என்ன வியாதி இவனுக்கு சொன்னதையே சொல்றான்.!!

எல்லோருக்கும் ஆனந்த விகடன்ல வேலைபாக்க ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு புடிச்சது என்னவோ சக்தி விகடன்லயும், மோட்டார் விகடன்லயும் தான்..(சொல்லிட்டாரு கவர்னரு.!!)


ரெண்டுமே சரியா பக்கா ஜாலியா இருக்கும்.. ஆனா முதல்ல நான் சேரும்போது நினச்சது என்னவோ ஜூனியர் விகடன்ல ஒரு முத்திரை பதிக்கனும்னு தான்.. காலபோக்கில அந்த பக்கமிருந்து இந்த பக்கம் தாவிட்டன்.. காரணம் இதுவரை அனுபவமில்லாத புது விசயங்களை இதில் சந்திக்க முடியும் ஆனால் ஜூனியரில் நாம தினமும் பாக்குற விசயத்தையே தான் பாக்க முடியுது..(உனக்கு வேலைகொடுத்ததே பெரிய விசயம் இதுல இது வேறயா.??)

அப்படி ஒரு நாள் நம்ம நண்பர் சுலைமான்கிட்டயிருந்து போன்..

''மாப்ள சக்தி பொங்கல் சிறப்பிதழ்க்கு என்னடா பண்ற''

''ஏய்.! எனக்கு செய்தி வரவேயில்லையேடா.. சரி நீ என்ன பண்ற''(இவருக்கு வெத்தல பாக்கு வச்சி அழைப்பாங்களா.???)

''ஏதோ ஆழ்வார் கோயில்னு சொன்னாங்க.. இன்னும் போகல.. நீ வேணா ஆபிஸ்க்கு போன் பண்ணி கேளு''(பெரிய ஆளா வருவடா..)

''சரி மச்சி.!! நான் பாத்துகிறேன்..''(எப்படி பாப்ப பாரு...)


அடங்க என்னடா நம்ம பேரு இல்லாம இதழ் வெளிவரலாமா..???(உருப்டா மாதிரி தான்.!!) உடனே ஆபிஸ்க்கு போன்,

''சார்.! என்ன சார் பொங்கல் சிறப்பிதழ் பத்தி ஒண்ணுமே சொல்லலையே.!!''(சொல்லிட்டாமட்டும்.!!!)

''இப்ப என்னாத்துக்கு போன் அடிச்ச.??''(என்ன ஒரு மரியாதை..)

''சார் என்ன தீம் சார்.??''

''நாளெல்லாம் முடிஞ்சிடுச்சு நாளைக்கு தான் லாஸ்ட்''

''அப்ப சுலைமான்..???''(துரோகம் பண்ண பாக்குறியே டா.!!!)

''அவனுத வாங்கி நீ பண்ணு''

''சரிங்க சார்''(துரோகி துரோகி துரோரோரோகி..!!!)

நமக்கு நம்ம வேலைதான முக்கியம்.. இதிலென்ன துரோகமிருக்கு.. அடுத்ததா சுலைமானுக்கு போன் பண்ணி,


''மச்சி உன்ன தூக்கிட்டு என்ன அந்த ரிப்போர்ட்டுக்கு போட்டுடாங்க பை டா''(இவனுக்கு போயா போன் பண்ணினோம்.. சே.! இவன்கிட்ட முதல்ல பேச்சுவார்த்தைய கட் பண்ணனும்..)

அடுத்த நாள் காலையிலயே கிளம்பி கிண்டிக்கு போய் போட்டோகிராஃபர கூட்டிகிட்டு திருமழிசை போனேன்..(ரூட் தெரியுமா டா.??)

சத்தியமா சொல்றங்க இந்த கோவில்ல போட்டோ எடுக்கிறதுக்கு பர்மிஷன் வாங்குறத விட பெரிய கொடுமையான வேலை இங்க கிடையாது..!!!(பெரிய இவரு சொல்றாரு..)அருமையான கோவில் சூப்பரா இருந்துச்சு.. திருமழிசை ஆழ்வார பத்திய ரிப்போர்ட்.. கோவில் உள்ள கால் எடுத்து வச்சு ஆபிஸ் ரும்குள்ள நுழஞ்சோம்.. அங்க ஒரு பேரிக்காய் மண்டையன் உக்காந்திருந்தான்(இவரு பெரிய அஜித் குமார் மத்தவன சொல்ல வந்துட்டார்.!!)


''சார் சக்தி விகடன்லயிருந்து வர்றோம்..''

''சக்தி விகடனா.?? அப்படினா.??''(அடப்பாவி எந்த உஙலகத்துலயா இருக்க.???)

''சார் பத்திரிக்கை.. ஆனந்த விகடன் குரூப் சார்''

''ஓ.. ஓ.. என்னாத்துக்கு வந்தீங்க''(கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறாங்களே.!)

''பொங்கல் சிறப்பிதழ்காக நம்ம ஆழ்வார பத்தி ஒரு ஆர்டிகல் எழுதலாம்னு வந்தோம்''

''தாராலமா எழுதுங்க.. இதுக்கெதுக்கு எங்க கிட்ட பர்மிஷன் கேட்டுகிட்டு''(அடப்பாவி.!! நான் எப்பயா உன்கிட்ட பர்மிஷன் கேட்டன்..)

''இல்ல சார்.. நீங்க தான் அத பத்தி சொல்லனும்''

''நான் Asst. EO"(பெரிய ஆளு டா.!!)

''ஓ.. ரொம்ப சந்தோசம்.. கோவில் அய்யர் யாராச்சும்''

''இருங்கப்பா நான் Asst. Eo வோட Asst."(அட கோணவாய் குரங்கு பயலே.!!)

இப்படி அப்படி பேசி கோவில் அர்ச்சகர்கிட்ட போகும்போது திரும்ப கூப்பிட்டு IDகார்ட காட்ட சொன்னப்புல..(இது உனக்கே ஓவரா தெரியல.!!) அதையும் காமிச்சிட்டு அர்ச்சகர்கிட்ட பேசிட்டு திரும்ப வந்து போட்டோ எடுக்கனும்னு சொன்னோம்(அரம்பிச்சிடுச்சுடா இம்ச.!!)

போட்டோலாம் எடுக்க கூடாதுன்னு சொன்னார்..(நினச்சன்..)

''சார் நாங்க சக்தி விகடன் சார்.!! பெரிய பக்தி பத்திரிக்கை.. ''

''அதுக்கென்ன இப்போ.. வெளிய இருந்து கோபுரத்த மட்டும் எடுத்துக்கோங்க''(கோபுரத்த மட்டும் எடுத்து நான் என்ன ஃப்ரேம்மா மாட்ட முடியும்..)

''சார்.. இல்லைங்க நாங்க எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர்றோமோ அந்த அளவுக்கு போட்டோவுக்கும்...''

''நிறுத்து நிறுத்து EO இல்ல போய்டு அப்பரம் வா''(அடப்பாவி.!! இன்னைக்கு தானே லாஸ்ட் லேட்டா கொடுத்தா ஆபிஸ்ல பிச்சுடுவாங்களே.!!)

''இல்லைங்க..''

''EO இல்ல''

''அதான்..''

"EO இல்ல"(என்ன வியாதி இவனுக்கு சொன்னதையே சொல்றான்..!!)

''சரி EO நம்பர் கொடுங்க''

''அது ரூல்ஸ் இல்ல''(அடப்பாவி.!!)

''நாங்க விகடன் சார்.!!''

''EO இல்ல''

''EO நம்பர்...??''

"ரூல்ஸ் இல்ல.."

அடங்க ரெண்டு வார்த்தைய தவிர வேறெதுவுமே பேசமாட்டேங்குறானே.!! வேற யார பாத்தா போட்டா எடுக்கலாம்ன நான் கேட்டப்ப Asst. EOவ பாத்தா வேலைநடக்கும்னு சொன்னார்..(யப்பா.!! இப்பவாச்சும் பதில் சொன்னரே.!!)

''சரி சார்.. அவர காட்டுங்க''

''அவரு தூத்துகுடியில இருக்கார்..''(அடங்க %$&%****((*)

''என்ன சார்... அவரு நம்பர கொடுங்க''

''அது ரூல்ஸ் இல்ல''(ஆரம்பிச்சுட்டியா டா.!!)

இது காலையில ஆரம்பிச்ச கூத்து.. மதியம் 12மணி வரைக்கும் அங்கையோ உக்காந்து நான் வேற வேற பேசி பேசி கேட்க அவர் சொன்ன இரண்டே பதில்

"EO இல்ல.. ரூல்ஸ் இல்ல.."

அவனோட வேலைய புடுங்கி எடுத்துட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்... அவன் வயித்தெரிச்சல் தான் இப்படி ஆயிடுச்சோ.!! மக்கா ஸாரி டா.!!

இப்படி கஷ்டபட்டு எழுதியதை படிக்க:Thirumazhisai


Comments

 1. ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க போல...

  ReplyDelete
 2. நண்பருக்கு ஆப்பு வச்சதா நெனச்சி தனக்கே சூனியம் ஹி ஹி!!

  ReplyDelete
 3. @கருண்:இதுபோல இன்னும் எக்கசக்கமா இருக்கு பாஸ்..

  ReplyDelete
 4. @விக்கி:எஸ்.. எஸ்.. எல்லாம் நேரம்..

  ReplyDelete
 5. கஷ்டம் எழுத்துக்களில் தெரிகிறது.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஒரு விஷயம். பொதுவா கருவறையை படம் பிடிக்க கூடாது அதுவும் மூலவரை . இன்றைக்கு பத்திரிக்கை,மீடியா என்று அதை மீறிக் கொண்டு இருக்கிறோம் . எங்கே சென்று முடியுமோ

  ReplyDelete
 7. அது ஒண்ணுமில்ல... ரொம்ப ஆர்வக்கோளாறுல இருந்தா... இப்படித்தான் பதில் கிடைக்கும்... ஹி..ஹி..

  ReplyDelete
 8. கூர்...செமையா சிரிச்சேன்...நீங்க சக்தி விகடன் ல யா...என் அம்மா அதை வாங்கி படிச்ச ஞாபகம்..இப்பவும் வாங்கி படிக்கிராங்கலன்னு தெரியல..அம்மா ஓவர் பக்தி..:) போர் அடிச்சால் சுலோகம் எழுதுவாங்க..படிப்பாங்க..ஹீ..ஹீ..நாம அந்த ஏரியா பக்கமே போறது இல்லை...அம்மா ட்ட சொல்றேன் இது பற்றி...

  ReplyDelete
 9. அப்புறம் இந்த நியூ header சூப்பர் கூர்...கலக்குங்க...:)

  ReplyDelete
 10. @சரவணன்:நன்றி பாஸ்.!! தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 11. @எல் கே:உண்மைதான் அண்ணா.!! கருவறை இப்போது கருவறையாக மதிக்கப்படுகிறதா.???

  புதிதாக கட்டப்படும் கோவில்கள் கருவறைக்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படிதான் கட்டப்படுகிறதா.???

  கருவறையின் போட்டோக்களை எடுத்து கண்டிப்பாக எங்கள் படத்தையும் போடுங்கள் என கேட்கும் தனியார் கோவில்கள் பல..

  மூலவரை நான் எங்கு சென்றாலும் போட்டோ எடுப்பதில்லை.. உற்சவரின் பழைய போட்டாகளை மட்டுமே வாங்குவேன்.. மற்றபடி இங்கு நான் குறிப்பிட்டுள்ளது கோயிலின் வெளி பிரகாரத்தை அவர் போட்டோ எடுக்க அனுமதிக்காதது பற்றியே.!!

  தங்கள் வருத்தம் புரிகிறது.. கருத்துகளுக்கு நன்றி..

  ReplyDelete
 12. @என்றென்றும் 16:உண்மை தான் ஒத்துகிடுறன்..

  ReplyDelete
 13. @ஆனந்தி:வாங்க ஆனந்தி நான் எல்லா விகடன்லயும் எழுதுவேன்.. ஆனா அதிகமா எழுதுறது சக்திலயும், மோட்டார்லயும் தான்.. அம்மனா அப்படிதான் இருப்பாங்க ஓவர் பக்தியா..

  //நாம அந்த ஏரியா பக்கமே போறது இல்லை..//

  அதிகமா கடவுள பத்தி எழுதுற நான் உருவ வழிபாடில் நம்பிக்கை இல்லாதவன்னு சொல்லிகிறேன்.. நமக்கெல்லாம் 'அன்பே சிவம்'ல கமல் சொல்றாப்புல தான்..

  அந்த நியூ ஹெட்டருக்கான வாழ்த்துக்கு தேங்க்ஸ் ஆனந்தி..

  ReplyDelete
 14. பதிவு..
  விஷயம்..
  டிசைனிங்..
  எல்லாம் கலக்கல்..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. ஒரு நல்ல விஷயத்தை நாலு பேருக்கு எடுத்துச்சொல்ல எத்தனை விததடங்கல்களை சந்திக்க வேண்டி இருக்கு. நிருபர்களின் வேலையே இப்படித்தானோ?

  ReplyDelete
 16. @கூர்மதி

  இதில் வருத்தப் பட எதுவும் இல்லை. புதுக் கோவில்களை பற்றி நோ கமெண்ட்ஸ். இருக்கும் பழையக் கோவில்களை புதுப்பித்து பாதுகாப்பது புதியக் கோவில்களை கட்டுவதை விட சிறந்தது என்பது என் கருத்து

  அதே போல் மனிதர்களின் செயல்களை விட்டுவிடுங்கள் தம்பி. அந்த இடத்திற்கு என்று ஒரு சக்தி உண்டு

  நண்பன் என்ற முறையில் என் கருத்து இதில் வருத்தம் என்று எதுவும் இல்லை :))

  ReplyDelete
 17. @லக்ஷ்மி:நிருபர் வேலை மட்டுமில்லைங்க.. எல்லா வேலையிலும் சங்கடங்கள் இருக்கு.. இத நான் பாதிக்கபட்ட மாதிரி சொன்னாலும் அங்க சரி ஜாலியா இருக்கும்.. நிருபர் வேலை கிடைகாத இன்பம்..

  ReplyDelete
 18. @எல் கே: புரியுதுண்ணா.. உங்க கருத்தை நானும் ஏத்துகிறேன்.. நன்றி..

  ReplyDelete
 19. ennadhu?என்னது நீங்க விகடன் நிருபரா? அய்யய்யோ.. இது தெரியாம உங்களை கலாய்ச்சட்டனே

  ReplyDelete
 20. ரப்பர் வெச்சு பழசை எல்லாம் மறந்துடுங்க.. ஹி ஹி

  ReplyDelete
 21. @சிபி:நீங்க எவ்வளவு பெரிய ஆளு.!! எத்தன வருசமா எழுதுறீங்க.. எனக்கு தெரியாதா உங்கள பத்தி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!