Posts

Showing posts from March, 2011

கலைஞரும் திருவாரூரும் தேர்தலும்-குட்டிச்சுவரு அரசியலுங்கோ.!!

Image
வழக்கமா நண்பர்கள் எல்லாரும் ஒண்ணு கூடினா உருப்புடாத விசயமான வாழ்க்கையில எப்படி முன்னேறுவது, இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம்னு பேசுவோம்(அட சத்தியமாங்க..!!) நேத்தி கொஞ்சம் வித்யாசமா இருக்கணும்னு அரசியல பத்தி பேச ஆரம்பிச்சோம். அதுவும் உருப்புடாதது தானேன்னு நீங்க கேக்கலாம். அதுக்கு என் பதில் :)))))). சரி எங்க உக்காந்து பேசினோம்னு கேக்குறீங்களா. அட நம்ம குட்டி சுவத்துல தாங்க. ஒருகாலத்துல குட்டிசுவத்துல உக்காந்து பேசிதான் அப்துல் கலாமே உருவானாராம்(வரலாறு தெரியாம பேசாதடா.!!)


நாமினேஷனெல்லாம் முடிஞ்சுபோச்சு. எவரு நிக்கபோறாரோன்னு இருந்த பதட்டம் மாறி.? இவனுங்களிலிருந்து தான் கொஞ்சம் பேர் அடுத்த 5வருசம் எனக்கு நல்லது கெட்டத செய்ய போறாங்கன்னு தெரிஞ்சிபோச்சு. சரி இப்ப நம்ம கலைஞரு சேப்பாக்கத்த உட்டுபுட்டு திருவாரூர் ஓடிபுட்டாரேன்னு ஒருத்தன் ஆரம்பிச்சான்.(இதுக்குன்னே வருவீங்களாடா.!!) சரி எங்க பேச்சுகுள்ள போவோம்.


திருவாரூர்னு சொன்னாலே இப்பமட்டுமில்லைங்க எப்பவுமே ஞாபகம் வருவது கருணாநிதி தான். ஏன்.? உங்களுக்கு தெரியாம இருக்குமா.. அதான் நம்ம கருணாநிதி அவதரித்த ஊரு(அந்த ஊர கொலுத்துங்கடா.!). யாருய்யா அது…

கலைஞரே-நீ ஒரு உத்தமன்.!!

Image
தமிழுலக தலைவனே.!
ஒற்றை ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி,
அவசர உதவிக்கு 108ம் வண்டி,
இலவச வீடுகள்,
இலவச இம்சை பொட்டிகள்,
வங்கி கடன் ரத்து,
இன்னும் சொல்லலாம் ஆயிரம்
உன் வீரமிகு செயல்திறன் எடுத்துகாட்டாய்.!!

மெய்சிலிர்த்திட்டாய் தலைவனே.!
நீ பிறந்த மண்ணிலே
இந்த இளஞ்சிறுவனும் துளிர்விடுகிறான்..
சிந்தையில் நினைக்கும் போதே
நாடி, நரம்புகள் சிலிர்க்குதய்யா.!!

ஆயிரம் திட்டங்களய்யா
அதில் தான் ஆயிரம் நன்மைகளையா!!
அகராதியை புரட்டுகிறது கைகள்
உன்னை விளக்கும் வார்த்தை உண்டா என.!!

நன்மைகளின் உருவமா நீ.???
உன்னிடம் எனக்கென்று ஒரு சில வினாக்கள் அய்யா?

திராவிடம் தோன்றிய தோரணை ஞாபகம் உள்ளதா.?
அன்றைய உமது மேடை பேச்சு ஞாபகம் உள்ளதா.?
''இலவசம்.! இலவசம்.! இலவசம் தரித்து
என் மக்களை இரவலாண்டியாக்கினரே.!''
நீ கொரித்தது தான் இவ்வரிகள்.!!
ஓட்டு பெற்று கோட்டை ஏறினாய்
நீயும் இலவசத்தை வேதமாக்கிகொண்டாய்.!!
ஏனயா.?? காரணம் விளிப்பாயா.??

தமிழர்.! தமிழர் பண்பென்னும் நீ
தமிழனுக்கே உரிய இனிய பண்பை மறந்தாயோ.?
செய்ததை சொல்லும் ஈன பண்பு
உமக்கு எங்கிருந்து முளைத்ததய்யா.?

சரி.! செய்தது என்னனென்ன.?
பட்டியலிட்டாய் உன் செய்கைகளை சாதனை என்று.!!
இது சாதனையா…

சச்சின் ஒரு அப்பாடக்கரா.???

Image
சச்சின்- கிரிக்கெட் உலகின் கடவுள்(சொல்லிட்டான்யா..) அவர பத்தி எழுதனும்னா ஒரு தனி வலைப்பூவே தொடங்கணும்(ஏற்கனவே நான்கு இன்னும் ஒண்ணுனா கொண்டேபுடுவாங்க..) இன்னுமொரு வலைப்பூ ஆரம்பிச்சா என் உயிருக்கு உத்தரவாதம் இல்ல..


சரி சச்சின் பத்தி இப்ப என்ன மேட்டர்னு கேக்குறீங்களா.??? பறையான் பறையான்.. அதையும் யாம் பறையான். அதுக்குமுன்னாடி ஒரு விசயம் நான் சச்சினின் அதிரிபுதிரி ரசிகன். சச்சின் விளையாடும்போது இடியே விழுந்தாலும் எழுந்திரிக்கமாட்டேன்(விழுந்தா தெரியும்..)

விடிய விடிய கொட்ட கொட்ட முழிச்சு மேட்ச் பாக்குறது. அப்பறம் மேட்ச்ச பத்தி அவன் என்ன சொல்றான் இவன் என்ன சொல்றான்னு ஒரு நியூஸ் சேனல் உடாம எல்லாத்தையும் பாப்பன். அப்படி நேத்து 'ஹெட்லைன்ஸ் டூடே' சேனல் பாத்துட்டு இருக்கும்போது பாண்டிங், கங்குலி போன் மூலம் ஒரு லைவ் இன்டர்வியூ ஓடுச்சு..

ஆஹா.. 2003 உலககோப்பையின் பைனல் கேப்டன்கள்னு ரொம்ப ஆர்வமா உக்காந்து பாத்துகிட்டிருந்தன். பாண்டிங் அப்படி இப்படினு நம்ப கங்குலி மானாவாரியா புகழ்ந்தார்(இங்க வாடி உன்ன பொலக்குறன்..)


முதல்ல பாண்டிங் ஃபாம் இல்லாம தவிக்கிறது அது இதுன்னு ஓடுச்சு.. அப்படி இப்படினு…

Is there is anything wrong in my question.???

Image
I was totally dumb
when I look into it.!!

Is this the fate.?
That makes me to face this situation.
Is this is my enemy's trick.?
That made a dig for myself.!!

What makes me to face this situation.?
Is this is my parent's wish.?

Couldn't think of this.!!
Who would help me out.?
Thinking till my brain drains up..

A strange lady crossed me..
A blown bulb created
above my head.!!
Scratched the person,
Get face to face.!!
Sudden shiver occurs..
I struggle to get words
From my mouth.!!

I don't know
how to start the talk.!!
She cooled me and
Lend her ears to hear my talks..

Better i cooled myself.!!
Slowly started..
"I don't know any of the answers
 Can i have some other question paper.?"

Strange lady looked me in anger.!!
The anger made me to study an extra year
In the same worst college.!!!

Now I'm thinking myself
Is there is anything wrong in my question.???
Can anyone help me out this.???

இதெல்லாம் எங்கயா போச்சு.???

Image
இயற்கை விவசாயம் இயற்கையோடு ஒன்றிபோகும் வாழ்க்கை என எல்லாமே இயற்கையை சார்ந்ததாக மனிதர்கள் மாற்றம் கொண்டுவருகின்றனர். அப்படி மாறும் மனிதர்கள் ஆங்காங்கே சிலரை கண்டாலும் இயற்கையின் பெருமைகளை அறியாத பல மக்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை விவசாய உணவு பயிர்களின் கண்காட்சியும் அது குறித்து கருத்துகளும் பகிர்வதற்கு வசதியாக பாதுகாப்பான உணர்விற்கான கூட்டமைப்பு சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஆர்கானிக் மேலா’வை கடந்த 19ம் தேதி மாலை 4மணி முதல் 8 மணிவரையில் நடந்தது.

இயற்கை உற்பத்தியை முனைப்படுத்தும் நோக்கில் இயற்கை சாயம், ராகி, சோளம், குதிரைவாலி, கம்பு, வரகு முதலான சிறுதானியங்களும், இயற்கை விவசாயத்தில் பூச்சுகொல்லியின்றி தயாரிக்கப்பட்ட பண்டங்களும், பல்லுயிரியம் காக்கும் பல விசயங்களை குறித்த நூல்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
கையால் தைத்து,தேங்காய் மட்டையால் பட்டன் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்ட சட்டைகள் கண்காட்சியில் விற்பனைக்காக இடம்பெற்றது. பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு இயற்கை சாயம் உபயோகப்படுத்தும் மகத்துவத்தை எடுத்து சொல்லி சாயம…

அந்த பார்க் பெஞ்சில் அவன்-இறுதி பாகம்

Image
அவள் உன்னதமானவள்..

அந்த நிமிடம் அங்கிருந்து அவன் நிம்மதியோடு விலகியிருந்தாலும் அன்றிரவு அவனுக்கு அங்கே நிம்மதியான உறக்கமில்லை. வாழ்க்கை வாழ்வதெற்கென்று இருக்கையில் எப்படி வாழ்ந்தால் என்ன.? ஒரே வாழ்க்கை அதை சிறப்புற வாழ்ந்திருக்க வேண்டாமா.? என இருமாறுபட்ட கோணங்களில் அவனது மனதின் உள்ளே குடைந்தது.


மனதிற்கும் மூளைக்கும் நடந்த பெருவாரியான யுத்தத்தில் மனம் அவளை நாட வற்புறுத்த மூளை அவளை விலக எச்சரித்தது. இடைப்பட்ட யுத்தத்தில் வீழ சென்ற மனம் வீழாது எழுந்து நின்று மூளையை சரித்துவிட்டது. நாளை காலை முதல் வேலையாக மனதின் மன்னிப்பை ஏந்தி அவளிடத்து ஒப்படைக்க வேண்டும் என எண்ணி முடிவெடுத்து படுத்தான்.

ஆனால் அவனின் அப்போதைய செய்கை அவளை அங்கு வாட்டி எடுத்தது. சென்னை நகரின் தண்ணீர் பைப்புக்கு எதிர்போல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டது.

கண்ணை மூடி யோசித்தாள். இங்கே வராமலே இருந்திருந்தால் ஒருவேளை தட் உயிர் நண்பன் தன்னை உன்னதமானவள் என்றே எண்ணியிருப்பான். இல்லை அவன் கேட்டபோதே உண்மையை சொல்லாமல் மறைத்திருந்தால் அவளது உன்னதம் காக்கப்பட்டிருக்குமே என அவளது மனதின் ஓரம் அங்கங்கே உரசல்கள். ஆனால் உயிரிய நண்பனிடம்…

மக்கள் உமை வெறுப்பது சரிதான்.!!!

Image
உச்சத்தில் பார்த்த அந்நொடியே
மனித கண்கள் மங்கிவிடும்
அந்த சினங்கொண்ட சூரியனார் வெப்பத்தில்..!!

சுட்டெரிக்கும் வெப்ப மிகுதியும்
வறுத்தெடுக்கும் சூட்டின் வலியும்
மக்கள்-வாயில் கொண்டாலும்
அவர்கள் வாழ்க்கை மாறாது.!!

மெல்லிய சருமத்தில்
சொட்ட சொட்ட நனைத்திடும்
அந்த தொடர்சொட்டு மழையை
வேண்டும் மனம் ஏனோ
அது வந்துவிட்டால் விலகி ஓடுகிறதே.!!

அதிசக்தி படைத்த சூரியனை
அறிவில்லா மக்கள் வெறுப்பது ஏன்.?
விட்டம் பார்த்த கண்கள்-அந்த
ரகசிய விசயத்தை யோசித்தது..

எரிச்சலூட்டும் வெயிலோனே
மக்கள் இருக்கட்டும் மக்கள்..
உமை எங்ஙனம் யான் வெறுப்பேன்.???
உமை வெறுத்திடும் எம் மக்கள் என்ன மூடரா.???
உண்மை காதலுக்கு நீயே எடுத்துகாட்டு..

தளர்விட்ட தாத்தா சொல்லி கேட்டுட்டேன்
நானே கண்ணாலும் கண்டிட்டேன்
நான்திசையாள் ஒருவளாம் கிழக்காளிடம்
அதிகாலையிலே அடைக்கலம் நாடுகிறாய்.!!
பிடிக்காத உனை ஏற்பது விரும்பாது
விரட்டிவிட்ட கிழக்காளை
நீ விட்டாற்போல் தெரியவில்லை..


கிழக்கு திசையின் மீது உனக்கென்ன காதல்.? யாம் கண்ட காதலரில் நீயே முதலானவன்..!!!

எத்தனை ஆண்டுகளடா.???
எத்தனை யுகங்களடா.???
உம் காதல் எம்மை சிலாகித்ததடா.!!!

ஆனால்,
சற்று ஆழ்ந்தி யோசிக்கிறேன்..
எம்மக்கள் மூடரி…

இந்திய கிரிக்கெட் அணியும் போரியா மஜூம்ந்தரும்.!!!

Image
நேத்தி காலையில பதினோறு மணிக்கு ஆபிஸ்ல மீட்டிங்.. அடடா முக்கியமான மேட்ச் நேரத்திலா மீட்டிங்னு போய் அட்டண்ட் பண்ணிட்டு சொல்றதுக்கெல்லாம் எடக்கு மடக்கா பேசிட்டு ரொம்ப நேரம் நடக்கவேண்டிய மீட்டிங்க சீக்கிரமா முடிச்சிட்டு 2மணிக்கு வெளிய வந்தன்.. சாப்டா வேலைக்காதுன்னு வண்டிய தட்டி ஸ்பென்சர்லயிருந்து தாம்பரத்துக்கு அரைமணிநேரத்துல சிட்டா பறந்து வந்தன்.. சரியா மேட்ச் ஆரம்பிச்சிடுச்சு..


அப்படி ஓடி வந்து முதல் பால் போடும்போது 'படார்'.. பக்கத்துல பயலுக எல்லாம் ஏசி போட்டுட்டு இருந்ததால ட்ரான்ஸ்பாரம் அவுட்.. அடங்கொன்னியான்.. அப்பரம் பக்கத்து வூட்டு லேப்டாப்ப எடுத்து கையில வச்சிகிட்டு ஸ்கோர் பாத்துகிட்டே இருந்தன்.. தல செஞ்சுரி, காம்பீர் சேவாக் வெளாசல்.. அடடா 400 போகுமா அப்படின்னு விட்டத்த பாத்து கனவு கண்டுட்டு திரும்ப ஸ்கோர் தட்டுறன் பாத்தா பயபுள்ள முனாஃப் பேட்டிங் புடிக்கிறாப்புல.. சரி 300 தேரும்னு பாத்தா அடுத்த செகண்ட் ஆல் அவுட்னு போட்டுட்டாங்க.. இதுல கீழ கமண்ட் வேற சவுத் ஆப்ரிக்கா இதுவரைக்கும் ஆடுன எல்லா மேட்ச்லயும் எதிர் அணியின் 10 விக்கெட்டையும் வீழ்த்திடுச்சாம்.. அப்பரம் அப்படி இப்படின…

ரஜினி, சூர்யாலாம் இங்க வருவாங்கலாமே..!!!

Image
சமீபத்தில் என் காதுகளுக்கு வந்த செய்தி, “எங்க ஊர்ல சுர்யா, ரஜினி போல பெரிய ஆளுங்க வந்து ஆசிர்வாதம் வாங்குற ஒரு சாமி இருக்கார்.. அவரு இப்போ ஜீவசமாதி ஆகபோறார்..”. யார் அவர்..? நேரில் சென்று பார்ப்போம்..சென்னை தாம்பரத்தை அடுத்த சிங்கபெருமாள் கோவிலிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது ஆப்பூர் என்னும் அழகிய கிராமம்.. அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் அமைதியே உருவான ஒரு மடம் போன்று ஒரு இடம் இருந்தது.. அங்கிருந்த பலரும் அவரை தெரியாது என்று சொல்ல, வயதில் முதிர்ந்த பெரியவர் ஒருவர் மட்டும், “ஆமா தம்பி.! அவரு பேரு ஓம்நாதர்.. அவரு இங்க தான் இருக்கார். அவரு வெளியேவும் வரமாட்டார்.. அவருக்கு விளம்பரமும் இல்ல.. அதனால இங்க இருக்கற சிலருக்கு அவரு பேரு கூட தெரியாது..” என்றார்.


உள்ளே சென்றதும் அறைக்கு வெளியே அமைந்திருந்த பலகையில் “சுவாமிகளை ஞாயிறுகளில் மட்டுமே காணமுடியும்.. சுவாமிகள் காலில் விழுவதோ, தங்கள் குறைகளை கூறுவதோ தவிர்க்கப்படவேண்டும்.. உள்ளே சென்று அமைதியாக அமர்ந்திருந்து தியானம் செய்துவிட்டு செல்லவேண்டும்..” என்றிருந்தது.


உள்ளே சென்று அமர்ந்ததும் வெளியே எழுதியிருந்ததுக்கு நேர்மாறாக அவரே மக்களின…

அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்... (4)

Image
நாகரீக விபச்சாரமா இது.???

அவன் மனதை கணக்க செய்த அவளின் பேச்சு அவளது இன்றைய நிலையை விளக்கியது. அவள் அவனிடம், ‘‘உலகில் நீங்காத சேவையான உடல்உணர்வு பரிமாற்ற சேவையில் இருக்கன்.. ஆனா சேவை செய்யிற என்னை பலர் ஏதோ... ஆங்.. விபச்சாரியாமே அப்படி சொல்றாங்க..’’ என்றாள்.


ஒருநிமிடம் எழுந்து சென்றிடலாமா என்று மனதில் தோன்றிய சஞ்சலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நெருக்கமாக அமர்ந்திருந்தவன் சற்று விலகி அமர்ந்து அவளது நிலை இப்படி ஆனது எவ்வாறென்று விளக்க கேட்டான்.

அவளது தாத்தாவுக்கு சிகிச்சைக்கென பெங்களூரு போயிருந்த பத்து நாளிலே அவருக்கு கை,கால் செயல்பட தகுதியற்று போனது. டாக்டர்கள் ஏதோ வாயில் நுழையாத பெயர்களை சொல்லி அதனால் ஏற்பட்ட பாதிப்பு தான் அது என்று விளக்கி அவளை குழப்பத்தில் ஆற்றினர். வாழ்க்கை போகும் போக்கில் எல்லாவற்றிர்க்கும் பணம் பணமென ஆகிவிட்ட சூழ்நிலையில் பெங்களூருவில் கிடைத்த ஒரு தோழி அவளை இந்த சமூக சேவையில் ஈடுபடுத்திவிட்டாள். வாழ்க்கை திசைமாறிபோன காலங்கள் வறுமையை ஒழிக்கவில்லை, வசதியை பெருக்கிவிட்டது.

தான் மாற்று பாதையில் சென்றதை நெருங்கிய நண்பனான அவனிடம் சொல்லும்போதே தடுத்தான் அவன், ‘‘இதெல்லாம் மானங்கெ…

நான் வாழ்த்து சொல்ல விரும்பும் மகளிர் இவர்.!!

Image
அட என்னடா இது தொடர்ந்து மூணு நாளா இந்த ப்ளாக்லயே பதிவு போடவேண்டிய நிலமையாகிபோச்சு(என்ன பொல்லாத நிலமை.!!).. ஆக்சுவலா நான் இன்னைக்கு என் 'கிறுக்கனின் கிறுக்கல்கள்' ப்ளாக்ல கவிதைபோடலாம்னு இருந்தன்(நீ எழுதுறதுக்கு பேர் கவிதையா.??)..ஆனா சிஸ்டம் முன்னாடி உக்காந்த பிறகு தான் இன்னைக்கு மகளிர் தினம்னு ஞாபகம் வந்துச்சு(கண்டுபுடிச்சிட்டார்டா.!!!)


சரின்டு அந்த கவிதை எண்ணத்தை நாளைக்கு ஒதுக்கி வச்சிட்டு இன்னைக்கு மகளிர பத்தி எழுதலாம்னு முடிவெடுத்தன்(பார்றா.!!)சரி மகளிர பத்தி எனக்கென்ன தெரியும்... பெண்கள்ட்ட அதிகமா பேசவேமாட்டேனே.!!(சத்தியமாங்க.!!) அதிகமா பெண்கள்கூட பேசாத நான் என்னாத்த மகளிர் தினத்துக்குன்னு போட.???(கடுப்பேத்தாத டா.!! கான்க்ரீட் மண்டயா.!!!)

சரி எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை பற்றி இந்த பதிவுல போட ஆசபடுறன்..(யாரு டா அது.???) அது வேற யாருமில்ல என் அம்மாதான்..(ஓ.!! சொல்லு சொல்லு.!!)


என் அம்மா பத்தாவதுல அப்பீட்டு..!!! அதுக்கு காரணமா அவுங்க சொல்றது அவுக கல்யாணம் நடந்தது அவுங்க பத்தாவது படிக்கும்போது தான்(அந்த காலம்ங்க.!! சட்டம் அது இதுன்னு யாரும் பேசகூடாது.!!!)இல்லீனா மட்டும் எல்லாத்த…

என் பள்ளி அழுவதை கண்டேன்.!!!

Image
போன வெள்ளிகிழமை வெளிய எங்கையும் போகல, ஆபிஸ்க்கும் மட்டம் போட்டாச்சு..(இல்லீனா மட்டும் போய் வேல செஞ்சி கிழிச்சிடுவாரு.!!) சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் இணையத்துலயே நேரத்த கழிச்சுட்டன்..(யோசிச்சுட்டே வா.!?)


திடீர்னு சாயங்காலம் நம்ப போன் அடிச்சுது..(உனக்கு கூட கால் பண்ண ஆள் இருக்கா.??) அடப்பாவிகளா அதுவும் மிஸ்டு கால் கொடுக்கிறாங்கப்பா.. (மிஸ்டு கால்.! உனக்கா.?? உன்ன பத்தி அவனுக்கு தெரியாது போலடா கூர்..)

ஃபோன எடுத்து பாத்தா என் ஸ்கூல் நண்பன்.. மெசேஜ் அடிச்சா வெளிய வர சொன்னான்.. பயபக்கி பக்காவா ட்ரஸ் பண்ணிட்டு கெத்தா வந்திருந்தான்(ஒரு வேலை கல்யாணமா இருக்குமோ.!!) வெளிய வந்ததும் என்னையும் போயி ட்ரஸ் மாத்திட்டு வர சொன்னான்..சரி ஏதோ பாவும் பயபுள்ள கூப்பிடுதுன்னு போனன்.. நேரா வண்டிய எடுத்துட்டு எங்க ஸ்கூலுக்கு போயிட்டான்(ப்ளடி ராஸ்கல்.!!)

நேத்தி எங்க ஸ்கூல்ல(ஸ்கூல்ல விட்டு வெளிய வந்து பல வருடங்கள் ஆயிடுச்சே எங்க ஸ்கூல்ன்னு சொல்லலாமா.???) 'ஆனுவல் டே' ஃபங்ஷனாமாம்.. எங்க ஸ்கூல் ஒரு சின்ன ஸ்கூலுங்க.. நான் படிக்கும்போது 150பேர் தான் படிச்சோம்.. இப்ப…

திமுக-காங்., முறிவு கலைஞரின் சதிதிட்டமா.???

வணக்கம் மக்காஸ்.!!

எல்லாரும் இப்போ அதிகமா பேசுறது. திமுக-காங்., கூட்டணி முறிவு தான். சரி காங்க்ரஸ் இதுவரைக்கும் என்னலாம் பண்ணினாங்க.கார்த்தி சிதம்பரம் திமுக-வின் இதர கூட்டணி கட்சிகளோடு முரண்டுபிடித்தார். காங்கிரஸின் நடவடிக்கை அனைத்தும் அது தனித்து ஆட்சி அமைக்க விரும்புவதாகவே இருந்தது. ராகுல் காந்தி தமிழகத்தில் காங்க்ரஸ் ஆட்சி தனித்து அமைக்கவேண்டும் என வெளிப்படையாகவே சொன்னார்.பின்பு ஸ்பெக்ட்ரம் ராசா ப்ரச்சனை.. அனைத்திலும் அமைதி காத்தார் கலைஞர்.கலைஞரின் பாணி இல்லையே இது என்று பலரும் யோசித்துகொண்டிருந்தனர்.


இது எல்லாத்துலயும் கலைஞர் மௌனமா இருந்ததுக்கு காரணம் காங்க்ரஸ இப்ப வெளிய துரத்தினா மூன்றாவது அணி உருவாகி காங்க்ரஸின் திட்டம் நிறைவேறிடும்னு கலைஞர் நினைத்திருப்பார்.

இப்போ திமுக-காங்., கூட்டணி முறிவை பத்தி கலைஞர் சொல்லும்போது, '' காங்க்ரஸ் 63 சீட்டுகள் கேட்டாங்க.அதுவும் அவங்க விருப்பபடியே அமையணும்னு கேட்டாங்க.எந்த உடன்பட்ட பேச்சுக்கும் ஒத்துவராததால இந்த முடிவு'' என்றார்.


இத்தனை நாளா கம்முனு இருந்துட்டு கலைஞர் இப்போ சொன்னதுக்கு காரணம் தேமுதிகவுக்கு அதிமுக சீட் ஒதுக்கி உற…

கோணலான கண்ணுக்கு இன்ஷூரன்ஸ் டோய்.!!!

Image
பிரபலமான மக்கள் அனைவரும் தங்களுக்கு பெருமை சேர்க்ககூடிய உடல் உறுப்பை இன்ஷூர் செய்வது இயல்பு. அது தலைமுடி, கை, விரல், கால், முட்டி தொடங்கி ஆணுறுப்பு, பெண் மார்பகம் போன்றவை வரை எல்லாவற்றையும் இன்ஷூர் செய்வர்.


கண்களை வைத்து சாதிக்கும் பலர் கண்களை இன்ஷூர் செய்வர். அப்படி தன் கண்ணை முதன் முதலில் இன்ஷூர் செய்தவர் தான் பென் டர்பின். 1869ல் பிறந்த பென் டர்பின், சார்லி சாப்ளின் போல வசனமே இல்லாமல் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர்.  படங்களிலும் நடித்து பெரும் பெயர் வாங்கியுள்ளார்.

 இவரின் இளம் வயதில் நடந்த ஒரு விபத்தில் அவரது கண்கள் கோணலாக மாறியது. பின்நாளில் அவர் நகைச்சுவையில் கலக்க அந்த கோணலாக மாறிய கண்களே பெரும் காரணமாக மாறியது.


அவருடன் வேலை செய்பவர்கள் அவரை பற்றி சொல்லும்போது ‘பென் எங்காவது தலையில் முட்டிகொண்டால் முதலில் சென்று கண்ணாடியை பார்த்து தனது கோண கண்கள் சரியாக மாறவில்லையே என பார்த்துகொள்வார்’ என்றனர். அதாவது எனது கோணலான கண் சரியாக மாறிவிடகூடாது என்பதில் அவர் பெரிதும் அக்கரையாய் இருந்தாராம்.இருந்தாலும் தனது கோணலான கண்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து வந்து ஒழுங்காக மாறிவிடுமோ எ…

உருகிப்போன இரும்புகாரன் கனவு.!!!

Image
காலை சூரியன் உதயத்தில்
தலையை மூழ்கிய மறுதருணம்
உள்ளே அயர்ந்திருந்த
என் ரெண்டு வயது செல்லத்தின்
நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.!!

முத்தத்தின் முடிவாய் செல்ல சிணுங்களில்
பின் தலைபதிந்திருந்த தலையணை
செல்லத்தின் இடக்கன்னம் தாங்கியது.!!

விபூதி நெற்றி நிரப்ப
வாழ்க்கை துணையவளிடம் சொல்லிவிட்டு
என் வரவு துணை சைக்கிளுடன்
புறப்பட்டு விட்டேன்..!!
என் தினசரி வேலை
வீடு வீடாக இரும்பு சாமான் வாங்குவதற்கு.!!

முச்சந்தி செட்டியிடம் முந்நூறு ரூபாய்,
இரும்பு கொடுக்கும் மகான்களுக்கு
படியளக்கும் பணமாக
காலை கடன்
மாலையில் வசூலென்னும்
நிபந்தனை ஏற்று வாங்கி வந்தேன்.!!

சுற்றி திரிந்த எனக்கு
சுகங்கொள்ள ஓரிடமில்லை.!!
காலையில் தொட்ட என் காலிபெட்டி
மாலை வரையிலும் மீண்டும் சீண்டபடாமல்
இன்னும் காலியாக.!!
இன்னும் எவ்வளவு நேரமோ.??
இல்லை,
இன்றைய தொடக்கமே முடிவானதோ.???

காய போட்ட சட்டியில்
ஊத்தும் எண்ணெய்க்கென காத்திருக்கும்
வாழ்க்கை துணைவிக்கு என்ன சொலவேன்.???

பக்கத்து வீட்டு குழந்தை
வாயில் இருந்த பிஸ்கோத்தை
தனக்கென அழுத என் செல்லத்துக்கு
இன்று கிடைக்குமென வாக்களித்தேனே.!!
அது பொய்யானதை எங்ஙனம் சொல்வேன்.??

கண்கள் கலங்குதே.!
அந்நொடி ஒரு குரல்...
மிதித்து சென்ற ச…