கலைஞரும் திருவாரூரும் தேர்தலும்-குட்டிச்சுவரு அரசியலுங்கோ.!!

வழக்கமா நண்பர்கள் எல்லாரும் ஒண்ணு கூடினா உருப்புடாத விசயமான வாழ்க்கையில எப்படி முன்னேறுவது, இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம்னு பேசுவோம்(அட சத்தியமாங்க..!!) நேத்தி கொஞ்சம் வித்யாசமா இருக்கணும்னு அரசியல பத்தி பேச ஆரம்பிச்சோம். அதுவும் உருப்புடாதது தானேன்னு நீங்க கேக்கலாம். அதுக்கு என் பதில் :)))))). சரி எங்க உக்காந்து பேசினோம்னு கேக்குறீங்களா. அட நம்ம குட்டி சுவத்துல தாங்க. ஒருகாலத்துல குட்டிசுவத்துல உக்காந்து பேசிதான் அப்துல் கலாமே உருவானாராம்(வரலாறு தெரியாம பேசாதடா.!!)


நாமினேஷனெல்லாம் முடிஞ்சுபோச்சு. எவரு நிக்கபோறாரோன்னு இருந்த பதட்டம் மாறி.? இவனுங்களிலிருந்து தான் கொஞ்சம் பேர் அடுத்த 5வருசம் எனக்கு நல்லது கெட்டத செய்ய போறாங்கன்னு தெரிஞ்சிபோச்சு. சரி இப்ப நம்ம கலைஞரு சேப்பாக்கத்த உட்டுபுட்டு திருவாரூர் ஓடிபுட்டாரேன்னு ஒருத்தன் ஆரம்பிச்சான்.(இதுக்குன்னே வருவீங்களாடா.!!) சரி எங்க பேச்சுகுள்ள போவோம்.


திருவாரூர்னு சொன்னாலே இப்பமட்டுமில்லைங்க எப்பவுமே ஞாபகம் வருவது கருணாநிதி தான். ஏன்.? உங்களுக்கு தெரியாம இருக்குமா.. அதான் நம்ம கருணாநிதி அவதரித்த ஊரு(அந்த ஊர கொலுத்துங்கடா.!). யாருய்யா அது என்ன திட்டுறது. அய்யோ அவசரபடாதிங்கப்பா அவரு அவதரிச்சது திருவாரூர் பக்கத்துல திருக்குவளை தாங்கோ.!

முதல் முதல்ல நம்ம(.!?) திருவாரூரும், கலைஞரும், இதுவரை அரசியலும்னு பேச ஆரம்பிச்சோம். கொஞ்சம் நாங்க பேசின கருத்த மட்டும் புரியிற மாதிரி சொல்லிடுறன்..

கலைஞர் முதல் முதல்ல தேர்தலில் நிக்கும்போது ஏன் திருவாரூர்ல நிக்காம குளித்தலை(அதான் சிட்டிசன் படத்துல தல சொல்லுவாரே.!)ல நின்னாரு தெரியுமான்னு ஒருத்தன் கேட்டான். அட பயபுள்ளைக்கு அரசியலோட ஆழமெல்லாம் தெரியும் போலன்னு அப்படியே ஆச்சர்யமா உக்காந்து கேட்டா பதில் சொல்லுறான் அவர் மொத மொதல்ல 1957ல நிக்கும்போது திருவாரூர்க்குனு தனி தொகுதி கிடையாதாம்.(அட நான்சன்ஸ்.!!)


அதான் 1962ல அறிவிச்சாங்கல்ல அப்ப நிக்கவேண்டியது தானேன்னு நீங்க கேக்கலாம். அப்பதான் அவர தஞ்சாவூர் கமான் கமான் அழைச்சுதே.!(ஆமாம் குதிரை பாரு.!!) யாருய்யா அது குதிரைய கேவலபடுத்தாதேன்னு சொல்றது. பப்ளிக் பா.. டீசன்ஸி. அப்ப அந்த தொகுதிய யாரு பிடிச்சது.? அம்பிகாபதின்னு ஒருத்தராம். காங்க்ரஸ் கட்சிகாரராம். ஹி ஹி.

அடுத்து 1967 என்ன ஆச்சு.? அப்ப கலைஞர் சென்னையில பூந்து விளையாடிட்டாரு.(டே மெட்ராஸ் டா.!!) சாரிங்கோ.. மெட்ராஸ்ல பூந்து விளையாடிட்டாரு. ஏதோ 20ஆயிரம் ஓட்டுக்கு மேல வித்யாசத்துல ஜெயிச்சிட்டாரு. அப்பரம் திருவாரூர் நிலை.? தனுஷ்கோடி தான். அட தனுஷ்கோடி ஊருதானய்யான்னு கேக்கலாம். அட மதுர, திருப்பாச்சின்னு(ஹி ஹி)  தான் பேர் வச்சா ஒத்துபீங்களா மார்க்ஸிட் கம்யுனிஸ்ட்ட சேர்ந்த தனுஷ்கோடிதாங்க செயிச்சது.

அடப்பாவிகளா.! சரி 1971ல ஏன்யா நிக்கல.? அட உங்களுக்கு தெரியாதா 1971லயும் சரி, 1977லயும் சரி கருணாநிதி தாங்க அங்க நின்னு செயிச்சது. என்ன முழிக்கிறீங்க. இல்லையே இப்பதானே முதல் முதல்ல கருணாநிதி அக்க நிக்கிறாருன்னு சொல்றவங்களுக்கெல்லாம் இது அதிர்ச்சியாதாங்க இருக்கும். கருணாநிதி 1971 மற்றும் 77களில் திருவாரூர்ல நின்னு செயிச்சிருக்காருங்கோ.! ஆனா என்ன ஒரு சின்ன வருத்தம்னா அது வேற கருணாநிதி, நம்ம கலைஞர்'ஜி' இல்லீங்கோ.! 1967ல அவரு சைதாபேட்டையில நின்னு செயிச்சதால தான் முதல்வர் ஆனாரு அதனால அங்கேயே கன்டினியு.!இந்த கருணாநிதியும் தி.மு.க., தானுங்கோ.!!


1977 என்னாச்சு.? அட அதுக்கு முன்னாடி தான் கலைஞரோட ஆட்சிய இந்திரா விலக்கிட்டு ஒரு பெரிய ப்ரச்சனை ஆச்சில்ல. அதனால எங்க நமக்கு ஓட்டு கிடைக்காதோன்னு கலைஞர் திருவாரூர் தான் ஓடியிருப்பாரு. ஆனா அங்க வச்சாங்க அவருக்கு வேட்டு.! திருவாரூர் தொகுதிய ரிசர்வ்டு தொகுதியா மாத்திபுட்டாங்க. அதனால நம்ம தானே தலைவர், தன்மான சிங்கம் எங்கிட்டு போறதுன்னு தெரியாம விழிபிதுங்கி நின்ன இடம் தான் அண்ணா நகர். இந்த தேர்தல்ல திமுக படும் மட்டமா தோத்தாலும் இவரு செயிச்சுபுட்டாரு. இந்த தேர்தலுக்கு அப்புரம் தான் திமுக வழி மாறிபோச்சுனு கூட சொல்லலாம். இந்த தேர்தல்ல தான் எம்.ஜி.ராமசந்திரன் முதல்வர் ஆனார்.

பின்னால 1980ல காங்கிரஸூம், தி.மு.க., வும் ஜாயின்ட் அடிச்சாங்க. நம்ம அதிமுக,மார்க்ஸிட் கம்யுனிஸ்ட்ம் ஜாயின்ட் அடிக்க திருவாரூர்ல திமுக கொட்டத்த அடக்கிட்டு மார்க்ஸிட் கம்யுனிஸ்ட் இடத்த புடிச்சாங்க. இப்ப மார்க்ஸிட் கம்யுனிஸ்ட்டுக்காக நின்னது செல்லமுத்துனு ஒருத்தருங்கோ.! நம்ம கலைஞர் சிங்கம் அண்ணா நகர் மக்களின் நன்றியுள்ளத்தை மறக்காம அங்கையே நின்னு செயிச்சாரு.இந்த தேர்தல் 2வருசம் முன்னடியே வந்ததுக்கு காரணம் எல்லாருக்கும் தெரியுமுல்ல.!!அதுக்கு பிறகு 1984.! நம்ம கலைஞர் தான் 1983லயே எம்.எல்.யே பதவிய ராஜினாமா பண்ணிட்டு ஈழதமிழர்களுக்காக குரல் கொடுக்க போயிட்டாரே.! அதனால 84 தேர்தல்ல நிக்காம உட்டுபுட்டாரு.! நம்ம திருவாரூர் தொகுதியில செயிச்சது அதே செல்லமுத்து தான். அதே மார்க்ஸிட் கம்யுனிஸ்ட் கட்சிக்காக தான். ஆனா ஒரு வித்யாசம் இந்த முறை கூட்டணி திமுகவோட(நார பொலப்பு.!!) ஆனா இந்த தேர்தல்லயும் கலைஞர் பப்பு வேகல. அனுதாப ஓட்டு அப்படி இப்படி எம்.ஜி.ராமசந்திரன் அள்ளிபுட்டாரு.

அப்பால 1989.! இதுக்கு முன்னாடி தான் எம்.ஜி.ராமசந்திரன் போய்ட்டாருல்ல. அதனால இந்த முறை அதிமுக ஹெட்.. ஹி ஹி.. ஜெ., தான்(கொடுமை.!) இதுல இன்னொரு கொடுமை வேறு. அதிமுக ரெண்டா பிரிஞ்சது. அதுல ஒண்ணுக்கு தான் நம்ம ஜெ., இன்னொன்னுக்கு எம்.ஜி.ராமசந்திரனின் மனைவி ஜானகி நின்னாங்க. பலர் ஜானகி அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணினாலும் எம்.ஜி.ராமசந்திரனுக்கு பிறகு ஆண்டிபட்டியில நின்னுக்கூட அவங்களால செயிக்க முடியல.(மொத்தமே ரெண்டு தான் செயிச்சாங்கோ.!) இதுல அப்படியே நேர்மாறா அதிமுக தோத்து திமுக செயிச்சுபுட்டாங்க(அட தமிழக மக்களா என்னதான்யா மனசில வச்சிருக்கீங்க.!!) இதுல இன்னொரு காமெடி என்னன்னா.? ரெண்டு அதிமுகவும் ரெட்டை இலைய கேக்க ஆனிய புடுங்கவேணாம் நீங்க ரெண்டு பேருமே வேற எடுத்துகோங்கன்னு தேர்தல் ஆணையம் சொல்லிடுச்சு. அதனால ஜெ., கோழி சின்னத்தோடும், ஜானகி ரெட்டை கிளி சின்னத்தோடும் போட்டி போட்டாங்க(ரெட்டைய உடாதவங்க போல.!) இந்த தேர்தல்ல நம்ம கலைஞர் ஹார்பர்(நல்லா லாபம் வரும்.!) தொகுதியில நின்னு செயிச்சாரு. நம்ம திருவாரூர் தொகுதியில தம்புசாமின்னு ஒருத்தர் நின்னு செயிச்சாரு.

கருணாநிதி ஆட்சிய கலைச்சதால திரும்பவும் 1991ல தேர்தல் வந்துச்சு. ராஜிவ் காந்தி சோகம் அது இதுன்னு அதிமுக-காங்., கூட்டணி பலமா இருந்துச்சு. போன மாதிரியே கலைஞர் ஹார்பர்ல போட்டி போட்டார். அவரோட பலமான கூட்டணி யாரு தெரியுமா.? ஹி ஹி.. நம்ம டி.ஆர்., தாங்கோ. அதான் த.மு.க., இந்த தேர்தல்ல ஒரு பலத்த அடி தி.மு.க., வுக்கு. மொத்தமே ரெண்டே தொகுதியில தான் செயிச்சாங்க. அதில் ஒண்ணு கலைஞர். அவருக்கு அவர எதிர்த்து போட்டியிட்ட காங்க்ரஸ்-ஐ சேர்ந்த சுப்புவுக்கும் 890ஓட்டு தான் வித்யாசம்(எப்படி செயிச்சாரோ.!! கள்ள ஓட்டா இருக்குமோ.??) இதுல என்ன கொடுமைனா தி.மு.க. மொத்தம் செயிச்சதும் 2தான், நம்ம டி.ஆர்., த.மு.க., மொத்தம் செயிச்சதும் ரெண்டுதான்(தூக்குல தொங்கலாம்.) நம்ம ஜெ., முதல் முதலா முதல்வர் ஆனாங்க. 224 தொகுதியில இவுக கூட்டணி செயிக்க திமுக கூட்டணி 7 தொகுதியில செயிச்சாங்க. அநேகமா இதுதான் அதிக வித்யாசமா இருக்கும். அந்த 7 தொகுதியில திருவாரூர் தொகுதியில மார்க்ஸிஸ்ட் கம்யு., சேர்ந்த தம்புசாமியும் அடங்குவார்.


பின்ன 1996ல ஒரு பெரிய காமெடி.! அப்படியே உட்டாலக்கடி பண்ணினாங்க நம்ம மக்கள். கலைஞர் ஹார்பர்ல திரும்ப நின்னு நார விரும்பாம சேப்பாக்கம் மாறினாரு. திருவாரூர் தொகுதியில திமுக சேந்த அசோகன் நின்னு செயிச்சாரு. இந்த முறை திமுக 221 தொகுதியிலயும் அதிமுக 8 தொகுதியிலயும் தான் செயிச்சாங்க. அட கொடுமையே.! நம்ம மக்கள் என்னதாம்பா நினைப்பாங்க.?? இதுல நம்ம ஜெ., எதிர் கட்சி தலைமையா இருந்துகிட்டு பர்கூர்ல தோத்துபுட்டாங்க டோய்.!!


பிறகு 2001.! இதுலயும் உட்டாலக்கடி நடந்துச்சு.. போன முறை தோத்த ஜெ., இந்த முறை போட்டி போடல.. ஆனா அதிமுக 196தொகுதியில செயிச்சுது, திமுக 37 தாம்.. கலைஞர் போனமுறை போல சேப்பாக்கத்திலே நின்னு செயிச்சாரு. திருவாரூர்ல அசோகனே திரும்பவும் நின்னு செயிச்சிட்டாரு. இருந்தாலும் ஜெ., அவரது கட்சியினரால் முதல்வராக்கப்பட்டு கிரிமினல் வழக்கால் அது பரிக்கப்பட்டு நம்ம சிங்கம், புயல் ஓ.பன்னீர்செல்வம் டம்மி பீஸா உக்கார வைக்கப்பட்டார்.

2006.! இதுல தான் உந்த உட்டாலக்கடி டபரடப்பா வேலையெல்லாம் கொஞ்சம் முடிஞ்சது. அதாவது ரெண்டு பேருக்குமான மார்ஜின் ஓரளவு குறைஞ்சது. இம்முறையும் கலைஞர் சேப்பாக்கத்தில நின்னு செயிக்க, திருவாரூர்ல திமுக சேர்ந்த மதிவாணன் நின்னு செயிச்சாரு. திமுக 163லயும் அதிமுக 69லயும் செயிச்சாங்க.


இப்போ 2011.! மாறி மாறி செயிச்சுட்டு வர்றத பாத்தா இந்த முறை ஜெ., வா.? இல்ல கலைஞரின் இலவசம் ஓட்டு குவிக்குமா.? திருவாரூர் ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து விலக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ப்ராப்ளம்மால் இங்க நின்னா தேராதுன்னு திருவாரூர் ஓடிபுட்டாரு நம்ம கலைஞர் ஜி.!! கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டாரா ஜெ.,? இல்லை அவருக்கு கிடைத்த வாய்ப்பை தட்டி பரித்தாரா கலைஞர்.? பொருந்திருந்து பாப்போம்.(எப்படியும் யார்வந்தாலும் உருப்புட போறதில்ல.. அப்பரம் என்ன.??)

இப்படி கேள்விக்கெல்லாம் பதிலில்லாம.. *%(()&&$%#%%*(*($&% இப்படி கலைஞரையும், ஜெ.,வையும் பத்தி நண்பர்கள் பேச பப்ளிக் கூடி ஆட்டோ வந்திடுமோன்னு பயந்து போயி குட்டிசுவரு இன்று கலைக்கப்பட்டது. நேரம் கிடைக்கும்போது திரும்ப கூடினா சொல்றன்.. ஓகே.!!


Comments

 1. /.(எப்படியும் யார்வந்தாலும் உருப்புட போறதில்ல.. அப்பரம் என்ன.??)///

  ஹா ஹா ஹா ஹா நம்ம ஆளுங்களுக்கு எல்லாம் மரத்து போச்சுய்யா....

  ReplyDelete
 2. //இப்படி கேள்விக்கெல்லாம் பதிலில்லாம.. *%(()&&$%#%%*(*($&% இப்படி கலைஞரையும், ஜெ.,வையும் பத்தி நண்பர்கள் பேச பப்ளிக் கூடி ஆட்டோ வந்திடுமோன்னு பயந்து போயி குட்டிசுவரு இன்று கலைக்கப்பட்டது. நேரம் கிடைக்கும்போது திரும்ப கூடினா சொல்றன்.. ஓகே.!!//


  ஆட்டோ என்ன ஆட்டோ... லாரியே வரும்..

  ReplyDelete
 3. ஆட்டோ வரும்.அறிவிச்சுவிடுறன் !

  ReplyDelete
 4. அட நம்ம குட்டி சுவத்துல தாங்க. ஒருகாலத்துல குட்டிசுவத்துல உக்காந்து பேசிதான் அப்துல் கலாமே உருவானாராம்(வரலாறு தெரியாம பேசாதடா.!!//

  வணக்கம் சகோ, நீங்களும் எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்பதை மறைமுகமாகச் சொல்ல வாறீங்களோ!
  அவ்......
  வாழ்க பாரதம்!

  ReplyDelete
 5. அவர் மொத மொதல்ல 1957ல நிக்கும்போது திருவாரூர்க்குனு தனி தொகுதி கிடையாதாம்.(அட நான்சன்ஸ்.!!//

  அட அந்தக் கால வரலாறுகளையும் சகோ பிச்சு வைக்கிறார்.
  ஒத்துகிறேன் சகோ, நீங்க எங்கள் எல்லோரையும் விட சீனியர் தான்..ஆனாலும் இப்பிடிப் பப்பிளிக்கா உங்கள் ஏஜ்ஜை காட்டிக் கொடுக்கிறது ரொம்ப ஓவரு.

  ReplyDelete
 6. ஏதோ 20ஆயிரம் ஓட்டுக்கு மேல வித்யாசத்துல ஜெயிச்சிட்டாரு.//

  அந்தக் காலத்திலை கள்ள ஓட்டு, நல்ல ஓட்டு, நேர்மை ஓட்டு, இலவச ஓட்டு இல்லையோ?

  ReplyDelete
 7. 1967ல அவரு சைதாபேட்டையில நின்னு செயிச்சதால தான் முதல்வர் ஆனாரு அதனால அங்கேயே கன்டினியு.!இந்த கருணாநிதியும் தி.மு.க., தானுங்கோ.!//

  சைதாப் பேட்டையிலை ஏதோ மர்மம் இருக்கிறது போல:))
  அதனால் தான் கலைஞர் சைதாப்பேட்டையில் வெற்றியிட்டியிருக்கிறார்.
  இந்த மர்மத்தை 1967ம் ஆண்டு எலக்சன் கமிசன் தான் வந்து தீர்த்து வைக்கனும்.

  ReplyDelete
 8. சகோ கலைஞரின் அரசியல் வாழ்வினையும், அவர் எப்படித் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டார் என்பதையும் ஒரு அரசியல் ஆய்வாக, வரலாற்றுப் பதிவாகத் தந்துள்ளீர்கள். அரசியல் அதிகம் தெரிந்தால் தானே நானும் கருத்துக்களைக் கூற முடியும். தமிழக அரசியலைப் பொறுத்த வரை நான் கத்துக் குட்டி.
  ஆகவே ஐ ஆம் எஸ்கேப்....

  ReplyDelete
 9. தமிழ் இனத்தலைவரையே தப்பா பேசீட்டீங்களே.. இதனால என்ன என்ன பிரச்சனைகள் வரப்போகுதோ..?ஹி ஹி

  ReplyDelete
 10. @மனோ: உங்களுக்கே தான் அண்ணா.. சாப்பிடுங்கோ.!!

  லாரி தானே வந்தா வந்திட்டு போகுது..

  பொதுமக்களே.! எனக்கு இந்த பதிவை எழுத சொல்லிகொடுத்தது நம்ம நாஃசில் அண்ணன் தான்..

  ReplyDelete
 11. @இராஜராஜேஷ்வரி:நன்றிங்க..

  ReplyDelete
 12. @மாதவி:தேங்க்ஸ் மாதவி..

  ReplyDelete
 13. @நிரூபன்:
  //இந்தியாவின் தூண்கள் என்பதை //

  நடந்தா நல்லா தாம்ல இருக்கும்..

  //ஆனாலும் இப்பிடிப் பப்பிளிக்கா உங்கள் ஏஜ்ஜை காட்டிக் கொடுக்கிறது
  ரொம்ப ஓவரு//

  ஆக்சுவலா என் வேலைக்கு இதெல்லாம் நான் தெரிஞ்சு வச்சிருக்கணும்.. இந்த பச்ச புள்ளைக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. ஸோ.! உங்க தந்திரம் பலிக்கலையே.! நான் உங்களவிட சின்ன பையன் தானே.!

  //இந்த மர்மத்தை 1967ம் ஆண்டு எலக்சன் கமிசன் தான் வந்து தீர்த்து வைக்கனும்//

  ஹி ஹி..

  // தமிழக அரசியலைப் பொறுத்த வரை நான் கத்துக் குட்டி.//

  அதான் இத்தன பேர் எழுதுரோம்ல.. படிச்சு பெரிய ஆளா வாங்க..

  கருத்துக்கு நன்றி பாஸ்..

  ReplyDelete
 14. @ஹேமா:என்னங்க.. நீங்களே ஆட்டோ அனுப்புறீங்களா.? இந்த பதிவோட கரு, எழுத்துகள் அனைத்தும் நாஞ்சில் மனோ அண்ணனுடையது.. அங்கே பாத்துக்கோங்க.. யார் ஆட்டோ அனுப்பவதென்றாலும் அங்கே.!! நான் எஸ்கேப்பு..

  ReplyDelete
 15. @சிபி:யாருப்பா அது தமிழின தலைவரு.!! என் பதிவுல எங்கயாச்சும் ஒளிஞ்சிருக்கீங்களா.? அப்படி யாரும் இல்லையாமே சிபி பாஸ்..

  ReplyDelete
 16. அன்பின் தம்பி கூர்மதியன் - குட்டிச்சுவரு பொழுது போக்கறதுக்குத்தான் உதவும் - சரி சரி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!