 'வீரு'ன்னு தான் ஒரும்னு சொன்னார்.. அவர நான் அப்பரம் டீல் பண்ணிகிடுறன்..

  ReplyDelete
 10. அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்..
  இதில் ஒரு உள்கருத்து ஒளிந்துள்ளது..
  தற்போதைய சூழ்நிலையை ஒப்புமைபடுத்தி பார்த்தால் அது புரியும்..
  புரியவில்லை என்றால் எனது அடுத்த பதிவில் சொல்கிறேன்..

  ReplyDelete
 11. அநியாயத்திலிருந்து விழித்தெழு..!!!//
  உள் கருத்தை வெளியிடுங்கள்.

  ReplyDelete
 12. @இராஜராஜேஷ்வரி: ஆமாங்க மறந்தே போய்ட்டன்.. இந்த கவிதையில, விரல தமிழர்கள்னும், பிரிந்த விரல தமிழக மீனவர்கள் என்றும், எசமானரை அரசியல்வாதியென்றும், பிரித்தோரை இலங்கையர் என்றும் ஒப்புமைபடுத்தி படிச்சு பாருங்களேன்..

  அப்பரம் ஞாபக படுத்தியதுக்கு தேங்க்ஸ்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!