கோணலான கண்ணுக்கு இன்ஷூரன்ஸ் டோய்.!!!


பிரபலமான மக்கள் அனைவரும் தங்களுக்கு பெருமை சேர்க்ககூடிய உடல் உறுப்பை இன்ஷூர் செய்வது இயல்பு. அது தலைமுடி, கை, விரல், கால், முட்டி தொடங்கி ஆணுறுப்பு, பெண் மார்பகம் போன்றவை வரை எல்லாவற்றையும் இன்ஷூர் செய்வர்.


கண்களை வைத்து சாதிக்கும் பலர் கண்களை இன்ஷூர் செய்வர். அப்படி தன் கண்ணை முதன் முதலில் இன்ஷூர் செய்தவர் தான் பென் டர்பின். 1869ல் பிறந்த பென் டர்பின், சார்லி சாப்ளின் போல வசனமே இல்லாமல் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர்.  படங்களிலும் நடித்து பெரும் பெயர் வாங்கியுள்ளார்.

 இவரின் இளம் வயதில் நடந்த ஒரு விபத்தில் அவரது கண்கள் கோணலாக மாறியது. பின்நாளில் அவர் நகைச்சுவையில் கலக்க அந்த கோணலாக மாறிய கண்களே பெரும் காரணமாக மாறியது.


அவருடன் வேலை செய்பவர்கள் அவரை பற்றி சொல்லும்போது ‘பென் எங்காவது தலையில் முட்டிகொண்டால் முதலில் சென்று கண்ணாடியை பார்த்து தனது கோண கண்கள் சரியாக மாறவில்லையே என பார்த்துகொள்வார்’ என்றனர். அதாவது எனது கோணலான கண் சரியாக மாறிவிடகூடாது என்பதில் அவர் பெரிதும் அக்கரையாய் இருந்தாராம்.இருந்தாலும் தனது கோணலான கண்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்து வந்து ஒழுங்காக மாறிவிடுமோ என்னும் அச்சத்தில் அவரின் கோண கண்களுக்கு 25,000 டாலர்களுக்கு காப்பீடு எடுத்தார். 1920களில் இந்த காப்பீடை எடுத்த இவர் தான் கண்களுக்காக காப்பீடு எடுத்த முதல் நபர். 25,000 டாலர்கள் என்பது அக்காலத்தில் ஒரு பெருத்த தொகையாகும்.


பின்னர் 1940ல் உயிரிழந்த அவர் கடைசி வரை தமது கோணலான கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்து கொண்டிருந்தார்.


Comments

 1. இனி அடிக்கடி வருவேன் உங்களை தொல்லை பன்னுவேன்.....

  ReplyDelete
 2. @மொக்கை:இதுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.!!

  ReplyDelete
 3. ம்...தெரியாத வித்தியாசமான தகவல்...!

  ReplyDelete
 4. //வெளியிட வேண்டாம் //

  தம்பி தவறாக என்ன வேண்டாம். அவருடையக் கண்ணை வைத்து அவரைக் கேலி செய்வது போல் உள்ளது தலைப்பு .

  ReplyDelete
 5. @செந்தில்:ஆம்.. உண்மையாக தான்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete
 6. @இராஜி:என்னாது ஜனகராஜ் கண்கள இன்ஷூர் பண்ணினாரா.???

  ReplyDelete
 7. @கௌசல்யா:நன்றிங்க.. தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 8. @எல் கே: இருக்கலாம் அண்ணா.!! அவர் பெருமையாக கருதுவதே அவரது கோணலான கண்களை மக்கள் நக்கல் செய்வதும், நையாண்டி செய்வதுமே.!! அவர் இருந்திருந்தாலும் இதை தவறாக எடுத்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.. தாங்கள் சொல்ல வருவது புரிகிறது.. இனி ஒரு தனி நபரை தாக்காதவாறு எழுதுகிறேன்.. சுட்டிகாட்டியதற்கு நன்றி..

  ReplyDelete
 9. புதிய தகவல் அருமை....

  ReplyDelete
 10. காணவில்லை பலநாட்களாக தம்பி கூர்மதியன் அவர்களையும் Comments ம் காணவில்லை.

  ReplyDelete
 11. @இராஜேஷ்வரி: அப்படியெல்லாம் இல்லீங்க.. தோ வந்துட்டன்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி