அந்த ‘பார்க் பெஞ்சில்’ அவன்... (4)


நாகரீக விபச்சாரமா இது.???

அவன் மனதை கணக்க செய்த அவளின் பேச்சு அவளது இன்றைய நிலையை விளக்கியது. அவள் அவனிடம், ‘‘உலகில் நீங்காத சேவையான உடல்உணர்வு பரிமாற்ற சேவையில் இருக்கன்.. ஆனா சேவை செய்யிற என்னை பலர் ஏதோ... ஆங்.. விபச்சாரியாமே அப்படி சொல்றாங்க..’’ என்றாள்.


ஒருநிமிடம் எழுந்து சென்றிடலாமா என்று மனதில் தோன்றிய சஞ்சலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நெருக்கமாக அமர்ந்திருந்தவன் சற்று விலகி அமர்ந்து அவளது நிலை இப்படி ஆனது எவ்வாறென்று விளக்க கேட்டான்.

அவளது தாத்தாவுக்கு சிகிச்சைக்கென பெங்களூரு போயிருந்த பத்து நாளிலே அவருக்கு கை,கால் செயல்பட தகுதியற்று போனது. டாக்டர்கள் ஏதோ வாயில் நுழையாத பெயர்களை சொல்லி அதனால் ஏற்பட்ட பாதிப்பு தான் அது என்று விளக்கி அவளை குழப்பத்தில் ஆற்றினர். வாழ்க்கை போகும் போக்கில் எல்லாவற்றிர்க்கும் பணம் பணமென ஆகிவிட்ட சூழ்நிலையில் பெங்களூருவில் கிடைத்த ஒரு தோழி அவளை இந்த சமூக சேவையில் ஈடுபடுத்திவிட்டாள். வாழ்க்கை திசைமாறிபோன காலங்கள் வறுமையை ஒழிக்கவில்லை, வசதியை பெருக்கிவிட்டது.

தான் மாற்று பாதையில் சென்றதை நெருங்கிய நண்பனான அவனிடம் சொல்லும்போதே தடுத்தான் அவன், ‘‘இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பா தெரியல.. கேவலமா இல்லையா.???’’ என வினவுதலின் முடிவாய் தொடங்கியவள் ‘‘ தெரியல.. மானங்கெட்ட பொழப்பாவோ இல்ல கேவலமாவோ இதுவரைக்கும் தோணல.. ஆனா இப்ப தோணுது..முதல்ல என் பக்கத்துல நெருங்கி உக்காந்த நீ நான் என்ன பண்றன்னு தெரிஞ்சதும் நகர்ந்துட்ட.. என்னுடைய நெருங்கிய நண்பன், உயிர் என நினைத்த நீயே இப்படி நடந்துகிட்ட பிறகு தான் தெரியுது.. தோணுது’’ என மனதில் ஓரம் வருத்தத்துடன், முகத்தில் ஏக்கத்துடன், ஒரு பரிதாப முகபாவனையோடு சொன்னாள்.அடுத்த நொடியே சுக்கு நூறாய் உடைந்த இவன். தவறு செய்திட்டோமா.?? என்ன இருந்தாலும் அவள் தனது தோழியல்லவா.?? எங்ஙனம் அவளை அப்படி நினைத்தேன்.?? என மனதிலுள்ளே அவனுக்கு சங்கடமாயானது.

இந்த இரண்டாண்டு இடைவெளியில் அவள் கற்றுகொண்டது பல. உடல் சேவை செய்வோரை ‘வற்புறுத்தல், அறியாமை, வேண்டுதல்’ என்னும் மூன்று கோணங்களில் பிரிக்கலாம்.வற்புறுத்தலில் சுற்றத்தார், சூழ்நிலை, பாதிப்பு இதனால் இதில் உள்ளே தள்ளப்படுவிடுபவர் பலர். இணையும்போது வெறுப்பும் பின்னர் சலிப்புமாக அவர்களது வாழ்க்கை வரண்டதாகவே இருக்கும்.அறியாமை என்னும் கோட்டைக்குள் வருபவர்கள் சிறுவயதிலிருந்தே இந்த எண்ணத்தை ஊட்டியே வளர்க்கப்படுபவர்கள். குழந்தையாக கடத்தபட்டு இந்த எண்ணத்தையே உள்செலுத்தி வளர்ப்பது, அல்லது அங்கேயே குழந்தையாக பிறந்து அந்த சூழ்நிலையை சார்ந்தே வளர்பவர்கள். இவர்களுக்கு இதுதவறென தெரியாது, சிறுவயதிலிருந்து பார்ப்பதின் பழக்கம் வழக்கம் என தொடர்வர். இதில் அதிக அளவில் இருக்கமாட்டர்.வேண்டுதல் என்று சொல்லப்போனால் தமது தேவைக்காக தன்னால் முடிந்த இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்.


இவ்வாறு தாம் இருந்த இடத்திலிருந்து அறிந்தவையை அவனிடம் மெதுவாக சொல்லி பின்னர், ‘‘நான் இருந்த இடத்துல எங்களுக்கு உடல்சேவையை தவிற வேறெதுவும் மனசுல கிடையாது.. நீ படிச்சியே காலேஜ், நீ வாழுறியே இந்த கார்ப்ரேட் வாழ்க்கை இதுல தான் ஊடுருவி இருக்காங்க உண்மையான விபச்சாரிங்க.. சுகத்துக்காக மற்றவர் மடியை நாடுவதே விபச்சாரம்.. கூட்டத்தில் கூடியிருக்கும் இவர்களை போல நஞ்சுக்கள் ஆயிரக்கோடி நல்ல பெண்களையும் நாசம் செய்கின்றனர்.. நான் பண்ணினத சரின்னு சொல்ல வரல.. ஆனா நீ இருக்குற இடத்தில தான் உண்மையான கழிவு கூடியிருக்குன்னு சொல்ல வரேன்.. இல்ல உங்க இடத்துல சுகத்துக்கு தேடுற பொண்ணுங்க எல்லாம் நாகரீக விபச்சாரிகளா.???’’ என்று தனது விளக்கத்தை அளித்தாள்.

உண்மையில் இந்த உடல்சேவையை குறையென பேசும் ஆண்களின் அதே சமுதாயத்திலிருந்தே தனது வாடிக்கையாளர்களும் உருவெடுத்துள்ளனர்.. உலகில் எந்த நபரையும் நம்பிடல் கூடாது என்று அவள் மனதில் என்றுமே நீங்காமல் எண்ணத்தை கொண்டிருப்பாள்.

அவளது தீராத விளக்கத்தை அவனது மனம் ஏற்க மறுத்தது. தவறுகள் செய்துவிட்டு வியாக்கானம் யார்வேண்டுமானால் பேசலாம் என மனதிலுள்ளே கோபம் எழுந்தது அவனுக்கு. சும்மா வாய் வார்த்தைக்காக வீட்டிற்கு வர சொன்ன அவனின் மனோ பாவத்தை புரிந்தவளாய் அதனை மறுத்தாள் அவள். சட்டென வேறு வார்த்தை பேசாமல் ‘‘எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்.. நாளைக்கு இங்க உன்ன இதே நேரத்துல பாக்குறன்’’ என சொல்லிவிட்டு சடசடவென வீட்டிற்கு நடந்தான் அவன்.

வாழ்க்கையை வெறுத்த அந்த பாவமான சிரிப்புடனே அந்த பார்க் பெஞ்சில் மீண்டும் அவள் மட்டும்.. தனிமையில்..!!

-அவ ஏதோ வருத்தமா இருக்கா போல.. அப்பரமா வருவோம் பார்க்குக்கு.

இக்கதையின் முந்தைய பாகங்கள்:

Comments

 1. @கல்பனா: யு டூ.??? சரி சரி.. உங்களுக்கே தான் வடை.. சாப்புடுங்க..

  ReplyDelete
 2. அடடா வடை'ய தங்கச்சி பாப்பா கொண்டு போயிட்டாளே....
  சரி சரி சாப்பிடேய்....

  ReplyDelete
 3. ///ஆனா இப்ப தோணுது..முதல்ல என் பக்கத்துல நெருங்கி உக்காந்த நீ நான் என்ன பண்றன்னு தெரிஞ்சதும் நகர்ந்துட்ட.. என்னுடைய நெருங்கிய நண்பன், உயிர் என நினைத்த நீயே இப்படி நடந்துகிட்ட பிறகு தான் தெரியுது.. தோணுது’’ ///

  மனதை நெகிழவைத்து கண்ணீர் வரவழைத்த வரிகள்.
  முதல் முறையாக வருகிறேன் உங்கள் தளத்திற்கு மீண்டும் வந்து அனைத்தையும் படித்து செல்வேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. பெண்கள் யாருமே விபசாரத்தை விரும்பி செய்வது கிடையாது. அதற்கு காரணம் பணத்தேவைகளும் ,சில ஆண்களும், சமுகமும்தான் காரணம்

  ReplyDelete
 5. வாசித்தவரைக்கும் நன்றாக இருக்குது நண்பரே! நல்ல முயற்சி! தொடருங்கள்! வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 6. ///உண்மையில் இந்த உடல்சேவையை குறையென பேசும் ஆண்களின் அதே சமுதாயத்திலிருந்தே தனது வாடிக்கையாளர்களும் உருவெடுத்துள்ளனர்.///

  அண்ணே! சரியா சொன்னீங்க...

  எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.

  ReplyDelete
 7. விரும்பியோ விரும்பாமலோ சந்தர்ப்பங்கள்தான் மனிதனை வழிநடத்துகிறது !

  ReplyDelete
 8. கதை நார்மல் கதை இல்லை போலவே..ம்ம்...பயணிக்கும் பாதை வித்யாசமா இருக்கு...களம்...உரையாடல் எல்லாமே வேற மாதிரி...பாப்போம் அடுத்த பகுதியில்...:)))

  ReplyDelete
 9. வித்தியாசமான கோணத்தில் ஒரு பதிவு

  ReplyDelete
 10. @மனோ:அடடா.. சோ..சோ.. பாவம்

  ReplyDelete
 11. @அவர்கள்: உண்மை.. முற்றிலும் உண்மை.. இருந்தாலும் நான் ஒரு சிலர் சொல்கையில் அது தவறென தெரியாமலே பலர் இதில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார்.. அதையே இதில் குறிப்பிட்டுள்ளேன்.. முதல் வருகை தொடர்வருகையாக அமைய வேண்டுகிறேன்..

  ReplyDelete
 12. @சேட்டை:நன்றி நண்பரே.!!

  ReplyDelete
 13. @ப்ரகாஷ்:நன்றி பாஸ்..

  ReplyDelete
 14. @ஹேமா:உண்மை.. முற்றிலுமான உணர்ந்த உணரபடவேண்டிய உண்மை..

  ReplyDelete
 15. @ஆனந்தி:ஆமாங்க.. ஆமாம்.. புதுசா தொடர்கதை எழுதுறன்ல அப்படிதாங்க இருக்கும்.. கொஞ்சம் படிக்கிறமாதிரி ரொம்ப தப்புகளோட தான் இருக்கும்.. எதிர்காலத்துல திருத்திகிடுறன்..

  ReplyDelete
 16. @குறட்டை:ம்ம்.. மிக்க நன்றி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..