Skip to main content

சூப்பர் ஸ்டார் ரஜினியோட, அர்ஜூன் பெரிய ஆளு.!!


எந்திரன் படத்துல ரஜினி இன்னொரு ரஜினி ரோபோ செய்வாரு பாத்தீங்களா.?? அப்படி பாக்கும் போது நம்ம மனசுல இந்த மாதிரி சொல்ற வேலையெல்லாம் பண்ற(முன்னடி பாதிய மட்டும் பாருங்க) ரோபோ உண்மையிலே இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு நிமிசம் நம்மல கனவு காணவே வச்சிடுச்சு. நாம ஆசப்பட்டதெல்லாம் நடந்திடுமா என்ன.??? ஆன இது நடந்திடுச்சு. ரொம்ப சந்தோசமா இருக்குல்ல.!!இதுல அத உருவாக்குனது அந்த படத்துல வர மாதிரி பெரிய விஞ்ஞானி இல்ல, ஒரு ஸ்கூல் பையன் தான்.. இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்குல்ல.!!! சரி என்னதான் அந்த பையன் பண்ணினார்னு பாப்போமா..???


இந்த ரோபாட்டுக்கு ரஜினியோட உருவம் இல்லாம இருக்கலாம் ஆனால் ரஜினி கஷ்டபட்ட அந்த உணர்ச்சிகள் பொருத்துற விசயத்த இந்த குட்டி விஞ்ஞானி அசால்ட்டா பண்ணிட்டார்னு நினைக்கும்போது ஷங்கரோட கிங்கா ஒரு சின்ன பையன் இருக்கார் நினச்சி ரொம்ப சந்தோசமா இருக்குல்ல.!!


இது உணர்ச்சிகள் மட்டும் உள்ள ரோபோர்ட் இல்ல, நாம என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய திறமை படைத்த ரோபோ.. எப்படினு யோசிக்கிறனீங்களா.?? இன்டர்நெட் வசதிய பொருத்தியிருக்கார் நம்ம குட்டி விஞ்ஞானி.

இதை செய்தது ‘டேராடன்’னில் இருக்கும் ‘டூன்’ என்னும் பள்ளியை சேர்ந்த 17வயது மாணவர் அர்ஜீன். இதை அவர் அவரது பள்ளியின் 75 ஆண்டு விழாவில் அறிமுகபடுத்தினார். இந்த ரோபோ பேர் ‘iTalk’. இது இங்கிலீஷ் பேசும், மனிதனோட கோபம், சந்தோசம் போன்ற உணர்வுகளுக்காக ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. மனிதனோட உருவம் போலவே வடிவமைக்கப்பட்டு, மனிதர்கள் பேசுவதுபோலவே பேசும் திறமை கொண்டது.
சுயமாய் சிந்திக்கும் அறிவும், கடந்த காலத்து நிகழ்வுகள் மூலம் செயல்படும் திறமைகள் கொண்டது. இது மனிதர்களை வேற்றுமைப்படுத்துறதுல 97.68% சிறப்பா செயல்படும்.  எப்படினா.. இதுக்கு கண்களா இரண்டு வெப் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் பயோமெட்ரிக்ஸ்ல வர்ற ‘face recognition software’ பொருத்தப்பட்டுள்ளதால் மனிதர்களை வேற்றுமைபடுத்தமுடியும். விதவிதமான மனிதர்கள் பேசும் குரலையும் இதனால் வேற்றுமைபடுத்தமுடியும்.இந்த ரோபோவோட உருவத்த சொல்லனும்னா wall-e படத்துல வர்ற ரோபோ மாதிரி இருக்கும். இந்த ரோபோவ செய்ய தேவைபட்டது வெரும் 70000 ரூபாய் தான். அதையும் இந்த குட்டி விஞ்ஞானியின் ஸ்கூலே எடுத்துகிச்சு. 2.5அடி உள்ள இந்த குட்டி ரோபோவுக்கு குரல் ஸ்பீக்கர் மூலம். இந்த ரோபோ பாக்கும் ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு தனி ப்ரொஃபைல் உருவாக்கி அவங்க பேசின வார்த்தை ஏதாவது புதுசா இருந்தா உடனே இன்டர்நெட்ல போய் தேடி இது சேமிச்சிவச்சிக்கும். இந்த அளவுக்கு சாதிச்ச நம்ம அர்ஜீனின் அடுத்த திட்டம் இந்த ரோபோவ உலகளவுக்கு கொண்டுபோறது தான்..


இத பத்தி நம்ம குட்டி விஞ்ஞானி என்ன சொல்றார்னா, “10வது படிக்கும்போதிலிருந்து இதுக்காக வொர்க் பண்ணிகிட்டிருக்கன்.. ஸ்கூலோட 75வது ஆண்டு விழாவுல அறிமுகபடுத்துனது ரொம்ப சந்தோசம்”.


அடுத்தகட்ட முயற்சியில் இருக்கும் அர்ஜீனுக்கு நம்ம வாழ்த்துக்கள் சொல்லுங்கப்பா. இவர் ரஜினியோட பெரிய ஆளுதானே.!!!

Comments

 1. உண்மையிலேயே இதற்க்கு தான் பாராட்ட வேண்டும் ..அர்ஜுனுக்கு எனது வாழ்த்துக்கள் ..மேலும் சாதனைகள் செய்யணும் ..பகிர்ந்தமைக்கு நன்றி :)

  அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

  ReplyDelete
 2. நல்ல பதிவு கூர்மதியன்.. புதிய தகவல்கள்..

  ReplyDelete
 3. மாணவர் அர்ஜூனுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. நண்பர் அர்ஜீனுக்கு கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..

  அவர் வெற்றியடைய ஆண்டவை வேண்டுகிறேன்..

  வாழ்த்துகளுடன் வாக்குகளும்..

  ReplyDelete
 5. கவிதை வீதிக்கு வந்து நிறை குறை சொல்லிட்டு போங்க..
  கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

  ReplyDelete
 6. இத மாதிரி விவரங்களை தேடி பகிரவும் தம்பி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அர்ஜுனுக்கு எனது வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 8. @சுதர்:வருகைக்கு நன்றி நண்பரே.!!

  ReplyDelete
 9. @பாரதி:தேங்க்ஸ் பாஸ்.!! தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 10. @சௌந்தர்:நன்றி நண்பரே.!! கண்டிப்பாக வருகிறேன்..

  ReplyDelete
 11. @எல் கே:நன்றிண்ணா.!! கண்டிப்பாக இதுபோன்ற விசயங்களை பகிர்வேன்.!!

  ReplyDelete
 12. @வேடந்தாங்கள்:வாழ்த்தியமைக்கு நன்றி.!!

  ReplyDelete
 13. அர்ஜீனுக்கு நம்ம வாழ்த்துக்கள் மேலும் சாதனை படைத்துச் சிறக்க எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 14. அர்ஜுனுக்கு எனது சல்யூட். அது சரி எதுக்கு ஒரு ரியல் ஹீரோவை ரீல் ஹீரோவோடு ஒப்பிட்டிருக்கீங்கன்னு தெரியலை. ஒரு வேலை தலைப்பு கவரும் வகையில் இருக்க வேண்டுமேன்பதற்க்காகவா? படத்துல அந்த நடிகர் ஏதோ நாட்டையும் போல்டையும் டைரக்டர் சொன்ன மாதிரி திருகிகிட்டு இருந்தார். அந்த ஷங்கர் கதையை ரெண்டு மூணு பேத்துகிட்ட திருடிவிட்டு, கிராபிக்சை அமேரிக்கா காரன்கிட்ட காசு குடுத்து பண்ணிட்டார். இதுல ரோபோ செய்யும் திறமைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் எங்கே வந்தது? அப்படியே சம்பந்தம் இருந்தாலும் அந்த சம்பந்தம் மைசூருக்கும், மைசூர் பாகுக்கும் உள்ள சம்பந்தம் மாதிரிதான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தும், நிஜத்தை நிழலோடு ஒப்பிடுவது சரியா? [நேத்து ஒரு வலைப்பதிவுல கார் ஒன்னு பெரிய Giant ஆக எந்திரன் படத்துல வருவது போலவே மாறுவதும், திரும்ப காராக மாறுவதையும் பார்த்தேன், ஆனா அதுக்கு நாப்பது கொடி செலவு பண்ணியிருப்பானா என்று தெரியவில்லை. நீங்க பாத்தீங்களா?
  http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/02/blog-post_18.html ]

  ReplyDelete
 15. அடேங்கப்பா . இந்த மேட்டரை எங்கே இருந்து பிடிச்சீங்க?

  ReplyDelete
 16. @இராஜி:வாழ்த்துகளுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 17. @ஆனந்தி:ரோபோ செஞ்சார்னதும் ஆங்கிலத்துல வாழ்த்தா.???

  ReplyDelete
 18. @ஜெயதேவ்:வாங்க நண்பரே.!! தலைப்புக்காக தான் ஒப்பிட்டேன்.. ரோபோ கண்டுபுடிச்சிருக்கான் சின்ன பையன்னு சொன்னா இந்த அளவுக்கு டிராஃபிக் பெருகியிருக்காது.. ரஜினியோட ஒப்பிட்டதால டிராஃபிக் பெருகுச்சு.. இது என்னோட சுயபிரதிபலிப்புக்காக எழுதியிருந்தாலும் இதுஉ ஒரு வகையில அந்த பையன பத்தி நிரைய பேருக்கு தெரிய வச்சிருக்கு இல்லையா.??? யாரோடு ஒப்பிடுறோம்னு முக்கியமில்ல நாம சொல்லவந்தது எல்லோருக்கும் போய் சேந்துதான்னு தான் முக்கியம்..

  நீங்க கொடுத்த சுட்டியையும் பார்த்தேன்.. அருமை..

  ReplyDelete
 19. @சி.பி: நான் ஒரு நாள் நடந்து போய்கிட்டேயிருந்தேனா, அப்ப திடீர்னு இந்த மேட்டர் என்ன கடந்து போச்சு.. அட ஊப்பரா இருக்கேன்னு புடிச்சு வச்சிகிட்டேன்.. எப்புடி..???

  ReplyDelete
 20. அரியதொரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கும் அர்ஜுன் என்ற அந்தத் தம்பிக்கும் இந்த அரிய தகவலைக் கண்டுபிடித்துத் தந்திருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் நண்பர் ஜெயதேவ் தாஸ் சொல்லியிருப்பதுதான் சரியென்றுபடுகிறது.

  ReplyDelete
 21. @அமுதவன்:நான் கொடுத்த விளக்கம் ஏற்றுகொள்ளம்படி அமையாவிடில் என்னை மன்னித்திடுங்கள்.. இனியொருமுறை நீங்கள் தவறென சொல்வது நடந்திடாமல் பார்த்துகொள்கிறேன்.. வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வாங்க.

  ReplyDelete
 22. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  ReplyDelete
 23. @பிரஷா:வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி பிரஷா..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…