அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்...


முஸ்கி: இது கவிதையில்லீங்க.. ஒரு தொடர் கதை எழுதனும்னு ரொம்ப ஆசை.. அதான் தொடங்கியுள்ளேன்.. படிச்சுபுட்டு கருத்த சொல்லுங்க..


அலுவலகத்து அர்ச்சனைகள்...


ஒரு தொழிலை துவங்கும் முன் இறைவனை வழிபடுதல், ஒரு விசயத்துக்கு செல்லும்போது இந்த கலர் ஆடையை தான் உடுத்துவது, பூனை குறுக்கிட்டால் மேற்படி அடிவைக்காதது, நடக்க தெரியாமல் சறுக்கிவிட்டால் அபசகுணம் என்று சொல்வது என மூடர்கள் அனைவருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும்.. அவர்களை கண்டால் கொஞ்சம் மேல் உதடு உள்ளிழுத்து சிரிப்பு வருகிறது என அடிக்கடி சொல்லிடுவான் அவன்.. இப்படி எல்லாம் பேசும் அவன் பெரியாரின் கொள்ளு பேரன் என்று எண்ணிடவேண்டாம்.. இது போல் அவனுக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது.. அந்த ‘பார்க் பெஞ்சு’.. சுகம், துக்கம், ஆனந்தம் என அனைத்திலும் அவனை அரவணைத்த அவள் மடியில் கொஞ்சம் உறங்கிட்டால் சொர்க்கம் கண்டதாய் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டிடுவான்.


அன்று பரப்பரப்பாக அவனது அலுவலக வேலையை முடித்தே தீரவேண்டும் என வேலைசெய்துகொண்டிருந்தபோது மனிதனின் அரிய கண்டுபிடிப்பான தொலைபேசி மணி ஒலித்தது.. என்ன கொடுமையென வேலை செய்துகொண்டே அதை கையில் எடுத்தவனாய் பேசலானான்..

‘ஹலோ.!! யார்.??’

‘நான் தான் என்ன செய்ற..??’

கணத்த குரலாய் எழும்பிது அப்பக்கதிலிருந்து.. சட்டென, செய்யும் வேலையை நிறுத்திவிட்டு பதறலானான்.. அருகிலிருந்தவர்கள் பேசுவது அவனது மனைவி என கிண்டலடித்தனர்..

‘இல்ல.. வேலை முழுசா முடிக்கல.. இன்னும் இருக்கு அதான்..’

‘போதும் நீ அங்க பண்ணினது உடனே இங்க வா..’

என்று கட்டளையிட்ட அந்த குரலில் இருந்த கோபத்தினை புரிந்துகொண்ட அவன் மெல்ல மனதில் என்ன கோபமோ என நடக்கலானான்.. படிக்கட்டிலிருந்து மெது மெதுவாய் அடிஅடியாய் எடுத்துவைத்து முதல் மாடியில் வெளியில் மானேஜர் என்று போட்டிருந்த கதவை தட்டினான்.. உண்மையென்னவென்றால் அவன் இன்னும் மணமாகாதவன்.. அவன் தனது சொந்த விசயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை என்றுமே விரும்பமாட்டான். அவனறிந்ததெல்லாம் அந்த ‘பார்க் பெஞ்ச்’ மட்டும் தான்.. சிறுவயதிலே தாயை இழந்தவன், அரவணைப்பற்று வளர்ந்த ஊதாரி தமிழ் ஹீரோக்களுக்கு எவ்விதத்திலும் குறைந்துவிடாத மதிப்புமிக்கவன். இன்று பல அடுக்கு மாடி கட்டிடத்தின் கம்பேனியில், அதுவும் உலகில் அத்தனை மூலையிலும் தனது கிளையை கொண்ட ஒரு கம்பேனியில் வேலை.

மிகுந்த தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்..


‘சார்...’

‘என்னயா இத்தன நாள் கிழிச்சிட்ட.. இனிமே உனக்கு இங்க வேலையில்ல..’

என்ன கொடுமையென நினைத்துகொண்டு விட்டத்தை பாக்கிறான்..

இரண்டு மாதம் முன்பு...

அவன் வேலையில்லாமல் திண்டாடிய காலத்தில் இந்த அலுவலகத்தில் வேலை கிடைத்தது. சிறந்த செயல்பாடு இல்லாவிடில் வேலையிலிருந்து தாராளமாக தூக்கிடலாம் என்னும் ஒப்பந்தத்தோடு தான் கட்டடத்தை டென்டர் எடுத்து கட்டிடும் இந்த கம்பேனியில் வேலைக்கு சேர்ந்திருந்தான். இவனது வேலை என்னவென்றால், ஒரு வேலையை செய்ய கம்பனிக்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு டென்டர் கொடுத்தால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதை கணக்கிடுவதே. இதுவரை இரண்டு சிறப்பான டென்டர்கள் எடுத்த அவன், நேற்று போட வேண்டிய, கிடைத்தே தீரவேண்டும் என்று கம்பேனி சொல்லியிருந்த ப்ராஜெக்ட்டுக்கான டென்டர்க்கு அதிகமாக பணத்தை பதிவு செய்து ப்ராஜெக்ட் கிடைக்கும் சதவீதத்தை பெருவாரியாக குறைத்துவிட்டான். இதனால் அலுவலக ராஜாக்கள் அனைவரும் பெரும் கோபத்தில் இருந்தனர்.

விட்டம் பார்த்த பார்வை மானேஜரை நோக்குகிறது..

‘சார்.. நான்..’

‘என்ன இழுக்குற உடனே இத தூக்கிட்டு போயிடு..’

என்று சொன்னவரை கண்கலங்கியவாறு ஏறிறங்க பார்த்துவிட்டு.. கையில் அவர் கொடுத்த வெள்ளை கவரை எடுத்துகொண்டு திரும்பினான்.. திடீரென வேறொரு குரல்..

‘ஹலோ.!!!’

-அப்பரம் உக்காருவோம் பார்க் பெஞ்ச்ல.. வரட்டா..

Comments

 1. உங்கள் கவிதைகளைப் போலவே கதையும் அருமை..

  ReplyDelete
 2. ////அப்பரம் உக்காருவோம் பார்க் பெஞ்ச்ல.. வரட்டா..////

  ஓகே ஓகே காத்திருக்கோம்..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

  ReplyDelete
 3. அருமையான தொடக்கம்...
  மீண்டும் வருவேன்..

  ReplyDelete
 4. அனைத்து ஓட்டும் பதிவாகி விட்டது..

  சவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..
  காத்திருக்கிறேன் தங்கள் வருகைக்காக...

  ReplyDelete
 5. அருமையா இருக்கு தொடருங்கோ நானும் கூடவே வாரேன்....

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்...அருமையான தொடக்கம் ... காத்திருந்து காத்திருந்து பார்த்திடுவோம்... தொடருங்கள்.. அத்துடன் நானும் முதன் முதலில் ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்துள்ளேன் வந்து படித்து கருத்துக் கூறுங்கள்..

  ReplyDelete
 7. நல்லத் துவக்கம் (தம்பி எழுத்துப் பிழைகளை கவனிப்பா )

  ReplyDelete
 8. @எல் கே: என் கண்ணுல எழுத்து பிழை தெரியலண்ணா.. அப்படி இருந்துச்சுனா இனி வரும் பதிவுகளில் திருத்திகிறேன்..

  ReplyDelete
 9. @சி.பி:அப்ப ஓப்பனிங் கீழ இருக்கறதெல்லாம் மட்டமா இருக்கா பாஸ்.???

  ReplyDelete
 10. நல்ல தொடக்கம் தொடர்ந்து கலக்குங்க

  ReplyDelete
 11. முதல் பகுதி நல்லா கொண்டு போயிருக்கிங்க..அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன்...எழுத்து பிழையை நான் சொல்றேன் கூர்மதி...

  "பெரியாரின் கொல்லு பேரன்"

  ReplyDelete
 12. உங்களோட சுயசரிதை என்ற உணர்வுடனே படிக்க முடிந்தது...

  ReplyDelete
 13. ஓப்பனிங்கும் கீழ இருக்கறதும் நல்லா இருக்கு!

  ReplyDelete
 14. Congrats. Nice Story. Pls continue.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 15. @ம.தி.சுதா:நன்றி நண்பரே.!!

  ReplyDelete
 16. @சௌந்தர்:கண்டிப்பாக வரனும்.. நன்றி

  ReplyDelete
 17. @நாஞ்சில் மனோ:நீங்க இல்லாமலா.. வாங்க வாங்க அடுத்தது நாம ரெண்டு பேரும் போய் அந்த பார்க் பெஞ்சுல தூங்குவோம்..

  ReplyDelete
 18. @பிரஷா:நன்றி பிரஷா.. தங்களது கதையையும் படித்தேன்..

  ReplyDelete
 19. @ஃபர்ஹான்:நன்றி நண்பரே.!! கலக்குவோம் கலக்குவோம்..

  ReplyDelete
 20. @ஆனந்தி:பிழைகள் எங்கன்னு காமிச்சதுக்கு தேங்க்ஸ் ஆனந்தி.. இப்படி ஆளாளுக்கு சுட்டி காமிச்சாதானே நான் தமிழ் கத்துகிட முடியும்..

  ReplyDelete
 21. @பிரபா:அந்த உணர்வ அப்படியே குழிதோண்டி புதச்சிடுங்க பிரபா.. ஐ ஆம் குட் பாய்..

  ReplyDelete
 22. @மாதவி:நன்றி மாதவி.!! தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 23. @சங்கர்:நன்றி நண்பரே.!! கண்டிப்பாக தொடர்வேன்..!!!

  ReplyDelete
 24. நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.
  அருமையான தொடக்கம். தொடரக் காத்திருக்கிறோம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. @இராஜராஜேஸ்வரி: நன்றி உங்கள் வாழ்த்துக்கு.. சீக்கிரமாகவே தொடர்கிறேன்..

  ReplyDelete
 26. தொடருங்கள் தொடரை...தொடர்வோம் கூர்மதி !

  ReplyDelete
 27. @ஹேமா:நன்றி ஹேமா.!! தொடருங்கள் தொடருங்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!