விசில் அடிச்சா இவ்வளவு பெருமை கிடைக்குமா.???கண்டிப்பாக ஏதாச்சும் சாதிக்கணும்கிற வெறி நம்ம எல்லார் மனசிலும் இருக்கும்.. ஆனா பலர் என்ன பணறதுன்னு தெரியாம இருப்பாங்க, சிலர் எனக்கு யாரும் உதவுலன்னு குறை சொல்லிட்டே இருப்பாங்க மீதி இருக்கும் சிலர் தான் தன் எண்ணத்த முடிப்பாங்க..அப்படி ஒரு எண்ணத்தை கொண்டு சிறப்பாக செயல்பட்டு இன்று ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல இடம்புடிச்சிருங்காங்க.. விசில் அடிச்சா கெட்ட பழக்கம், வீடு உருப்புடாம போயிடும்னு பல பேர் பலவிதமா சொன்னாலும் அந்த விசில் மூலமாகவும் பெரிசா சாதிக்கலாம்கிறத சென்னை எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் கல்லூரியில் B.Sc., Viscom படிக்கும் சுவேதா எனற இளம் மாணவி நிரூபித்துள்ளார்..


இவர் எல்லா விதமான பாடல்களையும் விசில் மூலம் பாடுவார்.. அதாவது விசில் அடித்துக்கொண்டே அந்த பாடலுக்கு ஏற்றவாறு ஏற்றம், இரக்கம், ராகம் அனைத்தையும் சிறப்பாக விசில் மூலமே செய்வார்.. அவரை காண சென்றபோது அவரது விசில் பாடல் மூலம் நம்மை வரவேற்றார்.. அவரிடம் நமது பேச்சு தொடங்கியது..


உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியது எப்படி..?

நான் சின்ன வயசிலிருந்து பாட்டு பாட கத்துகிட்டியிருந்தன்.. அப்போ ஃபுளூட் சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்படியே கொஞ்சம் கொஞ்சம் நான் விசில் அடிச்சிகிட்டிருக்கும்போது நாம ஏன் இத ஃபுளூட்டோட சம்பந்தபடுத்தி பண்ணகூடாதுன்னு தோணுச்சு.. அப்படி உருவானதுதான் இந்த எண்ணம்..

எந்த மாதிரி பாடல் எல்லாம் நீங்க பாடுவீங்க..?

நான் ‘சாதக பறவைகள்’னு ஒரு சங்கீத குழுவுல இணைந்து பாட்டு பாடிகிட்டு வர்றேன்.. அதனால எல்லா விதமான பாடலையும் வாயாலையும் சரி விசிலாலையும் சரி பாடுவேன்..


உங்களுக்கு வீட்டிலயிருந்து எந்த அளவுக்கு சப்போர்ட் இருந்தது..?

பொதுவா எல்லார் வீட்லேயும் ஒரு பொண்ண இந்த மாதிரி விசில அடிக்க போவ சொல்றதுன்னா தடுக்க தான் செய்வாங்க.. ஆனா எங்க அப்பா சுரேஷ்ம் சரி, எங்க அம்மா சுஜாதாவும் சரி எனக்கு ரொம்ப உதவி பண்ணுனாங்க.. அவங்க ஆசையே நான் இதுல பெரிய ஆளா வரணும்கிறது தான்..

எந்த மாதிரி பாராட்டுகள் உங்களுக்கு கிடச்சிருக்கு..?

ஜானகி, வாணி ஜெயராம் அம்மா கிட்ட இருந்து அவார்ட்ஸ் வாங்கியிருக்கன்.. சினிமா கலை மன்றம் சார்பாக ‘Gold is Gold’ என்னும் விருதும் கொடுத்தாங்க.. ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ல நாங்க விசிலர்ஸ் அசோசியேஷன் மூலம் 48 பேர் சேர்ந்து ‘சாரே ஜஹான்சே’ பாடலை விசில் மூலம் பாடினதால எங்க பேர் இடம்புடிச்சுது.. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..எந்த மாதிரி ஸ்டேஜ் ஏறியிருக்கீங்க..?

இதுவரைக்கும் ஸ்டேஜ் ப்ரோக்ராம்னு மட்டும் சொன்னா 600க்கும் மேல பண்ணியிருக்கன்.. அதுமட்டுமில்லாம பல தனியார் தொலைக்காட்சியில பல ப்ரோக்ராம் பண்ணியிருக்கன்.. 5 முறை இலங்கைக்கு போய் நிகழ்ச்சி செய்திருக்கேன்.. ஒரு முக்கியமான விசயம்.. சீனாவுல நடக்கப்போற இன்டர்நேஷனல் விசிலர்ஸ் கான்ஃபரன்ஸ்ல இந்தியாவ நான் தான் ரெப்ரசன்ட் பண்ணபோறன்..


எதிர்காலம்..?

விசில்ல க்ளாசிக்கல் பண்றது கஷ்டம்.. அதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருக்கன்.. அதுமட்டுமில்லாம கின்னஸ்ல இடம்புடிக்க கடுமையா உழைச்சிகிட்டிருக்கன்..


கின்னஸ்லனு சொன்னீங்களே.. என்ன புதுசா செய்யபோறீங்க..?

உலகத்துல இருக்குற நாடுகள் அனைத்தின் தேசிய கீதங்களையும் விசிலாலையே பாடப்போறன்.. கண்டிப்பாக இதநான் செஞ்சி முடிப்பேன்..

உங்களுக்கு இருக்குற இந்த விசில் அடிக்கற பழக்கத்த பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..?

பசங்க எல்லோரும் விசில் அடிச்சி பொண்ணுங்கள கிண்டல் பண்ணுவாங்க.. ஆனா அது ஒரு கலைன்னு யாருக்குமே தெரியாம போச்சு.. விசில் அடிச்சு அடிவாங்கின ஆண்கள் பல ஆனால் விசில் அடிச்சு பெருமை வாங்கினவ நான்..!

படங்கள் நன்றி:நவீன் குமார்.

டிஸ்கி:இதை ஏற்கனவே ஒருமுறை பதிவிட்டு உடனே நீக்கிவிட்டேன்.. அதனால் மீண்டும் ஒருமுறை.. இந்த தடவ அழிக்கமாட்டேங்க..

Comments

 1. //பொதுவா எல்லார் வீட்லேயும் ஒரு பொண்ண இந்த மாதிரி விசில அடிக்க போவ சொல்றதுன்னா தடுக்க தான் செய்வாங்க.. ஆனா எங்க அப்பா சுரேஷும் சரி, எங்க அம்மா சுஜாதாவும் சரி எனக்கு ரொம்ப உதவி பண்ணுனாங்க.. அவங்க ஆசையே நான் இதுல பெரிய ஆளா வரணும்கிறது தான்../

  இதையே தான் எல்லாரும் சொல்றாங்க ..

  //உங்களுக்கு இருக்குற இந்த வசில் அடிக்கற பழக்கத்த பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..?
  /

  வசில் அப்படினா ??


  ரைட்டு வாழ்த்துக்கள் .. தம்பி நெறைய இடத்தில் பிழைகள் இருக்கு கவனிக்கவும்

  ReplyDelete
 2. @எல் கே: எல்லோரும் அப்படி சொல்றாங்கன்னு எங்க வீட்ல கத்திய எடுத்துட்டு துரத்துனாங்கன்னா சொல்லமுடியும்..

  எனக்கு தமிழ் ஒழுங்கா வராதுங்க.. அதனால அங்க இங்க பிழை இருக்கும்.. சொன்னீங்கன்னா திருத்திக்குவேன்..

  ReplyDelete
 3. வித்தியாசமான முயற்சி......
  வெற்றி அடைய வாழ்த்துக்கள்......
  கின்னஸ் உங்களுக்கு நிச்சயம்....

  ReplyDelete
 4. @மனோ:அவர்களை வாழ்த்தியதற்கு நன்றி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..