நான் கண்ட 'மீசை'யின் பெயரென்ன.???ஆண்மையின் எடுத்துகாட்டாம்
வீரத்தின் அளவுகோலாம்
நேர்மையின் வெளிபாடாம்
அழகின் ஆணிவேராம்
மூக்கிற்கு கீழே
மேலுதடு மேலே
அந்த ‘இஞ்ச்’ அளவில்
ஒட்டிகொண்டிருக்கும் ஆண்மகனின் மீசை..

சுருள் மீசை ஒன்றென்பர்
அரும்பு மீசையென்பர்
முறுக்கு மீசையென்பர்
கொழுத்த மீசை மற்றொன்று
இப்படி மீசைகளின் வகைகள் கணக்கில்லை..

முறுக்கி விட்டு
முறைத்து பார்த்தால்
கட்டபொம்மன் மீசையென்பர்..

குறைத்து வைத்து
சிரித்து பார்த்தால்
சாப்ளின் மீசையென்பர்..

வரிசை கோடிட்டு
ஈக்கள் மொய்த்தார் போல் இருந்தால்
பென்சில் மீசையாம்..

சிறுத்து வந்து
முனையில் பெருத்து நின்றால்
வீரப்பன் மீசையாம்..

கண்ணுக்கு தெரியாமல்
ஒட்டிஉரசி கொண்டால்
பருவ மீசையாம்..

கொசகொசவேன
காடாகி இருந்தால்
கொழுத்த மீசையாம்..

இன்னும் மீசைகளை
விளக்கி எடுத்துரைத்தார் பலர்..
ஆனால்,
நான் கண்ட மீசைக்கு பெயர் என்ன.???

அலுவலக இம்சையில்
அமைதி மறந்து
உள்ளத்தில் கோபம் மட்டுமே சுமந்து
வீட்டினுள் நுழைந்த என்னை
எல்லாத்தையும் மறந்து குதூகலிக்க செய்து
வரவேற்ற அந்த வெள்ளை மீசைக்கு என்ன பெயர்.???

5செ.மீ., டம்ளாரில்
முழுக்க கொடுக்கப்பட்ட பாலை
முற்றிலும் குடித்து ஏப்பத்தோடு
ஒட்டிய பாலாடைமூலம் முளைத்த
அந்த வெள்ளை மீசையோடிருந்த
குட்டி பையனின் மீசைக்கு என்ன பெயர்.???

Comments

 1. so sweet! ரசித்தேன்.

  ReplyDelete
 2. Pl.also see

  http://tvrk.blogspot.com/2008/06/blog-post_10.html

  ReplyDelete
 3. //நான் கண்ட மீசைக்கு பெயர் என்ன.???//

  அசத்தலா இருக்கு...

  ReplyDelete
 4. அது 4.5 பால் மீசை...

  ReplyDelete
 5. ஐயோ...cho chweet ...ரொம்ப lovely கூர்மதி...ரொம்ப relaxed ஆன அழகான கவிதை..ரொம்பவே ரசிச்சு படிச்சேன்...போன தடவை விரல்களை வச்சு..இந்த வாட்டி..உங்க வீட்டில் யாரோ குட்டி பையன் பால் குடிச்சு வாய் பூராவும் பரவி இருந்ததை பார்த்து இந்த கவிதையை அழகா வடிசிருக்கிங்கனு நினைக்கிறேன்...நல்லாவே வந்திருக்கு கூர்மதி...இப்படி அடிக்கடி ரிலாக்ஸ் ஆன கவிதைகளும் எழுதுங்க..(நேயர் விருப்பம்..::) )

  ReplyDelete
 6. @சித்ரா:நன்றிங்க.. தொடர்ந்து வாங்க

  ReplyDelete
 7. @ராதாகிருஷ்ணன்:பார்த்தேன் பாஸ்... ஒரு தொடர்பை பிடித்த நமது கவிதை வேறு வழிகளில் முடிகிறது..

  ReplyDelete
 8. @நாஞ்சில் மனோ: நன்றி மனோ சார்..

  ReplyDelete
 9. @பிரபா:இது என்னபா கணக்கு.???

  ReplyDelete
 10. @ஆனந்தி: நீங்க நினச்சது சரிதான்.. எங்க மாமா பையன் தான் அது.. நேயர் விருப்பம் பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.. போன தடவ எழுதின விரல் பற்றிய கவிதை விரல்-தமிழர்கள், எஜமான்-அரசியல்வாதிகள், பிரிந்த விரல்-மீனவர்கள், பிரித்தவர்-இலங்கையர் என்னும் நோக்கில் எழுதியிருந்தேன்..இது யாரும் புரியும் வகையில் எழுதாமல் தவறு செய்திட்டேன்..

  ReplyDelete
 11. மீசைய வளர்க்க நாங்க படும்பாடு ....

  ReplyDelete
 12. நீங்கள் எழுதியிருப்பது என்னை மீண்டும் கவிதைக்கு அருகில் அழைத்து வந்திருக்கிறது. நன்றி! அழகு!!

  ReplyDelete
 13. @கே.ஆர்.பி.செந்தில்:இதெல்லாம் ஓவர் பாஸ்.. நான் மட்டும் மீசைய வழிச்சுவிட்டுட்டு ஷாருக்கான் மாதிரியா இருக்கன்..

  ReplyDelete
 14. @சேட்டைக்காரன்:இது ஒரு பதிவு எழுதுபவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வார்த்தைகள் நண்பரே.!!! நன்றி.. என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு..

  ReplyDelete
 15. நல்லாயிருக்கு மீசை..:)

  ReplyDelete
 16. ஆஹா மீசைகளின் வளம் அருமை நண்பரே ...

  தில்லுமுல்லு படத்தில் ரஜினி சார் மீசைக்கு ஒரு விளக்கம் கொடுப்பாரே தேங்காசீநிவாசன் சார்கிட்ட அது உண்மையா பொய்யா பாஸ் ஏன்னா நான் பார்த்தவரைக்கும் மீசைகளும் அவரவர் குணங்களை உணர்த்துகிறது

  ReplyDelete
 17. ரொம்ப அழகான கவிதை...

  ReplyDelete
 18. முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
  எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

  ReplyDelete
 19. தம்பி கூர்மதியன் சொன்னது…

  நீங்க புது பதிவு போட்டா எனக்கு அப்டேட் ஆகமாட்டேங்குது பாஸ்..

  இப்ப உங்க பதிவு..

  நல்லாயிருக்கு பாஸ்..///

  என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
  என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
  See,
  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 20. கவிதை அருமை... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 21. ///////அலுவலக இம்சையில்
  அமைதி மறந்து
  உள்ளத்தில் கோபம் மட்டுமே சுமந்து
  வீட்டினுள் நுழைந்த என்னை
  எல்லாத்தையும் மறந்து குதூகலிக்க செய்து
  வரவேற்ற அந்த வெள்ளை மீசைக்கு என்ன பெயர்.???///////
  நல்ல வரிகள்..
  கவிதை அருமை...
  இதையும் கொஞ்சம் பாருங்கள்..

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_10.html

  ReplyDelete
 22. @பவன்:யார் மீசை பாஸ்.??? அழைப்பை ஏற்று வந்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 23. @தினேஷ்:வாங்க நண்பரே.!! இந்த கருத்தை விமர்சிக்கும் தகுதி என்கிட்ட இல்ல.. ஆனா மீசைகள் குணத்தை வெளிபடுத்துவது உண்மை என்றே நினைக்கிறேன்..

  ReplyDelete
 24. @தோழி பிரஷா: நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..

  ReplyDelete
 25. @வெறும்பய:நன்றி நண்பரே.!! தொடர்ந்து வாருங்கள்..

  ReplyDelete
 26. @மழலை:கண்டிப்பா வரேன்..

  ReplyDelete
 27. @கருண்:என்னடா நண்பர் வலைப்பூவுல ஒரு புதிய பதிவும் இல்லையேன்னு பாத்தன்.. இதான் காரணமா... ஓகே ஓகே..

  ReplyDelete
 28. @சௌந்தர்:நன்றி நண்பரே.!! தொடர்ந்து வாருங்கள்..

  ReplyDelete
 29. @பாட்டு ரசிகன்:பார்த்தேன் நண்பரே.!! வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 30. http://kavithaiveedhi.blogspot.com/2011/02/blog-post_11.html

  இந்த கவிதையும் படிச்சிட்டு கருத்து சொல்லுங்க நண்பரே..

  ReplyDelete
 31. கவிதையா

  இல்லை

  மீசையின்

  விவரங்களா..???

  ஆனால் நல்லா இருக்கு அண்ணா

  ReplyDelete
 32. @சௌந்தர்:படித்தேன் நண்பரே.!!

  ReplyDelete
 33. வணக்கம் கூர்மதியான்.அழகான சிந்தனை கவியாகியிருக்கிறது.கடைசில என்ன பேர் வச்சீங்க அந்த மீசைக்கு !

  ReplyDelete
 34. @ஹேமா: அந்த மீசைய பாலாடை மீசைன்னு சொல்லிக்கோங்க..

  ReplyDelete
 35. என் குழந்தைகளும் திருநீரில் மீசை வரைந்து விளையாடிய காலம் நினைவில் மலர்ந்தது.

  ReplyDelete
 36. அன்பின் தம்பி கூர்மதியன் - பல்வேறு மீசைகளை வைத்து ஒரு கவிதை - நச்சென்ற இறுதி வரிகள் - எதிர்பாரா திருப்பம் - திறமை பளிச்சிடுகிறது - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!