உருகிப்போன இரும்புகாரன் கனவு.!!!


காலை சூரியன் உதயத்தில்
தலையை மூழ்கிய மறுதருணம்
உள்ளே அயர்ந்திருந்த
என் ரெண்டு வயது செல்லத்தின்
நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.!!

முத்தத்தின் முடிவாய் செல்ல சிணுங்களில்
பின் தலைபதிந்திருந்த தலையணை
செல்லத்தின் இடக்கன்னம் தாங்கியது.!!

விபூதி நெற்றி நிரப்ப
வாழ்க்கை துணையவளிடம் சொல்லிவிட்டு
என் வரவு துணை சைக்கிளுடன்
புறப்பட்டு விட்டேன்..!!
என் தினசரி வேலை
வீடு வீடாக இரும்பு சாமான் வாங்குவதற்கு.!!

முச்சந்தி செட்டியிடம் முந்நூறு ரூபாய்,
இரும்பு கொடுக்கும் மகான்களுக்கு
படியளக்கும் பணமாக
காலை கடன்
மாலையில் வசூலென்னும்
நிபந்தனை ஏற்று வாங்கி வந்தேன்.!!

சுற்றி திரிந்த எனக்கு
சுகங்கொள்ள ஓரிடமில்லை.!!
காலையில் தொட்ட என் காலிபெட்டி
மாலை வரையிலும் மீண்டும் சீண்டபடாமல்
இன்னும் காலியாக.!!
இன்னும் எவ்வளவு நேரமோ.??
இல்லை,
இன்றைய தொடக்கமே முடிவானதோ.???

காய போட்ட சட்டியில்
ஊத்தும் எண்ணெய்க்கென காத்திருக்கும்
வாழ்க்கை துணைவிக்கு என்ன சொலவேன்.???

பக்கத்து வீட்டு குழந்தை
வாயில் இருந்த பிஸ்கோத்தை
தனக்கென அழுத என் செல்லத்துக்கு
இன்று கிடைக்குமென வாக்களித்தேனே.!!
அது பொய்யானதை எங்ஙனம் சொல்வேன்.??

கண்கள் கலங்குதே.!
அந்நொடி ஒரு குரல்...
மிதித்து சென்ற சைக்கிளிலிருந்து
சடாரென கீழிறங்கி
சுற்றும் முற்றும் பார்த்தால்
அங்கே ஒரு அம்மா..
கீழே உடைந்த கட்டில்..

குடும்பத்தின் ஆசை அடையபோகிறது.!!
இன்ப வாசல் திறந்திட்டது..
அருகில் சென்று பணிவாக
அவர் ஆணைபடி உயர்த்திப்பார்த்தேன்.!!

அருமை.!! அருமை.!!
முந்நூறு ரூபாய் தேறுமே.!
மனதில் எழும்பிய கணக்கு,
''இருநூறு ரூபாய் கொடுத்திட்டு
பிஸ்கோத், எண்ணெய் போக
மிச்சம் சேமிப்பாக''
மனதின் ஓரம் மெல்லிய சிரிப்பு.!!

ஆனால்,
வியாபார சந்தையில்
விவகாரம் பிடித்தவர் போல
அந்த முரட்டு பார்வை அம்மா.!!

ஓயாமல் வஞ்சித்த அவர் வாய்
எனது சேமிப்பை அழித்து
அவர் கூடாரத்தில்
அம்பது ரூபாய் கூட்டியது.!!
இன்னும் பேசிய அவர்
விடாபிடி கடாமுடியா இருப்பாரோ.???

நாப்பது ரூபாய் எண்ணெய்
பத்து ரூபாய் பிஸ்கோத்தென
பிரிந்திருந்த மீதி ரூபாயில்
செல்லத்தின் பிஸ்கோத்தும்
அவர் ஓயாமல் மொய்க்கும் வாய்க்குள் போனதே.!!

செல்லத்திற்கு கொடுக்க முடியா சூழ்நிலையை
நினைத்து நினைத்து வெம்பியவாறு
எழுந்த கோபத்தில் பொருளை வீச எண்ணி
அடுத்த வேலை உணவின் சூழ்நிலையை
மனதில் ஏந்திய வண்ணம்
இருநூற்றி அறுபதென எண்ணி வைத்துவிட்டேன்.!!


கட்டிலை என் சைக்கிள் கட்டிகொள்ள
மீண்டும் மிதிக்கிறேன் சைக்கிளை
''கவலை வேண்டாம் செல்லம்
நாளை காலை ஊதியம்
உந்தன் பிஸ்கோத்துக்கு..''
என எண்ணுக்கொண்டு
நாளை வாங்கபோகும் 'பருப்பை'
மனதினுள்ளே புதைத்தவாறு.!!!

டிஸ்கி: அந்த முரட்டுதனமான பெண்ணென இங்கே நான் குறிப்பிட்டிருப்பது வேற யாருமில்லைங்க.. என் அம்மா தான்.. எங்க வீட்டு உடைந்த கட்டில தூக்கிபோட அவங்க பேரம் பேசின விதம் இப்படி எழுதலாம்னு தோணுச்சு எழுதிட்டன்.. என்ன எழுத்து வருதோ அத அப்படியே போட்டு எழுதினது.. அழகோ மெருகோ பண்ணல.. சோ.. நல்லாயில்லைனா கேக்க கூடாது.!!!

Comments

 1. செல்லத்திற்கு கொடுக்க முடியா சூழ்நிலையை
  நினைத்து நினைத்து வெம்பியவாறு
  எழுந்த கோபத்தில் பொருளை வீச எண்ணி
  அடுத்த வேலை உணவின் சூழ்நிலையை
  மனதில் ஏந்திய வண்ணம்
  இருநூற்றி அறுபதென எண்ணி வைத்துவிட்டேன்.!!


  ....மனதை கனக்க வைத்த வரிகள்.

  ReplyDelete
 2. நல்லாயில்லைனா கேக்க கூடாது.!//
  ok kaakali. ulathu ullapati iruku.

  ReplyDelete
 3. நல்ல கரு. முனைப்பான முயற்சி. இன்னும் சற்றே சொற்களைக் குறைத்திருந்தால், கவிதையின் தாக்கம் மேலும் அதிகரித்திருக்கும். நன்று...

  ReplyDelete
 4. >>>>மிதித்து சென்ற சைக்கிளிலிருந்து
  சடாரென கீழிரங்கி

  கீழிறங்கி

  ReplyDelete
 5. >>>>>உறுகிப்போன இரும்புகாரன் கனவு.!!!


  உருகிப்போன

  ReplyDelete
 6. இந்த கரு அழகா இருக்கு. ஆனா கவிதையை விட கதையா எழுதி இருந்தா அதனோட வீச்சு இன்னும் உயரத்துக்குப்போயிருக்கும்னு நினைக்கறேன்

  ReplyDelete
 7. தலைப்பே கலங்க வைக்குது....

  ReplyDelete
 8. அருமையான கவிதை....நிதர்சனம்

  ReplyDelete
 9. @சித்ரா: நன்றிங்க.. தொடர்ந்து வாங்க.!!

  ReplyDelete
 10. @ப்ரகாஷ்:தேங்க்ஸ் பாஸ்...

  ReplyDelete
 11. @இராஜி:மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கு நன்றி.!!

  ReplyDelete
 12. @சேட்டை:எனக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை.!! இனி முயற்சிக்கிறேன்.!! நான் வெறும் கத்துகுட்டி தான்.!! உங்களை போன்றோர் சொல்வதை வைத்து கத்துகொள்கிறேன்.!!

  ReplyDelete
 13. @சிபி:
  //கீழிறங்கி//

  //உருகிப்போன//

  ஆகிய இரண்டு பிழைகளையும் திருத்திவிட்டேன்.!!

  மற்றொன்று //வேதனை// இதை பலரும் கேட்பார்கள் என்றிருந்தேன்.. யாரும் கேக்கல அதனால நானும் இதுக்கான விளக்கம் தரல..

  இங்கே 'வேதை' என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள்.. மனமும் மூளையும் தாக்கிய எழுத்துகளை இதன் கீழே பதிவிடுவேன்..

  கதையாக எழுதியிருந்தால் பலர் படிக்காமல் விட்டுவிடுவர் ஆனால் இதை அனைவரும் படித்திட வேண்டும் என நினைத்தேன்.. அதனாலே இதை கவிதையாக எழுதினேன்..

  ReplyDelete
 14. @மனோ:அந்த தலைப்பே தப்புன்னு சொல்லிட்டார் சிபி.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.!! நன்றி பாஸ்..

  ReplyDelete
 15. உங்க வேதனையை நச்சுனு பதிவு பண்ணிட்டீங்க.

  ReplyDelete
 16. மனதை கனக்க வைத்துவிட்டது.

  ReplyDelete
 17. @லக்ஷ்மி: ஆமாம் ஆமாம்.. உண்மை தான்.. நன்றிங்க..

  ReplyDelete
 18. @பிரஷா:ரொம்ப நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும்..

  ReplyDelete
 19. இந்த கவிதை வரிகள் படிச்சுட்டு ரொம்பவே மனசு கனத்திருச்சு கூர்...நானே இந்த பேரம் பற்றி ரொம்ப நாளா பதிவு போடலாம்னு இருக்கேன்...சீக்கிரம் போடுவேன் பாருங்க..இந்த பேரங்களினால் ஏகப்பட்ட எரிச்சல் அடஞ்சிருக்கேன்...செமத்தியான கவிதை கூர்...பாராட்ட எந்த வார்த்தைகளும் இல்லை..லேட் ஆ கம்மென்ட் போட்டதுக்கு சாரி...:))

  ReplyDelete
 20. அப்புறம் இந்த தலைப்பு இந்த கவிதைக்கு அவ்வளவு பொருத்தம்...செம....

  ReplyDelete
 21. சீக்கிரமா உங்களுடைய பதிவ எதிர்பாக்குறன்.. (எந்த மாதிரி சம்பவங்களோ.??) லேட்டா வந்தீங்களா சீக்கிரமா வந்தீங்களான்னு முக்கியமில்ல.. வந்தீங்களா இல்லையான்னு தான் முக்கியம்.. வாழ்த்துக்கு நன்றி ஆனந்தி..

  ReplyDelete
 22. ஒரு நிகழ்வ அப்படியே படம் பிடிச்சியிருக்கிங்க பாராட்டுக்கள்,

  ReplyDelete
 23. @கருணாகரசு:நன்றி பாஸ்.. முதல் முறை தொடர்முறையாக அமையவேண்டும்.!!

  ReplyDelete
 24. அவரவருக்கும் அவரவர் இலாபம்.அடுத்தவர் வலியையும் வேதனையையும் உணர்ந்துவிட்டால் இந்த உலகம்....நிதர்சனத்தை வார்த்தைகளாக்கியிருப்பது அழகு.
  பாராட்டுக்கள் கூர்மதியான் !

  ReplyDelete
 25. @ஹேமா:உண்மை.!! நன்றி ஹேமா.!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முதல் நாள் பள்ளி - தகப்பனாகிய நான் எழுதும் *2

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

கருப்பழகி