என் பெயருக்கான புராணம்.!!

இந்த தலைப்பில் என் பெயரின் புராணம்(ஏன் உனக்கு இந்த பேர் வச்சாங்க.!!), அதனால் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், வருத்தங்கள், கோபங்கள் குறித்து குறிப்பிடவேண்டுமென என்னை முதல் முதலில் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் அண்ணன் எல்.கே(நான் அந்த அளவுக்கு வொர்த்தா.???) என்னுடைய பேர் வித்யாசமா இருக்கிறதால தான் கூட்டிருப்பார்னு நினைக்கிறேன்.!!(எப்படியோ கூப்புட்டார்ல.!!) இவர் தொடர்ந்தது ஸ்ரீ அகிலா தோழியின் அழைப்பை ஏத்து(உன்ன கூப்பட்டவங்கல மட்டும் சொல்லுடா.!!)


இனி எந்தன் பெயருக்குள்ளே போவோம்.!! என் பெயர் தம்பி கூர்மதியன். இது தோழி அகிலா கூறியது போல என் பெற்றோர் வைத்த பெயர் பிடிக்காமல் நானாக ஏற்படுத்திகொண்டது. பெற்றோர் வைத்த பெயரை மாற்றலாமா.?? புடிக்கலனா மாத்த வேண்டியது தானே.!! இதிலென்ன லொட்டு லொஸ்க்கு.!!


இதுவரை எனது உண்மையான பெயரை வெளிப்படையாக நான் சொன்னதில்லை.. இப்போது சொல்கிறேன்.. என் உண்மையான, என்னுடைய பிறப்பு சான்றிதழில் இருக்கும் பெயர் அ.ராமநாதன்.


எனது இணைய தொடர்பு தவிர மற்ற அனைவரும் என்னை அறிவது ராமநாதன் என்னும் பெயரிலே.!! முதலில் ராமநாதனுக்கு போவோம்..


ராமநாதன்.. ராமர் பெயரில்லைங்கோ.!! சிவன் பெயர்.. இன்னும் சொல்லணும்னா ஒரு சிவனடியார் பெயர்..  எனக்கு இரண்டு அக்கா.. ஆண்பிள்ளை என்னும் மோகம் பரவி கிடந்த காலத்தில் என் பெற்றோரையும் அது விட்டுவைக்கவில்லை.. இப்படி ஒரு அருமையான ஆண்குழந்தை வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் பிள்ளையார் பிடித்து, கடல் தண்ணீரில் கரைத்து வேண்டி ஆண் குழந்தை பிறந்தா ராமநாதன் என பெயர் வைப்பதாக வேண்டிகொண்டனர்.


அதன்படி நான் பிறக்க எனக்கு அப்பெயரே அமைந்தது.


ராமநாதன்- இராமநாதன்.. சிறுவயதிலிருந்தே எழுதுவது என்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ராமநாதன் என முதலில் பெயர் எழுதிவந்த நான் பின்நாளில் தமிழ் எழுத்து இலக்கணப்படி 'இ'ராமநாதன் என எழுத ஆரம்பித்தேன்.!!


படிக்கும் போது கொஞ்ச கடைசியா தான் என் பேர் வரும்.. இருந்தாலும் நாங்க தான் படிப்புல கெத்தாச்சே அதனால எப்பவும் முன்னாடி தான் உக்கார வைப்பாங்க.!!


கார்த்தி சொன்னாப்புல இவரு கேட்டா நான் பதில் சொல்வன், என்ன கேட்டா அவரு பதில் சொல்வார்னு ப்ராப்ளம்லாம் எனக்கில்ல.. என் பேர்ல அதிக பேர் இருக்கமாட்டாங்க.. கேள்வி கேட்டா என்னதான் கேப்பாங்க.. அப்படி கேட்டாலும் நானும் சும்மா தான் இருப்பன்.!!


பின்ன புரட்சிகரமா நிறைய பேச ஆரம்பிச்சன்.!! சே, ஃபிடல், ஸ்டாலின், லெனின், காரல், சுபாஷ், பிரபாகரன் என நிறைய பேர பத்தி படிச்சன்.. அதுக்கு முன்னாடியே கொஞ்ச கொஞ்சமா கடவுள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சுது.. இது படிச்சதுக்கு பிறகு சுத்தமா இல்லாம போச்சு.!!

அதிகமா அனாதை, முதியோர், மாற்று திறனாளி காப்பகங்களுக்கு போக ஆரம்பிச்சன்.!! அப்படி ஒரு முதியோர் இல்லத்திற்கு தொடர்ந்து போகும் போது ஒரு பெரியவர் கம்யுனிசவாதி என்னை தம்பி தம்பி என அழைப்பார்.. அவரும் என் மேல் உள்ள பாசத்தில் தான் அழைக்கிறார் என இருந்தேன்.. பிறகு ஒருநாள் அவரே என்னை அழைத்து ''தம்பி என்னும் சொல் போராளியை குறிக்கும்.!! தம்பி-சொல்லும்போதே வீரம் பிறக்கும்.!! தம்பி-வேட்கை தொடங்கும்.!! தம்பி-மாறாத பணபு கொடுக்கும்.!! '' என சொன்னார்..

பின்னர் அவரோடு அதிகமாக பேச ஆரம்பித்தேன்.. அதிகமாக இருவரும் நூல் மதிப்புரையில் ஈடுபட்டோம்.!! அவர் முன்னரே படித்த புத்தகங்கள் கொடுத்து படிக்க சொன்னார்.. படித்து கருத்துகளில் போட்டியிட்டோம்.. அதன் நுன்கருத்தை யார் சரியாக சொல்வது என போட்டிகள் நடக்கும்.. அதிகமாக ஜெயித்தது அவர் தான்.!! ஆனால் ''உன் வயதில் எனக்கு உன்னில் 2% கூட தெரியாமல் இருந்தது..  இக்கால இளைஞரிடத்து நீ வேறுபட்டு தெரிகிறாய்.. என் இறுதி வாழ்நாளில் ஒரு கூர்மையான அறிவுடையவனை, பண்பு உடையவனை கண்டுவிட்டேன்'' என பாராட்டினார்.


அவர் தனது பேரனுக்கு கூர்மதியன் என பெயர் சூட்டவேண்டும் என எண்ணியதாகவும் தன் மகன் அது கேவலமாக இருக்கிறது ஒற்றுகொள்ளமாட்டேன் எனவும் கூறியதாகவும் என்னிடம் வருந்தினார்.. அவரது பேரன் கூர்மதியனாக இருக்க வேண்டும் என அப்பெயர் சூட்ட நினைத்தார் ஆனால் தான் இறக்கபோகும் வயதில் அவருக்கு ஆறுதலாக இருந்ததாலோ என்னவோ என்னையே அவர் எனது உரிமையோடு கூர்மதியன் என அழைத்தார்.. பின்நாளில் பழகபழக 'டே கூர்(Sharp)' என அழைக்க ஆரம்பித்தார். அதனால் நான் என்னை எப்பவும் கூர்மதியன் என குறிப்பிடுவேன்.. என்னை நானே சொல்லும்போது கூர் என சொல்லிக்கொள்வேன்.. 'தம்பி'க்கு அவர் கொடுத்த விளக்கம் பிடித்தமையால் தம்பியை முன்னால் சேர்த்துகொண்டேன்..

இதனால் ராமநாதன்-இராமநாதன்-கூர்மதியன்-கூர்-தம்பி கூர்மதியன் ஆனது.!!

இதனை தொடர முதல் தடவையா தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.. கண்டிப்பா வரணும், சத்தியமா வரணும், நிச்சயமா வரணும்..

பதிவுலகில் என் வழிகாட்டி- பிலாசபி பிராபகர்
நான் நெருங்கிய தோழியாக கருதும்- ஆனந்தி(கொஞ்சம் மதுரை பில்டப்.!!)
பிரபாகர் அறிமுக படுத்திய புதியவர்- தீபிகா
இந்த வார வலைச்சரம் ஆசிரியர்- பாரி தாண்டவமூர்த்தி
நான் தொடர்ந்து படிக்கும் பதிவர்- ரஹீம் கஸாலி

டிஸ்கி 1:இதுவரை என்னை கவர்ந்த அந்த பெரியவரை பற்றி குறிப்பிடாதது அவர் இறந்துவிட்டார்.!! அவரின் நினைவுகளை மறக்க நினைக்கிறேன்.!! என் பெயரை பற்றி யாரேனும் கேட்டால் அவரே என் மனதில் நெருக்கமாக பூந்துகொள்கிறார்.!! அவராலே எழுத்து ஆர்வம் பெரும் அளவில் அதிகரித்ததால் அவர் என்னை அழைத்த எனக்கு மிகவும் பிடித்த 'தம்பி கூர்மதியன்' என்னும் பெயரிலே என் இணைய எழுத்துகள் தொடர நினைத்தேன்.. தொடர்கிறேன்.. தொடர்வேன்.!!!

டிஸ்கி 2:இங்கு சிலரை தொடர அழைக்க நினைத்து அவர் ஏற்பாரோ இல்லையோன்னு தயக்கத்துல விட்டுட்டன்.. சில பேரை கேக்கணும்னே தோணல.!! உங்க 5 பேரையும் நம்பி கூப்டிருக்கன் காலவாரிடாதீங்க...

டொன் டொன்ட்ட டொய்ன்.!! (ஃபினிசிங் டச்)

Comments

 1. உங்க பெயரின் காரணம்.சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கு. நல்லாவும் இருக்கு.

  ReplyDelete
 2. ஒர் பேருக்குள்ள இவ்ளோ இருக்கா?

  ReplyDelete
 3. >>>கோபங்கள் குறித்து குறிப்பிடவேண்டுமென என்னை முதல் முதலில் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார் அண்ணன் எல்.கே

  பெரியப்பா.. கம்முன்னே இருக்க மாட்டீங்களா?

  ReplyDelete
 4. கூர்மதியன் = கூர்மையான அறிவுள்ளவர்

  ReplyDelete
 5. >>>>நான் தொடர்ந்து படிக்கும் பதிவர்- ரஹீம் கஸாலி

  ஹா ஹா ..கல்யாணப்பத்திரிக்கை வெச்சு கூப்பிட்டு வந்த விருந்தினரை.... ஹி ஹி

  ReplyDelete
 6. @கருண்:
  //vadai//

  சாப்புடுங்க.!! உங்களுக்கே தான்.!!


  //ஒர் பேருக்குள்ள இவ்ளோ இருக்கா?//

  ஒரு பேருக்குள்ள இவ்வளவு இருக்கான்னு தெரியாது.. ஆனா என் பேருக்குள்ள இவ்வளவு இருக்கு..!!

  ReplyDelete
 7. கூர்மையான அறிவை உடையவர்...

  ReplyDelete
 8. >>>பதிவுலகில் என் வழிகாட்டி- பிலாசபி பிராபகர்


  பிரபாகருக்கு மார்கதர்ஷன் என பட்டம் சூட்டுறேன். ( ஹிந்தில வழிகாட்டி)

  ReplyDelete
 9. @சி.பி.:
  //முத வெட்டு//

  நல்லா பாத்து சொல்லுங்க.!!

  //பெரியப்பா.. கம்முன்னே இருக்க மாட்டீங்களா?//

  ஏன் பாஸ் அந்த முதியோர் இல்லத்துல இருந்துகிட்டு இந்த பேச்சு அவசியம் தானா.???

  //கூர்மதியன் = கூர்மையான அறிவுள்ளவர்//

  என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.!! பாஸ் 5வது படிக்கிற குழந்தைக்கு கூட தெரியுமே.!!


  //ஹா ஹா ..கல்யாணப்பத்திரிக்கை வெச்சு கூப்பிட்டு வந்த விருந்தினரை.... ஹி ஹி//

  ஒண்ணுமே புரியலையே.!!

  //பிரபாகருக்கு மார்கதர்ஷன் என பட்டம் சூட்டுறேன். ( ஹிந்தில வழிகாட்டி)//

  கககபோ.!!

  ReplyDelete
 10. உங்கள் நிஜப் பெயர் இது இருக்காது என்றுத் தெரியும். ஆனால் கண்டிப்பாக இப்படிப்பட்ட பெயரின் பின்னால் ஒரு வலுவானக் காரணம் இருக்கும் என்றுத் தெரியும் அதைத் தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன்.

  படித்து விட்டு மனம் அந்தப் பெரியவரால் நெகிழ்ந்தது

  ReplyDelete
 11. @கே.ஆர்.பி:

  //கூர்மையான அறிவை உடையவர்...//

  யாரு யாரு யாரு..

  ReplyDelete
 12. romba arumaiya pathivu

  ungaloda niraiya pathivu padichu iruken
  aana indhala mana romba erkkuthu ...

  pakirvvuku nandri

  ReplyDelete
 13. @எல் கே: நன்றி பாஸ்.!! நீங்க கூப்பிடலனா இத சொல்லியிருப்பேனான்னு தெரியல.!!

  ReplyDelete
 14. @கல்பனா: இதுக்கு நான் சந்தோசபடுறதா இல்ல வருத்தபடுறதா.???


  //ungaloda niraiya pathivu padichu iruken
  aana indhala mana romba erkkuthu ...//

  இதுவரைக்கும் என்னோட எல்லா ப்ளாக்கையும் சேத்து 64 பதிவு போட்டிருக்கன்.. அதுல உருப்புடியான பதிவு இதுமட்டும் தானா.??? மத்ததுல மனம் கொஞ்சமாவது ஈர்த்திருக்கும்னு நம்பிக்கையில சந்தோசபட்டுகிறன்.!! (டே கூர் இன்னும் உனக்கு திறமை வேண்டுமோ.???)

  கருத்துக்கு நன்றி கல்பனா.!!!

  ReplyDelete
 15. அதுல உருப்புடியான பதிவு இதுமட்டும் தானா.??? மத்ததுல மனம் கொஞ்சமாவது ஈர்த்திருக்கும்னு நம்பிக்கையில சந்தோசபட்டுகிறன்.!! //

  ha ha ha

  nan appadi patta karutthui solla villai ..

  indha pathi padithathum andha mudhiyavar ninaivugal nejai niraikurathu ,,,

  (டே கூர் இன்னும் உனக்கு திறமை வேண்டுமோ.???//

  tharpodhu irupathuve arumaiyanathu than

  aana valarpathil thavaru illaiye

  ReplyDelete
 16. நெகிழ்வான இந்தப் பதிவு வெளிவரக் காரணமாக இருந்த LK வுக்கு என் பாராட்டுகள், முதலில்!

  அழகான ஒரு பெயரை மனதில் (கையில்) வைத்துக்கொண்டு, அதை ஆசையாய் பெற்றுக்கொள்ள ஆளில்லாமல் தவித்த அந்தத் தாத்தாவை நினைத்தால் நெஞ்சு கனமாகிறது, கண் குளமாகிறது!

  ஆனாலும், பண்படுத்தப்பட்ட மண்ணிலேயே அந்த மழைத்துளி இறுதியாக விழுந்து ஒரு விதையை விருட்சமாக்கியிருக்கிறது என்று உணரும் போது மனம் நிறைகிறது! மகிழ்ச்சி பொங்குகிறது!


  பெயருக்கேற்ப, பின்னூட்டப் பெட்டியின் வாயிலில், கூர் வாளுடன் அமர்ந்து கொண்டு அனைவரையும் வெகுவாகவே (சட்டத்துக்குப் புறம்பாக) மிரட்டுவது கொஞ்சம் மிகையாகத்தான் படுகிறது, கூர்!

  ReplyDelete
 17. @கல்பனா: நீங்கள் சொன்ன கருத்து முன்பே தெளிவாக புரிந்திருந்தது.. கொஞ்சம் விளையாட்டாக தான் கேட்டிருந்தேன்.. திறமை வளர்ப்பதில் தவறில்லை ஆனால் அதிமிஞ்சி போனால் அதிரிபுதிரியாக யோசித்து விதண்டாவதம் பேச தோணும்.!! எல்லோரிடத்தும் கெட்ட பேர் கிடைக்கும்.!! மக்கள் ஆதரவு குறையும்.!! கைக்கு காசு இல்லாமல் போகும்.!! வாழ வீடு இல்லாம போய்டும்.!! அப்படி இப்படி ஆகி கடைசியில் என்னை புதைக்க ஒருபிடி மண்ணுக்கு கூட உரியவன் இல்லாமல் போய்விடுவேனே.!! இதனாலே நான் என் அறிவை வளர்த்துகொள்ள விரும்பவில்லை.!!(சோம்பேறி பயலுக்கு காரணத்த பாரு.!!)

  ReplyDelete
 18. !(சோம்பேறி பயலுக்கு காரணத்த பாரு.!!//

  cho nice of you.........

  ReplyDelete
 19. @மனம் திறந்து (மதி):

  நீங்கள் பாராட்டும் எல் கேவுக்கு எனது நன்றிகள்.!!

  உங்கள் வருத்தத்திற்கும் என்னை பாராட்டியதுக்கும் நன்றிகள்.!! வருந்துவதற்கும் பாராட்டுவதற்கும் நல்ல மனம் வேண்டும்.!!

  //கூர் வாளுடன் அமர்ந்து கொண்டு அனைவரையும் வெகுவாகவே (சட்டத்துக்குப் புறம்பாக) மிரட்டுவது கொஞ்சம் மிகையாகத்தான் படுகிறது, கூர்! //

  அம்மா சொல்லுங்க நான் மிரட்டுறேனா.?? தாயே சொல்லுங்க நான் மிரட்டுறேனா.?? இந்த பாப்பாவுக்கு என்ன தெரியும.? அந்த பெரியவருக்கு என்ன தெரியும்.? இந்த குழந்தைக்கு என்ன தெரியும்.? என்ன பாத்து இப்படி சொல்லிட்டீங்களே.!!!
  (ஐ ஆம் க்ரையிங்.!!!)

  ReplyDelete
 20. என்னையும் மதித்து தொடர்பதிவு எழுத கூப்பிட்ட உங்கள நினைச்சா எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது பாஸ்...நிச்சயம் எழுதுறேன்.

  ReplyDelete
 21. எல்லாம் சிவமயம் ........ பேருண்டு ஊரில்லை ஊருண்டு பேரில்லை எல்லாம் நாட(அ)கமே... பிறர் கூற்றை மதிப்பவன் ... பிறப்பால் கர்ணன் வளர்ப்பால் வருணனாகப்பட்டான்...

  ReplyDelete
 22. நண்பரே....தங்களின் அழைப்பிற்கு நன்றி...நான் இதேபோல கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே ஒரு பதிவிட்டு விட்டேன். சரி பரவாயில்லை விடுங்க மீண்டும் ஒரு பதிவு தேத்திடலாம்

  ReplyDelete
 23. @பாரி:தங்கள் வருத்தத்தை நானும் அறிவேன்.!! நானும் பாதிக்கப்பட்டவன் தான்.. என்னை கார்த்தி அழைத்தபோது எனக்கும் அப்படி தான் இருந்தது.!! மக்கா நாம ரெண்டு பேரும் ஒண்ணு தான்.!!

  ReplyDelete
 24. @தினேஷ்: கண்டிப்பா சித்தர் ஆகிட்டீங்கண்ணு நினைக்கிறேன்.!!

  //பிறப்பால் கர்ணன் வளர்ப்பால் வருணனாகப்பட்டான்.//

  எனக்கு நல்லாவே பொருந்தும்.!!

  ReplyDelete
 25. @அமுதா:அய்யோ.!! சூப்பருங்க.!! எப்படிங்க கண்டுபுடுச்சீங்க.!! சான்சே இல்ல.!! நீங்க கெத்துங்க.!! உஷ்ஷ்ஷ்ஷ் முடியலப்பா.!!

  ReplyDelete
 26. @ரஹீம்: ஓ அப்படியா.!! நான் அப்போ ஃபீல்டுல இல்ல.!! பரவால எனக்காக திரும்பவம் எழுதுறன்னு சொன்ன உங்கள ஐ லைக்.. ஒரு மாசத்துக்கு ஒண்ணு ரெண்டு பதிவு போட்டா பரவால ஓராயிரம் பதிவு போட்டா இப்படி தான் ஆகும்.!!

  ReplyDelete
 27. கூர் எனக்கு உங்க பெயர் ராமநாதன் னு முன்னாடியே தெரியும்(உபயம் இன்டிலி..:)) ) ஆனால் தம்பி கூர்மதியன் ரொம்ப வித்யாசமா இருக்கேன்னு பலமுறை நினைச்சு இருக்கேன்...நீங்க கவிஞர் என்பதால் இப்படி வச்சுகிட்டிங்கனு கூட யோசிச்சிருக்கேன்...ஆனால் பெயரின் பின் பக்கம் ரொம்பவே நெகிழ்ச்சி கூர்....

  தொடர் பதிவா...ம்ம்...என் நிஜபெயரே ஆனந்தி தான் கூர்...என் தாத்தா வச்ச பெயர்...அம்மா ஒரே பொண்ணு...நான் பிறந்த பிறகு என்னை தாத்தா பாட்டி தான் வளர்த்தாங்க...எப்பவும் நான் ஆனந்தமா இருக்கணும்னு எனக்கு வச்சாங்க...என் கணவரும் அதை அப்படியே கடைப்பிடிக்கிறார்..ரொம்பவே ஆனந்தமா வச்சிருக்கார்...நாங்க கட்டிய வீட்டுக்கு பெயர் கூட ஆனந்த பவனம் கூர்..:)) எப்பவுமே நாம கொஞ்சம் ஆனந்தமான டைப் தான்...என்ன கோவம் இருந்தாலும் சட்டுன்னு நேரடியா கேட்டுட்டு மனசை கிளீன் பண்ணிருவோம் உடனே...:)) (மதுரை பில்ட் அப் தான்...:))) )) என் சின்ன பாட்டி என்னை ஆனந்தி னு சொல்லாமல் ஆனந்தம் ஆனந்தம் னு தான் சொல்வாங்க என் சின்ன வயசில்...கோவமா வரும் எனக்கு ..ஆனந்தி சொல்லுங்க அப்பத்தா னு சினுங்குவேன்...:))) உன்னை பார்த்தாலே ஆனந்தம் தாண்டி கண்ணு னு கொஞ்சுவாங்க...ஐ லவ் சுந்தரி அப்பத்தா...அந்த அப்பத்தாக்கு புள்ளைன்னு யாரும் இல்லை...வாழ்நாளின் கடைசி தருவாயில் அந்த அப்பத்தா என் அப்பா பெயருக்கு தான் உயில் எழுதிட்டு இறந்து போனாங்க(அப்பாக்கு சகோதரர்கள் இருந்தும் கூட ...காரணம் நான் னு எனக்கு தெரியும்...)என்னவோ சின்ன வயசில் அப்போ பெருசா தெரியலை...இப்போ நானே அந்த ஆனந்தம் அப்டிங்கிற பெயரை சில நேரங்களில் உச்சரித்து பார்ப்பது உண்டு..:)) தோழிகளின் சில நேர எஸ் எம் எஸ் களில் இந்த பாட்டின் வரிகளை அனுப்பி விடுவாங்க.."ஆனந்தம் வந்ததடி ஆனந்தி" அப்போ சிரிச்சுக்குவேன்...மற்றபடி இவ்வளவு தான் கூர் என் பெயர் வரலாறு...இதை எங்கே பதிவாய் போடுறதுன்னு...இப்படியே பின்னூட்டத்தில் சொல்லிட்டேன்...சரிதானே...:)))))

  --
  Ananthi..

  ReplyDelete
 28. @ஆனந்தி: என் பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு விசயம் இருக்கிறது தெரியாம எவ்வளவோ பேர் கிண்டல் பண்ணியிருக்காங்க.. ஆனா அத நான் பெரிய விசயமா எடுக்கல காரணத்தையும் சொல்லல..

  உங்க பெயரை பற்றி உங்க பதிவு அருமை.!!(நாங்க போடுவோம்ல..)

  கொஞ்சம் பில்டப்..!! கொஞ்சம் மதுரை குசும்போட உங்க பதில அடுத்த பதிவா போட்டுட்டா போச்சு!!
  (டே கூர்.!! அடுத்த பதிவு சிக்கிடுச்சு..!!)

  உங்க பெயர் வரலாறு அருமை.!! உங்க தாத்தாவ பாக்கணும் போலிருக்கு.!!

  ReplyDelete
 29. உங்க பெயர் வரலாறு அருமை.!! உங்க தாத்தாவ பாக்கணும் போலிருக்கு.!!
  ///

  எதுக்கு சொத்து எழுதி வைப்பங்கனா ?:)
  ஆனந்தி அக்கா
  தாத்தாவ நானும் ரொம்ப கேட்டேன்னு சொல்லுங்க

  நல்ல இருக்கு அண்ணா

  உங்க பேர்ல எவ்ளோ கதைகள் இருக்கா

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 30. /படிக்கும் போது கொஞ்ச கடைசியா தான் என் பேர் வரும்.. இருந்தாலும் நாங்க தான் படிப்புல கெத்தாச்சே அதனால எப்பவும் முன்னாடி தான் உக்கார வைப்பாங்க.!!/ சரி..சரி..நம்புறோம் :)

  /இதனால் ராமநாதன்-இராமநாதன்-கூர்மதியன்-கூர்-தம்பி கூர்மதியன் ஆனது.!!/..ஸ்..அப்பா முடியல...

  இந்த பெயரை இவங்க வீட்ல எப்டி கூப்பிடுவாங்கன்னு நான் யோசிச்சேன்... அந்த பெரியவரின் ஆசையை நிறைவேற்றியதில் எங்களுக்கும் சந்தோஷம். நல்ல அர்த்தமுள்ள பேர் மதி...

  ReplyDelete
 31. @சிவா: ஒரு நல்ல மனிதரை பாக்கணும்னு சொன்னது தப்பா.???

  வாழ்த்துகளுக்கு நன்றி.!!

  ஆனந்தியின் தாத்தாவை பத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கன்..

  ReplyDelete
 32. @என்றென்றும்16: மதி-அறிவு.??? அர்த்தம் இல்லையென தோன்றுகிறது.. வீட்ல கூப்பிடும் போது யார் தான் அர்த்தத்தோடு கூப்பிடுறாங்க..

  ReplyDelete
 33. அன்பின் தம்பி கூர்மதியன் - பெயர்க்காரணம் அருமை - நான் கேட்க வேண்டுமென நினைத்திருந்தேன் - அது ஒரு இடுகையாகவே இருக்கிறதென அறிந்த வுடன் படித்தேன் - மகிழ்ந்தேன் - அம்முதியவர் வாழ்க ! தம்பிக்கு விளக்கமும் கூர்மதியனுக்கு விளக்கமும் அருமை. இரு சொற்களின் பொருள் போலவே வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

அதிகாரி சாமி

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!